ஹைக்கூ கவிதைகள்

This entry is part [part not set] of 20 in the series 20010805_Issue

கே ஆர் விஜய்



***
உன் நகம்-
கூந்தல் சாியும் ரோஜா-
உடைந்த கண்ணாடி வளையல்கள்
ஒவ்வொன்றாய் பத்திரப்படுத்தி-என்
இதயத்தை தொலைத்துவிட்டேன்.

***
கரைந்தாலும் பரவாயில்லை
நான் மட்பாண்டமாய் மாறத் தயார்.
நீ மழையாக வருவாயா ? ? ?

***
காதல் படிகட்டுகள்.

மாடியில் இருந்து
இறங்க எண்ணி
முதல் படியில் கால் வைத்தோம்.
கைகளுடன் கை சேர
மனதுக்குள் நினைத்தேன்
படிகட்டுகள் முடியக் கூடாதென…

***

மெளனப் புரட்சி

பிரெஞ்சுப் புரட்சி
சமத்துவத்தில் மலர்ந்தது.

இந்தியப் புரட்சி
விடுதலையில் விடிந்தது

ஆனால்
என் மெளனப் புரட்சி
உன் திருமணத்தில்…

***

Series Navigation

கே ஆர் விஜய்

கே ஆர் விஜய்

ஹைக்கூ கவிதைகள்

This entry is part [part not set] of 16 in the series 20010304_Issue

கோகுல கிருஷ்ணன்.


**

சேவல்கூவியது
கண் விழித்தான்
கசாப்புக்கடைக்காரன்.

காலியானடிபன்பாக்ஸால்
மிச்சமிருக்கிறது இன்னும்
அம்மாவின் வாசம்.

தொலைக்காட்சித் திரையில்
பதியவில்லைமனது
திண்ணையில் தாத்தாவின் இருமல்.

குப்பையில்கிடக்கிறது
கிழித்து எறியப்பட்ட
நேற்று.

அன்னையர்தின வாழ்த்து அட்டை
விற்றுக்கொண்டிருக்கிறாள்
அனாதைச் சிறுமி.

பள்ளிக்கூடமணியோசை
வேகமாய் நடக்கும்சிறுவன்
டாக்கடை வேலைக்கு.

மீன்கள்
தூண்டில் போட்டன
என்னவளின் விழிகள்.

Series Navigation

கோகுல கிருஷ்ணன்.

கோகுல கிருஷ்ணன்.