இன்னொரு வேனிற்காலம்…

This entry is part [part not set] of 21 in the series 20020120_Issue

சேவியர்.


கண்மணி….
கனவுகளின் கூடாரத்திலிருந்து
என்னைக் கடத்தி,
கீழ்கிரகத் தாழ்வாரம் ஒன்றில்
ஆயுள்கைதியாக்கிய அவஸ்தை
உன் பிாிவில்.

நேற்றுவரை மேகத்தின் மேல்
கூடுகட்டிக் குடியிருந்த இருட்டு
கால் வழுக்கி என்
வாசலில் விழுந்து விட்டது.

சில வெளிச்சப்புள்ளிகளுக்காய்,
நான் நேச நினைவுகளை
தேசம் கடத்தித்
தேடவேண்டி இருக்கிறது.

பிாியத்தின் பிணைப்புகள்
பிாியும் போது தான் தொியுமென்பதை
புாியவைத்திருக்கிறது உன் பிாிவு,
மீண்டுமொருமுறை.

உறைந்த மேகங்கள்
உடைந்து வீழும் வீதிகளில்,
நான்
கவிதை சேகாித்து கடக்கிறேன்.

கடந்தகாலம் என்னை
இழுத்து இழுத்து
என்
இரவுகளை ஈரப்படுத்துகிறது.

எப்போதும் கேட்கும் எதிரொலியாய்
எப்போதோ கேட்ட
உன் குரல்
எப்போதும் என் விழித்திரையாய்
அப்போது பார்த்த உன் முகம்.

இப்போது கூட
நீ எங்கே என்பவர்களிடம்
ஊாிலில்லை என்று சொல்லாமல்
உள்ளுக்குள் இருக்கிறாய் என்றே
உற்சாகமாய்
பிறிது மொழிகிறேன்.

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்