ஹிந்துஸ்தானின் இன்றைய நிலைமை:

This entry is part [part not set] of 34 in the series 20101107_Issue

சேஷாத்ரி ராஜகோபாலன்


சரித்திர ஏடுகளின் பின்னணி

ஒருமுது மொழி உண்டு, “உனது கடந்தகால சரித்திரத்தை நீ முற்றும் படித்தறிந்து, தெளிந்து, பழைய தவறுகளை வருங்காலத்தில் செய்யாது இருக்க, அதற்குத் தக்க நடவடிக்கை இப்போதே எடுக்கத் தவறினால், அப்பெருந்தவறுகளை மீண்டும் மீண்டும் செய்து, நீயே துக்கப்படும் படி சபிக்கப்படுகிறாய்”

ஒரு தேசத்திற்கு சேவை செய்யும் எண்ணத்தை செயலில் காட்ட ஆரம்பிப்பதற்கு முன்னர், அடிப்படையில் ஒரு நல்ல நாட்டை எதெது உருவாக்குகிறது என்றும்; அத்தேசத்தில் நடந்து முடிந்த சரித்திர நல்லதும் கெட்டதுமாக நடந்த உண்மை நிகழ்ச்சிகளென்ன, எந்தெந்த பெருந் தவறுகள் எவ்வப்போது, ஏன் நடந்தன, அத்தவறுகளில் மீளமுடியாதபடி சிக்கிக்கொண்டது எப்படி, இதனால் தெரிய வேண்டிய படிப்பினைகள் யாவை என தெரிந்து கொள்ள வேண்டும்.

நமது பாரதத்தை எடுத்துக்கொண்டால், நமது தேசத்தை ஆண்ட பேரரசர்கள் யார் யார், அப்போது பற்பல நூற்றாண்டுகளாக நடந்த நிகழ்ச்சிகளென்ன, எந்தெந்த அபத்தங்கள் எவ்வெப்போது நிகழ்ந்தன, நிகழ்த்தப் பட்டன, நம் தேசத்திற்குக் கடந்த காலங்களில் துரோகம் செய்த, நம் உள்நாட்டு துரோகிகள், வெளிநாட்டு மாபாதகர்கள் யார் யார், இதனால் நாம் அறிய வேண்டிய படிப்பினைகள் யாவை, இம்மாதிரி தவறுகள் மீண்டும் இனி நிகழாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள வேண்டும், என்றும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இப்பின்னணியில் தான், இன்றும், நமது பாரத தேசத்திற்கெதிராக இன்றும் செயல்படும் துரோகிகள் யார் யார் என்பதையும் இனம் கண்டு கொள்ள வேண்டும்.

எது எவ்வாறு இருப்பினும் நம் தேசம் ஏன், எதனால், ஹிந்துஸ்தான் என ஒட்டுமொத்த மாக இன்றும் அழைக்கப்படுகிறது என்பதையும் நாம் அறிந்து கொண்டாக வேண்டும்.

ஒராயிர பழைய காலச்சுவடுகளை திரும்பப் பார்வையிட்டால், அதில் நம் ஹிந்துஸ்தானிலேயே, பற்பல பேரரசுகளிடையே – தென்தேசத்தில் சேர, சோழ, பாண்டிய, பல்லவர் களிடையேயும், நடுவே, ராஷ்ட்ரகூடர்கள், கஜ்ஜர்களிடையேயும், மேற்கே, பாலாக்களிடையேயும், கிழக்கே கஜபதிக்களிடையேயும் கடும் போர்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த பரஸ்பர போர்களுக்கு நடுவில், நம் ஹிந்துஸ்தானின் மீது, நாடுபிடிக்கும் பேராசையால் படையெடுத்த கிரேக்கர், பின் அதே நோக்கத்துடனும், மேலும் கூடுதலாக எவ்வகையாலும் (!) ஏராளமாகப் பொருளீட்ட வந்த அரேபிய இஸ்லாமியர், ஹூனர், இஸ்லாமிய-ஆஃகானிஸ்தானைச் சேர்ந்த முகலாயர், முதலியோர் ஹிந்துஸ்தானத்தில் அடுத்தடுத்துப் படையெடுத்து, எவ்வாறு இந்திய நாட்டுக்கு நியாயமற்ற அழிவைச் செய்துள்ளனர் எனவும், இவைகளின் பின் விளைவுகளென் னென்ன? என்பதையும் ஆராய்ந்தறியவேண்டும்.

இதற்கெல்லாம் காரணம், முக்கியமாக நம் பாரத தேசம், ஒரே எண்ணம், கொள்கையுள்ள ஆட்சித் தலைமையில், ஒரே நாடாக அன்று இல்லாதிருந்த துரதிருஷ்டம் தான். இதனால் தான் வெளியில் வந்தவர்களுடைய குயுக்திக்களுக்கும், பிரித்தாளும் தந்திரங்களால் நம் நாட்டு குறுநில மன்னர்கள் பல்வேறு லஞ்ச லாவண்யங்களுக்கும் உட்படுத்தப்பட்டு, இவைகளிலும் கடைசியில் ஏமாற்றப் பட்டு, பிற்கால சந்ததியினரை இன்று இந்த நிலைலைக்கு ஆட்படுத்திச் சென்று விட்டனர். அப்படி கட்டுக்கோப்புடன் ஒரு தேசமாக இருந்திருந்தால், நம் நாட்டின்மீது எவருக்கும் படையெடுக்கும் துணிவு பிறந்திருக்காது. அப்படி இல்லாது போனதால் தான் வெளியிலிருந்து படையெடுத்தவர்களுக்கு, நம் தேசத்தை வெகு சுலபமாக வெற்றிகொள்ள முடிந்தது. தங்கள் சாம்ராஜ்யத்தையும் அவ்வப்போது நிருவ முடிந்தது. இம்மாதிரி சூழ்நிலையில், வெளிநாட்டிலிருந்து படையெடுத்து இங்கே தங்கள் ஆட்சியை நிருவியவர்கள், இந்திய நாட்டு அரசர்களிடையேயும், மக்களிடையேயும் விரோதத்தை கிளப்பி வளரவிட்டு, ஒருவரை யொருவர் துரோகம் செய்யத் தூண்டி, அதனால், தங்களுக்கு நலமான சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டனர். இதைத்தான் ”பிரித்தாளும் ராஜதந்திரம்” (Divide and Rule policy) என அழைக்கப் படுகிறது. இதற்கான சான்றுகளை நாமெல்லோரும் நன்கு அறிவோம்.

ஆனால் இன்றோ பெயரளவில் (so-called) ஜனநாயக ஆட்சி என நடக்கும் இந்திய நாட்டில், அன்றைய குறு நில மன்னர்களுக்கிணையாக அரசியல் கட்சித் தலைவர்கள் தலையெடுத்து, தங்கள் பிராந்தீய செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டு, அக்குறுநில மன்னர்கள் இடத்தைப் பிடித்துக் கொண்டு விட்டனர். இக்கருத்தை உணர்ந்து தான், முன்னள் தலைமைத் தேர்தல் அதிகாரி அவர்களே சொல்லியபடி, “In India, democracy means, Government of some people, for some people and by some people” என்றார். ஒரே கொள்கையளவில், தனியாகவே ஆட்சியைப் பிடிக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மைத் தகுதி இல்லாததினால், இவர்கள் கையாளும் மற்றொரு குயுக்தி, கொள்கை அளவில் எவ்வித உடன்பாடுமே இல்லாது, ஆனாலும், முற்றிலும் முரண்பாடான கொள்கைகளை மட்டுமே கொண்ட பல பிராந்தீய கட்சிகள் தங்கள் சொந்த நலன்களையே நிறைவேற்றிக் கொள்ளவும், தங்கள் வம்சாவளி ஆட்சியை நீடித்துக் கொள்ளவும், இதனால் சொத்து குவித்துக் கொள்வதற்கும், இதற்கடுத்ததாக கொசுறாக பிராந்தீய நலங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு (அவைகள் நிறைவேற்றப் படுகிறதோ இல்லையோ, அதைப்பற்றிக் கவலைப் படாமல்), பிராந்தீய பெரும்பான்மை மக்களுடைய நலனை எல்லாவிதத்திலும் ஆட்சேபித்து, புறக்கணித்து, காற்றில் பறக்க விட்டு, எவ்விதத்திலாகிலும் ஆட்சியை பற்றிக் கொண்டிருக்கும் ஒரே நோக்கத்துடன் கூட்டணிகளையும் அமைந்துக் கொண்டு இந்திய நாட்டு மாகாணங்களில் இன்றும் கோலோச்சுகின்றன. இந்தியாவில் மட்டும் தான் மைனாரிடி கட்சியால் மீண்டும் மீண்டும் காலவரம்பில்லாமல் ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது மிக எளிது. அதிலும் தமிழ் நாட்டில் முறைமையுடன் வழக்கமாக இந்த நாடகம் நடத்தப்படுகிறது.

இம்மாதிரி அரசியல் நடவடிக்கைகள் போலவே, மத்திய ஆட்சியிலும், பெயரளவில் (so-called) ஜன நாயக ஆட்சி என சொல்லிக் கொண்டு, ஆனால், வம்சாவளி பாரம்பரியமே 1947 முதல் உள்ளது. (நடுவில் மிக மிகக் குறைவான சில ஆண்டுகள் தவிர) பிராந்தீய தலைவர்கள் செல்வாக்கு ஒன்றில் தான் நாட்டிலுள்ள பெரிய கட்சிகள் கூட்டு சேர்ந்து ஆட்சி செய்ய முடியும் எனும் விபரீத நிலைமையையும் உருவாக்கி, அச்சுறுத்தி ஜன நாயகத்திற்கே சவால் விடுகின்றனர். இச்செயல் முறையால் இந்திய நாடே குட்டிசுவாராகிறது. இந்த ‘அரசியல் தொழில் நுட்ப’த்தை இன்னும் இந்திய நாட்டு மக்கள், உணர்ந்ததாகத் தெரியவில்லை. இன்னொரு விஷயம், நாடு ஏகாதிபத்திய ஆட்சி எனும் நுகத்தடியை கழட்டித் தூக்கி எறிந்த விட்ட பிறகும், பிராந்தீய கட்சிகளுக்கு, வம்சாவளி ஆட்சியை நீடிக்கும் செயல்பாட்டை சொல்லிக் கொடுத்து, பேருதாரணமாக இருப்பது, இன்று மத்திய ஆட்சியில் கோலோச்சும் வம்சாவளிக் கட்சியே தான். இம்மாதிரி ஆட்சியை எக்காலமும் நீடிக்க வெவ்வேறு தகிடுதத்தங்களை இன்றும் செய்த வண்ணம் உள்ளனர்.

இன்றிருக்கும் பெயரளவினான (so-called) ஜன நாயக ஆட்சிக்கும், அன்றிருந்த (1947 வரை) ஏகாதிபத்திய ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம் இவ்வளவே தான். ஏகாதிபத்திய ஆட்சியில் (foreign imperial rule) வம்சாவளி ஆட்சி நடந்தது ஒன்றும் அவ்வளவு ஆச்சரியமில்லை. அவர்கள் அப்படித்தான் செய்வார்கள், எதிர் பார்த்ததுதான். ஆனால் அதே வம்சாவளி ஆட்சி ஜன நாயக ஆட்சியிலும் தொடரத்தான் மக்கள் அனுமதிக்க வேண்டுமா? இது வருங்கால இந்தியாவுக்கு நல்லதா? சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கீழ்கூறியவாறு நிகழ்ச்சிகள் அன்று ஒருவேளை நிகழ்ந்திருந்தால் நம் ஹிந்துஸ்தான் எவ்வளவு மேம்பட்டிருக்கும்:-

• காஷ்மீர் மகாராஜா மற்ற ஹிந்து அரசர்களுக்கு தக்க சமயத்தில் உதவி புரிந்திருந்தால்,
• விஜயநகர சாம்ராஜ்யப் போர்களில் மராட்டாக்கள், உதவி செய்திருந்தால்,
• வெளி நாட்டு படையெடுப்புக்கு பதிலடி கொடுக்க, ராஜபுத்திர அரசர்களும், மராட்டாக்களும் ஒன்று பட்டு, பரஸ்பர நட்புடன், ஒருவருக் கொருவர் போர்களில் உதவி செய்யும் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தால்,
• கல்கத்தாவில் 1757இல், ஆங்கில கிழக்கிந்தியக்கம்பனியின் தளபதி ’ராபர்ட் கிளை’வுக்கும்’ நவாப் ’சிராஜ்-உத்-தௌலா’வுக்கும் நடந்த பிளாஸி யுத்தத்தில், மிக வலுவற்ற, ஒப்பிட்டுப் பார்க்கையில் மிக குறுகிய எண்ணிக்கை கொண்ட ராணுவத்துடன் இருந்த ராபர்ட் கிளைவ் தோற்கடிக்கப் பட்டிருந்தால்,

[பிளாஸி யுத்தம் இவ்வாறு நடந்தது:-

நவாபின் தளபதி மீர் ஜாஃபருக்கும், அவன் சேனை வீரர்களுக்கும், ராபர்ட் கிளைவ் வேண்டிய மட்டும், லஞ்சம் கொடுத்தான். காரணம், வங்கத்தில் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியை உருவாக்கி, ஆங்கில அரசை நிருவ வேண்டுமென்ற வெறி. இதற்கு முன்னோடியாக கிளைவுக்குக் கிடைத்த தென்னிந்திய ராணுவ அனுபவம். ’சிராஜ்-உத்-தௌலா’வின் நிச்சயமான வெற்றித் தருணத்தில், அவர் தளபதியும், லஞ்சம் வாங்கிய சேனை வீரர்கள் எல்லோரும், நவாப், சற்றும் எதிர்பாராத சமயத்தில், ஆயுதங்களைத் தூர எறிந்துவிட்டு, வலுவற்ற, குறைந்த எண்ணிக்கையுள்ள ஆங்கிலேய ராணுவ ராபர்ட் கிளைவிடமே முன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, கை நீட்டி வாங்கிய லஞ்சத்திற்கு ஈடாக, செய் நன்றியுடன், சரணடைந்தனர். இப்படித் தான், அந்நாளில், ஆங்கிலேயர், ஹிந்துஸ்தானில் காலைப் பதியவைத்தது, நேர்வழிகளைப் பின்பற்றி யல்ல, மாறாக, எதிராளிகளைத் துரோகம் புரியவைத்து, பொய்க் கையொப்பமிட வைத்து, லஞ்சம் (மது மாது உள்பட) கொடுத்துத்தான், நாடு பிடித்தார்கள். வரும் நாட்களிலும் இம்முறை களையே இன்றைய அரசியல் கட்சிகள் கடைபிடிக்கப் போவதற்கு, முன்னோடியாக ஆங்கிலேயர் அன்றே இந்தியர்களுக்கு செய்து காட்டியதை, இன்றும் இந்தியப் பொதுமக்கள் சற்றும் உணர்ந்ததாக தெரியவில்லை.
மேற்கூறிய உதாரண நிகழ்ச்சி நான்கைப் போல கிபி 648 இலும் நடந்திருந்தால், இஸ்லாம் என்ற இயக்கமோ அவர்களைச் சார்ந்த மொகலாயர்களோ, நம் நாட்டைப் பிடித்து, அரசாளாமல், ஹிந்துஸ்தானில் காலூன்ற முடியாமல், போயிருக்கும். இதனால், இன்றிருக்கும் மத பூசல்களே இல்லாதிருந்திருக்கும்.

