ஆங் சான் சூ கீ

This entry is part [part not set] of 35 in the series 20101219_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்


தலையிலே மல்லிகை
முகத்திலே புன்னகை
அவர்தான் ஆங் சான் சூ கீ

நவ 13, 2010
வீட்டுக் காவலிலிருந்து விடுதலை

நல்லார் ஒருவர் உளரேல்
அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை

மியான்மார் இன்று
மழையால் மணக்கிறது

ஆரம்பக் கல்வி புதுடில்லியில்
அடுத்த கல்வி ஆக்ஸ்ஃபோர்டில்

அவரிடம் சில கேள்விகள்

உயிராக மதிக்கும் தலைவர்?
மகாத்மா காந்தி

பொதுவாழ்வில் உங்களை
பொத்திக் கொண்ட சக்தி எது?
மகாத்மா காந்தி

உயிர்க் கொள்கை?
அகிம்சை
வேறு வழியே இல்லாத போது
ஒத்துழையாமை

நீங்கள் எழுதிய புத்தகங்கள்?
‘பர்மாவைச் சுற்றிப் பார்ப்போம்’
‘பர்மிய இலக்கியங்களில்
அரசியல் சமுதாய தாக்கங்கள்’
‘அச்சத்திலிருந்து விடுதலை’

தாங்கள் வாங்கிய விருதுகள்
1990 ரப்லோ மனித உரிமை விருது
1991 சக்ரோவ் விருது
1991 அமைதிக்கான நோபல் விருது

நோபல் பரிசை நேரில் பெற்றீர்களா?
தனிமைச் சிறையில் இருந்தேன்
என் சார்பில் என் மகன்கள்

நீங்கள் வழங்கிய கொடை?
நோபல் பரிசு 1.3 மில்லியன்
பர்மியர் வளர்ச்சிக்கான அறநிதிக்கு

வீரத்திருமகளை
வீட்டுக் காவலில் வைத்ததேன்?
வார்த்தைகள் சொல்ல முடியாததை
வலைத் தளங்கள் சொல்லும்

தங்களால் மறக்க முடியாதது?
எல்லை வரை வந்தும்
என்னைப் பார்க்க முடியாமல்
என் கணவர் துடித்தது
பின் மடிந்தது

உங்கள் விடுதலை பற்றி?
என்னோடு சிறைப்பட்ட
2100 பேர் இன்னும் உள்ளேதான்
என்னைப் பொருத்தவரை
இது விடுதலை அல்ல

நீங்கள் பர்மிய மக்களுக்குச்
சொல்ல விரும்புவது?
அகிம்சை
பொறுமை
உண்மை

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigation

யூசுப் ராவுத்தர் ரஜித்

யூசுப் ராவுத்தர் ரஜித்

ஆங் சான் சூ கீ

This entry is part [part not set] of 34 in the series 20101205_Issue

வே பிச்சுமணி


இந்த மாதம் பல ஆண்டுகள் வீட்டு சிறையிலிருநது விடுதலையான பர்மாவின் காந்திய போராளியான ஆங் சான் சூ கீ அவரது பெயரில் உளள “ஆங்“சான்” என்பதை அவரது தந்தைபெயரிலிருந்தும்” சூ என்பதை அவரது தந்தைவழி பாட்டியின் பெயரிரலிருந்தும் ”கீ” என்பதை அவரது தாயாரின் பெயரிலிருந்தும் பொற்றார். இவர் 1945 ஆம் ஆண்டு சூன் 19 நாள் அவரது பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாக பிறந்தார் .இவரது தந்தை ஆங் சான் பர்மாவின் விடுதலைப்படை கமான்டர் தாய் மா கின் கீ( பின்னர் டா (அத்தை) கின் கீ) ரங்கூன் பொது மருத்துவமனையில் தலைமை செவிலியர். இவருக்கு இரு சகோதரர்கள் இவரது பிரியமான சகோதரர் ஆங் சான் லின் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். இன்னொரு சகோதரர் ஆங் சான் ஓ அமெரிக்க குடிஉரிமை பெற்று சாண்டியாகோவில் வசிக்கிறார்.இவர்களது குடும்பம் த்ராவடா புத்த மதத்தை சார்ந்தவர்கள்

இவரது தந்தை ஆங்சான 1947 சூலை 19 நாளில் அவரது அரசியல் எதிரிகளால் கொல்லப்பட்டார். அதற்கு பின்னர் இவரது தாய் டா கின் கீ சமுதாயத்தில் மிகவும் பிரபலமானர். சமுதாய திட்டமிடல் சமுகாய கொள்கை வரைவு அமைப்புகளுக்கு தலைமை வகித்தார்.

