திறந்தவெளி…

This entry is part of 19 in the series 20011125_Issue

சேவியர்.


வாழ்க்கை
உனக்கான வரம்.
வரத்தின் கரம் உடைக்க
தற்கொலையோடு
ஏன் ஒப்பந்தம் ?

கண்விழிக்கும்
ஜனனத்தின் முதல் படி,
அழுகை தான்,
அழாமல் பிறந்தவர்கள்
சிாிப்பைச் சம்பாதித்ததில்லை.

மொத்த இன்பங்களையும்
முன்பதிவு செய்து விட்டு
யாரும்
பின்பு வந்து பிறப்பதில்லை.

இந்த உயிரே உனதில்லையே
அதைக்கொல்ல
உனக்கென்ன உாிமை,
மனசோடு மந்திரமாய் விழும்
மதங்களின் சத்தங்கள்.

உன் இறப்பு
சில இதயங்களுக்குள்
ஈயம் காய்ச்சிலாம்,
இருப்போர்க்கு வருத்தங்கள் தரலாம்,
ஏனிந்த
கண்ணீர் வினியோகம் ?

போன உயிரை
பிடித்திழுக்கப் படிக்கும் வரை
தற்கொலைப் பிடிவாதங்களை
தள்ளியே வை.

இதயப்பாறை இறுகிக் கிடக்கிறதா
கவலையை விடு.
அழுத்தங்கள் தான்
அாியவைகளின் அாியாசனம்.
வைரத்தை விளைவிப்பதும்,
வளங்களை வருவிப்பதும் அதுதான்.

அழுத்தத்தின் கழுத்துகளில்
இன்னொரு
மாலையை இடு.
மூச்சுக் குழாயை மூடி வைக்காதே.

தன்னை வெல்லும் மனிதன்
புனிதனாக பிறக்கிறான்,
தன்னைக் கொல்லும் மனிதன்
பித்தனாக இறக்கிறான்.

தற்கொலைக் கல்லறைகளில்
மாியாதை மலர்கள் மலர்வதில்லை,
சாவுக்குப் பின்னும் சாவு
அது
தற்கொலையின் தலையோடு தான்.

வாழ்க்கை,
வினாடிநேர சிந்தனையின்
ஒருவாி விடையல்ல.

கதவு அடைந்ததாய் வருத்தப்படுகிறாய்
இன்னொருமுறை
இமைகளை பிாித்துப் பார்
சிறந்ததோர் திறந்தவெளி இது.
உண்மையில்
உன்னைச்சுற்றிக் கதவுகளே இல்லை.

Series Navigation