கொலுசணிந்த பாதங்களுக்கு ஒரு முத்தம்

This entry is part [part not set] of 16 in the series 20011029_Issue

அபராஜிதா


எங்கே முத்துவது பெண்ணே உன்னை
உதட்டிலா
முலையிலா
யோநியிலா
பாதத்திலா
எங்கே முத்துவது
குழப்பமாய்
இருக்கிறதடி கண்ணே
யாருக்காய் வளர்ந்து ஆளாகி நிற்கிறாய்
யாரிடம் எப்பொழுது
ஒப்படைக்கப் போகிறாய்
உன் தேகத்தை
நீ
விருந்து யாருக்கு
பரிமாறவிருக்கிறாய்
உனக்குத் தெரியுமா
உன்னிடம் உள்ள பொக்கிஷம்
உன் ஸ்தனங்கள்
இன்னும் வளர வேண்டும்
தொட்டு
கை பட்டுத் தான் வளருமவை
உன் யோநியில்ருந்து
உயிர்கள் வர வேண்டாமா பெண்ணே
உன்னைப் பார்த்தபின்னே தான்
தெரிகிறது அங்கயற்கண்ணி
என்றால் என்னவென்று
உன் இடுப்பு வளைவில்
ஒருவன் தூக்குப் போட்டுத் தொங்கட்டுமே
ஒருவன் இறந்து போகட்டுமே
அந்தச் சங்குக் கழுத்தில்
யார் முத்தங்கள் விதைப்பது
உன் அக்குள் வாச்சத்தில்
ஒருவன் வாழட்டும்
உன் பிருஷ்டங்க:ள்
ஒருவனை இட்டுச் செல்லட்டும்
நில்லடி செல்லமே
உன் மதர்த்த உடம்பை
யாருக்கென்று பத்திரப் படுத்தி வைத்திருக்கிறாய்
அது விளைந்தது
இந்த மண்ணில் தானா
உன் சிணுங்கலும் செல்லமும்
யாரைக் கட்டிப் போடும் கயிறுகள்
விழத் தட்டு விழ வை
வென்றெடு
கட்டிப் போடு
அந்த நாயை
தெரியுமா
பட்டத்து ராணியே
பல்லக்கு ராணியே
பெண் ஒரு அற்புதம்
உனக்குத் தெரியுமா
உடம்பு ஒரு மாயம்
உனக்குப் புரியுமா
உன் கண்ணசைவில்
வசியப் படுத்த முடியும் அறிவாயா
எற்றி விளையாடடி
எட்டுத் திக்கும்
தீண்டலின் போதும்
படுக்கிறவள் தான் தேவதை

**
‘யாரை நினைத்து
இது ‘

‘யாரை
நினைத்தும் இல்லை
1008 பேர்
இருக்கிறார்கள் இதில்
1007 பேரோடு
படுக்க முடியவில்லை

‘நதி தான்
முக்கியம் எனக்கு
அது
தாம்ரபரணியா
கங்கையா
காவிரியா
மகாநதியா
என்பதல்ல

‘என்னை
நனைக்கிற நதி
குளிப்பிக்கிற நதி
கொண்டு போகிற நதி

‘ இன்மை தான்
துரத்துகிறது என்னை

‘கிடைத்தால்
கும்பிட்டு விட்டு
போயே போய் விடுவேன் ‘

Series Navigation

அபராஜிதா

அபராஜிதா