முன்றில்வேம்பு

This entry is part [part not set] of 2 in the series 20000305_Issue

வ.ஐ.ச.ஜெயபாலன்



நினைவுள்புதைந்த வேப்பம் வித்து
திறக்கும்இணைய ஓவியத் தளமாய்
நெஞ்சுள்பசும் குடை விரிக்க
காலத்தைமீட்டு வாழ்ந்தேன்.

முலை அமுது உண்டேன்.
நிழலில்தவள்ந்து
மண் விழையாடினேன்.
என் அயல் சிறுமி
`குஞ்சாமணியை`
எங்கேதொலைத்தாள்
என்று வியந்தேன்.
பாட்டிகதைகளில் முடிகள் புனைந்தேன்.

கோவிற்பொங்கலில்
நீறு பூத்த தணற் பாவைகளாய்
வெளியேநின்ற சிறுவரை எனது
பால்யநண்பர்கள் சீண்ட வெகுண்டு
அதிர்ந்தமனசை
‘அது அது அவர் அவர்
ஊழ்வினைப்பயன் ‘ என
தேற்றியபாட்டியை நம்ப மறுத்தேன்.

எங்கள்வீட்டில் சமைக்கிற பெண்ணுடன்
அம்மணமாகமாமா இருந்ததை
கண்டதன்பரிசாய் `சாக்கிளேட்` தின்றேன்.
ஆண்குறிவிறைக்க நோயென அஞ்சி
விம்மிஅழுதேன்.

என் அயலாள் மிரள
முதன் முதலாக
விசத்தேன் குளவிக் கூடாய்த் திரண்ட
இள முலை உண்டேன்.
மனதுள்கிழைகள் நெரியும்
வேம்பின்வேருள் என் காலப் புதையல்.

நினைப்புத்தானேஇளமையும் முதுமையும்.

சூரியப்பந்தை ஏந்த உயரும்
முன்றில்வேம்பினைச் சுற்றி
வயது உடைய
வட்டப்பாதையில் முன் செல்கிறது
என் காவிய வாழ்வு.

நான் வேண்டுவது
காதலும்கவிதையுமாக
சோடிகூடியும்
கண்ணீரும்புலம்பலுமாக
தனித்தும்
குயில்கள்பாடிப் பாடி வளர்த்த
எனது வேப்ப மரத்தின் நீழலே.
நான் ஆசைப்படுவது
விடுதலைஅடைந்த தோழியரோடு
குறுகியஇரவுகளும்
விடுதலைக்கெழுந்த தோழர்களோடு
நீண்டஇரவுகளும்
துணையாய்இருந்த என் வேம்பின் கீழே
பொறுமையாய்நிலா பூக்கள் தைத்த
கரும் கம்பளமே.

நான் வேண்டுவது
புத்தன்தேவனான போதி மரமல்ல
அன்னையின்முலை அமுதம் உண்டும்
தோழியர்அமுத முலையினை உண்டும்
நான் மனிதனான
வேப்ப மரமே.

Thinnai 2000 March 5

திண்ணை

Series Navigation