இப்பின்னணியில் தான், ஆங்கிலேயர் இந்தியாவுக்குள் காலடி வைத்தனர். வந்தவர்கள் இந்தியாவுடன் வர்த்தகம் செய்யும் நோக்கத்துடன் தான் முதன் முதலில் வந்தனர். ஆனால், மதிநுட்பமுள்ள ஆங்கிலேயர்கள், நேரில் கண்டது அவர்களை இன்னமும் குதூகலித்தில் ஆழ்த்தியது. வர்த்தகத்திற்கும் மேலாக, மேன் மேலும் பலமடங்கு லாபம் தரக் கூடிய நாடுபிடித்து அரசாளும் ஆசையை அவர்களுக்கு உண்டாக்கியது. இங்கே, ஒரே ஹிந்து வேத வழியை, நாடு முழுதும் பின்பற்றினாலும், பல்வேறு குறுநிலமன்னர்கள் தங்கள் எல்லைகளைப் பிரித்துக் கொண்டு, பரஸ்பரம் சண்டையிட்டுக் கொண்டு ஆட்சி செய்வதும், அரசாட்சியில் இறுமாப்பு-பயனற்ற பலவித ஆரவாரம், பல மொழிகள், அனேக ஜாதி-இன வேற்றுமைகள், ஆகியவைகள் அடங்கிய, ஓர் பிளவுபட்ட சமுதாயத்தைக் கண்டனர். இவ்வாறு பிளவுபடுத்தப் பட்ட நாடாக அன்றே அமைந்தமையால், அவர்களுக்கும் நம்மை, அரசியல், நாட்டு எல்லை, மொழிவழி, ஜாதிவழி, ஆகியவைகளால் நம்மைப் பிரித்தாள முடிந்தது. ஆனாலும், ஹிந்து மத மரபு அடிப்படையில், பாரம்பரிய நற்பண்பு, போற்றத் தக்க நாகரிகம், ஆகியவைகளால் ஒன்று பட்டிருந்தனர். இந்த மையக்கருத்தை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் ஆரம்பத்திலேயே முற்றிலும் உணர்ந்து கொண்டு, இந்திய நாட்டை நிரந்தரமாக ஆட்சிபுரிய, இந்த மரபுச் சங்கிலியைத் துண்டிக்கவும், அவ்வப்போது இம்மரபை கெடுக்க தங்கள் முயற்சிகளை என்றுமே தளர்த்திக் கொண்டதில்லை. இதுவே அவர்களுக்கு முக்கிய கொள்கையாகவும் (main stay) இருந்தது. நம் முதுகெலும்புக்கு இணையான, பொது மரபுச் சங்கிலியான, மொழி, கலாசாரம், நாகரிகம் ஆகியவைகளைத் தக்க நடவடிக்கைகளால் சீர்குலைத்து விட்டால், ஹிந்து நாடும் பிளவுபட்டு, தங்களுக்கு சாதகமான சூழ் நிலையை உருவாக்கிக் கொள்ள அன்று முதல் செயல் பட்டனர். இதனால் தான் இவர்களுக்கு, இந்திய நாட்டை போகப்போக தங்கள் அரசோடு, ஒரே குடையின் கீழ் ஒன்று சேர்க்க, மிக சுலபமாக ஆயிற்று. இக்கைங்கரியத்தை முடித்து பிரிட்டிஷ் அரசாங்கத்தை நிருவ அவர்களுக்கு சுமார் 200 ஆண்டுகளாயின. ஆனால், இன்றோ, வெளிநாட்டுத் தரகர்கள், மற்ற உருவங்களில், தங்கள் குழந்தை குட்டிகளுடன், ஏதேதோ பித்தலாட்டங்கள் செய்து இந்திய பிரஜா உரிமையையும் பெற்று, உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்து கொண்டிருக் கின்றனர்.

இந்த சமயத்தில்தான், ஹிந்து ஆன்மீக பேரறிஞர்களான ஸ்வாமி தயானந்தா, ஸ்வாமி விவேகானந்தா முதலியோர் ஹிந்து-மறுமலர்ச்சியால் நாட்டின் விடுதலைப் போரில் மக்களை விழிப்படையச் செய்து கொண்டிருந்தனர். 1857இல், நடந்த விடுதலைப் போராட்டம் தோல்வி யடைந்ததின் விளைவாக, பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசாட்சியில் கட்டவிழ்த்து விடப்பட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, நெறி தவறிய வன்முறை, பலாத்கார பண வசூலிப்பு, முதலியவற்றால் வெறுப்படைந்த தேசீயப் பற்றுள்ள இந்திய நாட்டு இளைஞர்கள், பாரதத்தை வெள்ளையர்களின் வெறிபடைத்த ஆட்சியை முழுமையாக ஒழித்துக் கட்ட கங்கணம் கட்டிக்கொண்டு மிக்க ஆக்ரோஷத்துடன் கொதித்தெழுந்தனர். சுதந்திரப் போரில் புகழ்பெற்ற தியாகிகளான, ஜான்சி ராணி, நாநா சாகேப், தாட்டியா தோபே, மங்கள் பாண்டே முதலியோரும், ஹிந்து இளைஞர்களுக்கு முன்னோடியாக தலைசிறந்த வழிகாட்டிகளாக அவர்கள் விட்டுச்சென்ற விடுதலைப் போரை தொடர்ந்து நடத்த தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டனர். ஆங்கிலேயர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட வரம்பு மீறிய வன்முறைத் தாக்குதல்களால் அவ்வரசாட்சிக் கெதிராக, சாத்வீகபோரால் மட்டுமே என்றும் வெற்றிகாண முடியாது என, உணர்ந்த துடிப்படைந்த ஹிந்து வீரர்கள், வெடிகுண்டு தயாரிப்பிலும், துப்பாக்கி சுடுவதில் தேர்ச்சியையும், மற்ற ஆயுதங்களை உபயோகப்படுத்தும் முறைகளிலும், 1857க்குப் பிறகே, முழுமூச்சில் திறமை பெற்றுவந்தனர்.

ஆகவே, கீழ்கண்ட சுதந்திர வீரர்களான, வாஸுதேவ் பல்வந்த் பாட்கே, மூன்று சாப்கே சகோதரர்கள், அன்னா சகேப் பட்டவர்த்தன், மிகச் சிறந்த சுதந்திர லக்ஷிய வீரர் சாவர்கார், பஞ்ஜாபைச் சேர்ந்த பண்டிட் ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மா, நாம்தாரி சீக்கிய மதப்பிரிவின் ஸ்தாபகர் ராம் சிங் குர்க்கா, ராஷ் பிஹாரி பாஸு, குதிராம் போஸ், சத்யேந்திர பாஸு, குன்ஹிலால் தத், வங்க சிங்கம் அரவிந்த கோஷ், லாலா ஹர்தயால், லாலா லஜ்பத் ராய், பிபின் சந்திர பால், லோகமான்ய பால கங்காதர் திலக், இவர்களைக் கூட்டாக, லால், பால், பால் என கூப்பிடுவதும் உண்டு. (they were collectively called Lal, Pal, Bal) பஞ்ஜாபைச் சேர்ந்த மதன்லால் டிங்ரா, கப்பலோட்டிய நம் தமிழன், இந்திய நாட்டு சுதந்திரத்திற்காக செக்கிழுத்த செம்மல், வ உ சிதம்பரம் பிள்ளை, வா.வே.சு. ஐயர், நீலகண்ட ப்ரம்மசாரி, ஆங்கில வெஞ்சிறை வாசத்தால், தொழு நோயால் தாக்கப்பட்ட சுப்பிரமணிய சிவா (சிறை வாசத்திற்கு முன்னால், இவருக்குத் தொழு நோய் கிடையாது, இதற்கு முன்னர், மிக அழகான மேனி உடையவர்), பாரதநாட்டின் சுதந்திர எழுச்சியில் மிக்க துடிப்புடன் தோளோடு தோள் கொடுத்து நின்றனர். தான் இயற்றிய தமிழ்க் கவிதைகளால் மக்களைத் தட்டி எழுப்பி வந்த மகா கவி சுப்பிரமணிய பாரதி, பாய் பரமானந்த், மற்றும் பலர் ஆங்கில அரசாட்சிக்கு எதிராக மிக்க துணிச்சலுடன் எதிர்த்துப்போராட 1857ம் ஆண்டில் ஆயுதம் தங்கி நடத்தப்பட்ட பாரத சுதந்திரப்போரின் தொடர்ச்சியாகவே, தங்கள் பங்குகளை உடல், பொருள், ஆவி ஆகியவற்றால், இந்திய நாட்டுக்கு சேவை செய்து வந்தனர். இவையனைத்தையும் தவிர, மஹாராஷ்ட்ராவில், ‘அபினவ பாரத், வங்கத்தில்.’அனுஸிலன் சமிதி’ என்றும் அமைப்புகள் நாடு சேவையை செவ்வனே செய்து வந்திருக்கின்றனர். பின் வருடங்களில், ஆயுதம் தாங்கி தங்கள் நாட்டு சுதந்திர போராட்டத்தை சந்திரசேகர ஆஸாத், எஸ்.என்.சன்யால், யோகேஷ் சந்திர சாட்டர்ஜி, முதலியோர், மற்ற புது அமைப்புகளான, ஹிந்துஸ்தான் குடியரசுக் குழுமம், (Hindusthan Republican Association) ஹிந்துஸ்தான் குடியரசுப் படை, (Hindusthan Socialist Republican Army), பஞ்ஜாப் சீக்கியர்களின் கத்தார் கட்சி (Gaddar Party) ஆகிய பெயர்களில் நடத்திவந்தனர்.

ஆங்கில ஆட்சியிலிருந்து இந்திய நாட்டின் விடுதலைக்காக, ஒருபக்கத்தில், ஆயுதம் தாங்கி நடத்த ஆயத்தம் செய்து கொண்டிருக்கையில், மற்றோர் பக்கத்தில், ஆங்கிலேயர் ஹ்யூம் என்பவர் தலைமையில், கத்தியின்றி ரத்தமின்றி, வன்முறையற்ற சாத்வீகமாக வழியில் போராட, அனேக இந்திய நாட்டு தேசபக்தர்களுடன் துவக்கப்பட, காங்கிரஸ் என்ற அமைப்பில், நடத்தி வந்தனர்.

நாட்டுக்குள் இருக்கும் பல்வேறு பிளவுகளைக் கண்ணுற்ற ஆங்கிலேயர்களும் கண்டு, திட்டமிட்டு, கண்மூடித் தனமாக ஆயுதம் தாங்கி விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களை அடக்குவதற்காக, ஆயிரக்கணக்கில், இந்திய தேசீய தியாக செம்மல்களான ஹிந்து இளைஞர்களை, தூக்குமேடைக்கும், மேலும் கணக்கற்ற இளைஞர்களை அந்தமான் தீவுக்கு, ஆயுள் கைதிகளாக கொடூரமாக தண்டனையைக் கொடுத்து இந்திய மண்ணிலிருந்து நாடுகடத்தினர்.

இம்மாதிரியே, பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு, லாலா லஜ்பத் ராய், குதிராம் போஸ், ஸூர்யா சென், மதன்லால் டிங்ரா முதலியோரை ஆங்கிலேயர்கள் நாடுகடத்தினர்.

காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள், ஏன்! காந்தி உள்பட, ஆங்கிலேயருக் கெதிராக ஆயுதம் தாங்கி இந்திய நாட்டு விடுதலைக்காக புரட்சியில் ஈடுபட்ட ஹிந்து இளைஞர்களை இப்பணியில் உயிர்த் தியாம் புரிந்த (ஷஹீதுகளை), எப்போதுமே, கங்கணம் கட்டிக்கொண்டு அங்கீகரித்ததே கிடையாது. குதிரை கீழே தள்ளியதுமல்லாமல், குழியையும் பறித்ததுபோல, காந்தியும் இப்பேற்பட்ட தியாக செம்மல்களான ஹிந்து இளைஞர்களை, ”பயங்கர தீவிரவாதிகள்” எனவும் பெயர் சூட்டி, இந்த ஆயுதம் தாங்கிகளைக் கடும் கண்டனம் செய்து, ’வேண்டுமென கலகம் செய்பவர்கள்’ எனக் கூறினார் என்பது இன்று பலருக்கு வியப்பளிக்கும். ஆனால் அதுதான் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை.

வினாயக் தாமோதர (வீர) சாவர்கர் அவர்களின் மறுக்கமுடியாத முக்கிய பங்கு:

ஹிந்து தேசீயத்தில் மூழ்கி தங்களையே நாட்டு சேவைக்காக உடல், பெருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த ஹிந்து இளைஞர்களில் தலைசிறந்தவரான வீர தாமோதர சாவர்கரையும், அவர் தம்பி, பாபா கணேஷ் சாவர்காரையும் சேர்த்து, தீவாந்திர சிட்சையளித்து, அந்தமான் கைதிகளாக்கி, ஆயுள் தண்டனையையும் ஆங்கில அரசு அளித்தது. ஆங்கிலேயர்களின் அபிப்பிராயப்படி, இவர்கள் செய்த மாபெரும்குற்றம் – இந்திய நாட்டின் மீது அளவற்ற பற்று கொண்டது ஒன்று மட்டும் தான். இவர்கள் அப்போதுதான் சமீபத்தில் திருமணமாகி, தங்கள் மனைவியரை பூனாவிலேயே இதனால் விட்டு அந்தமானுக்குச் செல்ல நேர்ந்தது. என்ன கொடுமை இது.

தாமோதர் சாவர்கர், 1883இல், சித்பவன் குடும்பத்தில், அவதரித்து, நாசிக்கில் ஆரம்ப கல்வி பயின்று பின்னர், பெஃர்கூஸன் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். இளைஞரான இவர் அனேக மற்ற பாடங்களிலும் படித்து நல்ல தேர்ச்சி பெற்றார். இவர் கவிதைகளைப் புனைவதிலும், திறமையாக செற்பொழிவு ஆற்றுவதிலும், வல்லமையுள்ளவர். அவ்வமயத்தில் நம் நாட்டு சுதந்திரத்திற்காக மாபெரும் பங்காற்றிய நாநா சாகேப், ஜான்சி ராணி பொன்றோர்களைப் பற்றியும் கற்றுணர்ந்தார். இதற்குப்பின் இவர் மனதில் நாட்டு சுதந்திரத்திற்கான உணர்வு கொழுந்து விட்டெரிந்தது. மேலும் இவரை சாபே சகோதர்களின் கழுவேற்றலில், அதிக கோபமடைய வைத்தது. இதற்குப் பின்னர் தான் ”மித்ரமேலா” என்றும், ” அபினவ பாரதம்” என்ற அமைப்பை உண்டாக்கினார்.

சாவர்கர், லோகமான்ய பால கங்காதர் திலக் அவர்களை சந்தித்து, இனி, தான் செய்ய வேண்டியவற்றைப் பற்றி அவருடைய நல்லுரைகளை கேட்டார். திலக் அவர்கள் சாவர்கரை சட்டம் படிக்க (Barrister at Law) பிரிட்டனுக்குச் செல்ல அறிவுரை தந்தார். அதன்படி அங்கு சென்றபின், பண்டிட் ஷ்யாம்ஜி வெர்மா அவர்களை சந்தித்து இருவருமாகச் சேர்ந்து, ’இந்தியா ஹவுஸ்’ (India House) என்ற ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்தினர். இந்த ஸ்தாபனம் பிரிட்டனுக்கு வரும் ஹிந்து தேசீயவாதிகள் சந்திக்கும் முக்கிய மையமாக அமைந்தது.

பின், வா.வே.சு. ஐயர்; எம்.பி.டி. ஆச்சார்யா; டாக்டர் டி.எஸ்.எஸ் ராஜன், மதன்லால் டிங்ரா, லாலா ஹர்தயால், சேனாபதி பாபட், ஆகியோர் சுதந்திர போராட்டதில் ஒன்றிணைந்தனர்.

இந்திய நாடு ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து பூரண சுதந்திரம் அடைய வேண்டி, அதற்காக எண்ணம், பேச்சு, செயல் ஆகியவற்றில் பங்கேற்ற, இருபத்தி எழு வயதான் வீர சாவர்கரை, தவறாக ஜோடிக்கப் பட்ட வழக்கு பதிவு செய்து, நாசிக் சதி (என அழைக்கப்பட்ட) இரண்டு வழக்குகளில் (1910லும், 1911லும்) குற்றம் சாட்டி, மார்ச் 22, 1910இல் 50 ஆண்டுகள் செல்லுலர் சிறை தண்டனையை வழங்கி, முடிவாக அந்தமானுக்கு ஆயுள் கைதியாக, பிரிட்டன் நாட்டைவிட்டு வெளியேற்றி கப்பலில் இந்தியாவுக்கு அனுப்பப் பட்டார். மார்சேல்ஸ்க்கு தப்பியோடும் முயற்சியும், தோல்வியடந்தது.

தாமோதர் சாவர்காருக்கு மற்றோரு இளைய சகோதரர் பாபா கணேஷ் சாவர்கார் என உண்டு என முன் பத்தியில் உள்ளபடி, இனி இக்கட்டுரை எங்கும் மூத்த சகோதரர் தாமோதர் சாவர்காரை, சாவர்கர் எனவே அவர் பிரசித்தி பெற்ற பெயரால் அழைத்து, பாபா கணேஷ் சாவர்காரை, பாபாகணேஷ் என வேறுபடுத்திக்காட்டி இருக்கிறது.

அந்தமானில், செல்லுலர் ஜெயிலில் பாபாகணேஷ், சிறைத் தண்டனையை, மூத்த சகோதரர் சாவர்கார் அங்கு வருமுன்னரே அனுபவித்துக் கொண்டிருந்தார். வீர சாவர்கருக்கும் அவ்வாறே செல்லுலர் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இங்கு அவரைப்போல, பல ஹிந்து தேசீயவாதிகள் பல்வேறு சுதந்திர வேட்கை வழக்குகளில், தண்டனை பெற்று, அவருடன் சிறையில் கிடந்தனர். அவர்களை சங்கிலிகளால் பிணைத்து, சொல்லுக் கடங்காத கொடுமையான சித்திரவதைகளையும், மானபங்கங்களையும் ஆங்கிலேய சிறையதிகாரிகளால் நீதியற்ற முறையில் இழைக்கப்பட்டது.

அந்தமானில், பதினோரு வருஷ தண்டனைக்குப் பிறகும், அவருடைய மனத்திணமை என்றுமே சற்றும் தளர்ச்சியடையவில்லை. மாறாக தங்கள் கொள்கைப் பிடிப்பில், மிக உறுதியான எஃகு போலாயிற்று.

பின்னர், உடல் நலக் குறைவால், 1922இல், அவர் இந்திய சிறைக்கு மாற்றப்பட்டார். மஹாராஷ்ட்ராவிலுள்ள ரத்னகிரி ஜில்லாவில் அனேக கட்டுப்பாடுடன் வீட்டோடு கைதியானார்.

சாவர்காரின் விடுதலைக்காக, அநேக மக்களின் வேண்டுகோள்களையும் ஏற்காமல் ஆங்கில அரசு மறுத்தது. சாவர்காரின் விடுதலைக்காக, மத்திய சட்ட மன்றத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தை பம்பாய் சட்ட மன்ற முஸ்லிம் அங்கத்தினர்கள் கடுமையாக எதிர்த்து அந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல் செய்தனர்.

பரிதாபகரமாக, எல்லாவற்றிக்கும் சிகரமாக, காந்தியும் நேருவும், அவர்களுக்கே உரிய விபரீத காரணங்களுக்காக, வீர சவர்காரின் விடுதலைக்காக ஒரு முயற்சியும் வேண்டுமென்றே எடுக்கவில்லை. மாறாக, சாவர்காரின் விடுதலை விண்ணப்ப மனு நேருவின் கையொப்பத்திற்காக வந்தபோது அக்காகிதத்தைக் கிழித்தெறிந்தார்!!. ஆம்! கிழித்தே தான் எறிந்தார். 1937இல், தன் முழு தண்டனையையும் அனுபவித்த பிறகே தான் விடுதலையானார். நேருவுக்கு, சாவர்க்கரிடம் இவ்வளவு குரோதம் அன்றிலிருந்தே இருந்து வந்தது.

சாவர்கர் ஹிந்து தலைவர்களுடன் சந்திப்பு:

ரத்னகிரியில், வீட்டுச்சிறையில் இருந்தபோது, அவரை, ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்க நிருவனர் டாக்டர். ஹெக்டேவார், தாமோதர் சாவர்கரரை இருமுறை சந்தித்து உரையாடினார். பின்னர், ஹெக்டேவார் ஹிந்து இளைஞர்களை தேசீய சேவைக்காகப் பணியாற்ற வைக்கும் பயிற்சி நடவடிக்கைகளை எடுக்க உறுதி பூண்டார்.

மற்றொரு ஹிந்து தலைவர், டாக்டர் அம்பேத்கர், சாவர்கரை பலமுறை ரத்னகிரியில் சந்தித்து உரையாடியிருக்கிறார். சாவர்கரும் அம்பேத்கரும் ஹிந்து சமூகத்தில் தீண்டாமை, ஜாதிமுறை ஆகிய இவைகளை ஒழிக்க, ஒரே மனதாக உறுதி பூண்டிருந்தனர். பூனாவிலிருந்த இவ்விருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். வேண்டும் போது இருவரும் சந்திப்பதுண்டு.

சாவர்கர் ஹிந்து மகா சபைக்கு தலைவரானார்.

சாவர்கரின் தடுப்புக்காவல் நீக்கப்பட்டவுடன் பாய் பரமானந்தரின் வேண்டுகோளுக் கிணங்க, ஹிந்து சபாவில் முறைப்படி சேர்ந்தார். 1937இல், ஹிந்து சபா தலைமையை ஏற்று, இந்த இயக்கத்தை செவ்வனே முன்னேற்றப்பாதையில் இட்டுச்சென்றார். ஹிந்து சபா ஒன்றுதான் ஹிந்துக்களின் ஒரே குரலாக ஆரம்பகாலத்தில் ஆகியது.

ஹிந்துசபா 1907இல், முதலில், பஞ்ஜாபில், “பஞ்ஜாப் மாகாண ஹிந்து சபை” என்றே முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. 1910இல், இந்த சபையை, அகில இந்திய அளவில் ஓரமைப்பாக ”அகில இந்திய ஹிந்து மகா சபா” என பெயர் மாற்றம் செய்து, அதன் தலைமை அலுவலகமாக அலஹாபாதில், நிருவப்பட்டது.

1918இல், டில்லியில் இச்சபையின் ஐந்தாவது மாநாட்டு நடைபெற்றது. 1921இல், மலபாரில், ஹிந்துக்களை ஒட்டுமொத்தமாக முஸ்லிம்கள் படுகொலை செய்தனர், இது ’மாப்ளா கலகங்கள்’ என கூறப்படுகிறது. காந்தி, முஸ்லிம்களை திருப்திப்படுத்த ஆரம்பித்த ‘காலிபாஃத்’ இயக்கம் ஆரம்பித்தவுடன் காங்கிரசின் உண்மை ஸ்வரூபம் என்ன என்பது ஹிந்துக்களுக்கு தெள்ளத் தெளிவாகியது.

நீண்ட அனுபவம் படைத்த மூத்த தலைவர்களான, பண்டிட் மதன் மோகன் மாளவியா, டாக்டர். டி.எஸ். மூஞ்ஜி போன்றவர்களும், டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களும், ஹிந்து மகா சபாவின் பல கூட்டங்களுக்கு, வருகை தந்தனர்.

ஹிந்து மகா சபையின் ஆறாவது மாநாட்டுக் கூட்டம், 1923இல் பனாரஸில், ஒரு பெரிய நிகழ்ச்சியாக அமைந்தது. இதில், பெருந்தலைவர்களான, ஸ்வாமி ச்ரத்தானந்தா, ராஜா ராம்பால் சிங், டாக்டர். ராஜேந்திர பிரசாத் போன்றவர்கள் வருகை புரிந்தனர். அப்போது அந்த மாநாட்டிற்கு பார்சிக்கள், ஜெய்னர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தவர்களும் வந்திருந்தனர்.

பாய் பரமானத்தர் இந்த ஹிந்து மகா சபை இயக்கத்தின் அந்தராத்மாவாகவே திகழ்ந்தார்.

1924இல், நடந்த அலாஹாபாத் மாநாட்டுக் கூட்டத்தில், குர்கோடி சங்கராச்சார்யா, தலைமை தாங்கினார். டாக்டர் ராஜேந்திர பிர்சாத் செயற்குழு அங்கத்தினராதலால், மிக கடினமாக உழைத்தார். லாலா லஜ்பத் ராய் அவர்களும், 1924இல் கோர்ஹட்டில் முஸ்லிம்கள் வெறி படைத்து நடத்திய கொள்ளையடிப்பு, 20000 (இருபதாயிரம்) ஹிந்துக்களை கொலை செய்தது ஆகியவற்குப் பிறகு, லாலா லஜ்பத் ராய் அவர்களுக்கு ஹிந்து மகா சபையில் அக்கறை மிக்க அதிகமாயிற்று.