சனவரி 4 1948 ஆம் ஆண்டு பர்மா பிரிட்டிஷ் காலணி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றதது. 1980 ஆம் ஆண்டு ஆங்சான்சூகியின் தாயார் இந்தியாவிற்கான தூதுவராக அனுப்பப்பட்டார். அவருடன் இந்தியா வந்த சூ கீ அவரது உயர்நிலை பள்ளி படிப்பை புது டெல்லியில் உள்ள லேடி சிறிராம் கல்லூரியில் படித்தார். அவரது பட்டபடிப்பை இங்கிலாந்து நாட்டில் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் மேற்கொண்டு இளங்கலை தத்துவ இயல் பட்டம் பெற்றார். மேலும் தூய க்யுக் கல்லூரியில் அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்தார்.

1969-71 ஆண்டு வாக்கில் பர்மாவை சார்ந்து உதண்ட் அய்க்கிய நாட்டு சபையின் செக்கரட்டரி ஜெனரலாக இருந்தபோது சூகி ஐநா செயலகத்தில் உதவி செயலராக பணியாற்றினார். அவ்வாறு வேலை பார்க்கையில் வார கடைசிநாட்களில் மருத்துவமனையில் இன்னலுறும் நோயாளிகளுக்கு பேச்சு துணையாகவும் அவர்களளுக்கு படித்து காட்டும் தன்னார்வ தொண்டராகவும் சேவை செய்தார்.

1972 ஆம் ஆண்டு சனவரி 1 ல் ஏற்கெனவே திபெத்திய நாகரிகத்தை பயிலும் மாணக்கராக இருவருக்கும் பொதுவான ஆங்கில நண்பர் வீட்டில் அறிமுகமான பிரிட்டிஷ்காரர் மைக்கல்அரிஸ் என்பவரை மணந்தார். மைக்கல்அரிஸ் பூடான் அரச குடும்பத்தாருக்கு கல்வி கற்ப்பிக்க சென்ற போது அவருடன் சூகீ யும் பூடான சென்று அங்கே அரச வெளியுறவு அமைச்சகத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றினார்.சூகீ தம்பதியருக்கு அலெக்ஸண்டார், கிம் எனும் இரண்டு மகன்கள் பிறந்தார்கள் .

சூகி எழுதவும் தொடங்கினார் அவரது தந்தை ஆங் சான் பற்றி நூல் ஒன்று எழுதி வெளியிட்டார். குழந்தைகளுக்கான நூலாக Let’s Visit Burma எனும் நூலையும் பின்னர் “Socio-Political Currents in Burmese Literature, எனும் நூலை 1910-1940 ல் வெளியிட்டார். Freedom from Fear (அச்சததில் இருந்து விடுதலை)எனும் இவரது புத்தகம் பென்குவின் பதிப்பகத்தாரால் இங்கிலாந்து கனடா ஆஸ்திரேலியா நியுசிலாந்து ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டது நார்வே ஸ்பெயின் பிரெஞ்ச் மொழிகளில் மொழி பெயர்க்க்பட்டது.

