சில நேரங்களில்

This entry is part of 1 in the series 20010525_Issue

விஜயகுமார் சிவராமன்


சில நேரங்களில் சிநேகமாய் சிரிக்கின்றாய்
சில நேரங்களில் நெருப்பாய் எரிக்கின்றாய்.

சில நேரங்களில் மார்கழிப் பனியாகவும்
சில நேரங்களில் சுட்டெரிக்கும் வெய்யிலாகவும் இருக்கின்றாய்.

சில நேரங்களில் பெளர்ணமி நிலவாக குளிர்கின்றாய்
சில நேரங்களில் வெப்ப கதிர்களாய் சுடுகின்றாய்.

சில நேரங்களில் புதிருக்கு விடையாகவும்
சில நேரங்களில் விடையில்லா புதிராகவும் இருக்கின்றாய்.

சில நேரங்களில் யாருமறியாமல் பார்க்கின்றாய்.
சில நேரங்களில் கண்டும் காணாமல் செல்கின்றாய்.

புரியாத புதிராக இருப்பவளே!!

சீக்கிரம் சொல்லிவிடு – உன் மெளனத்திற்கு
உன் அகராதியில் அர்த்தம் தான் என்ன ? ? ? ? ?


  • சில நேரங்களில்