பண்டிட் மதன் மோஹன் மாளவியாஜி தலைமையில் 1924இல், பெல்காமில் நடந்த ஹிந்து மகா சபையின் பிரத்யேகக் கூட்டத்தில், காந்தி, மோதிலால் நேரு, லாலா லஜ்பத் ராய், அலி சகோதரர்கள் முதலானோரும் பங்கேற்றனர்.

அறிஞர்களடங்கிய, செல்வாகுடைய, குழு ஒன்று, ஹிந்து-முஸ்லிம் பிரச்சனைகளைக் குறித்து ஆராய்ந்து, பரிந்துரைப்பதற்கு உருவாக்கப்பட்டது. இதில் சென்னையைச் சேர்ந்த சத்யமூர்த்தி அவர்கள், அரசியலில் ஹிந்துக்களின் முக்கிய பங்கை மிக அழகாகவும் ஆணித்தமாகவும் எடுத்துரைத்தார். துரதிருஷ்டவசமாக, இப்பேற்பட்ட திறமையாளர்கள், ஹிந்து மகா சபாவில் ஏதேதோ காரணங்களால் இருக்கவில்லை. இருப்பினும், சபா மேன்மேலும் வளர்ச்சியடைந்தது. எப்போதும் போல மாநாடுகள் நடந்தன.

1925இல், கல்கத்தாவில் எட்டாவது மாநாடு லாலா லஜ்பத் ராய் தலைமையில் நடந்தது. மாநாடு, பாய் பரமானந்தரின் முன்னிலையில் நடக்க இருப்பதால், அவர் அங்கு வந்தவுடன், அவரை வரவேற்க, கூடி இருந்தவர்கள், ஒருங்கே எழுந்து நின்று, மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கரகோஷத்தில் மூலமாக, வணக்கம் செலுத்தி களிப்படைந்தனர். தானே முன்னின்று ஹிந்துக்களுக்குச் செய்த தொண்டினால், செயல் வீரரான அவர் அவ்வளவு பிரசித்தி பெற்றார்.

1926இல், பூனாவைச்சேர்ந்த டாக்டர் என்.சி கேல்கர் தலைமையில், ஒன்பதாவது மாநாடு டில்லியில் நடந்தது.. இதில், பாய் பரமானத்ஜி, ஹிந்து மகா சபை சார்பாக அங்கத்தினர்களை பொதுத் தேர்தலில் போட்டியிடத் தூண்டினார். இதனால், டில்லி மாநாடு, மிக முக்கியத்துவம் வாய்ந்ததாயிற்று. ஆனால், இந்த மாநாட்டில், ஹிந்து சபா தேர்தலில் போட்டியிடுவதை தடுத்து நிறுத்துவதற்கு, காங்கிரஸைச் சார்ந்த மோதிலால் நேரு, லஜ்பத் ராய், வித்தல்பாய் படேல், முதலானோரும் பங்கேற்று விவாதித்தனர். இச்சமயத்தில், இந்த மாநாட்டில், ஒரு உடன்படிக்கை உண்டானது. இதனையும் காங்கிரஸார் தேர்தல் பிரச்சனையை, எப்போதும் போல் ஹிந்து சபா தலையெடுக்காதவாறு, தந்திரம் செய்து விட்டனர். இருப்பினும், லாலா லஜ்பத் ராய் பரமானத்தரை ஆதரித்தார். செய்துகொண்ட உடன்படிக்கைபடி, 1931இல், ஹிந்து மகாசபா தேர்தலில் நிற்கவில்லை, ஆனால், ஹிந்துக்கள் தனித்து போடியிட்ட இடங்களில், ஹிந்து மகா சபையில் ஆதரவுடன் அமோக வெற்றிபெற்றது.

பத்தாவது மாநாடு, 1927இல், ஸ்வாமி ச்ரத்தானதா கொலையினால், பாட்னாவில் மிகுந்த பதட்டத்துடன் நடந்தது. இதில், ஆங்கிலேயர்கள் யோசனைப்படி, தேர்தல் போட்டியிடும் இடங்களை மத ரீதியில், உண்டாக்குவதை சபா முற்றிலும் எதிர்த்தது. மேலும், மதமாற்ற நடடிக்கைகளை சட்டப்படி, தடை செய்வதில் அதிதீவிரம் காட்டியது.

1928இல், ஜபல்பூரில், 11வது மாநாடு நடந்தது. இதில், சைமன் கமிஷனைப் பற்றி பலருக்கு அபிப்பிராய பேதம் இருந்தது. ஆனால், சைமன் கமிஷனை புறக்கணிக்க காங்கிரஸின் எண்ணப்படி, ஹிந்து மகா சபாவையும் உடன்பட வைத்தது. இருந்தும் பாய் பரமானந்தரும், டாக்டர் எம் எஸ். மூன்ஜியும் சேர்ந்து, ஹிந்துக்களின் அபிப்பிராயத்தை எடுத்துரைக்க சைமன் கமிஷனை சந்தித்தனர்.

1929இல், சூரத்தில், 12வது மாநாடு, பிரபல ’மார்டர்ன் ரிவ்யூ’ பத்திரிக்கையின் ஆசிரியரான ராமானந்த் அவர்கள் தலைமையில், நடந்தது, சட்ட மன்றத் தேர்தலில், பேட்டியிடும் இடங்களை மதவாரியாக பிரிக்கும் (communal representation) ஆங்கிலேய பிரேரணை இங்கு நிராகரிக்கப் பட்டது.

சேலம் சி. விஜராகவாச்சாரியார் தலைமையில், 1931இல், அகோலாவில் மாநாடு நடந்தது. ’சிறுபான்மையோர்’ (minority formula) இட ஒதுகீடு என்ற ஆங்கிலேயர்களின் திட்டம் இங்கு மிகவும் ஆணித்தரமாக எதிர்க்கப்பட்டது.

1930இல் லண்டனில் நடந்த வட்ட மேஜை மாநாட்டில் (Round Table Conference) டாக்டர் மூன்ஜி, ராஜா நரேந்திரநாத், பண்டிட் நானக்சந்த் ஆகியோர் பங்கேற்றனர். (ஹிந்து மகா சபா பங்கேற்கும் எந்த மாநாட்டையும் காங்கிரஸ் புறக்கணிப்பது வழக்கம்) இதனால் தான், எப்போதும் போல, இந்த மாநாட்டிலும் காங்கிரஸ் பங்கேற்கவில்லை. இருப்பினும், ஹிந்து மகா சபா எப்போதுமே வெறுத்த ’மதவகுப்பிவாரி தீர்ப்பை’, (Communal Award) அதாவது முஸ்லிம் களுக்கும், கிருஸ்தவர்களுக்கும், தனித்தனி தேர்தல் போட்டியிடம் இடங்களை பிரிட்டன் வழங்கியது.

டில்லியில், என்.சி கேல்கர் தலைமைவகித்த 14வது மாநாடு தீர்மானங்களில், ஹிந்துஸ்தானின் மீது பிரிட்டன் சுமத்திய ‘மதவகுப்புவாரி தீர்ப்பை’ (Communal Award) மிகவும் வன்மையாகக் கண்டித்தது, மேலும், காங்கிரஸ் மீண்டும் மீண்டும் ஹிந்துக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக ஹிந்துக்கள் மிகவும் மனம் நொந்தனர். காங்கிரஸைச் சேர்ந்த மாளவ்யாஜியும், இத்தீர்ப்பைக் குறித்து காங்கிரஸின் (வேண்டுமென்ற – intentional) மௌனத்தால், மிகவும் மனது புண்பட்டார்.

ஹிந்துக்களுக்காக, உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த பாய் பரமானந்தரின் சேவைகளை போதிய அளவில் விவரிப்பதற்கோ, புகழ்வதற்கோ, வெறும் வார்த்தைகள் போதாது. அவர் டில்லியில், ’ஹிந்து மகா சபா பவனை” நிர்மாணித்து, அங்கே டில்லி மகா சபையின் தலைமை அலுவலகத்தையும் நடத்தினார். பின், அவர் ‘ஹிந்து அவுட்லுக்’ ’ஹிந்து’ என்ற பத்திரிக்கைகளை ஆரம்பித்து, ஹிந்து மகாசபையின் கருத்துக்களை வெளியிடும் முக்கிய ஸ்தாபனமாக உருவாக்கினார். மேலும் அவர் மலை வாழ் பழங்குடி மக்களுக்கும், அசுத்தம் நிறைந்த சேரியில் வசிப்பவர்களுக்கும் மனப்பூர்வமாக சேவைசெய்ய ‘Servants of India Society’ என்ற அமைப்பை உண்டாக்கினார். மேலும் மிக அதிகமாக இந்தியாவிலுள்ள எல்லா இடங்களுக்கும், வெளிநாடு களுக்கும், பயணம் மேற்கொண்டு, ஹிந்துக்களின் நலனுக்காக மிக் பாடுபட்டார்.

15வது மாநாடு, அஜ்மீரில் நடந்தது. அங்கே, ஜப்பான், பர்மா, சைனா, சிலோன் முதலிய தேசங்களிலிருந்து, பிரநிநிதிகள் பங்கேற்று, வகுப்புவாரி தீர்ப்பை (Communal Award) கண்டனம் செய்தனர்.

1935இல், 16வது மாநாடு, கான்பூரில், பர்மாவிலிருந்து மாநாட்டிற்கென பிரத்யேகமாக வருகை தந்த பிக்‌ஷு உதம் தலைமையில், நடந்தது. அங்கே, புத்தர்கள் வாழும் தேசமான பர்மாவையும் ஹிந்து நாட்டோடு சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டிக்கொண்டார். அவர் பர்மாவை இந்தியாவிலிருந்து பிரித்து, தனி நாடாக உருவாக்கும் பிடிட்டனின் எண்ணத்திற்கெதிராக தன் குரலை எழுப்பி வந்தார்.

1936இல், 17வது மாநாடு, பூனாவில், பண்டிட், மதன் மோஹன் மாளவியாஜி அவர்கள் தலைமையில், நடந்தது. அதில் அவர் டாக்டர் மூன்ஜி அவர்களும், பாய் பரமானந்தர் ஹிந்துக் களுக்கு ஆற்றிய தொண்டுகளை மிகவும் சிலாகித்து உரையாற்றினர். இம்மாநாட்டில், ஹிந்துக் களின் ஒற்றுமைக்காகவும், தீண்டாமை ஜாதி, ஒழுப்பிற்காகப் பாடுபடும்படி தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மேலும் வீர சாவர்கரின் நாட்டு சேவைகளை நன்றியுடன் நினைவு கூர்ந்து, அவரை சிறை தண்டனையிலிருந்து விடுதலை செய்ய ஆங்கிலேய அரசாங்கத்தை வேண்டிக் கொண்டனர்.

1935-36இல் மீண்டும் நடந்த தேர்தலில், ஹிந்து மகாசபா எப்போதுமே மாளவியாஜி யின் காங்கிரஸ் தேசீயக்கட்சியை ஆதரித்தாலும், இக்கட்சி, அதிக இடங்களில், வெற்றி அடைய முடியவில்லை. காங்கிரஸ் சர்தார் வல்லப்பாய் ஆதரித்த பூலாபாய் தேசாய்க்கெதிராக, பஞ்ஜாபில் ஹிந்து மஜா சபையின் வேட்பாளராக பாய் பரமானந்தர் தேர்தலில் போட்டியிட்டு, கடும் போட்டிக்கிடையே, அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றியடைந்தார். மற்றும் பூனா, க்வாலியர், கோரக்பூர் முதலிய இடங்களில், எப்போதும் போல தொடர்ச்சியாக எல்லா தேர்களிலும் ஹிந்து மகா சபாவே வெற்றி பெற்றது.

18வது மாநாடு லாஹூரில், குர்கோடி சங்கராச்சார்யா தலைமையில் நடைபெற்றது. அதில், முஸ்லிம்கள் மாகாணங்களில், வாழும் ஹிந்துக்களின் மோசமான நிலைமையை குறித்து மிக்க வருத்தமடைந்து அதைப்பற்றி விவாதிக்கப்பட்டது, மேலும் ’எம்.எஸ் அனே’ அவர்கள் தலைமையில் ஒரு குழுவை நியமித்து. முஸ்லிம் மாகாணங்களில் ஹிந்துக்களின் நிலையைக் குறித்து நன்கு ஆழ்ந்த கவனம் செலுத்தி அதைப்பற்றி விவரமான அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டது.

19வது மாநாடு, அஹமதாபாதில், நடந்தது. அங்கும் பாபா பரமானந்தர், எந்த சமையத்திலும் நின்று போகாத மின்சாரம் போன்று துடிதுடிப்புடன் சுறுசுறுப்பாக ஹிந்துக்களுக்கு பணிவுடன் நேர்மையாக செயலாற்றி, ஹிந்துக்களின் ஒற்றுமைக்காக அரும் பாடுபட்டார்.
இவ்வமயத்தில், வீர சாவர்கர் ரத்னகிரி வீட்டுக்காவலிலிருந்து விடுதலையாகி இருந்தார். இந்த நிகழ்ச்சிக்குப்பின்னர், ஹிந்து மகாசபா புத்துயிர் பெற்று, புத்துணர்ச்சி உண்டாயிற்று. பாய் பரமானந்தரும் லண்டனில் இருந்த பொது, தன் பழைய தோழர் வீர சாவர்கரை ஹிந்துமகா சபையின் தலைமைப் பெறுப்பை ஏற்று ஹிந்துக்களுக்கு வழிகாட்ட வேண்டிக் கொண்டபடி, சாவர்கரும் 1937இல், ஹிந்து மகா சபையின் தலைவரானார்.