1988 ஆம் ஆண்டு அவரது தாயாருக்கு உடல் நிலை சரியில்லையெனும் தொலைபேசி செய்தி கேட்டு ரங்கூன் வந்து அவரது தாயாருக்கு மருத்துவம் பண்ண ஏதுவாக ரங்கூன் இன்யா ஏரிக்கருகில் உள்ள பல்கலைகழக நிழற்சாலையில் உள்ள அவர்களது குடும்ப வீட்டிற்கு குடிபெயர்ந்தார் . அவ்வமயம் 1962 லிருந்து ராணுவ ஆட்சி புரிந்து வந்த ராணுவ ஜெனரல் நி வின் பதவி விலகினார். அதனை தொடர்ந்து பர்மாவின் மக்களிடைய பெரும் பேராட்டம் உத்வேகம் எடுத்தது. போராட்டத்தை அடக்க ராணுவம் எடுத்த நடவடிக்கையில் ஆயிரக்கணக்கில் புரட்சி புரிந்த மக்கள் கொல்லப்பட்டார்கள். .இதனை கண்டு கோபம் கொண்டு சூ கீ அவரது முதல் அரசியல் நடவடிக்கையாக, 1988 ஆகஸட் 15 அன்று ராணுவ அரசாங்கத்திற்கு ஒரு திறந்த கடிதம் ஒன்றை அனுப்பி அதில் பல கட்சிகள் கலந்து கொள்ளும் தேர்தலை நடத்த முன்னேற்பாடு செய்ய தன்னாதிகாரமுள்ள கலந்தாய்வு அமைப்பினை உடன ஏற்படுததுமாறு கேட்டு கொண்டார். ஆகஸ்ட் 26 ம் நாள் லட்சக்கணக்கான மக்கள் கூடிய முதல் பொது கூட்டத்தில் அவரது கணவர் மகன்கள் முன்னிலையில் உரையாற்றினார்..

ராணுவ ஆட்சியர்கள் நமது நாட்டு ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் போல் State Law and Order Restoration Council (SLORC).)ஐ கொண்டு வந்தார்கள். அதன்படி பர்மாவில நான்கு பேருக்கு மேல் கூடி பேச தடை விதிக்கப்பட்டது. மக்கள் விசாரணையில்லாமல் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்க்ள். தேர்தல் நடந்தது ஆனால் பல கட்சிகள் கலந்து கொண்டதன் விளைவாக தேர்தல் முடிவுகள் வெளியானதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனது. 1988 செப்டம்பர் மாதம் சூ கீ அவரையே பொது செயலராக கொண்டு, தேசிய சனநாயக லீக் National Leaque for Demorcracy NLD எனும் கட்சியினை ஆரம்பித்தார். மகாத்மா காந்தியின் கொள்கையில் பெரும் மதிப்பு வைத்துள்ள சூகி தனது கட்சியின் கொள்கையாக அகிம்சை மற்றும் ஒத்துழையாமை என அறிவித்தார்.. சூகி, ராணுவ ஆட்சியின் தடையை மீறி நாடு முழுவதும் சென்று பல கூட்டங்களை நடத்தினார். அவரது பேச்சால் ஆயிரக்கணக்கான மக்கள் கவரப்பட்டு அவரது கூட்டங்களில் குவிந்தார்கள். இதற்கிடையே அவரது தாய் டா கின் கீ மரணமடைந்தார். அவரது தாயாரின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். இறுதி ஊர்வலதத்தில் கலந்து கொண்டு மக்களிடையே தனது தநதை தாய் போல் பர்மாவின் மக்களுக்காக “சாகும்வரை பாடு பாடுவேன்” என உறுதியளித்தார்..

துன்புறுத்தல், கைது செய்தல், தொண்டர்கள் கொல்லப்படுதல் இவற்றை எல்லாம் பொறுத்து கொண்டு 1989 சனவரி முதல் சூலை வரை மறுதேர்தல் கூட்ட பரப்புரையில் தீவிரமாக கலந்து கொண்டு உரையாற்றினார். ராணுவ அரசாங்கம் அவரை தேர்தலில் நிற்ககூடாது என தடை விதித்தது. ராணுவ வீரர்கள் துப்பாக்கி மூனைகள் அவரை குறிபார்த்து சுட தயாராக இருக்க ஐராவதி கழிமுக பகுதி கூட்டத்தில் தைரியமாக கலந்து கொண்டு உரையாற்றினார்.

1989 ஆண்டு சூலை 20 நாள் சூ கீ வீட்டு காவலில் வைக்கப்ட்டார். அவருடன் கைது செய்யப்பட்ட மாணவர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கும் சிறைச்சாலைக்கு தன்னையும் அனுப்பும்படி உண்ணாநிலை மேற்கொண்டார். மூன்றாம் நாள் அம்மாணவர்கள் சிறைச்சாலையில் நல்லபடியாக நடத்தப்படுவார்கள் எனும் ராணுவ அரசு அளித்த உறுதி மொழியின் பேரில் அவரது உண்ணாநிலைபை முடித்து கொண்டார். சூகீ வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட போதிலும் அவரது என்எல்டி கட்சி 82 விழுக்காடு வாக்கு பெற்று இமாலய வெற்றி பெற்றது ஆனால் ராணுவ அரசு அந்த வெற்றியை ஏற்றுக்கொள்ளவோ ஒத்துக்கொள்ளவோ இல்லை.

