…என்று கூறுபவர்க்கு

This entry is part of 20 in the series 20010805_Issue

இளங்கோ


பெண்கள் இப்படி இருத்தல் தவறென
எழுதியபடி
பேசியபடி
அப்படியிருப்பதையே
இரசிக்கவும் செய்யும் மனது
ஆண்களுக்கு

அவர்களில் ஒருவனாய் நேற்றும்
நீயில்லாத நாளையிலும்
நானிருத்தல் கூடும்

வயதும் உணர்வும்
எற்றுண்ட பிரகாசிப்பில்
உதடுகள் குவிந்து
விரல்கள் உருக
கலைந்தது
சென்ற கோடை விடுமுறை

உடல்கள் உராய்ந்து
ஆசைத்தீ கனன்றொிந்த
மாலைப்பொழுதொன்றின் பிற்பாடு
விலத்தல் வலுக்கொண்டிருக்கலாம்
இனி மறைப்பதற்கோ
ஆராய்வதற்கோ
எதுவுமில்லையென தெளிந்து

வாழ்வின் சலனங்களை
அளவோடு அனுபவிக்கவும்
பிாியப்படாததை தவிர்க்கவும்
கற்றுக்கொண்டாயிற்று
உன்னிடமிருந்து

இனியென்ன
எதிரெதிர் திசைகளில் எம்பயணமும்
தற்செயலாய் சந்திக்கையில்
சின்னதாய் சிாிப்பும்

இவை போதும் எனக்கும்
உனக்கும்.

***

Series Navigation