வாழ்க்கை

This entry is part of 18 in the series 20010610_Issue

சுஜல்


அம்மாவின் மடியில் படுத்து உறங்க அக்காளுடன் சண்டை
அப்பாவின் கை பிடித்து சென்று கடையில் வாங்கிய பச்சை ாிப்பன்
பக்கத்து வீட்டு ரகுவிடம் பல்ப்பத்திற்கு பாகப்பிாிவினை
பாட்டியின் வடுமாங்காய்,தாத்தாவின் கண்ணன் கதைகள்
இவையாவும் நேற்று கண்ட பகல் கனவாய் மனதில்…

இன்று மூடிய அறையில் கணினி மட்டும் துணனயிருக்க
அக்காவின் கல்யாணத்தை வீசீடி யிலும்
அப்பாவின் கைபட்ட வாரமொருமுறை மின்னஞ்சலையும்
பார்க்க முடியாமல் போன பாட்டியின் கடைசி நேர முகத்தையும் எண்ணி …

மூடு பனி சூழ்ந்த வீட்டினில் ,நானும் ஒரு இயந்திரமாய்…
உற்றமும் சுற்றமும் கண்டு பொறாமைப்படும்
எனது அமொிக்க வாழ்க்கை!

Series Navigation