1990 ஆண்டு சூ கீ க்கு ரப்லோ மனிதஉரிமைகள் பரிசு வழங்கப்பட்டது..1991 ம் ஆண்டு அய்ரோப்பிய நாடாளுமன்றம் சக்ரொவ் மனித உரிமை பரிசினை சூ கீ க்கு வழங்கியது. 1991 ஆம் ஆண்டு ஆங் சான் சூ கீ க்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அரசியலில் இருந்து விலகவதாகவும் பர்மாவை விடடு செல்வதாகவும் அறிவித்தால் விடுதலை தருவதாக ராணுவ அரசு சூ கீ யிடம் சொன்னது. அதற்கு அவர் மறுத்து விட்டார். பல் வேறு தடவை ஐநா அமைப்புகளும் ஒன்றிரண்டு அமெரிக்க குடியரசுதலைவர்களும் கேட்டு கொண்டும் சூகி விடுதலை செய்யப்படவில்லை நோபல் பரிசை தனது தாயின் சார்பில் சூ கீ யின் மகன்களான அலெக்ஸாண்டர் மற்றும் கிம் அஸ்லொவில் நடந்த நிகழ்ச்சியில் பெற்று கொண்டார்கள். நோபல் பரிசு பண்மாக கிடைத்த 1.3 மில்லியன் டாலர் பணத்தை பர்மிய மக்களின் சுகாதராம் மற்றும் கல்வி அறக்கட்டளையினை நிறுவுவதற்காக அளித்துவிட்டார்.

சூகீ பர்மாவில் ராணுவ ஆட்சி மறையும் வரை பர்மாவிற்கு யாரும் சுற்றுலா வராதீர்கள் என்றும் முதலீட்டாளர் யாரும் முதலீடு செய்ய வேண்டாம் என்றும் ஐநா சபை பொருளாதார தடை பர்மாவின் மீது விதித்ததை வரவேற்றார். ஆனால் பர்மாவின் பக்கத்து நாடுகள் இது உள்நாட்டு பிரச்சனை என்றும் அதில் தலையிடாமாட்டோம் என சொல்லின. ஆனால் அதே வேளையில் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பில்(ASEAN) பர்மாவை உறுப்பினராக ஆக்கி கொண்டன

உலகெங்குமும் சூகீ யை விடுதலை செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்தது. நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் குழு பர்மாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படவே தாய்லாந்து எல்லையிலிருந்து பர்ம அகதிகள் முகாமிற்கு சென்று சூ கீ யை விடுதலை செய்ய கோரிக்கை வைத்தனர். இதனை மீளவும் ஐநா சபையிலும் கோரிக்கையாக வைத்தார்கள். 1994 ஆண்டு குடும்பத்தார் அல்லாத நபர்களாக ஐநா சபை பிரதிநிதி அமெரிககா காங்கிரஸ் உறுப்பினர் நியுயார்க் டைம்ஸ் நிருபர் ஆகியோர் சூகியை சந்தித்தனர். 1995 ஆம் ஆண்டு சூலை பத்தாம் நாளில் ஆறு ஆண்டு வீட்டு காவலிருந்து விடுதலை செய்யபட்டார் .

சூ கீ யின் கணவர் புரோஸ்ட்டில் புற்றுநோய் தாக்கப்பட்டு 1999 ஆண்டு மார்ச் 27 ல் மரணமடைந்தார். . தனது இறப்புக்கு முன்பாக தனது மனைவியை ஒருதடலையாவது பார்த்து விட வேண்டுமெனும் ஆவலில் பார்க்க அனுமதி கேட்டு பர்மிய ராணுவ அரசாங்கத்திற்கு மனு செய்தார் . ஆனால் ராணுவ அரசு கொடும் நெஞ்சம் கொண்டு அனுமதி மறுததுவிட்டது. . கடைசியாக 1995 கிறிஸ்மஸில் தனது மனைவியை பார்த்த பின் மைக்கல் அரிஸ் தனது மனைவியை பார்கக முடியாமல் பர்ம அரசாங்கம் தடுத்து விட்டது.