இருபத்தியாறு வருட தனியறையில் சிறைவாழ்வு, கொடும் சித்ரவதை, வேண்டுமென்றே அவமானப்படுத்தப் படல், இதனால், உடல் நலம் நலிவுற்று இருப்பினும், சாவர்காரின் சேவை மனப்பான்மையும், மனத்திண்மையும் எள்ளவும் குன்றாது இருந்தது. நாட்டின் நலனுக்காக சேவை புரியவும், அதற்காக போராடவும் எப்போதுமே உடல் நலம் குன்றி இருந்த போதிலும், தயாராகவே இருந்தார்.

இந்த இரு மாமனிதர்களால், ஹிந்து மகா சபையின் கொடியை முதன்முதலாக திட்டமிட்டு, வரைபடத்தில் குறியிட்டு அதற்கான கௌரவத்தை யடைந்தனர். மேலும் இவர்கள், ஹிந்துக்களின் மானம் காக்க, ‘ஹிந்துத்வ’ கொள்கையில் ஒரு பிடிப்பையும் ஏற்படுத்தினார்கள்.

சாவர்கர் ஒரு அறிக்கையில், ஹிந்துக்களின் ”ஸ்வராஜ்யம்” என்பதற்கு பொருள் விளக்கம் (Definition) என்று சொன்னால், அந்த ஸ்வராஜ்யத்தில், ”ஸ்வதா”, அதாவது ’ஹிந்துத்வ உணர்வில்” தான் எல்லாமே அடங்கிக் கிடக்கிறது என்றார்.
அதாவது, இந்திய மண்ணில் பிறந்தும், இந்திய உணர்வில்லால், அல்லது வெளி எல்லையிலிருந்து வந்து இந்திய மண்ணில் வாழ்ந்தும், இந்திய உணர்வில்லாதவர்கள், ஆகிய இவர்களின் சுமையில்லாமல் இருப்பது என்பது ஒன்றே ஒன்றில் தான் ”ஹிந்துத்வத்தின்’ உட்பொருள் உள்ளது என்றார்.

ஹிந்து மகா சபை இடைவிடாது பற்றி நிற்கும் கொள்கையை இவ்வாறு வீர சாவர்காரால் வலியுறுத்தப்பட்டது. இந்திய அரசியல் சட்டப்படி, (Government of India Act) தேச ஒற்றுமைக்காக, ஜனநாயக வழி ஒன்றினாலேயே ஒருங்கிணைந்த அரசியல் ஸ்தாபனமாக (Federation) ஹிந்துக்களின் உரிமைக்காக ஹிந்துஸ்தான் இருக்க வேண்டும் என, ஹிந்து மகா சபா விரும்பியது.

தேச ஒற்றுமைக்காக, ’ஜனநாயக ஒருங்கிணைந்த அரசியல் ஸ்தாபனம்’ என்னும் பொதுக் கொள்கையை காங்கிரஸ் எதிர்ப்பதால், ஹிந்து மகா சபா அங்கத்தினர்கள் மிகவும் மனம் புண்பட்டிருந்தனர். ஆங்கில அரசளித்த மதவகுப்புவாரித் தீர்ப்பை, (Communal Award) காங்கிரஸ் ஒப்புக்கொண்டதை ஒரு தேசத் துரோகமாகவே கருதி, மகா சபா இதை வன்மையாகக் கண்டித்தது. முஸ்லிம் லீக் இந்த மதவகுப்புவாரித் தீர்ப்பை, (Communal Award) வரவேற்றுக் கொண்டாடியது. ஏனெனில், லீகின் முக்கிய குறிக்கோள், முஸ்லிம்களுக்காக ஒரு தனி நாடு, பாகிஸ்தனை உருவாக்க விரும்பியது.

நாடு முழுதும் சாவர்கர் பயணம் செய்து, அங்காங்கே பெருங் கூட்டத்தில் ஹிந்து மகா சபையின் கொள்கைகளைப்பற்றி விளக்கமாக உரையாற்றினார். அவரே ஹிந்து மகா சபைக்கு, டாக்டர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜியையும், டாக்டர் என்.சி. சாட்டர்ஜியையும் சபைக்குக் கொணர்ந்தர்.

தமிழ் நாட்டில், டாக்டர் வரதராஜுலு நாயடு தாற்கலிக ஹிந்து மகா சபையை ஆரம்பித்து வைத்தார். 1938இல், நாக்பூர் மாநாட்டில், மீண்டும் சபையின் தலைவராக சாவர்கர் தேர்ந்தெடுக்கப் பட்டார். இந்த மாநாட்டில்: ”பெரும்பான்மையினரான ஹிந்துக்களின் வாக்களிப்பு, ஆதரவு, புத்தி, பணம், தியாகம் (ஆகிய இவைகளால் மட்டுமே) காங்கிரஸ் இன்றும் உயிர் வாழ்கிறது. ஆனால், ஹிந்துக்களை தங்கள் உபயோகத்திற்காக உபயோகித்துக் கொண்டே, ஹிந்துக்களை புறக்கணித்து அவர்கள் நலனில் சற்றும் அக்கறையின்றி, ஒட்டு மொத்தமாக ஹிந்துக்களின் எதிர்பார்ப்புக் கெதிராக, எல்லாவற்றையும் செய்து கொண்டே, ஹிந்துக்களல்லாத வர்களுக்குக் காட்டும் சலுகைகளைக்கூட ஹிந்துக்களுக்கு அளிக்காமல், முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்கு மட்டுமே இணங்கி, அவர்களை திருப்திப் படுத்த எதையும் செய்யத் தயாராக இருந்து கொண்டு, ஹிந்துக்களை பரிதாபகரமாக கைவிட்டிருக்கிறது. ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், முஸ்லிம்களுக்குச் காட்டப்படும் இச்சலுகைகளை, ஹிந்துக்களின் ரொக்கத்தைக் கொண்டே தான் செலவிடப்படுகிறது. எவ்வெப்போது ஹிந்துக்கள் தங்களுக்கு ஏதாவது சலுகைகளைக் கேட்டால், அவைகளை காங்கிரஸ் கர்வத்துடன் வேன்ண்டுமென்றே மறுத்துக்கொண்டே வருகிறது. இது எவ்விதத்திலும் ஒப்புக்கொள்ள முடியாதது, ஏனெனில், இவையனைத்தும் நேர்மைக் கெதிரானது. நியாயம், நேர்மை இவைகளுக்கெதிராகவும் ஹிந்துக்களுக்கெதிராகவுமே காங்கிரஸ் என்றென்றும் செயல் படுகிறது” என ஆணித்தரமாகவும் திட்டவட்டமாகவும் சற்றும், ஒளிவு மறைவின்றி தைரியமாக எடுத்துரைத்தார்.

ஹிந்து மகா சபா ஹைதராபாத் நிஜாமில் வாழும் ஹிந்துக்களின் பரிதாபகர நிலையால் மிகவும் கவலை கொண்டுள்ளது; ஆகவே அதை எதிர்த்து, போராட்டங்களை நடத்த ஒரு குழுவை நிருவியது. இக்குழுவில், எல்.பி. போபாகர், டாக்டர் மூன்ஜி, ஜி.வி. கேட்கர், பாய் பரமானந்தர், பத்மராஜ் ஜெயின், டாக்டர். கோகுல் சந்த் நாரங், முசுர்கார் மகராஜ், போராட்டத்தை நடத்த ஒருங்கிணைக்கப் பட்டனர். ஸ்ரீவி.ஜி. தேஷ்பாண்டே அவர்கள், தான் வகித்த பேராசிரியர் பதவியையும் தியாகம் செய்து, ஹிந்து மகா சபையில், சேர்ந்தார். ஹிந்து தொண்டர்கள், ஹைதராபாதை நோக்கி, பீடுநடை போட்டு சென்றதில், நிஜாம் நாட்டு அரசர், முஸ்லிம் மக்கள், ஹிந்துக்களுக்கு இழைக்கும் பாதகங்களைத் நிறுத்திக்கொள்ள, ஹிந்துக்களின் பலத்தை உணர்ந்து இசைய நேர்ந்தது.

இரண்டாவது உலகப்போர் ஆரம்பமாயிற்று. பிரிட்டனுக்கு தங்கள் தார்மீக ஆதரவை மகா சபை அளித்து, பூரண சுதந்திரத்தை அளிக்க ஆங்கிலேய அரசை வற்புறுத்தி, அரசியல் ஏற்பாடு களில். ஹிந்துக்களின் அபிப்பிராயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டுமென இம்முடிவை, மகா சபை நிர்ணயித்தது.

ஹிந்து மகா சபையின் தலைவர்கள், சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸை சந்தித்து, இந்திய நாட்டு சுதந்திரத்தில், தங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்தது. ஹிந்து மகா சபா இந்திய நாட்டை கூறுபோடும் பிரேரணைகளை ஏற்க மறுத்து, அவைகளை வேறு எந்த மாற்று உருவத்தில் புகுத்தாது இருக்கும்படி நிர்பந்தித்தது.

”வெள்ளையனே!! வெளியேறு”, என்ற ஆகஸ்ட் 1942 பேராட்டத்திற்குப்பின், காங்கிரஸ் காரர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். முஸ்லிம் லீக் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளாது, ஆங்கிலேயருக்கு எப்போதுமே ஆதரவாகவே இருந்து, பிரதிப் பிரயோஜனமாக (reciprocal arrangement), அதன் ஆதரவை திரும்பத் திரும்பப் பெற்றுவந்தனர்.

ராணுவத்தில் பயிற்சி பெற சாவர்கர் ஊக்கமளித்தார்:

25வது மாநாடு, 1939இல், கல்கத்தாவில் நடைபெற்றது. அங்கு வீர சாவர்கர் மூன்றாவது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். அங்கு மாநாட்டில், குழுமி இருந்த இளைஞர்களை ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றுக் கொள்ள ஊக்கமளித்தார்.

26வது மாநாடு, தமிழ் நாட்டு மதுரையில், 1940இல், நடந்தது. அங்கேயும் நான்காவது முறையாக, மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்மாநாட்டில் செயல் ரீதியில், ஆதரவு-எதிர்ப்பு, சாதக-பாதக காரணங்களை மன உளவியல் முறைப்படியும், புள்ளி விவரப்படி ஆராய்ந்து, பற்பல பகுதிகளாகப் பிரித்து மிகச் செம்மையாக, சிறப்புரையாற்றினார். இவ்வுரையில் வருங்காலத்தில் நிறைவேற்றப் படவேண்டிய செயல் திட்டங்களையும் பட்டியலிட்டார்.

இந்த உரையில் ஹிந்து இளைஞர்களுக்கு கட்டாயமாக ராணுவப் பயிற்சி பெற்றுக் கொள்ள வேண்டிய முக்கியதுவத்தைப் பற்றியும், அரசியலிலை ஹிந்து மயமாக்கப் படவேண்டிய இன்றியமையாமையையும் வலியுறுதினார். அவருடைய உடல் நலச்சீர்குறைவால், பின்னர், அம்மாநாட்டில், டாக்டர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜியை பணியாற்றும் தலைவராகத் தொடங்கி வைத்தார்.

இரண்டாவது உலக யுத்தத்தை ஒரு காரணமாகக் கொண்டு, ஹிந்து இளைஞர்களை பெரிய எண்ணிக்கையில், ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெறக் கேட்டுக்கொண்டார். இதன் உள்நோக்கம் ஹிந்து இளைஞர்களுக்கு போர்ப் பயிற்சியிலும், ஆயுதங்களை உபயோகப் படுத்துதலில், சிறப்பறிவையும் வளர்த்துக் கொள்வதே.

பீஹாரில் நடக்கவேண்டிய 27வது மாநாடு, ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது, ஏனெனில், அரசாங்கத்தால் இம்மா நாடு நடத்த தடையுத்தரவு செய்யப்பட்டது. மாநாடு நடந்த இடம் தான் அதற்கு அச்சிறப்புப் பெயரை வாங்கிக் கொடுத்தது.

தடையுத்தரவைத் தொடர்ந்து, பாய் பரமானந்தர், என்.சி. சாட்டர்ஜி, வரதராஜுலு நாயுடு, வி.ஜி. தேஷ்பாண்டே, மேஹர்சந்த் கன்னா, டாக்டர் மூன்ஜி, காப்டன் கேசப் சந்திரா, டாக்டர். ஷ்யாம் பிரசாத் முக்கர்ஜி, சாவர்கர் முதலியோரைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

அச்சிறைலேயே, ஒரு கூட்டம் நடந்தது, அதையே ஹிந்துமகா சபையின் 27வது மாநாடாக அறிவிக்கப் பட்டது. இச்சமயத்தில், ஹிந்து மகா சபைக்கு இயற்கையாக அளிக்கப்பட வேண்டிய ஆதரவை விடுத்து, ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் கூட, காங்கிரஸுக்கு ஆதரவாக தன் பலத்தை உபயோகித்தது. இச்செய்கை அனைவரையும் அதிரவைத்தது. இதையறிந்த ஹிந்து மகா சபா அங்கத்தினர்கள் மிக (eu too) வருந்தினர்.

