காதல் புனிதமென்று

This entry is part of 22 in the series 20010917_Issue

அ.லெ.ராஜராஜன்


தோழிமாாிடம் நீயும்
தோழர்மாாிடம் நானும்
நித்தம் சொல்லிக்கொண்டோம்
நம் காதல் புனிதமென்று.

நண்பாிடம் மட்டுமன்றி
நமக்குள்ளும் கூறிக்கொண்டோம்.
புனிதமென்று எதைச்சொன்னோம்
புாிகிறதா என்னுயிரே.

பத்துபேர் மத்தியில் நீ
பத்திரமாய் நிற்கையிலும்
கண்ணியமாய் பார்ப்பதுபோல்
கண்ணடிக்க தயங்கவில்லை.

பேருந்து நெருக்கத்தில் என்
பேராசை வெள்ளத்தில் நீ
வைத்துவந்த மலரனைத்தும்
வதங்கும்வரை விட்டதில்லை.

பின்சீட்டில் நீயமர்ந்து
பயணமாகும் பொழுதுகளில்
இருக்கும்பள்ளம் இயங்காசிக்னலென
இவையெதையும் விட்டதில்லை.

கடற்கரை மணலில் நாம்
காலார நடந்து வர
அக்காற்றோடு போட்டியிட்டு உன்
ஆடைகலைய மறந்ததில்லை.

தனிமையில் நீ கிடைத்தால்
தன்மையாயுன் பிடறி பற்றி
உள்ளக் கிடக்கை ஊறிவர
உந்தன் இதழ்கவ்வ தவறவில்லை.

இப்படித்தான் இருந்தாலும்
இறுமாப்பாய் சொல்கின்றோம்
எத்தனைதான் இடர்வாினும்
எம்காதல் ஜெயமடையும்.

புனிதம்தான் எம் காதல்
புாியாது இம்மானிடர்க்கு.
புனிதமென்று எதைச்சொன்னோம்
உனக்காவது
புாிகிறதா என்னுயிரே.

Series Navigation