மீண்டும் சூகி 2000 ஆண்டு நாட்டின் திறத்தன்மை மற்றும் சமுதாய அமைதிக்கு ஊறு விளைவிப்பார் என கைது செய்யப்பட்டு. தேசிய பாதுகாப்பு சட்டம் (1975) ன் படி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் அவரது தண்டைனைக் கெதிராக பல முறை ராணுவ அரசிடம் மனு செய்தும் அவரது கோரிக்கை ஏற்க படவில்லை. ஐநா சபை பெரும் முயற்சி மேற்கொண்டு 2002- ல் சூ கீ யையும் ராணுவ ஆட்சியாளர் சுண்டா (JUNTA)வையும் பேச வைத்தது. அதன் வாயிலாக சூகீ உள் நாட்டுக்குள் சுற்றுபயணம் சென்று வர அனுமதிக்கப்பட்டார் . ஆனால் 2003- ல் அரசு ஆதரவுடைய தடியர் கூட்டத்தால், அவரது காரவன், டேபாயின் எனுமிடத்தில் தாக்கப்பட்டது சூகீயின் ஆதரவாளர்கள் பலரும் தாக்கப்பட்டார்கள் சிலர் கொலலப்பட்டார்கள்.. சூகீ அவரது கார் ஓட்டுநர் உதவியுடன் தப்பித்தார் ஆனால் ராணுவ அரசு அவரை பின் தொடர்ந்து சென்று கைது செய்து ரங்கூனில் உள்ள இன்செயின் சிறைச்சாலையில் அடைத்தது.. 2003- ல் சூகீ hysterectomy செய்து கொண்டபின் , சூகீ வீட்டு சிறைக்கு மாற்றப்பட்டார் .

தற்போது நடத்தப்பட்ட தேர்தலில் 12 நவம்பர் 2010- ல் வெளியான தேர்தல் முடிவில் சுண்டாவின் ஆதரவு கட்சி Union solidarity and Development party தேர்தலில் வெற்றி பெற்றதால் பர்மாவின் ராணுவ ஜெனரல் சுண்டா, சூகீயை 13 நவம்பர் 2010 அன்று விடுதலை செய்ய இசைவளித்து கையெழுத்திட்டார். அன்று விடுதலை ஆகி வெளி வந்த தன்னை பார்கக வ்நத கூட்டத்தினர் மத்தியில் “உங்களை எல்லாம் பார்த்து ரொம்ப ஆண்டுகள் ஆகிவிட்டன் உங்களிடம நிறைய பேச வேண்டியுள்ளது. நாம் நிறைய கடமைகளை செய்ய வேண்டி உள்ளன “ என்றார். அடுத்த நாள் தடை செய்யப்பட்ட அவரது கட்சியான என்எல்டி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். “உலக மக்களிடமும் நாட்டு மக்களிடமும் பர்மாவின் அரசியல் சீர்திருத்தத்துக்கு உதவ வேண்டும் என்றும். இந்த செய்தி மேற்கத்திய நாடுகளுக்கு மடடுமல்ல தேர்தலில் கலந்து கொண்ட கட்சிகளுக்கும் மட்டுமல்ல. “ என்றும் குறிப்பிட்டு கூறினார். ஒரு வாரத்திற்கு முன் நடந்த தேர்தலில் அவரது கட்சி கலந்து கொள்ள கூடாது என சூகீ அறிவித்ததால் அக்கட்சி கலந்து கொள்ள வில்லை அதனால் அவரது கட்சியில் பிளவு ஏற்பட்டது அந்த கட்சி தேர்தலில் கலந்து கொண்டு சொற்ப இடங்களை தான் பெற்றது. சூகியின் கட்சி தேர்தலில் கலந்து கொள்ளாத காரணத்தால் ஜெனரல் சுன்டாவின் ஆதரவு கட்சியான யுஎஸ்டிப்பி கட்சி பெரும்பான்மை பெற்றது

