இரவு வான்!

This entry is part [part not set] of 19 in the series 20020113_Issue

வ.ந.கிாிதரன்


விாிந்து,பரந்து, இருண்டு இரவு
வான் முடிவிலியாய் முடிவற்றுத்
தொியும். விாியும்.புாியுமா ? பார்வைப்
புலனின் புலப்படுத்துதல்
இரவு வானின் இருப்பின்
உண்மையையா ?
இருண்டிருக்கும் இந்த வான்
இயம்புவதிலேதும் இரகசியம்
தானுண்டோ ? நெஞ்சேயறி.
கண் காண்பதெல்லாம் காட்சிப்
பிழையென்று காட்டுமோவிந்த
இரவு வான். ஒளிர்சுடரொவ்வொன்றும்
ஒளிவருடப் பிாிவினில்
ஒளிரும். ஒரு கதை பகரும்.
விாியும் விசும்பும் விடை சொல்லி
விாியும். காலத்தின் பதிவுகளைக்
காட்டிடுமொரு காலக் கண்ணாடியா
இந்த இரவு வான் ?
முடிந்தவற்றை, மடிந்தவற்றைக்
காவிவரும் ஒளிச்சுடர்கள்.புராதனத்துப்
படிமங்கள் தாங்கி நிற்குமேயிந்த
இரவு வான். சுடர்கோடியிருந்தும்
இருண்டிருக்கும் இரவு வான்.
அழிவு, தோற்றம், வளர்ச்சி பல
புலப்படுத்தும் இரவு வான்.நத்துகள்
கத்திடுமொரு நள்ளிரவில்
நிலாகண்டு, அதன் வனப்பில்
நெஞ்சிழந்து, நெகிழ்ந்து
கிடக்கையிலும், வெளிபோல்
உள்ளுமொரு இரவு வானாய்
இருக்குமிந்த நெஞ்சும்
காலத்தினடுக்குகளைச்
சுமந்தபடி சாட்சியாக.

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்