கண்ணாடி வளையல்கள்

This entry is part of 10 in the series 20000702_Issue

– ருத்ரா.


1

நீ

ஒலித்தாலும்

உடைந்தாலும்

இனிக்கும்.

2

கண்ணாடி

வளையல்களிலிருந்து

கண்ணாடி விாியனா

தீண்டியது ?

மூச்சை நிறுத்தியது

உன் ஓசை.

3

உன் ஓசைப்பூக்கள்

உதிர்க்கும்

மகரந்தமே

என் அன்றாட உணவு.

4

கண்ணாடி ஓசைக்குள்ளும்

கனமான சம்மட்டிகளா ?

என் இதய நாளங்கள்

கொல்லம்பட்டறை ஆனது.

ஆனாலும்

துடித்து துடித்து

அது அடித்தது

அத்தனையும்

அந்த மயிற்பீலியின்

அசைவுகள் அல்லவா ?

5

தாஜ்மகாலை

உருக்கிச்செய்ததில்

உன் ஓசையில்

காதலின்

உளிச்சத்தங்கள்.

6

சோழிகளைக்

குலுக்கி

எப்படி

இப்படி ஒரு

புதை குழி

வெட்டினாய்.

அமிழ்ந்ததும்

புாிந்து கொண்டேன்

அத்தனையும்

அமிழ்தம் என்று.

7

தைாியம் தான்!

கண்ணாடி

வீட்டுக்குள்ளிருந்து

கல்லெறிகின்றாய்.

ஏனென்றால்

நீ

உடைந்தாலும்

நொறுங்கிப்போவது

நான் தானே!

8

உன் ஒலியை

என்றோ கேட்டது.

அது என்னை

விரட்டிக்கொண்டேயிருக்கிறது.

கடந்து போகட்டும் என்று

நின்று பார்த்தேன்.

அது இப்போது

என்னை

இழுத்துக்கொண்டே

ஓடிக்கொண்டிருக்கிறது.

9

எந்த ாிஷி சபித்தது ?

செம்மங்குடிகளும்

பாலமுரளிகளும்

உன் கண்ணாடிக்

குருகுலத்தில் கிடந்து

இதன் ஓசைகளில்

‘சாதகம் ‘

செய்யவேண்டும் என்று ?

10

உன் ஓசைகளின்

பின்னேயே சென்று

நின்றேன் ஒர் இடம்.

இன்னும் உனக்கு

நாலு ஜோடி வளையல்கள்

விலை கேட்டேன் அவனிடம்.

‘ஜோடியாய் எல்லாம்

கிடைக்காது ‘

என்று சொல்லிச் சிாித்தான்

கடைக்காரன்.

ஏனென்றால்

நான் போய் நின்றது

‘ ஒரு வீணைக்கடை ‘.

11

உன் ஓசையின்

கைதி நான்.

நன்றாய் உற்றுப்பார்.

உன்

கண்ணாடி வளையல்கள்

என் கை விலங்குகள்.

12

கிளு கிளு வென்று

எனக்குள்

‘கிடார் ‘ வாசித்து

கிறு கிறுக்க வைத்தது

போதும்!

‘மன நல மருத்துவ ‘

மனைக்கு

நான் போகும் முன்

என் மனதுக்குள்

வந்து விடு.

13

நீ

கிளப்பிய ஒலிகள்

வெறும்

‘டெசிபல் ‘களாய்

காற்றில் கிடந்தபோது

ஒரு நாள்

நான் அதில்

இடறி விழுந்தேன்.

வீணை இடித்து காயமா ?

இந்த விழுப்புண்ணுக்கு

வானவில்லில்

ஒரு ‘பேண்டேஜ் ‘ போட்டேன்.

கனவை

விாித்துப் படுத்து

புரண்டு கொண்டிருக்கிறேன்

உறக்கம் வராமல்.

14

என் கற்கோட்டைக்குள்

கலகம் மூட்டும்

கண்ணாடிச்சிப்பாய்களே.

உங்கள் ராணியிடம்

சொல்லுங்கள்

ஓசை அம்புகளால்

நான் வீழ்ந்து விட்டாலும்

இந்த ‘ராஜ்யத்தில் ‘

தோல்வியின் அர்த்தமே

வெற்றி தான் என்று.

 

 

  Thinnai 2000 July 02

திண்ணை

Series Navigation

ருத்ரா