ஆதியோடு அந்தமுமாக ஒளிவு மறைவில்லாத இந்து சமய தத்துவங்கள் God Project: Hinduism as Open-Source Faith

This entry is part [part not set] of 31 in the series 20100613_Issue

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்


கடவுள் நம்பிக்கை, கோட்பாடுகளைப் பற்றி விளக்கும் முயற்சி ஆதியோடு அந்தமுமாக ஒளிவு மறைவில்லாத இந்து சமய தத்துவங்கள்.

Based on God Project: Hinduism as Open-Source Faith
By: Josh Schrei, Marketing Director, Strategist, Producer, Writer, Critic, and Activist
http://www.huffingtonpost.com/josh-schrei/the-god-project-hinduism_b_486099.html

தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

இந்து சமய கடவுள் நம்பிக்கையை முறையாகக் கடைபிடிக்க, அதைப்பற்றி, அறிந்து கொள்ளும் ஆவல் கொண்lடோருக்கு, அடுத்தடுத்து எழும் ஐயப்பாடுகளைக் களைய, அதன் உள் மையப்பகுதியை புரியுமாறு எடுத்துக்காட்டுகளுடன் மிகச்சிறப்பாக விளக்குவதென்பது, மிகக் கடினமான சவாலாகும்.

மேலாக, ”இந்து சமயம்”, எனும் ஒரு சொல்லே ’’மிகத்தவறான பிரயோகம்’’ என அடிக்கடி பலர் சொல்வதும் உண்டு. ஏனெனில், இந்து சமய இறைபொருள், சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக மிகப் பழமையான, ஆனால் புனிதமான சமயப்பற்றுள்ள எண்ணங்களின் தொகுப்பாகும். சற்று விளக்கமாகக் சொன்னால், இந்துசமய ஞானம் கடந்த 5000 ஆண்டுகளாக மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது தான் இதன் உட்கருத்து! இதில், பல்லாண்டுகளாக இயற்றப்பட்ட இந்து சமய ஆன்மீக இலக்கிய நூல்கள், சித்தாந்தங்கள், இதற்காக, அநேக கடவுள்களின் தொழுகை முறைகள், இவைகளின் முழுமையான உருவம், நிலை, அமைப்பு, இயல்பு ஆகியவற்றில் நிகழ்ந்த மாற்றங்கள், இவைகளின் விளைவாக, எழுந்த மிகப்பரந்த தனிச் சிறப்புத் தன்மையுள்ள மெய்யறிவாய்ந்த தத்துவங்கள், நடைமுறையில் பழக்கப்பட்ட பயிற்சிகள், போகப் போக, உட்கருத்துகளில் தெளிவுற்ற சமயப் போதனைகள்: ஆகிய இவைகளால் — பல நூற்றாண்டுகளாக, ஒரே கடவுள் எனும் கோட்பாடுள்ள எல்லைக்குள் தங்கள் சித்தாந்தங்களில் நம்பிக்கை கொண்டு, இச்சமயக் கிளையினைச் சார்ந்த பலர், பல நேரங்களில், மாறா நிலைப்பாட்டுடன் எழும் எண்ண அலைகளால், அவர்களுக்கு உடன்பாடற்ற நிலையை உருவாக்கி, மன அமைதியையும் குழப்பி, (தனக்குத் தானே பீறிட்டு வெடித்துக் கொண்டெழும் பற்பல பயங்கர சச்சரவுகளிலும் ஈடுபடுத்தி) விடுகிறது.