தற்போதைய உலகம் நல்ல தலைவர்களுக்காக ஏங்கி கிடக்கிறது. உலகம் தேடும் அப்படிப்பட்ட உத்தம தலைவி ஆங்சான் சூ கீ என்றால் அது பொய்யாகாது. . சகிப்புதன்மையும் நேர்மையுடன் கூடிய அச்சமில்லாத தலைவி சூகி ஆவார் . ராணுவ ஆட்சியின அடக்குமுறை அவரை 21 ஆண்டுகள் கட்டாயப்படுததி பேச விடாமல் செய்தது ஆனால் அத்தனை ஆண்டுகளும் பொறுமை காத்தார். சூகி . 65 வயதாகும் சூகீ மல்லிகை மலர் சூடி வயதானபோதும் (வயதான காலத்து எம்எஸ் சுப்புலட்சுமி போல்) அழகாக இருக்கிறார்.

“அரசுக்கெதிராக செயலப்பட்ட 2100 பர்மியர்கள் இன்னும் சிறையில் உள்ளார்கள். அவர்கள் விடுதலை அடைந்தால் தான் அவருக்கு உண்மையான விடுதலை” என அவரது விடுதலை பற்றி சூகீ கருத்து தெரிவித்து உள்ளார் . அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சூகீயை தனது உறிரோ என தெரிவிதது சூகீ க்கு மகுடம் சூட்டி உள்ளார்.

சூகீ யின் விடுதலை பர்மாவின் ஆட்சியின் அடிப்படையை உடனே மாற்றி விடப்போவதில்லை என்றும் ஒபாமா சரியாக சொன்னார். சூகீ இது வரை ராணுவ ஆட்சியிலிருநது பர்மாவை விடுவிக்க இயலவில்லை. அவர் சிறையிலிருந்த ஆண்டுகளில் ராணுவ ஜெனரலின் அதிகாரம் தான் அதிமாயிற்று. தற்போது இவர் விடுதலை உலகுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் . பர்மாவின் அரசியலில் அதிகார மாற்றத்திற்கான வாய்ப்பு மிக குறைவாகவே உள்ளது. பர்மாவின் எழுத்தாளர் க்யூ வின் “ 1988 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் சனநாயகம் வேண்டி நடந்த மக்கள் எழுச்சி போராட்டங்கள் ராணுவ ஆயுதங்களால் அடக்கப்பட்டதை நினைவு கூர்ந்து பர்மாவில் மக்களுக்கு அதிகாரமே இல்லை அவர்களின் இறுதி யாத்திரைகள் தான நடத்தப்படுகின்றன”. என தெரிவித்து உள்ளார்.

சூகீ நன்றாக பேசக்கூடியவர் என்ற போதிலும் சனநாயகத்தை குழி தோண்டி புதைக்க நினைக்கும் ராணுவ ஆட்சியாளர்களிடமிருந்து அரசியலை மீட்டு சனநாயகத்தை மலர செய்வது என்பது பெரும் கஷ்டம் என கருதப்படுகிறது. “மக்கள், சூ கீ மீது நிறைய நம்பிக்கை வைத்து உள்ளார்கள். ஒரே இரவில் சனநாயகத்தை பர்மாவில் கொண்டு வந்து விடமுடியாது. ராணுவ ஆட்சியாளர் முரட்டுத்தனமானவர்கள் அதனால் நாட்டின் விடுதலைக்கு சூகீயை மட்டும் நம்பினால் அது நியாயமாக இருக்காது” என தற்போது தாய்லாந்தில் இருந்து பர்மாவின் அரசியல் மாற்றத்திற்காக இயக்கம் நடத்தும் ஆய் சா எனும் முன்னாள் பர்மாவின மாணவ தலைவர் தெரிவித்து உள்ளார்.

