துணை

This entry is part of 18 in the series 20010513_Issue

அ.முத்துலிங்கம்


பொத்தானை அமுக்கி
கதவு மூடும் சமயம்
மெல்லிய நகப்பூச்சு விரல்கள்
குறுக்கே தடுத்தன.
கதவு தடுமாறி
கணத்தில்
மீண்டும் திறந்தது.
அந்நிய வீட்டுக்குள்
அடி வைப்பதுபோல
மெள்ள வந்து
மன்னிப்பாக சிாித்தாள்.
நடு ஆகாயத்தில்
ஒரு பூக்கூடைபோல
லிப்ட்
எங்கள் இருவரை மட்டும்
சுமந்து ஏறியது.
சமயத்தில்
அவள் மூச்சுக்காற்று
துல்லியமாகக் கேட்டது.
மின் சிவப்பில்
நம்பர்கள் மாறின.
34ல் அவள்
சட்டபூர்வமாக இறங்கினாள்,
முறுவலிக்காமல்.
39 மட்டும்
அவள் மணம்
கூடவே வந்தது.

Series Navigation