இருப்பினும், மிகச் சுருக்கமாக, இந்து சமயத்திற்கும், மற்ற சமயங்களுக்கும் இடையே உள்ள தத்துவங்களில் உள்ள வேறுபாடுகள், பலகடவுள் – ஒரேகடவுள் என்பதல்ல. ஆனால், இத்தத்துவங்களில் கவனத்திற்குள் கொள்ள வேண்டிய”அடிப்படை வேறுபாடு கண்டறிதல்” எனும் போது, இந்து சமயம்”ஆதியோடு அந்தமுமாக ஒளிவு மறைவில்லாதது” (Open Source), அதே மூச்சில், மற்ற சமயங்களைப்பற்றிச் சொல்லும்போது, அவைகள்”ஒற்றையடிப் பாதை போன்று, ஒருபக்கம் மூடப்பட்டவைகள்” (Closed Source) என்பதேயாம். (The key differentiation is that “Hinduism” is Open Source and most other faiths are Closed Source).

[[[பலகடவுள் – ஒரே கடவுள் என்று வித்தியாசங்களைக் கூறுவது சிற்றறிவு படைத்தோருக்கு மட்டுமே உரிமையான சலசலப்பு வாதம். எப்போதுமே நுண்ணறிவாற்றலின் படித்தரத்துக்கும், உடல், பொருள் சார்ந்த சாதாரண எண்ணங்களுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உண்டு. நுண்ணறிவு, உண்மையான அறிஞர்களைச் சார்ந்தது, மற்றவைகள் மெய்யறிவில்லாதவர்களைச் சார்ந்தது. நுண்ணறிவு நல்லுணர்வை வளர்க்கும், மெய்யறிவு இல்லாமை ஏதேதோ பொய்பேசி, சமூகத்தைப் பிரித்தாள்வதால் கிடைக்கும் லாபத்தைப் பெருக்கிக் கொள்வதோடு மட்டுமல்லாமல், அப்பொய்களாலேயே பலகாலம் பிழைத்திருக்கும்]]].

இனி, இந்து சமய “ஆதியோடு அந்தமுமாக ஒளிவு மறைவில்லாத அணுகுமுறை என்பது” (Open source is an approach), மென்பெருள் (software) ஒன்றின், உள் வடிவமைப்பு , வளர்ச்சி சார்ந்த முன்னேற்றம், பகிர்ந்து கொள்ளும் வகைகள் , அதே சமயத்தில், அதன் மென்பொருளின் ”தொடக்க மென்பொருளின் மூல நிரல்” (software’s source code) அல்லது ஒழுங்கு முறை சட்டத் தொகுப்புகளுக்கு, நடைமுறையில் எளிதில் அணுகத்தக்க தன்மையுடையதாகவே இருக்கிறது. இதிலேதும் ஐயமில்லை.

அஃதேபோன்று, இந்து சமயத்தில், கடவுள் எனும் கருத்துப் படிவத்தை (concept) ஆழ்ந்து ஆராய்ந்தால், மானிட உள்நோக்க மெனும் ”தொடக்க மென்பொருள் ஒழுங்கு முறை சட்டத் தொகுப்புகளின்” சிந்தனைகள், அதன் தொடர்கள், சித்தாந்தங்கள் இவைகள் வாயிலாக நடைமுறையில் ஒரு கடவுள் என்பதற்கே தான் வழிகாட்டுகிறது.

இவைகளையெல்லாம் நோக்கும் போது, இந்தியாவில் விளைந்த இந்துசமயத்தில் மட்டுமே, அதாவது அநாதிகாலமாக தன் சமயக் கதவுகளை வரையறுக்கப் பட்டிராத வகையில் திறந்து வைத்துள்ளது, இதில், ஒழுங்குமுறை சட்டத் தொகுப்போர்களுக்கு (coders) சர்வ சுதந்திரமாக கோலோச்ச, தங்கள் கைத்திறனைக் காட்டவும், புதிதாக முனைந்து உருவாக்கவும், மறுபடி வேறொன்றை உருவாக்கவும், மெருகூட்டிப் பெருமை சேர்த்து தூய்மையாக்கவும், மிக நுட்பமாக நேர்த்தியாக்க உய்த்துணரவும், மீண்டும் மீண்டும் புனைவாற்றலால் ஊகிக்கவும், இடமளித்திருக்கிறது. ஏட்டிலும், எழுத்திலும் உள்ளவாறே, இதே தாராளம், நடைமுறையிலும், உள்ளது. எங்கும் எதிலும் ஒளிவு மறைவில்லை. பல்வகை வேறுபாட்டு நிலைகளிலும், ஆன்மீக சம்பந்தத்திலும், புலனுணர்வு சார்ந்த ஆற்றல்களிலும் (cognitive), பட்டறிவுகளிலும், நாடி அறியவும், அல்லது ஆய்வில் ஈடுபடவும், தக்க ஆவணங்களுடன் ஆதாரமாக நமக்குக் கொண்டாடும்படி, காட்சியளிக்கிறது.

