பாரதிதாசனின் கல்விச் சிந்தனைகள்

This entry is part [part not set] of 38 in the series 20091015_Issue

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை


தமிழகத்தில் கல்வியாளர்களும், கவிஞர்களும் தத்தமது கல்விச் சிந்தனைகளை வழங்கியுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பாவேந்தர் பாரதிதாசனார் ஆவார். தமிழர்கள் வாழ்வு பற்றியும், தமிழின, தமிழ் மொழி உயர்வு குறித்தும் சிந்தித்து அதற்காகவே வாழ்ந்தவர் பாவேந்தர். தமிழக மக்களுக்கு ஏற்ற வகையில் கல்வி பற்றிய பல்வேறு கருத்துக்களைப் பாவேந்தர் தமது படைப்புகளில் வெளிப்படுத்தியுள்ளார்.பாரதிதாசனாரின் கல்விச் சிந்தனை இன்றையச் சூழலில் உள்ள கல்வி முறைக்கு உரமூட்டுவதாக அமையும் எனலாம்.

மனித வாழ்க்கையை அறிவினால் மேன்மையுறச் செய்வது கல்வியே. கல்வியின் முக்கியத்துவத்தை,

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” (புறம்-183)

எனப் புறநானூறு வலியுறுத்துகிறது. வாழ்க்கைக்கு கல்வி அவசியம் என்பதை வள்ளுவர்தமது திருக்குறளில்,

“யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு” (குறள் எண்- )

என வலியுறுத்துகிறார். பாரதிதாசன், ‘இருண்ட வீடு’ என்னும் நூலில் கல்விஇல்லான் கண்ணிலான் என்க என்று வள்ளுவர் கருத்தை பழி மொழிந்துள்ளார். மேலும் கல்வி இல்லா வீட்டை,

“எல்லா நலமும் ஈந்திடும் கல்வி

இல்லா வீட்டை இருண்ட வீடென்க!”

எனவும்

“படிப்பிலார் நிறைந்த கு¦த்தனம் நரம்பின்

துடிப்பிலார் நிறைந்த சுடுகாடென்க!

அறிவே கல்வியாம்! அறிவிலாக் குடும்பம்

நெறிகாணாது நின்றபடி விழும்!’

எனக் குடும்ப வாழ்விற்குக் கல்வி தேவை என்பதனைப் பாவேந்தர் வலியுறுத்திக் கூறுகிறார்.

“ஒருவன் கற்கும் கல்வி அவன் பிறந்த நாட்டோடு தொடர்புடையது. ஒருவன் வாழ்வு அவன் பிறந்த நாட்டின் மக்களுடன் பிணைக்கப்பட்டிருக்கின்றது. அவன் கற்கும் கல்வியும் அவன் ஈடுபடும் துறைகளும் அவன் ஆற்றும் பணிகளும் அவனுக்கு மட்டுமின்றி அவன் நாட்டுக்கும் பயன் படுவனவாகும்” என்று கல்விக்கும் சமுதாயத்திற்கும் உள்ள உறவினை பாவேந்தர் விளக்குகிறார்.(குயில், 29,7,58,தமிழ் மாணவர் ஆவல், ப.,2)

கல்வியை அடிப்படைக்கல்வி, மேல்நிலைக்கல்வி, உயர்கல்வி, என வகைப்படுத்தலாம். இவற்றுள் அடிப்படைக் கல்விஇருந்தால்தான் எல்லாம் சிறக்கும். இல்லெனில் கல்வி விழலுக்கு இறைத்த நீராய்விடும்.

பாரதிதாசன் ஆசிரியராகப் பணியாற்றியதால் அடிப்படைக்கல்வி இவ்வாறு அமைய வேண்டும், பாட நூல்களில் எப்படிப்பட்ட பாடங்களை வைக்கவேண்டும் என்று தெளிவுற விளக்கியுள்ளார். வாழ்க்கைக்கு (ஆதாரமான) அடிப்படையான அறிவை உண்டாக்கும் கல்வியை ஆதாரக் கல்வி என்பர். தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் மாணவர்கள் உணரும் வண்ணம் பாடநூல்கள் உருவாக்கப்படவேண்டும் எனப் பாவேந்தர் கூறுகிறார்.

“துரோணர் ஏகலைவனின் கட்டை விரலை வெட்டிக் காணிக்கையாகக் கொண்டார் என்பது போன்ற புராணக்கதையும், இதுபோன்ற பிற கதைசறைர்ம் பள்ளியில் சிறார் கற்கும் பாட நூலில் இடம்பெறுதல் கூடாது” எனப் பாவேந்தர் கூறுகிறார்.

