விவாதி!

This entry is part [part not set] of 29 in the series 20020324_Issue

வ.ந.கிாிதரன் –


விவாதிப்போம். விடியும் வரை

விவாதிப்போம்.ஆனால்

விவாதங்கள் அறிதலைப் புாிதலை

விளைவிக்கட்டும். உன்

இருப்பினை நீ நிலை நிறுத்துவதற்காக

உன் புலமையினை நீ

புலப்படுத்துவதற்காக

விவாதிக்க மட்டும் ஒருபோதும்

நீ வந்து விடாதே.

எதற்கெடுத்தாலும் ஒரு குழு.

ஒருத்தர் தலை மற்றவர் தடவ

ஒரு குழு.

இருப்போ கணத்திலொரு துளி.

இதற்குள் இவையெல்லாம்

தேவைதானா ?

அமைதியாக விவாதி. பொறுமையாக

விவாதி. ஆழமாக விவாதி.

அறிவு பூர்வமாக விவாதி.

முரணுண்டு முடிவுவரை.

முரண்கண்டு முறைக்காதே.

மெய்விதிர்த்துத் துடிக்காதே.

முரண் நியதியுணர்.

விவாதங்களில் பங்கு பற்ற

விரும்பின் பங்கு பற்று.

விரும்பாவிடில் ஒதுங்கி விடு.

பங்கு பற்றின் பொருளைப்

பேசு. உன் நிலையை

உணர்வைக் கொட்டி வைப்பதற்காய்

உன்னை இனங்காட்டுவதற்காய்

உன்மத்தமடையாதே.

உன் மத்தம் விவாதத்தை

உருமாற்றுவதை விட நீ

ஒதுங்கியிருப்பதால் இங்கு

குடி ஒன்றும் மூழ்கிப் போய்விடப்

போவதில்லை. உன் மத்தம்

எவ்வளவுதான் சத்தமாகயிருந்தபோதிலும்

சித்தமெதனையும் உன்பக்கம்

சாய்த்து விடப் போவதில்லை

என்பதை உணர். விவாதி.

நடைமுறையிலிருந்து மட்டுமல்ல

நடந்தவற்றிலிருந்தும்.

நடப்பவற்றை நடந்தவற்றை

நினைவூட்டு. நினைவூட்டி

நாசப்படுத்துவதற்காக அல்ல.

நடந்தவற்றை பாடமாக்குவதற்காக.

விவாதி.விவாதி.விவாதி.

நடந்தவற்றால் நடப்பவற்றை நடக்கவிருப்பவற்றை

நசிப்பதற்காக விவாதிக்காதே.

மாற்றங்களை வரவேற்றிடு. ஆனால்

கண்மூடித்தனமாகவல்ல.

விவாதி. விளங்கு.விவாதி.

விவாதி. வளர்.விவாதி.

விவாதி. உயர்.விவாதி.

முரண் உணர்ந்து விவாதி.

முரணேற்று விவாதி.

இருப்புணர்ந்து விவாதி.

இருக்கும்வரை விவாதி.

விவாதி. விவாதி. விவாதி.

முடியும் வரை விவாதி.

மடியும் வரை விவாதி.

விடியும் வரை விவாதி.

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்