மரணம்

This entry is part of 19 in the series 20010618_Issue

ஸ்ரீனி.


பிறப்பின் உடன்பிறப்பு
பந்தயத்தில்
இறுதியில் துவங்கி
இறுதியில் முதலிடம் பிடிக்கும்
அணுமுதலான அனைத்திற்கும்
அந்தியானதோர் அரிய சக்தி.

சரித்திரத்தின் தந்தை
வயோதிகத்தின் நண்பன்
சில நேரங்களில்
இளசுகளின்
எதிர்பாரா எதிரி

விரட்டி விரட்டி
வேருரூ கொள்ள செய்யும்
பரிணாமத்தின் மூலகர்த்தா

உலகில்
சமத்துவத்தை உணர்த்த
என்றும் உள்ள
சிறந்ததோர் வழிகாட்டி

எனவே
கண்டு பயம் வேண்டாம்
செல்கள் செயல் இழக்கும் நேரம்
சோர்வுரும் நேரம் அல்ல
இதுவே
நாம் தேடுகின்ற
முக்தி.

அச்சம் தவிர்.

Series Navigation