தலைமை ஆசிரியர்

This entry is part of 29 in the series 20020324_Issue

ஆனந்தன்


கட்டையாக,
கொஞ்சம் குட்டையாக
தூரமாய் ஒர் உருவம்
தொிந்தால்,
ஓடி ஓளிந்த காலமது.

அவர் விட்ட அறையில்
அந்த கோவைப் பழமும்
தோற்றுப் போகும் – என்
கன்னத்தின் சிவப்பைக் கண்டு.

அவரைக் கண்டு
அறவே நனைந்து
அழுத அரை டிராயர்
அனுபவம் நிறைய உண்டு.

கடும் வெயிலில்
சுடும் மணலில்
மண்டியிடும் மாணவர்களின்
மனம் அறியாதவர் அவர்!

ஒரு கை கட்டி
மறுகை வாய் பொத்தி
தியானம் செய்யும் தண்டங்களும்
அவருக்கு மகான்கள் தான்!

மதித்தவர்கள் சிலபேர்
நேசித்தவர்கள் சிலபேர்
வெறுத்தவர்கள் பலபேர்
பக்கத்து வீட்டில் இருக்கும்
என்னையும் சேர்த்து!

‘அடங்காத என் மகனுக்கு
ஒரு வழி சொல்லுங்களேன் ‘ – எனும்
அவர் குரல் கேட்டு – பயந்து,
எட்டிப்பார்த்தேன் எங்கள் வரவேற்பறையை!

Series Navigation