இதில், கடவுள் நம்பிக்கையற்றோரும், பெண் கடவுளைத் தொழுவோரும், பொதுவாக ஏற்றுக் கொள்ளப் பட்ட சமயக் கோட்பாடுகளுக்கு மாறான கருத்துகளைக் கொண்டு, தங்களுக்குத் தனி வழியென, மது, மாது, புணர்ச்சி, (சமைக்காத) புலால், (லாகிரி வஸ்துக்கள் உள்பட), என உடலெல்லாம் சம்பல் பூசி பிறந்த மேனியுடன் (லாலாண்டியாக) உலவும் ஏகாங்கிகளும் (heretics), மண்ணிலிருந்து பானை செய்யும் குயவன் தான் பிரம்மம்; ஆகையால், பிரம்மம் மண்ணல்ல; பானையும் அல்லன்; பிரம்மம் வேறு உயிர்கள் வேறு என உரைக்கும்-துவைதிகளும், (இரட்டைநிலைப் பற்றுடையோர்) (dualists), இரு பொருள்வாதி என இல்லாதோரும், எதிலும் நம்பிக்கையற்றோரும் (nihilists), எதிலும், எங்கும் எல்லாமே இன்ப மயம் என்பதே சிறந்த நலம் எனும் கோட்பாடுகளில் நம்பிக்கையுடையோரும் (hedonists), பாவலர்களும், இசை இசைப்போரும், மாணவர்களும், திருத் தொண்டர்களும் (saints), சூதுவாதற்ற குழந்தைகளும், நாதி, நண்பரற்று, சமுதாயத்திலிருந்து விலக்கப்பட்டோரும்…….. ஆகிய இவர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து, இந்து சமயம் எனும் முத்து மாலைக்கு விலைமதிக்க முடியாத முத்துக்களாகவும், அல்லது இசை இழைக்கும் கருவியிலுள்ள நரம்புகளால் மீட்டப்படும் இனிய சங்கீதத்தை வாரி வழங்க, அதிலுள்ள பற்பல ஒழுங்குமுறைத் தொகுப்புகளுக்கு தங்கள் தங்கள் தகுதி, தகைமைக்கேற்றவாறு பங்களிப்புகளை தாராளமாகவும் ஏராளமாகவும் அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.

இத்தருணத்தில், இந்தியாவின் இந்து சமயம் எனும் கடவுள் நம்பிக்கை, கோட்பாடுகளைப் பற்றி விளக்கும் என் முயற்சியில் நிகழ்ந்த விளைவுகள் (results of India’s God Project — as I like to refer to Hinduism) மனப்பூர்வமாக சொல்லப்போனால், நிபந்தனையின்றி, முழுமையாக என்னை முற்றிலும் திகைப்படையச் செய்து விட்டது. இந்து சமய அறிவுக் களஞ்சியத்தில் இருக்கும் – அறிவியலுக்குரியவைகள், நம்பிக்கை, பட்டறிவு சார்ந்தவைகள், ஆழ்மன நினைவாற்றலால் நிகழ்ந்த அரும் பெரும் செயல்கள், மனதின் விழிப்பு நிலையில் நிகழ்ந்தவைகள், மானிட நடத்தைக்குத் தொடர்புடையவைகள், மற்றும், தங்களது திறமைகேற்ற, நடைமுறைக்கேற்ற, முறையாக ஒழுங்கு படுத்தப்பட்ட அநேக முறைமைகள் – ஆகிய இவைகளனைத்துமே, எத்துடனும், எங்கேயும், எவரிடத்தும் எல்லா நிலையிலும் ஒப்புமைக்கப்பாற்பட்டது.

