வாருங்கள் கவிதையால் கடத்தப் படுவோம்.

This entry is part 2 of 8 in the series 20000103_Issue

என்னைப் பற்றி நான் நினைத்தால்


மாயா ஏஞ்சலெள

என்னைப் பற்றி நான் நினைத்தால்
சிரிப்பில் செத்தே போவேன் போல்.
என் வாழ்ககையே ஒரு பெரும் கேலிக் கூத்து
நடனம் என்றபடி வெறுமே நடந்தது போல
பாடல் என்றபடி வெறும் பேச்சு போல,
என்னைப் பற்றி நான் நினைத்தால்
சிரிப்பில் மூச்சே முட்டுகிறது.

அறுபது ஆண்டு இந்த ஆட்களின் உலகில்
நான் வேலை பார்க்கும் வீட்டின் சிறுமி ‘ஏனடா ‘ என்கிறாள் என்னை,
‘சரிங்க அம்மா ‘ என்கிறேன் நான் – வேலை வேண்டுமே எனக்கு.
வளைந்து கொடுக்க என் கர்வம் இடந் தராது.
விட்டு வெளியேற என் வறுமை இடந் தராது,
என்னைப் பற்றி நான் நினைத்தால்
சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது.

என் ஜனங்கள் எனக்குச் சிரிப்பு மூட்டுகிறார்கள்
சிரித்து சிரித்து விலாவே வலிக்கிறது.
சொல்கிற கதையும், பொய்யே போலத்தான்
பழத்தைப் பயிராக்கி
தோலைத் தின்கிறார்கள்.
என் ஜனங்களைப் பற்றி நினைத்தால்
சிரித்து சிரித்து அழுகையே வருகிறது.


When I think about myself

Maya Angelou

When I think about myself,
I almost laugh myself to death,
My life has been one great big joke,
A dance that ‘s walked
A song that ‘s spoke,
I laugh so hard I almost choke
When I think about myself.

Sixty years in these folks ‘ world
The child I work for calls me girl
I say ‘Yes ma ‘am ‘ for working ‘s sake.
Too proud to bend
Too poor to break,
I laugh until my stomach ache
When I think about myself.

My folks can make me split my side,
I laughed so hard I nearly died,
The tales they tell, sound just like lying,
They grow the fruit,
But eat the rind,
I laugh until I start crying,
When I think about my folks.


ஒரு வேலி

கார்ல் சேன்ட்பர்க்

குளத்தங்கரையில் கல் வீடு முடிந்து விட்டது, வேலியைக் கட்ட ஆரம்பித்து விட்டனர்,
இரும்புப் பட்டையில், குத்திட்டு நிற்கும் இரும்பு – அதில் விழுந்தால், குத்தினால் ஆள் காலி,
வேலியென்று பார்த்தால் பிரமாதம்,சத்தமும், நாடோடிகளும், பசித்த மனிதர்களும், விளையாட வரும் குழந்தைகளும்
நிச்சயம் நுழையவே முடியாது
குத்தீட்டிகளையும், இரும்புப் பட்டைகளையும் தாண்டி யாருமே வர முடியாது
மரணம், மழை, நாளைப் பொழுது தவிர.


A Fence

Carl Sandburg

Now the stonehouse on the lake front is finished and the workmen are beginning the fence,
The paling are made of iron bars with steel points that can stab the life out of any man who falls on them
As a fence, it is a masterpiece, and will shut off the rabble and all vagabonds and hungry men and all wandering children looking for a place to play.
Passing through the bars and over the steel points will go nothing except Death and the Rain and Tomorrow.

—————————————————————————————————————-
Translation Gopal Rajaram

Thinnai 2000 January 3

திண்ணை

Series Navigation<< PONGAL CELEBRATION: CONNECTICUT TAMIL SANGAMகனேடியப் பருவமங்கை >>

என்னைப் பற்றி நான் நினைத்தால்

என்னைப் பற்றி நான் நினைத்தால்