1942இல், கான்பூரில் நடந்த 28வது மாநாட்டில், மீண்டும் ஐந்தாவது தடவையாக வீர சாவர்கரே, சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில், ஹிந்து சபையின் முக்கியத் தலைவர்களான, ஜே.பி. ஸ்ரீவாஸ்தவா, டாக்டர். என்.பி. கரே ஆகிய இவர்கள், ஆங்கில அரசின் அழைப்பிற்கிணங்க, வைசராயின் செயலாற்று ஆலோசனைக் குழுவில் (Viceroy’s Executive Council ) பங்கேற்க, அனுமதி அளிக்கப்பட்டது.

அம்ருத்சரில் 1943இல் நடந்த 29வது மாநாட்டில், விர சாவர்கரின் உடல்நலக் குறைவால், டாக்டர் ஷ்யாம்பிரசாத் (எஸ்.பி) முகர்ஜி தலைமையில் நடைபெற்றது. ஆங்காங்கே, அரசர்கள் ஆண்ட மாகாணங்களிலும் தேவைப்படும்போது, சபையின் கூட்டங்கள் நடைபெற்றன.

30வது மாநாடு, பிலாஸ்பூரில், டாக்டர். எஸ்.பி. முகர்ஜி தலைமையில் நடைபெற்றது. எப்போதுமே, முஸ்லிம் லீகைச் சார்ந்த முகம்மது அலி ஜின்னாவை சாந்தப்படுத்துவதற்காக காங்கிரஸ் செய்யும் வெவ்வேறு ஆதரவுகளை, பலதடவை அம்மாநாட்டில் முகர்ஜி அவர்கள், தன் சொற்பொழிவில் கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால், மாநாட்டில் உரையாற்றிய சக்ரவர்த்தி ராஜகோபாச்சாரியார் “முஸ்லிம்களுக்குத் தனி உரிமைகளை ஆதரிக்கும் முறைகளை” சிபாரிசு செய்ததை, (CR’s formula to meet Muslim demands)எல்லோரும் ஏகோபித்து வன்மையாகக் கண்டித்தனர். இவரைச் சிலர், “தவறான வழியில் தன் அறிவுத்திறனை ஓயாமல் உபயோகிக்கும் நேர்மையில்லாதவர்” (perpetually perverted intellectually dishonest) என்றே அவர் காதில் விழும்படி, பல காங்கிரஸ்காரர்கள் உள்பட, வெளிப்படையாகக் கூப்பிட ஆரம்பித்தனர். எப்போதுமே முஸ்லிம் களை திருப்தி செய்வதையே காங்கிரஸ் தன் நிரந்தரக் கொள்கையாகச் செய்து வந்தது. ராஜாஜியின் மறுபக்கமும் இப்படி இருந்தது! எப்படி இருப்பினும், என்றும், எந்த இடத்திலும், ஒரே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நேருவுக்கும், ராஜாஜிக்கும் என்றுமே ஏழாம் பொருத்தம் தான்!! இருவரும் ஒப்புக்காக, நண்பர்களென மக்களுக்கு முன் நடித்தனர். போகப் போக வரும் நாட்களில் இருவருமே ஒருக்கொருவர் வெறுப்பைக் கக்கிக்கொள்ளும் மனதிற்கொவ்வாது, இறக்கும் வரை அரசியலில் எதிரிகளாயினர்!! நேருவுக்கு தன்னை எதிர்ப்பவர் யாவரும் முற்றிலும் அழிக்கப்பட வேண்டிவயவர்கள். அது அவர் பிறவிக்குணம். இதன் மூலகாரணத்தை வெளிப்படையாகக் கூற இக் கட்டுரை எழுதியவருக்கு விருப்பமில்லை.

சிம்லாவில் நடந்த ஆலோசனைக் கலந்துரையாடலில், ஹிந்து வீழ்ச்சிக்கு ஆழமாக அடிகோலப்பட்டது. இக்கலந்துரையாடலுக்கு முன்னரே, காங்கிரஸ் மனப் பூர்வமாக பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு விட்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிரித்தாளும் ராஜதந்திரத்திற்கு காங்கிரஸும், அரசாளும் சுய நலத்தில், உடன்பட்டது. (Divide and Rule policy) இதன்படி ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒரே சரிசமநிலையில், (parity) வைத்து பரஸ்பர விரோதத்தை வளர்த்து விடுவதில் ஒரு முனைப்பாகவே இருந்தது.

இதன்படி, 22 % (விழுக்காடு) அங்கத்தினர்கள் கொண்ட முஸ்லிம்கள், 54 % (விழுக்காடு) கொண்ட ஹிந்துக்களுடன் சட்டமன்றத்திலும் அரசாங்கத்தில் சரி சமபாகமாக்கப் பட்டனர்.. இதை ஹிந்து மகா சபை வன்மையாக, ஆரம்ப நாளிலிருந்தே கண்டித்து வந்திருக்கிறது. இதே போன்று, காங்கிரசின் செயல்கள், அந்நாளிலேயே நடந்து வந்தது சொல்லி மாளாது. ஆதி நாளிலிருந்து ஹிந்துக்களுக்கு, நேருவின் சர்வாதிகார மனப்பாங்கு கொஞ்சமேனும் பிடிக்கவில்லை.
ஆகவே, இந்திய நாடு பிரிவினையாகாது என்ற எண்ணமே நாட்டுமக்கள் மனதளவில் அப்போதும்கூட வேண்டுமென்றே எல்லோருக்கும் தோற்றுவிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கலந்துரையாடல் என்ற கண்துடைப்பு வேலையில், (முஸ்லிம்களும், காங்கிரசும்) அவர்களுக்குள் ஏற்கனவே ஏற்படுத்திக்கொண்ட ரகசிய செய்துகொண்டப்படி இந்திய நாட்டிலிருந்து பாகிஸ்தானை ஒரு தனி நாடாக பிரிவினை செய்வது என்பதை இரு பக்கத்தினரும் பரஸ்பரம் சம்மதித்திக் கொண்டனர். இந்தியாவிலுள்ள ஹிந்துக்களின் ஏகோபித்த ஒப்புதலுக்காக, அதைப்பற்றி வரும் தேர்தலை எண்ணத்தில் கொண்டு அது முடியும் வரை, பிரிவினையைப்பற்றி மூச்சுவிடவில்லை. ஆனால், உண்மையில் நடந்தது வேறு. அப்போதிலிருந்தே காங்கிரஸ் என்ற இயக்கம், ஒரு வழக்கமாக இந்திய தேசய நலனுக்கெதிராகச் செய்துவரும் செயல் பாணிகள், சொல்லிடங்காது. இந்நாட்களிலும் இந்த விவரங்கள், பொது மக்களுக்குத் தெரியாதவாறு மூடி மறைக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கு ஆதரவாக காந்தி-நேரு போன்றவர்களின் காங்கிரஸ், எப்போதும் போலவே-இஸ்லாம் என்ற மத இயக்கம், இந்திய தேச நலனை சிறிதும் லட்சியம் செய்யாது, பதவி, அதிகார சுயநலங்களுக்காக, எல்லா ஜனநாயக மரபு, முறை ஆகியவைகளுக்கு முற்றிலும் முரணாக, தொலை நோக்கிலாமல், செயல் பட்டுவதால, தாங்கவொண்ணா வெறுப்படைந்த, வீர சாவர்கரின் நீண்ட நாள் தோழர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ரகசியமாக இந்தியாவைவிட்டு வெளியேறி, கடைசியாக இந்திய தேசீய ராணுவத்தை (Indian National Army) பர்மாவில் தொடங்கினார். இந்திய மண்ணை விட்டு வெறியேறுவதற்கு சிறிது நாட்களுக்கு முன்னர் தான் வீர சாவர்கரும் சுபாஷ்ஜியும் ஒருவருக்கொருவருடன் தன்னந்தனிமையில், நீண்ட நேரம் மனம் திறந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

1946இல் நடந்த தேர்தலில், ஹிந்துக்கள், நாடு பிரிவினையாகாது என்ற எண்ணத்தால் தான் கண்மூடித்தனமாக காங்கிரசுக்கு ஒட்டுமொத்தமாக ஓட்டளித்தனர். ஹிந்துக்களும் ஹிந்துமகா சபையின் எச்சரிக்கையை நினைவில் கொள்ளாமல், ஓட்டளித்து, நாட்டு பிரிவினை உண்மையில் நடந்தபோது, முஸ்லிம் லீகால் இழைக்கப்பட்ட வன்முறைக் கொடுமைகளால் பயங்கரமாக கஷ்டப்பட்டு பின்னர் கண்மூடித்தனமாக காங்கிரசுக்கு ஒட்டுமொத்தமாக ஓட்டளித்ததை நினைத்து நினைத்து மிக்க வருந்தினர். நாட்டுப்பிரிவினை என்ற விஷயம் ஹிந்துக்களுக்குத் தெரிந்த பிறகு இது ஹிந்து சமூகத்திற்கே ஒரு மரணப் பேரிடியாகவும், காங்கிரஸ் இந்திய நாட்டுக்குச் செய்த மகா துரோகமகக் கருதப்பட்டது.
ஆகஸ்டு 1946இல், வங்காள முதன் மந்திரியாக இருந்த முஸ்லிம் லீக் சுஹ்ரவர்தியின் மேற்பர்வையின் கீழ், அவருடைய உத்தரவுப்படி, 4000 ஹிந்துக்கள் முஸ்லிம்களால் மூன்றே நாட்களில் மட்டுமே, கல்கத்தாவில் படுகொலை செய்யப் பட்டனர்.
இச்சமயத்தில் தான் ஷ்யாம் பிரசாத் முகர்ஜியும் உடல் நலக் குறைவினால், தலைமைப் பதவியிலிருந்து விலகினார். வீர சாவர்கரும் எங்குமே பயணத்தை மேற்கொள்ள முடியாத அளவிற்கு, உடல் நிலை மிக மோசமாக ஆனது. துரதிருஷ்ட வசமாக ஹிந்துமகா சபா நம்பிக்கை இழந்த நிலையில் இருந்தது.
இக்காரணங்களால், நெருப்பு-தூள் பறக்கும் பேச்சாளர் எல்.பி. போபட்கர், கோரக்பூரில் 1946இல் நடந்த 31வது மாநாட்டில், சபா தலைவரானார்.
ஹிந்துக்களின் உண்மையான எண்ணத்திற்கு நேர்மாறாக, காந்தி-நேரு காங்கிரசால் நம் இந்தியத் தாய்த் திரு நாடு முஸ்லிம்களின் எண்ணம்போல், மிகத்துரிதமாக துண்டாக்கப்பட்டது.

ஹிந்துக்கள் படுகொலை

அப்பப்பா!! மேற்கு-கிழக்கு மாகாணங்களில் ஹிந்துக்கள் நேர்கொண்ட கஷ்டங்கள், இழிவு, அவமானங்கள் ஏராளம், ஏராளம். கோடிக்கணக்கில் ஹிந்துக்க்ள, அவரவர்கள் வீடு வாசல், சுற்றம் ஆகியவைகளிலிருந்து வேருடன் களைந்தெறியப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டனர், லட்சக்கணக்கான ஹிந்து பெண்கள் பலாத்காரமாக முஸ்லிம்களால் தூக்கிச் செல்லப் பட்டு கற்பிழைக்கப்பட்டனர், கோடிக்கணக்கில் ஹிந்துக்கள் படுகொலை செய்யப் பட்டனர். போதுமா காங்கிரஸ் செய்த காரியத்தின் விளைவு !! இங்கே காரியம் எனும் சொல்லுக்கு ஈடாக மாற்றாக தக்க வேறெந்த சொல்லையும் இணைத்துக் கொள்ளலாம்.
அச்சமயத்தில், நேரு ஆணவத்தில், ஹிந்துக்களின் துன்ப கூக்குரலுக்கு துளியும் செவி மடுக்காமல், பிரதம மந்திரி பதவியை சுகமாக அனுபவித்துக் கொண்டிருந்தார். அச்சமயத்தில் அவருக்கு மௌண்ட் பாட்டனின் மனைவி ‘எட்வினா’வுடனும் நெருங்கிய நட்பிருந்தது. இந்திய கண்டத்தை துண்டாக்கி, தனிநாடாக பாகிஸ்தான் உருவாக்கப் பட்டிருந்தாலும், பெரும்பான்மை யுள்ள ஹிந்துக்களின் நலனுக்கெதிராக இந்தியாவில் தங்கிய சிறுபான்மையினரான முஸ்லிம் களுக்கும் ஆதரவாக (இன்னமும் மேன்மேலும்) அவர்களுக்கு பற்பல உரிமை அளிக்கும் ஒரு அரசியல் சாசனத்தை உருவக்குவதில் மும்மரமாகவே இருந்தார்.
இக்கொடுமைகளிலும், ஹிந்து சங்கங்கள் ஆற்றும் ‘துன்பம் துடைக்கும்’ பணிகளில், எக்காரியங்களையும் லட்சியம் செயவதும் கிடையாது. செய் நன்றியும் என்றுமே காங்கிரஸுக்குக் கிடையவே கிடையாது.
இக்கொடுமைகள் நடுவில், இந்திய ஹிந்துக்களின் நலனுக்கெதெராக காந்தியும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக, ரொக்கமாக இந்திய அரசங்கம் 55 கோடி ரூபாய் மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிகைக்காகவும், முஸ்லிம்களுக்கெதிராக, டில்லி, பஞ்ஜாப், பீஹார் ஆகிய இடங்களில், ஹிந்துக்கள், எந்த எதிர் நடவடிக்கை ஏதும் எடுக்கக் கூடாதென உண்ணாவிரதம் இருந்தார்.
இந்த இரண்டு கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டதால், காந்தி உண்ணாவிரத்தை கைவிட்டார். இந்திய அரசங்கத்திலிருந்து கிடைத்த ரூபாய் 55 கோடியைக் கொண்டு, பாகிஸ்தானின் முகம்மது அலி ஜின்னா ஆயுதங்களை விலைக்கு வாங்கி, மலையில் வாழும் பழங்குடி காட்டுமிராண்டி ஜனங்களுக்கு இவ்வாயுதங்களை வழங்கி, ஹிந்துஸ்தானுக்கெதிராக, பாகிஸ்தான் ராணுவ நேர்-மேற்பார்வையில், காஷ்மீரை பலாத்காரமாகக் கைப்பற்றும் படி ஏவி விட்டார். இதில் ஆரம்பித்த பச்சைத் துரோகம், இன்றுவரை தீராத புற்று நோயாக இந்தியாவை பாதித்து வருகிறது. இதில், முக்கிய மூல ஆரம்ப கதா நாயகர் காந்தி அண்ணலே! அடுத்ததாக, நேருவும் தனது பங்கிற்காக, காஷ்மீர் பிரச்சனையை ஐக்கிய நாட்டு சபைக்கு எடுத்துச் சென்ற அச்செயல், இன்றும் அப்பிரச்சனையை குட்டை குழப்பிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸைச் சேர்ந்த இவ்விருவர் ஆரம்பித்து, விளக்கேறி வைத்தது, இன்றும் காஷ்மீர் முழுதும் காட்டுதீ என பரவி, பெரும் பேரழிவை இந்திய நாட்டுக்கு அளித்துக் கொண்டிருக்கிறது. இது தான் நடந்த உண்மை! இதை எவரும் மறுக்க முடியாது!