கடந்த (சரித்திர) காலங்களிலோ, அல்லது அண்மைக்காலத்திற்குரிய மொழிகளைக் காட்டிலும், சமஸ்கிருத மொழியில் ஒருமித்த, மிகப்பெரிய, போலியில்லாத உண்மையான, உறுதியாய் கட்டப்பெற்ற, நம்பிக்கைக் குகந்த, சொற்களஞ்சியத்தை உள்ளடக்கியது – இதில் — மனதால் திட்டவட்டமாக கையாளுதல், புலனறிவாற்றல் (mental cognition), மனவுணர்வு (perception), முன்னுணர்வு (awareness), மனித நடத்தைக்குத் தொடர்புடைய உளநூல் (behavioural psychology), ஆகிய இவைகளைப் பற்றி ஒருங்கே வேறெங்கும் போய் தேடாதவாறு ஒரே இடத்தில், ஒப்புமைக்கப்பாற்பட்டதாகவும் உள்ளது.

இதற்கெல்லாம், அடித்தள-ஆதாரம் — இந்துசமய ஒழுங்கு முறை சட்டத் தொகுப்புகளான வேதங்கள் தான். வேதங்களே, தலைமையானது; மிகச் சிறப்பு வாய்ந்தது; மேலும் உடனுக்குடன் விவரமாக ஆராய்தலுக்கும் வழிவகுத்துள்ளது. ரிக் வேதம், இந்து சமயத்தில் மிகப்புராதனமானது; (ரிக் வேதமே, இப்பூமண்டலத்தில், இதுவரை ஆன்மீக நூல்களில், மிகத் தொன்மையானது என திட்டவட்டமாகக் கூறிவிடலாம்) இதில், இறைவனை – பிரஜாபதி (படைத்தவைகளுக்கு உரிமையாளர்) என அழைப்பதுண்டு. இவரைப்பற்றி அடிப்படையில் அறிய, எளிதில் புரிந்து கொள்ளமுடியாத, கீழ்க்கூறிய கேள்விகளுக்கு நம்மை பதில் கூற, வேதம் எதிர்பார்க்கிறது! ஆழ்ந்து சிந்தித்தால் இதன் பொருள் புரியும்.

சுருக்கமாக இக்கேள்விகள் இதோ:-

• அவரைப்பற்றி யாரறிவார்?
• இங்கு அவரைப்பற்றி பலரும் அறிய தீர்மானமாகக் கூறவல்லார் யார்?
• அவர் பிறப்பிடம் எங்குள்ளது?
• உலகில் படைப்பு எங்கிருந்து, எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
• பிரபஞ்சம் படைக்கப்பட்ட பின்னரே கடவுள்கள் வந்தனரா?
• இவைகளைப்பற்றி கூறவல்லார் எங்கிருந்து விழிப்படைவார்?

இவைககளுக்கு ஒப்பாக, கிருஸ்தவ பழைய ஏற்பாடு படி (Old Testament) கடவுள் தன்னால் படைக்கப்பட்டவைகளுக்குக் கட்டளையிடுகிறார் (commandments). ஆனால் இந்து சமய பிரஜாபதி கேட்பது-நான் யார்? என நம்மைக் கேட்கிறார்!

