ரவிசுப்ரமணியனின் கவிதை

This entry is part of 20 in the series 20011118_Issue

ரவிசுப்ரமணியன்.


அவனுக்கும் இவனுக்கும்
குந்தாணியா கணக்குல
கோடி கோடியா டாலர்

அறிக்கை வுடுவான்
அரசியல் பண்ணுவான்

பதிலை கேப்பான்
பத்தினிய கேப்பான்

எரிக்க சொல்லுவான்
பணத்த குடுப்பான்

பல்லை இளிப்பான்
பல்ட்டி அடிப்பான்

பணத்துக்கும் பவருக்கும்
மண்டியும் போடுவான்

குண்டி கழுவ தண்ணியில்ல
நீ ஏண்டா…. ஆ
தாண்டிக்குதிக்கிற.

Series Navigation