தற்போது சூகீ, சற்று ஒத்து போகும் மனப்பான்மையுடன் தான் அவரது நடவடிக்கையினை தொடங்கியுள்ளார். அவரால் தான் பர்மா மீது விதிக்கப்பட்ட பொளாதார தடையினை நீக்க இயலும் என்பதை உணர்ந்து உள்ளார். ஆனால் அவ்வாறு தடை நீக்கபட்டால் ஜெனரல்களின் கை ஓங்கி விடும் என்பதும் அவர் அறிந்து வைத்து உள்ளார். . ராணுவ தலைமையினை பற்றி பேசும் போது கொஞ்சம் ஜக்கிரதையாகவே பேசுகிறார். சூகி, மூத்த ஜெனரலான தான்சாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்து உளளார். இதனை அவரது கட்சியை சேர்ந்த மற்றவர்கள் “தாங்கள் ராணுவ ஆட்சிக்கெதிராக வெறுப்புடன் இருக்கிறோம் என்எல்டி தலைவர்கள் 19ஆண்டு காலம் சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் சூகீ ராணுவ தலைமையிடம் மென்மையாக நடந்து கொள்கிறார் அவரது அப்பா பர்மா ராணுவத்தினை தொடக்கியவர் என்பதாலோ என்னவோ ராணுவத்திடம் பரிவு காட்டுகிறார். ராணுவ தலைமையிடம் அவரால் நேரிடையாக பேச முடியும் என்றாலும் பர்ம மக்களின் துரோகி என மற்றவர்கள் சொல்லும்படி ஆகி விடக்கூடாது” என வருத்தம் தெரிவித்தார்கள்

இன்றைய பர்மாவில் 10 விழுக்காடு குழந்தைகள் 5 வயதுக்குள் இறந்து விடுகின்றன. 50 விழுக்காடு குழந்தைகள் பள்ளி படிப்பை எட்டுவதில்லை. பர்மாவில மருத்துவ வசதி மற்றும் கல்விக்கான அரசு நிதி ஒதுக்கம் உலகத்திலேயே மிகவும் குறைவு. மேலும் “அதிகப்படியான அரசியலால் பர்ம மக்கள் அவதிப்படுவதாக “ பர்மாவின் வரலாற்று ஆசிரியர் ஒருவர் கூறுகிறார்.

மியான்மார் ( பர்மா) உண்மையில் ஒரே நாடு என சொல்ல வியலாது. பல பழங்குடி இன மக்கள் பர்மாவில் வசிக்கிறார்கள். அவற்றில முக்கியமான இனங்கள்: சான், கரன், கச்சின், மோன், ரக்கையின , சின் மற்றும பல இனங்கள் .இந்த பழங்குடி இன மக்கள் பர்மாவின் மக்கள்தொகையில் 40 விழுக்காடு ஆவார்கள. 1948- ல் பிரிட்டிஷகாரர்கள் மியான்மாரை விட்டு சென்றதும் மியான்மார்- தாய்லாந்து எல்லைகளில் பழங்குடி இன மக்கள் விடுதலை கேட்டு உள்நாட்டு போர்புரிய ஆரம்பித்து விட்டார்கள்.. தற்போது பர்மாவை ஆளும் சுண்டா ராணுவத்தினர்தான ஒன்றுபட்ட ஒருங்கினைந்த பர்மாவை ஏற்படுத்தினார்கள் ஆனாலும் அந்த ஒற்றுமை பல பழங்குடி இன மக்களின் சடலங்களின் மீது கட்டப்பட்டது என்பது மறுப்பதற்கில்லை. பர்மாவின் வீரர்கள் பழங்குடி பெண்களை பயமுறுத்த அவர்களை மானபங்கபடுத்துவது கற்பழிப்பது போன்ற கொடுஞ்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். .இது போன்ற வன்முறையாலும் கட்டாய இடபெயர்வு ஆணைகளாலும் 2 மில்லியன் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயாந்து உள்ளார்கள். பர்மாவின் இயற்கை வளம் எல்லாமே இந்த பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில்தான் அமைந்து உள்ளது. ஆனால் அந்த புதையலை அவர்கள் கொஞ்சம் தான் அனுபவிக்க முடிகிறது. தற்போதைய அரசு. அரசு அலுவல்களில் பழங்குடி மக்களையும் சிறுபான்மை மக்களையும் பணியமர்த்த ராணுவ தலைமை பதவிகளில் பதவிஉயர்வு வழங்க தடை விதித்து உள்ளது.

