அன்பு என்ற அமுதம்

This entry is part [part not set] of 27 in the series 20020127_Issue

கோமதி கிருஷ்ணன்


அன்பை அறிய அறிவு வேண்டாம்,பாசத்தைஉணர படிப்பும் வேண்டாம்,
அன்பும் பண்பும் பாசத்தை அறியும் க்ண் நோக்கே போதும் நேசத்தை காட்ட,
பச்சை குழவியும் அறியும் பாசத்தை,அது அறிவாலல்ல,உண்ர்வால்த்தான்.
அன்பிருக்கும் உள்ளம் நிறைய[[ஆனாலும்]அதை கொஞ்சம்,
வெளிகாட்டவும் வேணும் சொல்லாலே.
அறிவும் சாதுர்யமும் சேரந்தாலோ ஐயம்வேண்டாம் சத்யமிதே.
அன்பால் அடக்கலாம் அஹங்காரத்தை,பண்பால் கவரலாம் மனவிகாரத்தை.
(பண்பால் ஒடுக்கலாம் மனவிகாரத்தை)
கனிவாய் பார்த்தும்,இனிதாய் அணைத்தும்,இன்முகம் காட்டியும்
கவரலாம் நெஞ்சை.

அன்பால் ஆகாதது ஒன்றுமே இஙகில்லை ஆனால் அதில் ஆத்மார்த்தம் வேண்டும்.
வெறியை தணிய வைக்கலாம், கோபத்தை குறைய வைக்கலாம் நிஜ அன்பாலே.
குற்ற வாளீய்யயும் திருத்த முடியாதோ ?

சீறும் பாம்பும் பாயும் புலியும் அறிவில்லாத பிற ஜீவனும், அடஙகும் அன்பால் என்னும் போது ஆறறிவு பெற்ற மனிதன் தன்னால் அடங்கானோ ?
தன்னிடம் காட்டும் அன்பதனாலே!!!

பிஞ்சு நெஞிசில் ஊட்டும் அன்பு,அமுதம் போல் என்றும் நிலையாய் நிற்க்கும்[[அதில்]
பெற்ற பிள்ளை,உற்றபிள்ளை,ஊறார்பிள்ளை என்ற பேதம் சிறிதும் இல்லயே.
அன்பே தெய்வம், அன்பே ஆத்மா, அன்பே அருள், அன்பே இன்பம்.(அது]சொல்லால் மட்டுமல்லாது ,காட்டுவதாலும், பாராட்டுவதாலும்.
பண்பதனாலும் ஊட்டலாம்.
கல்நெஞ்சயும் கரைக்கலாம்,பசும்பொன்னாகவும் உருக்கலாம்
அன்பும்,அறிவும் கலந்தூட்டினால்,உலகனைத்தையும் வெல்லலாம்.
அன்பும் கருணையும் கூடாட்டாலே,பணியாதோ இவ்வையகம் அதர்க்கு

கருணைக்கடலே! கடவுளே! ஈசா!அருள்வாய் இவ்வரம் யாவற்க்கும்
உய்யட்டும் இவ்வுலகம் அன்பெனும் உன் அருளாலே!!!.
வீடுகள் தோறும் அன்பு, நேசம், கனிந்து பரவி [அது]]ஊாில்பரவி, நாட்டில் பரவி.

உலகில்பரவி, நிறைந்து விட்டால், ஜாதி இல்லை,மதமில்லை, எதிாி இல்லை,
சண்டைஇல்லை , இவ்வுலகம் பூலோக சொர்க்கம் ஆய் விடுமே.

Series Navigation

கோமதி கிருஷ்ணன்

கோமதி கிருஷ்ணன்