எதிர்நிலைகள்

This entry is part [part not set] of 15 in the series 20010707_Issue

பாரதிராமன்


எது விசித்திரம் ?
சித்திரம் சிதறிப்போவது.

எது புதுமை ?
பழைமை புதைந்துபோவது.

எது காதல் ?
கல்யாணத்திலும் கசக்காதது.

எது வாழ்க்கை ?
ஆரமபமாகாமலே முடிந்துபோவது.

வியாதி என்பது சுகத்தின் கேடு
விதி என்பது மதியின் கேடு

சண்டை சமாதானத்தின் எதிரி
சாதிச்சழக்கு சமுதாயத்தின் எதிரி

‘ நீ அதாக இருக்கிறாய் ‘ என்றுணர்த்த
‘ நீ அதுவல்ல ‘ என்றே தொடங்கும்
தன்னுணர்வுப் பாடம்.

‘ இதுவல்ல, அதுவல்ல ‘ என்று எதிர்நிலையில் தொடங்கியே
‘ எதுவும் எல்லாமுமே ‘ என்று முடிக்கிறது
வேதாந்தம்கூட.

உடன்பாட்டு நிலைகளையெல்லாம்
எதிர்நிலைகளில் சுட்டினாலன்றி
ஏற்றுக்கொள்வதில்லை எவரும்.

Series Navigation

பாரதிராமன்.

பாரதிராமன்.