சூகீயின் தந்தை 1947- ல் பண்டுங்கில் பழங்குடிமக்களிடம் ஒரு ஒப்பந்தம் செய்தார். அதில் ஐக்கிய பர்மாவில் அதிக பட்ச தன்னாட்சி பழங்குடி இன மக்கள் பகுதிக்கு வழங்கப்படும் என உறுதி அளித்தார். ஆனால் அவர் கொல்லப்பட்டதால. அவருக்கு பின் வ்நத ராணுவ ஆட்சியாளர்கள் அந்த உறுதிமொழியை காற்றில் விட்டு விட்டனர். தற்போதைய விடுதலைக்கு பின்பு சூகீ “பர்மா ராணுவத்திற்கும் கரண் பழங்குடி மக்களிடைய நடக்கும் ச்ணடையினை நிறுத்துமாறு “ கேட்டு கொண்டார். அதனை இரண்டாவது பண்டுங் என அறைகூவல் விட்டு உள்ளார். .அந்த பழங்குடி மக்களில் சிலர் “இவர் ஆட்சிக்கு வந்த பின்பு தான் தங்களது நிலைமை எப்படி இருக்கும் என தெரிய வரும்” என்றும் “பர்ம மக்களை விரும்பம் அளவுக்கு பழங்குடிமக்களை அவர் விரும்புகிறாரா” என்பதும் அப்பொழுது தான் தெரியும் என தெரிவித்து உள்ளார்கள் தாங்கள் எப்போதும் பர்மாவில் இரண்டாந்தார குடிமக்களாகத்தான் நடத்தப்படுகிறோம் என தங்களது ஐயப்பாட்டை பழங்குடி இன மக்கள் தெரிவித்து உள்ளார்கள்

சூகீ நாடு முழுவதும் தனது சுற்று பயணத்தை மேற்கொண்டு உள்ளார். அதன் வாயிலாக எல்லா மக்களின் குரலையும் அவர்கள் இந்த இனமாக இருப்பினும் கேட்க வாய்ப்பு உள்ளதாக கருதுகிறார். மேலும் அவர் சிறையில் இருந்த போது., நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அறியும் ஒரு வாய்ப்பாக அது இருக்கும் என நினைக்கிறார். அவரது சுற்றுப்பயணம் அவரது செல்வாக்கை காட்டுவதாகவும் அதே நேரத்தில் ஜெனரலுக்கு உள்ள செல்வாக்கை அறியவும் உதவுகிறது. அவரது கூட்டத்திற்கு மக்கள் அலைகடலென வருகிறார்கள் அது அவர்கள் சூகீ மீது எந்த அளவு அன்பு கொண்டு உள்ளார்கள் என்பதை காட்டுகிறது. ஆனால் ஆட்சியாளர்க்ள இதனையும் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள் அவரது செல்வாக்கு அவர்களது ஆட்சியை அசைக்கும் அளவுக்கு வளருமாயின் அவரை மீண்டும் கைது செய்து சிறைலடைக்க தயங்காது இந்த ராணுவ அரசு .

ஏற்கெனவே அவரது தந்தை எதிரிகளால் கொல்லப்பட்டு உள்ளார். ஆளும் ராணுவ ஆட்சியாளர் சார்பான குண்டா கூட்டத்தில் கொலைவெறி தாக்குதலுக்கு சூகி உள்ளாகி உள்ளார் என்பதை கவனத்தில் கொண்டு சூகீ ரொம்ப கவனமாக இருக்க வேண்டி உள்ளது.. ஆனாலும் அவர் எந்த பயமின்றி ராணுவ சார்பு கட்சிக்கெதிராக அரசியல் நடத்துவது “அச்சத்திலிருந்து விடுதலை” எனும் தலைப்பில் அவர் பேசிய பேச்சில் வரும் பின் வரும் கூற்றினை போல் அழகாக இருக்கிறது.

“அதிகாரம் ஊழலுக்கு காரணமில்லை ஆனால் அச்சம் தான் அதற்கு காரணம் …… அச்சமின்மை ஒரு பெரும் பரிசு போன்றது. எந்த அச்சமின்னை என்பதை குறிப்பிட்டு சொல்வேண்டுமென்றால் “பெரும் முயற்சியாலும் தனது செயலை அச்சம் தீர்மானிப்பதை தடுக்கும் நடைமுறையினை வளர்த்து கொண்டவர்களின் அச்சமின்மை” ஆகும் “

Series Navigation

வே பிச்சுமணி

வே பிச்சுமணி