தி.கோபாலகிருஷ்ணன் கவிதைகள்

This entry is part [part not set] of 20 in the series 20010805_Issue



1.
கனவு போல் இருந்தது
கதவு தட்டி
கண்ணெதிாில் நீ சிாித்தது
கனவு போல் இருந்தது

களவு முடிந்து நீ
வாசல் கடப்பதைக் காண
கண் விழித்தபோது

நிஜம் போல் இருந்தது
நீ வந்த கனவு
நிஜம் போல் இருந்தது

2. சென்னை 2001

குடி நீர்க்குழாய்
சிறுநீர் கழியும்

குழந்தை பாயில்
குடமாய்க் கொட்டும்

3.

‘அப்பனூ… இங்க வா ‘

‘படிக்கறனுங் ‘

‘மாட்டுக்கு சித்த வக்கப்பில்லு
எடுத்துப் போட்டுட்டுப் படி கண்ணு ‘

..

‘சுருக்குனு கால்ல ஏதோ குத்தி
ரத்தம் வருதுங். ‘

‘வேலிக்கிட்ட போனயல்லோ
முள்ளு கிழிச்சிருக்கும்
போய்ப்படி சாமி ‘
..

கையில் மாலையோடு
நாங்கள் நிற்க

‘என் ராசாவ
நானே கொன்னுட்டனே.. ‘
என்று நடராசுவின் அப்பா கதறியது
எங்களை நடுக்கியது

பின்னொரு நாள் கனவில்
நடராசு
வகுப்பில் என் பக்கத்தில் உட்கார்ந்து
பெஞ்சுக்கடியில் இருக்கும்
தன் காலை
அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தான்

4. மூன்றாமவன்

இருவருக்குமிடையில்
உறவு சுமுகமாக
இருக்கையில்
எப்படி வந்தான்
மூன்றாமவன்

உடல் உள்ளத்தில்
சிக்கலிள்ளாத
ஒப்பந்தம் இருக்கையில்
ஏன் வந்தான்
மூன்றாமவன்

அந்த மூன்றாமவன்
யார் என்று
குழம்பிக்கொண்டிருந்தேன்

மூன்றாமவன்
நாந்தான் என்று
நண்பன் சொல்லித் தொிந்துகொண்டேன்

5. தூக்கம்

குழந்தைப் பருவத்தில்
அன்னையவள் ஆராரோ

பள்ளிப்பருவத்தில்
பாடப்புத்தகங்கள்

இல்லறத்தில்
பெண்ணுறவின் பின் களைப்பு

எல்லாம் தொலைந்(த்)த பின்பு
மாத்திரைகள் மாத்திரைகள்

6.
பயந்து பயந்து நெருங்கி
பவ்வியமாய் திாி தொட்டு
பட்டாசு பற்றியவுடன்
தூர ஓடும்
சிறு பிள்ளை
உன் பார்வை

7.

மானிடக் கடலில்
நானொரு துளிதான்

மண்புழுதியில்
நானொரு துசுதான்

பேரண்டத்தில்
நானொரு அணுதான்

அணுவைப் பிளந்தால்…

8.
தென்னை மரத்தில்
சட்டென்று நிலா
எாிந்தது

நான் சுதாாிப்பதற்குள்
கீற்றின் நிழல்
கீழே விழுந்துவிட்டது

தொப்பென்று
கிணற்றில்
ஒன்று விழுந்த சத்தம்

அப்போதுதான்
விழுந்ததால்
எழும்பிய அலைகளில்
நெளிந்தபடி மிதந்தது
நிலா

9.
பனி முத்துக்களை
இந்தக் கிண்ணத்தில் தான் சேர்த்து வைத்தேன்
எங்கே ?

10.காக்கா வடைக் கதை – ஒரு திறனாய்வு

காக்கைக்குத் தொியுமா
வடைக்காாியின் வறுமை

நாி அறியாததா
காக்கையின் இன்குரல்

இல்லை, வடைக்காாிதான் அறிவாளா
காக்கை நாியின் வயிற்றுப்பசி

11.
அவளும் நானும்
எத்தனை வித உடைகளில்
பவனி வந்தோம்
அந்த இறுதி நிர்வாணத்திற்காக.

12.
உன் இனிமையான பெயர் என்னவென்று கேட்ட
என் முதல் கேள்வியில்
உன் கண்களில் திரைகட்டிய கண்ணீர்

மூச்சிறைக்க தாமதமாய் வந்த உன்னை
நான் முறைத்தபோது
கரைபுரண்டு கழுத்து வியர்வையில் கலந்த கண்ணீர்

முதல் முத்தத்தில்
வெளிறி விக்கித்து
என் சட்டை நனைத்த உன் கண்ணீர்

அம்மா கண்டித்தாளென
என் மடியில் முகம் புதைத்து
என் மனம் கரைத்த கண்ணீர்

பெற்ற அன்னை
வளர்த்த தந்தை
தங்கை வாழ்க்கை என்று

நிச்சயதார்த்தம் நடந்ததற்கான காரணங்களைக் கூறி
என் முன்னே நீ
கடைசியாக வடித்த கண்ணீர்

13. உனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக
என்னை எப்படி மாற்றிக்கொள்ளமுடியும்

எனக்கே பிடிக்காதபோதும்
என்னை நான் மாற்றிக்கொள்ளாதபோது.

14. என்னைப்போல்தானே நீயும்
புாிந்துகொள்ளேன்
நான் உன்னைப்போல் இல்லை என்று

15. கவிதை

வருத்துவது
இதன் நோக்கமல்ல
வ்ருந்தியதைச்
சொல்கிறது, அவ்வளவே.

திருத்துவது
இதன் வேலையல்ல
திருந்தியதைக்
காட்டுதல், அவ்வளவே.

மாற்றுவது
இதன் முயற்சியல்ல
மாறியதை
உணர்த்துவது, அவ்வளவே.

***

Series Navigation

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி