ஏழையும் இறைவனும்

This entry is part [part not set] of 9 in the series 20000528_Issue

வ.ஐ.ச.ஜெயபாலன்


1

தந்தன தான தனாதன தந்தன //

தந்தன னானானா ………//

தந்தன தான தனாதன தந்தன //

தந்தன தானானா – தன //

தந்தன தானா….னா //

அகதிகளாகி உலக உருண்டையில் //

அலைகிற செந்தமிழா //

கபோதிகளாக இருளின் புதல்வராய்

காணாமல் போவோமோ – நாம்

காணாமல் போவோமோ. //

( தந்தன…… )

அகிலத்தில் எங்கள் இளைய தலைமுறை //

அடியற்றுப் போகாமல் //

புகழ்மிகும் எங்கள் கலைகளில் வேரோடி //

பூத்திட வேண்டாமோ – நாம் //

பூத்திட வேண்டாமோ //

( தந்தன …. )

பாட்டியின் பாட்டி பாட்டனின் பாட்டன்

சொல்லிய கதை ஒன்றை

நாட்டியம் ஆடி * சபையினில் சொல்ல

நாமிங்கு வந்தோமே – இன்று

நாமிங்கு வந்தோமே

( தந்தன ….. )

ஏழையின் நிலமை உணரா அரசன்

பிரம்படி படுவானாம்

தோழமையோடு பிட்டுக்கு இறைவன்

மண்ணும் சுமப்பானாம்

( தந்தன…… )

2.

( புயல் மழையும் வைகை ஆறு பெருகுவதும்

மக்கள் அல்லோல கல்லோலமும் )

வைகை பெருகிறதே

பொங்கும் கடலெனவே

என் செய்வோம் இனி எது செய்வோம்

ஏனிந்த சோதனையோ.. ?

( வசனம் )

இத்தால் சகலரும் அறியத் தருவது

எங்கள் அரசனின் செய்தி இது

எத்தாலும் தட்டாமல் வைகைக்கு அணைகட்ட

எல்லோரும் சென்றிட வேண்டுவது

செத்தாலும் விடுப்பில்லை வைகை உடைத்திடில்

செகமே அழிந்திடும் – இயலாதவர்

சித்தாளை கொண்டேனும் தங்களின் பங்கை

செய்திட அரசனின் கட்டளையாம்

3.

( இராகம் : சுபபந்துவராளி )

துணையில்லா ஏழைகளின்

துன்பத்தை மன்னவன்

உணரவில்லை ஐஐயோ..

அணை கட்ட யாருமில்லை

ஆண்டவனே எனது துணை நீதான்

ஐயோ .. சிவாய நம … ஓம் நமச்

சிவாய .. சிவாய நம … ஓம் நமச்

சிவாய .. ஓம் நமச் சிவாய

4

சிவதாண்டவம்

பூமியில் நின்று துயரத்தில் வாடி

மானிடம் அழைக்குதையா – எம்மை

மானிடம் அழைக்குதையா

கோம குண்டத்தில் எழுகின்ற நெருப்பாய்

இதயத்தை எரிக்குதையா – எந்தன்

இதயத்தை எரிக்குதையா

சிவாய நம ஓம் நமச் சிவாய

சிவாய நம ஓம் நமச் சிவாய

5.

விருத்தம்

(இராகம் : நாட்டை)

தன்னுள் ளம் நொந்து சிவ சிவ என்று

தன்னுள்ளம் நொந்து சிவாய நம என்று

செம்மனச் செல்வி தவிக்கின்றாள்

பெண்ணவள் ஏழை துணையில்லா கிழவி

பிட்டினை சுமந்தே பிழைக்கின்றவள்

(இராகம் : அடானா )

கண்ணிலா மன்னன் செம்மனச் செல்வியை

கட்டுக அணையென பணித்தததனால்

( இராகம் : நாட்டை )

என்துதி பாடினாள் என்னையே தேடினாள்

இக்கணமே நான் புவி செல்வேன்

6.

