புறநானூறு 367: ஒளவையார்

This entry is part of 18 in the series 20010513_Issueதிணை பாடாண்டினை
துறை: வாழ்த்தியல்
சேரமான் மாவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதியும் சோழன் ராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தாரை ஒளவையார் பாடியது.

நாகத்தன்ன பாகார் மண்டிலம்
தமவே யாயினுந் தம்மொடு செல்லா
வேற்றோராயினு நோற்றோர்க் கொழியும்
ஏற்ற பார்ப்பார்க் கீர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து
பாசிழை மகளிர் பொலங்கலத் தேந்திய
நாரரி தேறன் மாந்தி மகிழ்சிறந்
திரவலர்க் கருங்கல மருகாது வீசி
வாழ்தல் வேண்டுமிவண் வரைந்த வைகல்
வாழச் செய்த நல்வினை யல்ல
தாழுங் காலைப் புணைபிறிதில்லை
ஒன்றுபுரிந்தடங்கிய விருபிறப்பாளர்
முத்தீப்புரையக் காண்டக விருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்
யானறி யளவையோ விதுவே வானத்து
வயங்கித் தோன்று மீனினு மிம்மென
இயங்கு மாமழை யுறையினும்
உயர்ந்துமேந் தோன்றிப் பொலிகநுந்நாளே.

Series Navigation