ஆளற்ற லெவல் க்ராசிங்.

This entry is part [part not set] of 18 in the series 20010610_Issue

கே.கே…


(Colletion of Haikus under a common heading)

ஓடும் இரயில்
தாளம் …..பாட்டு
நின்றபடி பிச்சை எடுப்பவன் .

உச்சி முகர்ந்த கர்வம்
பிாியக் கருகும் மனம்…
மெல்லென்ற சிாிப்பில்.

பகலெல்லம் ஈ
இரவில் கொசு
மழைகால இரவு.

கண்ணாமூச்சி விளையாட்டு
சிாிக்கும் குழ ந்தைகள்
தொலை(த்)ந்தது யார் ?

மாநிலச் செய்திகள்
பருத்திக் கொட்டை சாகுபடி
பருக மறந்த காபி.

சவரம் முடித்து தலை சீவீ
கண்ணாடியில் பார்த்தேன்…
கண்ணாடி பார்த்தது.

இலை நகர்த்தும் காற்று
காத்திருப்பு…
கடைசி முத்ததிற்காக.

பிாி விழி ஓரம் கசியும் நீர்
ஒடுங்கும் நாசியின் வெப்பக் காற்று…
கால் நகம் பார்த்தேன்.

கூந்தலில் சிக்கிய விரல்கள்
சிாிப்பு சந்தோஷம் …முத்தம்
முற்றத்தில் தேங்கும் நிலவு .

உச்சி வெய்யில் வெப்பம்
மரத்தடியில் நான் … மாடுகள்
ஆளற்ற லெவல் க்ராசிங்.

ஆறுவடை முடிந்த வயல்
ஆர்ப்பாிக்கும் நீண்ட வால் குருவிகள்
வானமா ? நீலமா ?

நுனிப்புல் பனி..
பறவைகள்… நெருக்கியடித்த படி
கால் சராயில் கைகளை நுழைத்து நான்.

பின்னிரவுக் குளிர்
நிலவோடு நான்
தனியே தூங்கும் வீடு.

சருகுகளில் புரளும் சிறுவர்கள்
திரும்பும் பறவைகள்…
மாலை வெய்யில்.

நடுங்கும், காய்த்துப் போன கை விரல்கள்
கோர்த்தபடி …
விழி ஓரத்தில் உறையும் பக்தி.

***
கே.கே…
சிட்னி/2001
***

Series Navigation

கே.கே...

கே.கே...