அவரவர் வலி…..

This entry is part of 29 in the series 20020324_Issue

எஸ். வைதேஹி.


அவரவர்க்கு தக்கபடி
அவரவர் வலி.
மடக்கியும், நீட்டியும்,
ஆழமாயும், அகலமாயும்,
அதிகமாகவும், குறைவாகவும்
சொல்லப்பட்ட வலி

மக்கிப்போன பழைய வலி,
ஏற்புடையவல்ல புதிய வலி
யிரவல் வாங்கிய நேற்றைய வலி
என்று
அவரவர்க்கு தக்கபடி
அவரவர் வலி.

Series Navigation