முயற்சி

This entry is part of 14 in the series 20010623_Issue

கோகுல கிருஷ்ணன்


நாக்கை வளைத்து
நுழைத்து
நிரடிப் பார்த்தாயிற்று;
விரல் நுழைத்து
நகத்தின் துணையுடன்
நோண்டியாகிவிட்டது;
குண்டூசி கொண்டு
குத்தியும் பார்த்தாயிற்று.
எத்தனை முயற்சித்தும்
வெளியேற மறுக்கிறது
பல்லிடுக்கில் சிக்கிக்கொண்ட
உணவுத்துணுக்கு
மனசுக்குள் நுழைந்துவிட்ட
உன்னைப் போல.

Series Navigation