இவ்வாறு இறையைப் பற்றி எழுப்பப் பட்ட கேள்விகளுக்கு பின்னர், மடை திறந்த வெள்ளமென, இந்து சமய எண்ண வட்டத்தில் மிகச் சிறப்பு வாய்ந்த, பரிணாமம் சார்ந்த ஒரு பாகமாக (evolutionary arc), போலிவாதத்திலிருந்து, இயற்கையைத் தொழுவதெனவும், அங்கிருந்து மிக உயர்வான எண்ணங்களுடன் தூய்மைப்படுத்தும் வேள்விகள்களிலும். அடுத்து, எளிதில் புரிந்துகொள்ள இயலாத மனதால் இயங்கும் புலனுணர்வைச் சார்ந்த (mental cognition) புனைக்கருத்துகளிலும், உணர்வு நிலை சம்பந்த உயிராற்றலிலும் (nature of consciousness), ஆக, மொத்த பரிமாண இயற்பியலிலும், விளைந்தது (quantum physics). [[அதாவது கதிரியக்கத்தில் விகிதப் பொருத்தமான எலக்ட்ரான்கள் வெளியாக்கப்படுகின்றன எனும் இயற்பியல் / சித்தாந்தம்.]]

வேதக்கடவுள்களின் தொடர்பிலிருந்து, பின்வரும் அநேக ஆயிர நூற்றாண்டுகள் வரை இந்து சமய எண்ணத்தொடர்களின் செல்வழித்தடத்தை நம்மால் அறிந்து கொள்ள இயலும். இவைகளிலிருந்து, முதலாவதாக, நாம் கண்டறிவது, மக்கள்-கடவுள் தொடர்புகளில் எண்ண நிலை மாற்றம் அடைந்தது மட்டுமன்றி, கடவுள்களே மாற்றம் அடைந்தது என்றாயிற்று. உதாரணமாக, வேதத்தில் சிவன், ருத்ரனாக, அதாவது, மகா கோபக் கடவுளாக உலகத்தையே அழிப்பவர் என ஆரம்பித்து, போகப் போக, பிரளய கால சூராவளிக் காற்றுடன், பொழியும் மழைக்கடவுளாக சித்தரிக்கப்படுகிறார். அவரே, அநேக நூற்றாண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் தோன்றலில், பைரவராக, அதாவது பயம் எனும் எண்ணத்தை ஊட்டுபவராகவும், இதற்குப்பினர், பசுபதியாக அதாவது மிருகங்களின் இறைவனாகவும், பின்னர், ஆழ்ந்து தியானம் செய்யும் யோகிகளின் மனதில் இறைவனாக உள்ளவராகவும், (யோகிகளின் மனதில் பிரகாசிக்கிறாய் அல்லது நினைக்கப்படுகிறாய்) முடிவாக 9வது நூற்றாண்டில், காச்யப புராவில், (அதாவது காஷ்மீரில் Kashmir), பிரபஞ்சத்திற்கு இன்றியமையாத, மிக்க ஆற்றலுக்குள் இயங்கும் உள்ளுரமாகவும் கொள்ளப்படுகிறார்.

கடவுள் மாற்றத்திலிருந்து, இந்து சமய எண்ணத்தொடர் (evolution of Indic thought) நம்மை பெருமளவில் தற்காலத்திற்கு உரியதாகவும், மேலாக, மிக அண்மை கால உண்மை எண்ண இயல்புக்கும் வழிகாட்டுகிறது. இதில் நாம் கவனிக்க வேண்டியது, வேத ஒழுங்கு முறை தொகுப்பு (old Vedic codes) மாற்றமடையாது முதலாவதாகவும், (மைய) இருசாகவும் எப்போதும் இருக்கிறது. இந்து சமயத்தில் இம்மிகூட பிசகாத ஆக்கக் கூறு (சிறப்பு) யாதெனில், கடவுளைப்பற்றி, சரித்திர எண்ணமும், தொழும் முறைகளும், எங்கும் கைவிடப்பட்டதில்லை, ஆகையால நடைமுறையில் பழையபடியே தொழுகை என்பது, மூலப்படிவ அடையாளச்சின்னமாக / இடுகுறியாகவும் (symbol and archetype) அதே சமயத்தில் உண்மையில் எல்லாவற்றையும் உள்ளடக்கி ஒருருவமாக (literal embodiment) கொள்ளப் படுகிறது. உதாரணமாக, சிவன், யாவும் கடந்த மன விழிப்பு நிலையில் (உள்ளுணர்வு நிலை) அறிவொளி யாகவும், அதே சமயம், மயானத்தில் கிடக்கும் பித்தனாகவும் கொள்ளப்படுகிறது. இது ஆன்மீகத்தில் பற்றில்லாதோருக்கு (spiritual anarchists) இவைகளையே ஒரு சாக்காக வைத்துக்கொண்டு, உண்மையான ஆன்மீகத்தை எள்ளி நகையாடவும், அதே சமயத்தில் மேலை நாட்டு கடவுளியல் வல்லுனர்களுக்கு (Theologists/theologians) உண்மையாக சொன்னால், ஆழ்மனத்தில் உணர்விழப்பையும் ஒருங்கே உண்டாக்கிவிடுகிறது.

மேலை நாடுகளிலும் சரி, மத்திய கிழக்கிலுள்ள நாடுகளில் இருக்கும் ”ஒரேகடவுள் கோட்பாடுடைய” சமயத்திலும் சரி, கடவுளைப்பற்றி இந்துமதத்திலுள்ள பாரபட்சமற்ற, திறந்த மனப்பான்மையுள்ள, நடுநிலையான பொருள்விளக்கத்தை என்றும் எந்நிலையிலும் அனுமதிப்பதில்லை. ஆக, மேலை நாட்டு, மத்திய கிழக்கு நாட்டு சமயங்கள் தோற்றுவாயிலிலேயே மூடப்பட்ட முறைமையாக விடாப்பிடியாக நிலைபெற்று, ஓரிடத்திலேயே தேங்கி எந்த கேள்விகளையும் கேட்க முடியாதவாறு அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என உலகத்தோரைக் கட்டாயப் படுத்துகின்றன.

[[[ஆனால் இந்து சமயத்தில் கட்டாயம் என்பதில்லையே! வன்முறையில்லையே!! You are always correct so long you agree with me என்றில்லையே!! மேலை நாட்டு, மத்திய கிழக்கு சமயங்கள், தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்கள் தான் எனவும் முழங்கி, சாதிக்கவும் செய்கின்றன!!! இந்து சமயம் என்பது, திறந்த புத்தகம். அதை யாவரும் படிக்கலாம், பயனடையலாம், கிழித்தும் போடலாம் (உங்கள் புத்தகமாக இருந்தால்!!), கேள்வி கேட்கலாம், எள்ளி நகைக்கலாம், தூற்றலாம், பயங்கரவாத வன்முறையால் அழிக்கவும் செயல் படலாம், ஆனால் இந்து சமயம் அன்றும் அழிந்ததில்லை, இன்றும் அழிந்து விட வில்லை, மாறாக நிலைத்து நிற்கிறது, ஆகவே என்றுமே நிலைக்கும். எவ்வளவோ முயற்சி, எவ்வளவோ பேர்களால் செய்து பார்த்தாலும் அது முடியாது. ஏனெனில், இது உண்மையைச் சார்பாக உள்ளது]]]

ஒன்றை நினைவு கொள்ளுங்கள். “பொதுவாக மூடப்பட்ட மூலங்களாலான (closed source) ஒரு கணினி செயல் திட்டம் (computer program), இரண்டிணைந்து உருவானது. (binaries=2 x 2 x2 ~~~ infinity). ஆகவே, அதன் உரிமம், (இசைவு) கொடுக்கப்படும் போதே கணினி செயல் திட்ட ” கருத்தியக்கத்தின் மூல நிரல்” / தொடக்க மென்பொருள் ஒழுங்கு முறை சட்டத் தொகுப்புகளின்” சிந்தனைகள், அதன் தொடர்களுக்கு, அணுகத்தக்கத் தன்மையில்லாமல் தான் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அதன் source code, பொதுப்பார்வைக்கு வைக்கப்படாத, அந்தரங்கமான, வியாபார பரம ரகசியமாகக் கருதப்பட்ட்டு, காக்கப்படுகிறது. ஆகவே பொதுமக்களுக்கு இனாமாக அளிக்கப்படுவதில்லை. இதைத்தான், மேலை நாடுகளில், மத்திய கிழக்கிலுள்ள நாடுகளில் இருக்கும் ”ஒரே கடவுள் கோட்பாடுடைய” சமயங்கள், பற்பல சுருதிகளில், குரலிணைவுடன் கூட்டிசைக்கின்றன.
கிருஸ்தவ சமய சரித்திரத்தில் கடவுளைப்பற்றி, அதன் முறைமையைக் கேள்வி கேட்பதெனபது நடக்காத காரியம். இதுவே அதன் source code, ரகசியம், அந்தரங்கம், எல்லோருக்கும் கிடையாது, ஆக இல்லவே இல்லை, அவ்வளவுதான். இது Closed Source. [[மூச்! பேசப்டாது!!
பழைய ஏற்பாட்டில் (Old Testament), கிருஸ்துவின் பைபிளில் இருக்கும் போதனைகளைப் பற்றி மறுபடி வேறு யாராவது வேறு விதமாக / மாதிரியாக பொருள்விளக்கம் அளிப்பதென்பது, மூலாதார சர்ச்சின் (church’s) அதிகாரத்தையே எதிர்த்துரைத்தலாகக் கொள்ளப்பட்டது. ஆகவே இது சர்ச்சின் சரித்திரத்திலேயே, கிடையாது. அப்படியும் எவராவது துணிவுடன் எதிர்த்தால், அவரை உயிருடன் வாழ அனுமதித்ததில்லை. (மத்திய கிழக்கு சமயத்தைப் பற்றி இங்கு கூறவும் வேறு ஏதாவதுளதோ!!)

ஆனால், இந்து சமய எண்ணங்களில் (source code) வியாபார ரகசியமேதும் இல்லை. கடவுளைப்பற்றி அறியும் திறவுகோல் யோகமே. யோகம் தான் அதன் அடித்தளம், அண்டம் அகிலம், பிரபஞ்சம் (macrocosm). முழுமையானது, எல்லைல்லாதது, நிபந்தனையற்றது, சுதந்திரமானது, கபடில்லாதது, கட்டுப்பாடில்லாதது (absolute). இது ஒவ்வொரு மானிடப் பிறவியிடத்தும் உறைந்துள்ளது. அதை அணுக, சில முறைகள், பயிற்சிகள் தான் தேவை. இது மிக அழகானது, அதேசமயம், எளிதானது. எவராலும் அடையப்படக்கூடியது. இந்த கருத்துப்படிவத்தை அணுக, கடந்த அநேக பல ஆயிரமாயிரம் ஆண்டுகளிலும், எவரையும் தடுத்ததுமில்லை. தடுக்கவும் முடியாது.

ஆக இந்து சமயத்தில், கடவுளைக் கண்டுபிடிக்கவோ, மிக நுட்பமாக நேர்த்தியாக்க உய்த்துணரவோ அல்லது மீண்டும் மீண்டும் புனைவாற்றலால் ஊகிக்கவோ, உங்களால் முடியும். இத்திறன் உங்களிடத்தும், உங்கள் கையிலேயே தெளிவாக உள்ளது. எந்த கட்டுப்பாடும் கிடையாது. இதுதான் பேருண்மை.

இதுதான்:
கடவுள் நம்பிக்கை, கோட்பாடுகளைப் பற்றி விளக்கும் முயற்சி:
ஆதியோடு அந்தமுமாக ஒளிவு மறைவில்லாதது – இந்து சமய தத்துவங்கள் தான்.
அதாவது –
”God Project: Hinduism as Open-Source Faith”

Series Navigationஏ.தேவராஜன் 2 கவிதைகள் >>

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்