நாட்டை துண்டாக்கி பிரிவினையைத் திணித்து, இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான ஹிந்துக்களுக்கு துரோகம் செய்ததோடு மட்டுமல்லாமல், காங்கிரஸ் – ஹிந்து மகா சபாவும், ஏராள முக்கிய ஹிந்துக்களும், மற்ற ஏனைய ஹிந்து இயக்கங்கள், ஹிந்துஸ்தானுக்கு ஆற்றிய அருந்தொண்டுகளையும் தியாகங்களையும், துளியும் லட்சியம் செய்யாது இந்திய அரசியல் சாசன வாயிலாக பற்பல சட்டங்களையும் நுழைத்து, தங்கள் சுயநல திட்டங்களுக்காகவும், நேரு, வம்ச ஆட்சியை நிலைநிறுத்த, மீண்டும் மீண்டும் கொடுமைகளை காங்கிரஸ் செய்துகொண்டிருப்பதை, நினைத்த மாத்திரத்தில், எப்போதுமே, மனதை மிகவும் கொதித்தெழ வைத்து இன்றும் புண்படுத்திக் கொண்டிகிறது. இந்த கொதித்தெழல் எப்பொது எதில் எங்கு கொண்டுபோய் விடுமோ?!! இன்று இப்போது சொல்வதிற்கில்லை. மனத்தடியில் குமறிக் கொண்டிருக்கும் எரிமலை வருங்காலத்தில் எப்படி வெடிக்குமென கடவுளுக்கே வெளிச்சம்”.
முஸ்லிம்களுக்கு ஆதரவாக காந்தி, எப்போதுமே செயல்படுவதை நினைத்து நினைத்து வெறுத்துப் போய், இதனால் நாதுராம் வினாயக் கோட்ஸே என்ற தீவிர எண்ணம் கொண்ட மனப் பக்குவமில்லா பூனா இளைஞன், அடக்க முடியாத கோபத்தால், எவ்வித பொருத்தமும் இன்றி, அனாவசியமாக, வாழ்க்கையில் அனுபவமே இல்லாத, தன் மிகச்சிறிய நெருங்கிய இளைஞர்-நண்பர் குழாம் அளித்த தவறான வெறி ஊக்கத் தூண்டுதலால், அசட்டுத் துணிச்சலால் உந்தப்பட்டு, உள்ளூரில், கரடுமுரடாகத் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியை உபயோகித்து காந்தியின் வாழ்க்கையை முடித்தான். இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு தான் ஹிந்து மகா சபை மேலிடத்துக்கே தெரியவந்து, மிகவும் அதிர்ச்சியுற்றனர். மிக வருந்தினர். ஜவஹர்லால் நேரு இம்மாதிரியான அவருக்கு வசதியான சந்தர்ப்பத்தைத் தான் எதிர்பார்தார். கிடைத்தது. நன்கு உபயோகித்தும் கொண்டார். அதிகாரமும் அவர் கையிலிருந்தது. பின் கேட்க வேண்டுமா?

இந்த படு மூளையில்லாத, எதிராளிகளுக்கு திருப்பித்தாக்க உதவும் ஆயுதமாக, இவ்வேண்டாத வன்முறைச் செயல், ஹிந்து மகா சபைக்கு எல்லாவற்றிலும் மேலான தீங்குச் சிகரமாக அமைந்தது.

இந்த திட்டமிட்ட காந்தி படு கொலை நேருவுக்கு இரண்டு பக்கங்களிலும் சாதகமாயிற்று,

1. ஹிந்து மகா சபை மீது எப்படியாவது அரசாங்க சட்ட ரீதியில், வழக்கு என நடவடிக்கை மேற்கொள்ளவும்,
2. காந்திக்குப் பழக்கப்பட்டுப் போன போராட்டம் புரிய புதிய தலைப்பு ஏதுமில்லாத காரணத்தால், நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும், நேரு-காங்கிரஸ்-அரசாங்கத்திற்கு, அடிக்கடி ஏதாவது சில்லரைத் தொந்திரவு போராட்டங்களை, அதாவது, முஸ்லிம்களுக்காக உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் போன்று அவ்வப்போது நடத்திவந்தவர், வீட்டு அலமாரியில் கிடக்கும், பழைய பெருங்காய சிறு டப்பி போல, அவ்வமயம், அரசியல் செல்லாக் காசென மதிக்கப்பட்டிருந்த வயது மிக முதிர்ந்தவர், இந்திய அரசியல் மேடையிலிருந்தும் நிரந்தரமாக யாரோ ஒருவரால் அகற்றப் பட்டார் (காந்தி பாவம்!). ஒருவர் சாவும் மற்றொருவருக்கு வாழ்வானது!! இனி, தார்மீக முறையில் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என்ற நிலையில், தன் இஷ்டப்படி காரியங்களை செய்து கொள்ள, நேருவுக்கு வாய்ப்பு தானே தேடி ஓடோடி வந்தது. நேருவுக்கு அடுத்ததாக, அவருக்கு இணையயான காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர், குஜராத்தில் சோம்நாத் கோவில், புனர் நிர்மாணம் முன் நின்று செய்து முடித்த கையோடு, இந்திய தேசீயப் பற்று மிகுந்த வல்லப்பாய் படேலும், மறைந்தார். அப்புறம் என்ன!! இதுவும் நேருவுக்கு மிக்க சாதகமாயிற்று.

இந்த காந்தி கொலை எனும் விபரீத வன்முறைச்செயல், ஹிந்து மகா சபையை அதன் தலைமையையும் அரசியல் ரீதியாக அகற்றி, ஒரேயடியாக ஒழிக்கப் படுவதற்கு வழிகோலியது. மேலும், தனது ஒரே எதிரியான சாவர்கரின் மாண்புமிக்க தியாகங்களை சரித்திர ஏட்டிலிருந்து அழித்துவிட இது ஒரு வாய்ப்பு-ஆயுதமானது. ஆக ஹிந்துமகா சபாவின் மீது தடையுத்தரவு சுமத்தப்பட்டது.

காந்தியின் கொலை, ஹிந்துமகா சபா மீதும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் மீதும், நடவடிக்கை எடுக்கவும், சட்டப்படி இதன் தலைவர்களை சிறையில் அடைக்கவும் உதவியது. அவர்கள் மீது இந்திய ஆளுமைக்கு எதிராக சதி என்னும் வழக்கும் தொடரப்பட்டது. வீர சாவர்கரின் மீது சுமத்தப்பட்ட சதிக்குற்றம் நிரூபிக்கப்படாததால், அவருக்கு ஒருவித தீங்கும் இழைக்காமல், உரிய நன் மதிப்புடன் நீதிமன்றம், விடுதலை செய்தது. நேரு திட்டப்படி நடத்தப்பட்ட இந்த சதித்திட்ட குற்றச்சாட்டு அஞ்சா நெஞ்சரான சாவர்கரையும் உலுக்கி அதைரியப்படுத்தி, மனச் சோர்வடைய வைத்து விட்டது. தனிமையில் மிகவும் துக்கப்பட்டார். ஆங்கிலேயர்கள் தன்னை வாழ் நாள் முழுவதும், வெஞ்சிறையிலடைத்து, சித்திரவதை செய்த சம்பவங்கள் கூட வீர சாவர்காரை அப்போது அவ்வளவாக பாதிக்கவில்லை, ஆனால், தன்னைத் தன் சுதந்திர நாட்டில் கூட இப்போது இவ்வளவு மிகக் கீழ்த் தரமாக நடத்தப்படுவதை நினைந்து நினைந்து தான் மிகவும் துக்கப்பட்டார்.
தன் வாழ் நாள் முழுவதையும் பாரத மாதாவுக்கே அற்பணித்தவருக்கா இந்த இழிச்செயலா? இதுவா ஒரு தேச சுதந்திர வீரரை நடத்தும் முறை? வினாயக் தாமோதர் சாவர்க்காருக்கு இணையாக நாட்டிற்காக உடல், பொருள் ஆவியனைத்தையும் தந்தளித்து, என்றும் மாறா நிலையுடன் இவ்வளவு தியாகம் செய்தவர் எவராவது உண்டா? இனி வருங்காலத்தில் யாராவது எந்த மரியாதை செய்தும் என்ன பிரயோசனம்? அவருக்கிழைத்த அநீதிக்குக் காரணம் யார்? எந்த கட்சி? கைப் புண்ணைப் பார்க்கக் கண்ணாடி தேவையா?

எந்த ஏகாதிபத்திய அரசும் நினைக்காத இந்த அடாவடிச் செயலை – எந்த தேசத்திற்கு தன் உடல், பொருள், ஆவி ஆகியவற்றை கொஞ்சமும் தயக்கமின்றி தியாகம் செய்தாரோ – அந்நாடே சுதந்திரம் அடைந்த அடிச்சுவடுகூட அழிவதற்கு முன்னர், காங்கிரஸ் தலைமையில் அரசாண்ட நம் சுதந்திர பாரத அரசு, செய்நன்றி மறந்து இக்கொடூர செயல் புரிந்து அழிக்கமுடியாத களங்கத்தை தனதாக்கிக் கொண்டது. சரித்திரத்திற்கு மாத்திரம் வாயிருந்தால், அது எப்போதுமே அழுது கொண்டே இருக்கும். பாரத மாதா தன் தவப்புதல்வனை இழந்தது, இவ்வாறு இழிவான முறையில் தனக்காக எல்லாவற்றையும் ஈந்த உத்தம புத்திரன் நடத்தப்பட்டதை எண்ணி எண்ணி என்றென்றும் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கத் தான் போகிறார். அன்னையின் சாபம் எதில் முடியுமோ? எத்தனையோ பேர், பிறந்தனர், வாழ்ந்தனர், இறந்தனர், அவர்களையெல்லாம் தேச தியாகிகள் வரிசையில் ஒரு சிலரைத்தவிர நம் நினைவிலில்லை. மற்ற எல்லோரையும் போன்ற சாதாரணமானவரா நம் ஸ்ரீ தாமோதர வீர சாவர்கர்? அவருக்கா இந்த கதி? கொடுமையிலும் கொடுமையன்றோ?

இரண்டாட்டுகளுக்குப்பின், இந்த தடையுத்தரவும் ரத்து செய்யப்பட்டது. ஆனால், டாக்டர் ஷியாம்பிரசாத் மூகர்ஜி, ஹிந்து மஹா சபைலிருந்து வெளியேறி, ’ராஷ்ட்ரீய ஸ்வய்ம் சேவக் சங்’ ஆதரவுடன் புது அரசியல் அமைப்பாக ஜனசங் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். ‘ஹராகிரி’க்கு சமமான தேவையில்லாத, மூளையில்லாத நாதூராம் கோட்சே செய்த தனிச்செயலின் விளைவு ஹிந்து மகா சபாவை எவ்வளவு தூரம் பாதித்தது என பார்த்தீர்களா?

டாக்டர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜியும் தன் பங்கிற்கு, ஹிந்து மகா சபையின் கொள்கை களைத் தளர்த்தி, அதன் அங்கத்தினர் யாவரையும் சமூக சேவை என்ற ஒரு அமைப்பாக ஆக்கிவிட ஆலோசனையைத் தந்தார். இவரைத் தான் வீர சாவர்கரே ஹிந்து மகா சபையில் தன் இடத்தில் அவரை அறிமுகப்படுத்தினார்.

நேருவும் தனது குறிக்கோளை நிறைவேற்றிக்கொண்டார். இதனால், ஹிந்து மகா சபையும், காலப்போகில் அதன் தலைமையுள்பட அரசியல் திரையிலிருந்து ஒளி மங்கிப் போய், ஒருகாலத்தில் ஹிந்துக்களுக்கு நிழல் கொடுத்து, பச்சைப்பசேல் என இருந்த மிகப் பெரிய ஆலமரம், இன்று பட்டுப்போகும் நிலையில் உள்ளது. இந்திய அரசாங்கத்தால் கட்டாயமாக நுழைக்கப்பட்ட கட்டுப்பட்டால், வீர சாவர்கர் அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டியதாயிற்று. இதனால், பொதுக்கூட்ங்களில் பங்கு கொள்வைதை நிறுத்திக்கொண்டு தன் வீட்டோடு வெளி உலகு தொடர்பில்லாமல் வாழ்ந்தார்.

