தெரு

This entry is part of 23 in the series 20020317_Issue

மாம்பலம் கவிராயன்


தகப்பனே மெளலி புனைந்திடத் தாயார்
முகத்தில் பவுடர் தடவ – நகத்தைக்
கடித்துக் ‘கடவுளும் ‘ யாசிக்கும் வீதி.
அடித்து நகருது கார்.

தாருருகும் வெய்யில் தெருவில் பகல்நேரம்
கார்நிறுத்தி நான்போகக் காஷ்மீரம் – மா(.)நிறை
ஊபிமும்பை வேணுமாசார் கூப்பிடும் குட்டனவன்
ஊதும் பலூனுமெது கூறு.

சந்திப்பு

காப்பி வரவழச்சார் கண்ணகிய ணிக்காகக்
கூப்பிடு பேசறேன்னார் ‘ஓட்டலில் சாப்பாடு
சுத்தமோ சம் ‘பேனா ஒப்பிடப் தேடினார்
மெத்தைக்குக் கீழே உறய்.

Series Navigation