டூக் ரெட்பேர்ட் மற்றும் மெல் டாக் எழுதிய கனேடியக் கவிதைகள்

This entry is part [part not set] of 30 in the series 20010819_Issue

(தமிழில்: வ.ந.கிாிதரன்)


எனது விடுதி
டூக் ரெட்பேர்ட் (Duke RedBird)

எளிமையாயிருந்தது எனது பேர்ச் மரத்திலான விடுதி.
தூய்மையாயிருந்தது நான் அருந்திய தண்ணீர்.

வேகமாயிருந்தது என்னைச் சுமந்து சென்ற படகு.
நேராயிருந்தது என்னைக் காத்த அம்பு.

மூர்க்கமாயிருந்தது நான் உண்ட இறைச்சி.
இனிமையாயிருந்தது மேப்பிள்மரச் சக்கரை.

வலிமையாயிருந்தது என்னைத் தாங்கிய மூலிகை.
உயர்வாயிருந்தது எனது அன்னை பூமி.

****
அவளது தலைமயிர்
மூலம்: மெல் டாக் (Mel Dagg)

தமிழில்: வ.ந.கிாிதரன்

அவளது தலைமயிர்
இரு காிய பின்னல்களாகப்
பின்னப் பட்டிருந்தது
இப்பொழுது.

அத்துடன்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வருடமும்
என்னுடைய
காதலைப் போல்
அவை வளர்ந்து கொண்டேயிருந்தன.

துதித்தலுடன் நான்
பின்னால் நடந்தபடி
நீண்ட காிய பின்னல்கள்
நகரத்து வீதிகளைத்
தொட்டுவிடாமல்
தூக்கும் வரையில்.

ஆனால் கிராமத்திலோ
அவள்
அவற்றைச் சுயமாகவே
நிலத்தைக் கூட்டும்படி
தொங்க ஓட விட்டவளைப்போல்
இருக்கும்.
அவை எப்பொழுதுமே
தொடுவதற்காக
வளர்ந்திருந்தன.

*******
கரும் பாத மொழி
மூலம்: மெல்டாக் (Mel Dagg)

தமிழில்: வ.ந.கிாிதரன்

எங்களது மொழி
மிருகங்களினதும்
மரங்களினதும்
உருவங்களில்
எழுதப் பட்டது.

அதனால் தான் உன்னால்
அதனைப் பேச முடியாது.

ஆனால் உனது காதுகளை
நிலத்தில் வைத்துக் கேட்பாயானால்
வெள்ளை எருமைகளின்
ஆத்மார்த்த உணர்வுகளை நீ
கேட்கலாம்.
அவற்றின் குளம்புகள்
இப்பொழுதும்
எங்களது புல்வெளிகளினூடாகச்
செல்கின்றன.

– மேற்படி கவிதைகள் வில்லியம்/ஹிறிஸ்டின் மோவாட் (William , Christine Mowat) ஆகியோரால் பதிப்பிக்கப்பட்டு, மாக்மில்லன், கனடா
பதிப்பகத்தினால் (Macmillan of Canada) வெளியிடப்பட்ட Native People in Canadian Literature என்னும் நூலிலிருந்து பெறப்பட்டவை.-

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்