தமிழ்ப்பண்பாட்டை ஒழிப்பதற்காகவே இப்படிப்பட்ட புராணக்கதைகளைப் பாடநூலின் பாடநூல் குழுவினர் திணித்துள்ளனர் எனச் சாடியுள்ளார். (ச.சு.இளங்கோ, பாரதிதாசனின் தலையங்கங்கள், ப., 76) தமிழ் மாணவர்களுக்குக் கல்வி தமிழிலேயே அமைதல் வேண்டும். ஆங்கிலத்தில் அமைதல் கூடாது என்பது பாரதிதாசனின் உறுதியான எண்ணமாகும். தொடக்க கல்வி முதல் உயர்நிலைக் கல்விவரைதமிழிலேயே அமைய வேண்டும் என்றும், அறிவியல் பாடங்களைத் தமிழிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும், குறிப்பாகக் கல்லூரியில் எல்லாப் பாடங்களும் தமிழில் கற்பிக்கப்படவேண்டும் என்றும் பாரதிதாசன் எண்ணினார்(குயில் 2.2.60)

அறிவியல் பாடங்களைத் தமிழில் மொழிபெயர்க்கும்போது அச்சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச் சொற்களைக் கண்டறிந்த பயன்படுத்திடவேண்டும் என்றும், வேற்றுச் சொற்கள் இருந்து போகட்டும் என்று கூறுவது பொருத்தமற்றது என்றும் பாரதிதாசன் புகன்றுள்ளார்(குயில் 18.10.60,ப., 16) இ·து தாய்மொழிவழிக் கற்றலை தெளிவுறுத்துவதாக அமைந்துள்ளது. முன்னேறிய வளர்ந்த நாடுகள் பலவும் தாய்மொழிவழிக் கல்விக்கே முன்னுரிமை அளித்ததால் அவை பல்துறைகளிலும் வளர்ந்துள்ன. அதுபோன்றே நமது நாட்டிலும் தாய்மொழிவழிக் கல்விக்கு வழிவகை செய்திடல் வேண்டும் என்பது பாவேந்தா¢ன் அடிப்படைக் கல்விச் சிந்தனையாக அமைந்திருப்பது நோக்கத்தக்கதாகும்.

தமிழர்கள் ஆங்கிலத்தைக் கற்பதைப் பாரதிதாசன் எதிர்க்கவில்லை. ஆனால், ஆங்கிலத்தைத் தமிழர்கள் தங்கள் தாய்மோழியாகக் கருதுகின்ற மனப்பான்மையை எதிரக்கிறார்.(குயில்,26.7.60,ப.,5) பிறமொழிகளைக் கற்றாலும் தமிழைத் தங்களின் உயிராய்க் கருதவேண்டும். இதனைத் தமிழியக்கத்தில் பாவேந்தர்,

“ஆங்கிலத்தைக் கற்கையிலும்

அயல்மொழியைக் கற்கையிலும்

எந்நாளும்

தீங்கனியைச் செந்தமிழைத்

தென்னாட்டின் பொன்னேட்டை

உயிராய்க் கொள்வீர்” (தமிழியக்கம், ப., 31)

என்கிறார்.

பாவேந்தர் தமது அனைத்துப் படைப்புகளிலும் பெண்கல்வியின் தேவையை வலியுறுத்துகிறார். இசையமுதில்,

“இற்றை நாள் பெண்கல்வியாலே-முன்

னேறவேண்டும் வையமேலே”(தொகுதி-1)

என்கிறார். குடித்தனம் பேணுவதற்கும், மக்களை , உலகினை, கல்வியைப் பேணுதற்கும் பெண்களுக்குக் கல்வி வேண்டும் என வற்புறுத்துகிறார். (குடும்ப விளக்கு, விருந்தோம்பல் பகுதி) கல்வியில்லாத பெண்கள் களர் நிலமாவர், என அவர்களைக் களர் நிலத்திற்கு ஒப்பிடுகிறார். குடும்பம் பல்கலைக் கழகமாக மாறப் பெண்கல்வி அவசியம் என்கிறார் பாவேந்தர்.

தமிழ் பண்பாட்டை விளக்கும் வகையில் அடிப்படைக்கல்வி அமைதல் வேண்டுமென்பது பாவேந்தா¢ன் கல்விக் கொள்கையாக அமைந்திலங்குகிறது எனலாம். மேலும் அவர் அனைத்து நிலையிலும் தாய்மொழிவழிக் கல்வியே அமைந்திருந்தல் நட்டின் உயர்விற்கும் சிந்தனை வளர்ச்சிக்கும், சுய சார்பிற்கும் வழிகோலும் என தெளிவுறுத்துகிறார். பிறமொழிகளைத் தமிழர்கள்கற்றாலும் தமிழைத் தங்கள் உயிராகத் தமிழர்கள் கருதி அதனைப் போற்றல் வேண்டும் என்கிறார்.

Malar.sethu@gmail.com

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.