பூப்பூ (பு)

This entry is part [part not set] of 26 in the series 20011015_Issue

தி. கோபாலகிருஷ்ணன்


வாசலுக்கு வந்தபோது
மின்விளக்கு ஒளிர்வில்
நல்வரவு வாசகம் இருந்தது

வழக்கமாய்
மனம் நிறைய
கண் நிறைய
வாய் நிறைய அழைக்கும்
‘வா வா ‘ இல்லை

நிலைப்படித் தோரணங்கள்
‘வா வா ‘ என்றன
நிதமும் நிலைப்படியில் நின்று
வரவேற்கும் ஆரணங்கு இல்லை

வழக்கத்திற்கு மாறாக
அம்மா கொண்டுவந்து
அளித்த தேனீாில்
துவர்ப்பும் இனிப்பும்
அளவாய் இருந்தும்
மிகவும் காித்தது –
அன்பு துளியும் இல்லை

தவறாமல் விசேஷங்களுக்கு வா
என்ற அழைப்பில்
தவறிப்போய் தினமும் வந்துவிடாதே
எனும் எச்சாிக்கை இருந்தது

வளர்ந்துவிட்ட போதும்
நாய் மட்டும்
அதே நட்புணர்வோடு
வாலாட்டியது.

Series Navigation

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி