சேவியர் கவிதைகள்.

This entry is part of 20 in the series 20010805_Issue

நீள்பாதை, பூனைக்குட்டி, தூக்கம்


***

நீள் பாதை….

பிாியமே..
வருடங்கள் எவ்வளவு விரைவாய்,
பந்தையக் குதிரையாய்ப் பாய்ந்து போனது
பார்த்தாயா நீ ?

உன்னோடு செல்லமாய்ச் சண்டையிட்டு,
நீ குழந்தையாய் கோபித்துக் கொள்ளும் போது
உன் கரம் கோர்த்து,
கூந்தலின் இழையிடையே விரல் வரைந்து
மூச்சுக்காற்று மூச்சுத்திணறும் நெருக்கத்தில்
மன்னிப்புக் கேட்ட பொழுதுகள்….

நீயும் நானும் தவிர
உலகத்தில் எல்லாமே ஐந்தறிவு ஜ ‘வன்கள் என்று,
தூக்கமே தூங்கத்துவங்கிய பின்னிரவுப் பொழுதிலும்,
கதைபேசிக் கதைபேசியே
நாட்களைக் கிழித்தெறிந்த நாட்கள்.

உன் உதட்டுக்கும்
என் உதட்டுக்குமிடையே மட்டும்
ஓயாமல் நடந்துகொண்டிருந்த
தொடர் ஒப்பந்தங்களின் தியதிகள்….

வாழ்த்து அட்டை கவர்களின்
ஓரம் கூடக் கிழியாமல்
காதலின் முத்திரைகள் என்று
முத்தமிட்டு சேமித்துக் கரைத்த வருடங்கள்…

இப்போது,
மனசின் வெயில்ப் பிரதேசங்களில்
நிகழ்ந்தவற்றின் சில நிழல்ப்பதிவுகள் பட்டுமே.
கல்லூாிக்குச் செல்கின்றன நம் குழந்தைகள்.
காதலிப்பதற்கு நமக்கு நேரம் கிடைப்பதில்லை…

முன்னினைவுகள் வந்து முகம் தட்டும்
பின்னிரவுப்பொழுதில் அவ்வப்போது உன்
முகம் பார்த்துக் கிடக்கிறேன்….
ஆழமாய்த் துயில்கிறாய் நீ, அதே அழகுடன்.
அடுத்த அறை தொலைபேசியில்
நம் மகள் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறாள்
அதே சிாிப்புடன்…

****

பூனைக்குட்டி

அது ஒரு மிக அழகான பூனைக்குட்டி…
உடல் முழுதும்
வெண்பஞ்சு ஒட்டிவைத்ததாய்,
வெல்வெட்டை வெட்டி வைத்ததாய்,
பாதரசப் பயணமாய் வழவழப்பு.

மெல்லிய மீசையை மெதுவாய் என்
முகத்தில் தேய்த்து விளையாடும்…
என் தோளுக்கும் காலுக்குமாய்
அவசரப் பாதங்களுடன்
மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ளும்.

கூாிய நகங்கள் அதற்கு…
ஆனால் ஒருமுறை கூட காயம் தந்ததில்லை,
உறைக்குள் சொருகப்பட்ட சிறுவாளாய்
விரல்களுக்குள் புதைந்து கொள்ளும் அவை.

தரையில் உணவுதந்தால் அடம்பிடிக்கும்,
பாத்திரத்தில் பாிமாறினால் மட்டுமே
முத்தமிட்டு ஒத்துக்கொள்ளும்.

என் படுக்கைக்குள் அவ்வப்போது
குறுகுறுக்கும்…
பாத்திரங்கள் கலைத்து பால் தேடும்,
என் தனிமைத் திண்ணையில் தலைகோதும்.

நான் வீடுதிரும்பும் வேளைகளில்
வாசலோரத்தில் வந்து சத்தமிடும்…
கால்களைச் சுற்றிச் சுற்றியே வட்டமிடும்..

என் உயிர்த் தோழனாய்..
அந்த சின்ன ஜ ‘வன்.

இரண்டுநாளாய்
அதைக் காணவில்லை.
உயிரைத் தொலைத்ததாய் உள்ளுக்குள் வலித்தது.
கூாியதாய் ஏதோ ஒன்று
இதயத்தை குறுக்கும் நெடுக்குமாய் கூறுபோட்டது.

அலுவலகத்தில் வேலை நகரவேயில்லை…
சக நண்பனின் பேசினான்.
பூனைத்தொல்லை தாங்கமுடியவில்லை…
கண்காணாத தூரத்தில் விட்டுவிடவேண்டுமென்று
சத்தமில்லாமல் சலித்துக் கொண்டான்.

**********

தூக்கம்

என் முன்னால் மலை போல
பணிகள் குவிந்திருக்கும் போது
இந்த தூக்கம் வந்து இமை இழுக்கும்.

சுடச்சுட தேனீர் குடித்தும்,
பக்கத்து இருக்கைக்காராிடம்
பழைய கதை பேசிப்பார்த்தும் ,
பிடிவாதமாய் இமைகளிலேயே அமர்ந்திருக்கும் அது.

தூங்கி வழிவதை யாரேனும் பார்ப்பார்களோ
எனும் பதட்டம் மனதில் எழ..
தப்புத் தப்பாய்க் கணிப்பொறி
வார்த்தைகளை திரையில் எழுதும்.
விரல்கள் வலுவிழந்து வீழும்.

மதிய உணவை முடித்து வந்ததும்
தினமும் நடக்கும் சங்கதிதான் இது.

என்ன செய்தால் தூக்கம் போகுமென்று தொியாது…
பக்கத்துத் தொலைபேசி
அவ்வப்போது அலாரமாகும்.
சிாிப்புச் சத்தம் சில நேரங்களில் சேவலாகும்.

அப்போதெல்லாம்
தற்காலிகமாய் தூக்கம் தொலையும்.
ஆனாலும் மெல்லிய அந்த தூக்கத்தின் துணி மட்டும்
மேலிமைக்கும் கீழிமைக்கும் நடுவே
திரைச்சீலையாய் தொங்கும்…

கிழித்து எறியவேண்டுமென்று
மீண்டும் முயலும்போது
பக்கத்து அறை தோழி கொட்டாவியுடன் கேட்பாள்
ாஎனக்கு தூக்கம் தூக்கமாய் வருகிறதுா
உனக்கு வரவில்லையா ?

இல்லையே என்று
மெதுவாய் நான் மறுக்கும் போது
காதருகே என் தூக்கம் அமர்ந்து
சத்தமாய்ச் சிாிக்கும்..

Series Navigation