ஹிந்துஸ்தான், பெயரால் மட்டும் பீற்றிக்கொண்டு, பொய்தோற்றமான சுயநல காங்கிரஸின் ஒத்துழைப்புடன் வேண்டுமென்றே வெட்டிக் குறைக்கப்பட்ட குறுகிய தேசமாக, மதசார்பற்றது என வெற்றுப் போர்வையை போர்த்திக்கொண்டு, அதற்கு வால் பிடிக்கும் தேசத்துரோக சந்தர்ப்பவாத அமைப்புகளுடனும், நாட்டு சுதந்திரப் போராட்டத்தில் எந்த விதத்திலும் உறவில்லாத, பங்கில்லாத, அதே சமயம் ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டுப் போனதற்கு பிலாக்கணம் பாடிய தமிழ் நாட்டிலுள்ள கழகங்களுடனும் உறவு பூண்டு, இந்திய தேசத்துக்காக தன் எல்லாவற்றையும் துறந்த தியாகி, வீர சாவர்கார் போன்ற மகா புருஷர் இப்புவியில் நம் மிடையே வாழ்ந்தார் எனவும் மறந்து புறக்கணித்து வாழ்கிறது. நாட்டுக்கு தியாகம் என தெரியாத கும்பல் தான் இன்று கோலோச்சுகிறது. சாவர்க்கார் போன்றவர்கள் தங்கள் இன்னுயிரைத் தந்தளித்ததால் தான் இந்தியா இன்று சுதந்திர நாடாக இருக்கிறது என்பதையும் நன்றி மறந்து தலைவர்களே வாழ்கின்றனர். தொண்டர்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. அம்மாமனிதர் இந்நாட்டிற்கு செய்த சேவைகளை மறந்து, அதற்கான புகழாரம் சூட்டாமல், ஒருவித கௌரவம் செய்யாமல், ஆனால், அகௌரவங்களை மட்டும் ஒன்றன்பின் குவியல் குவியல்களாகச் செய்துகொண்டு, அவருக்குத் தரவேண்டிய மதிப்பு மரியாதை, சம்மானம் போன்றவற்றைத் தராமல், அவர் பிறந்த தினத்தையும் கொண்டாடாமல், ஆனால், ஆங்கிலேயருக்கே சாமரம் சாற்றி வால் பிடித்த கழகக் கட்சியைச் சேர்ந்த, தற்போது வாழும் முதுமையடந்த அக்கட்சித் தலைவருக்கு காங்கிரஸ் மேலிடம் வாழ்த்து தெரிவித்து அவர் பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. பழைய சரித்திரம் இன்றைய தலை முறைக்குத் தெரியாததினால், இதையும் இக்கழகங்கள் மூடி மறைத்த வண்ணமே உள்ளனர். வயதாகி அனேக உண்ணாவிரப் போராட்டத்தில் பங்கு கொண்ட காந்திஜி, உடல் நலிவுற்ற காரணத்தால், தன் சொந்த இரு பேத்திகள் தோளில் கை இட்டுக்கொண்டு நடக்க முடியாமல் நடந்துவந்த காந்தியை “காமாந்தகாரர்” என அன்று கழகம் வருணித்தது. அதே பழைய காமாந்தகார-காந்தி, இன்று கழகக்காரர் களுக்கு, திடீரென உத்தமர் காந்தியாகிறார். திராவிட நாட்டுப் பிரிவினைக் கொள்கையை, ‘நான் சென்ஸ்’ என்று அன்று சொன்ன நேருவுக்கு கழகங்கள் திட்டிய திட்டலைகள் இன்றும் ஓயவில்லை, ஆனால், திராவிட நாட்டுக் கருத்துப் படிவமும் (concept) காற்றோடு காற்றானது. ஆனால், இதே கழகம், இன்று நேருவுக்கு புகழாரம் சூட்டி, அவர் சிலைக்கு மாலை மரியாதை யுடன், அவர் சந்ததிகள் சன்னதிகளுக்குப் பால் காவடி எடுத்து, துணை போகும் கூட்டணியாகிறது. அவர்கள் வீட்டுக்கு நிரந்தர புனித யாத்திரையும் கழகக்காரர்களால் ஏற்ற அந்தந்த பருவ காலங்களில் மேற்கொள்ளப் படுகிறது. இதெல்லாம் தான் அரசியலென்றால், இவ்வரசியலை என்னவென்பது?
ஆனால், இதே வீர சாவர்கர் சுதந்திர இந்தியாவில் 20 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தும் கூட அவருக்கு தரத்தக்க “பாரத ரத்னா” விருதைத் தந்து அவ்விருதுக்கு பெருமை சேர்த்துக் கொள்ளாமல், வெளிநாட்டி லிருந்து ஹிந்துஸ்தானில் வாழ்ந்து கிருஸ்தவ மத பிரசாரம், மதமாற்றம் ஆகியவற்றை செய்த தெரிசாவுக்குக்கூட அந்த விருதைத் தந்து எக்களிக்கிறது! என்ன கொடுமையடா இது!!

இந்த சந்தர்ப்பத்தில், பெரும்பான்மையினரான ஹிந்துக்களின் நலனுக்கெதிராக அரசியல் சாசனத்தில் சிறுபான்மையினரான முஸ்லிம், கிருஸ்தவ மதத்தை சார்ந்தவர்களுக்கு பிரத்யேக உரிமைகளை உவந்தளித்து பெருமை கொள்கிறது. ஹிந்துக்களுக்கு எதிரான வித்தியாசம் பாராட்டி, எல்லாவற்றிலும் ஹிந்துக்களுக்கு பாதகமாகவே செயலாற்றிவருகிறது. தேசபிரிவினை நாட்களில் முஸ்லிம்களைத் திருப்திபடுத்தும் நடவடிக்கைகளைப் போல தேசபிரிவினையான பின்னரும் அதை விடத் தீவிரமாக சுயநல இதே காங்கிரஸ் அப்பட்டமாக செயலாற்றி வருகிறது. இப்போதும் ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக இருப்பினும், இந்திய அரசியல் சாசனத்தில் தங்கள் சின்னஞ்சிறு உரிமைக்ளுககாக தினமும் போராடவேண்டியிருக்கிறது. இது எப்பேற்பட்ட பரிதாபகர சோக நிலை!! இந்தியக் கடவுளாகக் கருதப்படும், அயோத்தி ஸ்ரீ ராமர் பிறந்த ஸ்ரீ நாம நவமிக்கு விடுமுறை கிடையாது, ஆனால், அரேபியாவில் பிறந்த முகம்மதுவுக்கு பிறந்த நாள் விடுமுறை இந்தியாவில் உண்டு!! இது தான் இன்றைய அரசாங்க மத சமத்துவம்!!

தங்கள் தேசத்தில் ஹிந்துக்கள் ஓரினமாக உயிர்வாழ்வதற்குக்குக் கூட இடமில்லாத / வழியில்லாத நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது. நான்கு எல்லைக்குள்ளும் தேசத்துரோகிகளின் ஊடுருவல், தேசத்திற்குளே மதமாற்றம், ஹிந்துக்களுகெதிரான வன்முறை தினமும் ஏராளமாக நடந்து கொண்டேதான் இருக்கின்றன. ஹிந்துக்களே இந்திய மண்ணில், ஒரு சுவடில்லாமல் ஆக்கிவிட வெளி நாட்டிலிருந்து பிரயேகமாக தருவிக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டு அநேக தேசத்துரோகிகள் உதவியால், தகவல் துறை மூலம், பண பலத்தின் மூலம், இந்திய நாட்டை ஆளமுடிகிறது. மீண்டும் வெளிநாட்டு ஆதிக்கம் தலை தூக்கிவிட்டது. முன்னர், கிரேக்கர், ஹூனர், இஸ்லாமியர், முகலாயர், ஆங்கிலேயர், இன்று வேறு உருவத்தில் பலர். போதுமடா சாமி! போதும்!! பாரமாதாவுக்கு விடிவுகாலமே கிடையாதா?

இந்த தூக்கத்திலிருந்து ஹிந்துக்கள் விழித்துக் கொள்வார்களா? அந்நாட்களில் இருந்த ஹிந்து என்ற உத்வேகம் இன்று பொங்கிவருமா? ஹிந்துக்களாகப் பிறந்து ஹிந்துக்களாக வாழ்ந்து, ஹிந்துக்களின் அரசியல் கட்சிகள், இப்போதுள்ள நேர்மையற்ற தலைமைத் தவிர்த்து, நம் நாட்டிலேயே பாதுகாப்புடன் வாழ்கிறோம், இனி வாழ்வோம் நம் சந்ததியும் வாழும் என மனத்திண்மையுடன் வாழ இடமுண்டா? அல்லது தங்களைத் தானே ஏமாற்றிக்கொண்டு தான் வாழ்வோமென கங்கணம் கட்டிக்கொண்டுள்ளனரா?. ஹிந்துக்களுக்கென தியாகங்கள் பல புரிந்து, ஹிந்துகளின் நலனில் அக்கரை கொண்ட அரசாங்கம் மீண்டும், அந்த நாட்களிலிருந்தது போல ஓர் மாபெரும் அரசியல் சக்தியாக போஃநிக்ஸ் போல (Phoenix) மீண்டும் உயித்தெழுமா?

இக் கட்டுரை எழுதியவருடைய ஒரே வேண்டுகோள்:

மீண்டும் ஒருதடவை வீர சாவர்கர் அன்று முழங்கியதை இங்கே முதலில் கொடுக்கிறேன்: ” நீ வந்தாலும், வராவிட்டாலும், அல்லது ஹிந்துவாக இருந்து நம்மிடையே சற்று மன வேற்றுமை கொண்டிருந்தாலும், ஹிந்துக்களின் தேச விடுதலைக்காக உங்கள் (மனதால், சொல்லால், செய்கையால்) எல்லாவற்றையும் ஒரு முடிவில்லாமல், ஹிந்து தேசத்திற்கே அர்ப்பணிக்கவும், அதற்காக போராடவும் தயாராக இருக்கவேண்டும்”

இந்தியாவில் உள்ள அத்தனை ஹிந்து சார்பான சங்கங்களும், குழுக்களும், பாரத மாதாவை மனதார நேசிப்பவர்களே! இந்திய நாட்டுப்பற்றில் ஒவ்வொருவரும் இணையானவர்களே! ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை. இதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. இருப்பினும் தாங்கள் ஆற்றும் செயல் பாணிகளில் சில மன வேற்றுமைகள் அவ்வப்போது இருக்கின்றன. ஹிந்துக்கள் இன்று எதிர் கொண்டுள்ள மிக ஆபத்தான இந்நேரத்தில், எல்லாவற்றையும் மறந்து, இந்திய நாட்டு ஒற்றுமையே மிக மூலாதாரமானது என உணர்ந்து, தங்களுக்குள் உள்ள மன வேற்றுமைகளை மறந்து, ஒன்றாக இணைந்து “ஹிந்து ஒற்றுமை” எனும் பெயரிலோ அல்லது அதன் சம அமைப்பிலோ, செயலாற்றுவதே நாம் எல்லோரும் இந்திய தேச அன்னைக்கும் வீர சாவர்கருக்கும் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். பாரத அன்னை இதுவரை பட்ட துன்பங்கள் போதும்! இனியும் நம்மாலும் அவருக்கு இன்னல்களைக் கொடுக்கத் தேவையில்லை. அவருக்குப் பிள்ளைகளாகப் பிறந்த நமக்குள் சண்டையிட்டு மடிவது அன்னைக்கு உகப்பாக இருக்குமா? இன்னும் எத்தனை நாள்? இந்த வேண்டுகோளுக்கு செவி மடுத்தால், இக்கட்டுரை எழுதியவர் நோக்கம் ஈடேறும். இந்த வேண்டுகோளை தயவு செய்து ஏற்று செயலாற்றத் தொடங்குமாறு எல்லா ஹிந்துக்களையும் கை கூப்பித்தலை வணங்கி வேண்டிக்கொள்கிறேன். நன்றி.

இத்தருணத்தில், மகான் குருஜி கோல்வால்கரை நினைத்துக் கொள்கிறேன். அவரோ நம் வேதவழி வந்த முனிவர்களில் ஒருவராக மதிக்கத்தக்கவர். அவர் மட்டும் இன்றிருந்தால், நாட்டில், ஹிந்துக்கள் இருக்கும் இந்த நிலைக்கொரு ஏற்ற உபாயத்தைத் தந்திருப்பார். ஒற்றுமைக்கும் ஒரு வழி வகுத்துக் கொடுத்திருப்பார். அவர் நம்மிடையே இன்று இல்லாததை நம்மால் உணர முடிகிறது.

படம் – நன்றி:தினமலர்.
—-0—-

(இக்கட்டுரையில் சில சரித்திர நிகழ்ச்சிகள், மூத்த பத்திரிக்கையாளர், பெரியவர் ஸ்ரீ ஆர். எஸ். நாராயணஸ்வாமி அவர்கள் என்றோ எழுதி வைத்திருந்த ஆங்கிலக் கட்டுரையிலிருந்து எடுத்துக் கொள்ளப் பட்டது. அவருக்கு என் மனப் பூர்வான நன்றி.)

Series Navigation

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்