( உரை நடை )

கூலியோ கூலி

கூலியோ கூலி

( இராகம் : நாட்டை )

ஆள் வேணுமோ கூலிக்கு ஆள் வேணுமோ

அய்யாமாரே அம்மாமாரே ஆய்ச்சிமாரே அப்புமாரே

ஆள் வேணுமோ கூலிக்கு ஆள் வேணுமோ

பெருகிற வைகைக் கரைகளை மலைபோல்

உயர்த்திட வேணுங்களா

தருகிற கூலிக்கு மாடாய் உழைத்து

தருக்கிட வேணுங்களா

( இராகம் : காம்போதி )

கடவுளே கடவுளே கண் திறந்தாயோ

கதியிலா ஏழை எனக்கு கருணை செய்தாயோ

வாடா

வாறேன் பாட்டி வந்திட்டேன் பாட்டி //

வந்தேனே// வந்தேனே// வந்தேனே// பாட்டி//

என்னகூலி// தருவாய் பாட்டி //

ஏழையை ஏமாற்ற// மாட்டாயா பாட்டி//

( வாறேன் பாட்டி…. )

மதுரை எனக்கு பெண்டாட்டி ஊரு//

வைகை என்// மீனாட்சி// குளிக்கின்ற// ஆறு//

இந்தக் கதைகள்// தெரியுமா பாட்டி//

எந்தக் கரையை நான்// கட்டணும் பாட்டி//

( வாறேன் பாட்டி… )

7.

யார் முகத்தில் விழித்தேனோ பராசக்தி – காலை //

யார் முகத்தில் விழித்தேனோ பராசக்தி//

போதும் பாட்டி போதும் பாட்டி கண்கலங்காதே //

போதும் பாட்டி போதும் பாட்டி கண்கலங்காதே //

பிட்டெனக்கு தந்தால் போதும் மண்சுமக்கின்றேன்//

உதிர்ந்த பிட்டு மட்டும் தந்தால் போதும் மண்சுமக் //

கின்றேன்.. மண்சுமக்கின்றேன்… //

8.

தக்கிட கிடதோம் ததகிட கிடதோம்

தக்கிட கிடதோம் ததகிட கிடதோம்

தா……. தீ……….. தொம்… நம்…

பாண்டிய மன்னன் படையணி சூழ

கட்டிடும் அணையை கண்டிட வாறார்

பராக்… பராக்… பராக்….

இந்தப் பங்கு யாரது

ஓட்டைப் பல்லைப் போலவே

சிதைந்த அணையை பாரடா

சீற்றம் கொண்டேன் நானடா

கட்டி இழுத்து வாடா – கயவனை

கட்டி இழுத்து வாடா

9.

பரமனின் முதுகின் மீது!

பாண்டியன் பிரம்பை ஓங்க!

ஆதவன் கீழே வாழும்!

அனைத்துமே அடியை வாங்க!

அரசனும் ஐயோ என்றான்!

அமைச்சனும் ஐயோ என்றான்!

மக்களும் ஐயோ என்றான்!

மக்களும் ஐயோ என்றார்!

10.

தந்தன தான தனாதன தந்தன //

தந்தன னானானா ………//

தந்தன தான தனாதன தந்தன //

தந்தன தானானா – தன //

தந்தன தானா….னா //

அகதிகளாகி உலக உருண்டையில் //

அலைகிற செந்தமிழா //

கபோதிகளாக இருளின் புதல்வராய்

காணாமல் போவோமோ – நாம்

காணாமல் போவோமோ. //

( தந்தன…… )

அகிலத்தில் எங்கள் இளைய தலைமுறை //

அடியற்றுப் போகாமல் //

புகழ்மிகும் எங்கள் கலைகளில் வேரோடி //

பூத்திட வேண்டாமோ – நாம் //

பூத்திட வேண்டாமோ //

( தந்தன …. )

பாட்டியின் பாட்டி பாட்டனின் பாட்டன்

சொல்லிய கதை ஒன்றை

நாட்டியம் ஆடி * சபையினில் சொல்ல

நாமிங்கு வந்தோமே – இன்று

நாமிங்கு வந்தோமே

( தந்தன ….. )

ஏழையின் நிலமை உணரா அரசன்

பிரம்படி படுவானாம்

தோழமையோடு பிட்டுக்கு இறைவன்

மண்ணும் சுமப்பானாம்

11.

மானிடம் வென்றதென்று மங்களம் சொன்னோம்

வந்திருக்கும் யாவருக்கும் மங்களம் சொன்னோம்

எம் இனத்தின் விடுதலைக்காய் மங்களம் சொன்னோம்

உலக மக்கள் ஒற்றுமைக்கு மங்களம் சொன்னோம்

 

 

  Thinnai 2000 May 28

திண்ணை

Series Navigationழூங்ுவ்ுழூிழூக்ிஒஆந்ழூர்ி பூர்ுத் ச்ண்ுய்ி ஞ்ஆக்த்ுப்ி ழூங்ுவ்ு ண்ல்ிமண்ி டூஆங்த்ச்ிச்ுவ்ி டூத்ழூிழூச்ிஆச்ட்ிட்ல்ில்ு பூநச்ட >>