சென்னை

This entry is part of 20 in the series 20010805_Issue

பிரபு


அடை மழை ஊரை அடித்து சாத்தியது
எங்கு பார்த்தாலும் தண்ணிர்
பூமி தடுக்க தடுக்க குளிக்க வைத்தது..

தாகம் தீர குடித்தது
வயிறு முழுதும் நிறப்பிக் கொண்டது
எஞ்சிய நீரை உமிழ்ந்து தள்ளியது
எங்கள் ஏாி,குளம்,குட்டை..

வீட்டு குடமெல்லாம் நிறைந்தது
மனசு சந்தோசத்தில் கரைந்தது

பொழுது விடிஞ்சாச்சு, தண்ணிர் எடுக்கனும்
வெள்ள கனவை கலைத்தாள், அம்மா
வறச்சியோடு கண் முழித்தேன்..

அம்மா மீது எனக்கு கோபம்
சிறிது நேரம் விட்டிருந்தால்
கனவினிலேயே குளித்திருப்பேன்,
தண்ணிர் கொஞ்சம் மிச்சமாகியிருக்கும்…

Series Navigation