இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 9

This entry is part [part not set] of 39 in the series 20090709_Issue

நேசகுமார்


இஸ்லாத்துடன் நான் பயணித்த இந்த வருடங்களில் சிற்சில சமயங்களில் வித்தியாசமான அனுபவங்களும் ஏற்பட்டதுண்டு. வேப்பமர உச்சியிலே பூதமொன்றிருக்குது என்று போதிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட நிலையில், எப்போதோ ஒரு மின்சாரமற்ற நள்ளிரவில் அசையும் வேப்பமரம் நம் மனதை இப்போதும் அசைத்துப் பார்ப்பதுண்டு அல்லவா, அதைப் போன்ற சிற்சில சம்பவங்கள் என் வாழ்விலும் நிகழ்ந்ததுண்டு.

***

சிறு வயதில் எனக்கு அடிக்கடி உடல்நோவும், உபாதைகளும் வந்து கொண்டிருக்கும் ….. சிறு வயது என்ன, இப்போதும் பெரும் மாற்றமில்லை. அப்போது சிறியவனாக இருந்த நான் இப்போது வளர்ந்துவிட்டிருப்பதைப் போலவே நோய்நொடிகளும் வளர்ந்துவிட்டன. இன்று இவை வாழ்க்கை முறை நோய்களென பெயர் பெற்றிருக்கின்றன(Life Style Diseases). அப்போதும் அவை வாழ்க்கை முறை நோய்கள் தான், ஆனால் அதை அறிந்திருக்கவில்லை என்னை சுற்றியிருந்தவர்கள்.

அப்போது ஊரின் ஓரமாய் ஒரு தர்காஹ்வுக்கு கூட்டிச் சென்றார்கள். மிகவும் அழகான சிறிய தர்காஹ் அது. வெளிநாட்டிலிருந்து வரும் பக்தர்கள் கொண்டு வந்து பரிசளித்த பெரும் கண்ணாடிக் குடுவை விளக்குகள், கீழ்த்திசை நாடுகளில் இருந்து வந்த டைல்ஸ் (tiles) ஒட்டப்பட்டு அழகாக, சுத்தமாக பராமரிக்கப்பட்ட தர்காஹ் அது. தர்காவை ஒட்டி இஸ்லாமியர்கள் பெருவாரியாக இருக்கும் பகுதியும் இருந்தது. அழகிய வீடுகள், கலர் கலராய். அழகிய பெண்கள், அமைதியான தெருக்கள் என்று எனக்கு மிகவும் பிடித்த பகுதி அது. இத்தனையாண்டுகள் கழித்தும் ஊருக்குப் போகும்போது இரவு வேளைகளில் உணவருந்திவிட்டு நடக்கும்போது அப்பகுதிகளுக்குப் போகிறேன், பழைய நாட்களை மனதில் அசைபோட்டவாறு.

அந்த தர்காவுக்கு என்னை அழைத்துப் போய் மந்தரித்து போட்ட கருப்புக் கயிறு நெடுநாள் என்னிடமிருந்தது. எங்கள் வீட்டுக் குலதெய்வத்திற்கு கருப்பு பிடிக்காது என்ற நம்பிக்கை எங்கள் வீட்டில் இருந்தாலும், அந்த கயிறு மட்டும் ஏனோ யார் கண்ணையும் உறுத்தவில்லை.

***

இஸ்லாமிய விமர்சனத்தை நான் மேற்கொண்ட ஆரம்ப காலகட்டத்தில் அடுத்தடுத்து என் வாழ்வில் சில துயர சம்பவங்கள் நிகழ்ந்தன. பெரும் மன உளைச்சலும், வருத்தமும் மனதை அப்பிய நாட்கள். அதற்கிடையே என் எழுத்துக்களை விடாது தொடர்ந்து கொண்டிருந்தேன். ஏன் எழுதினேன் என்று தெரியாது. ஒரு வேண்டுகோளை நாகூர் ரூமிக்கு வைக்கப்போய், அதைத் தொடர்ந்து சுழலாக வாதம்-பிரதிவாதம் என்று எனது எழுத்துக்கள் தொடர்ந்தன. இன்றும் கூட நான் சுயமாய், எவருக்கும் எதிர்வினை செய்யாமல், பதிலளிக்காமல் எழுதியது குறைவே. இவற்றை நான் எழுதினேன் என்பதைவிட என் ஈகோ எழுதியது என்று சொல்ல வேண்டும். ஏனெனில், தொடர்ந்து எனக்கு மிரட்டல்கள் – வசவுகள் – எச்சரிக்கைகள் வந்தவண்ணம் இருந்த நாட்கள் அவை. ஒவ்வொரு முறை இது போன்று வரும்போதும் மனதில் உத்வேகம் பிறக்கும், இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று. நண்பர்கள் என்னிடம் நான் வஹி வந்தது போன்று எழுதிக்கொண்டிருப்பதாக புன்சிரிப்போடு கூறினார்கள். என் வீட்டாரோ இதை மிகுந்த திகிலோடு எதிர்கொண்டார்கள். வேண்டாத வேலை, நமக்கெதற்கு வம்பு, பெரிய இயக்கங்கள் கூட அமைதி காக்கிறார்களே என்று தினந்தோறும் பல்வேறு திசைகளில் இருந்தும் அறிவுரை மழைகள் பொழிந்து கொண்டிருந்தன. இன்னொரு புறமோ தனிப்பட்ட உடல்நலக் குறைகள், பிரச்சினைகள் என்றிருந்தன.

சிறு வயதிலிருந்து மதங்களைத் தாண்டிய, அனைத்து மதங்களிலும் வணங்கப்படும் கடவுள்கள் பற்றிய மரியாதை, கற்பனை, எதிர்பார்ப்பு ஆகியவற்றை ஊட்டி வளர்க்கப்படும் எந்த இந்துவையும் போலவே எனக்கும் போதிக்கப்பட்ட நிலையில், இந்த அனுபவங்கள் – கனவுகள் – மன அழுத்தங்களின் விளைவாக, ஒரு கட்டத்தில் எனக்கும் மனதில் இஸ்லாமியக் கடவுள் பற்றிய பயமேற்பட்டது. நண்பரும் சித்தபுருஷருமான ஒருவரை சந்தித்தேன். இத்தனை கோடி இஸ்லாமியர்கள் வணங்குகின்ற ஒன்றை நம்பிக்கைகளை புறந்தள்ளி ஆராய முற்படுவதும், விமர்சிப்பதும் எனக்கு இப்படியான நிகழ்வுகளைக் கொண்டு வருகின்றதா என்று ஐயத்துடனும், சஞ்சலத்துடனும் கேட்டேன்.

மனதின் ஆழத்திலிருக்கும் அமைதியில் ஆழ்ந்திருந்த நிலையில் அவர் மிகவும் அமைதியாக எனக்கு அறிவுரை சொன்னார்: “இப்படியான விமர்சனங்கள் ஒரு சக்தியை எனக்கெதிராகத் திருப்புமென்றால், தொடர்ந்து இதைவிட கோரமான செயல்களை மற்ற கடவுள்களின் மீது, ஆன்மீக அமைப்புகளின் மீது கட்டவிழ்த்துவிடும் மூர்க்கத்தனம் கொண்ட குழுமத்திற்கெதிராக எல்லா சக்திகளும் திரும்பும். ஆனால், வாழ்க்கையின் ஓட்டம் அப்படி இருப்பதில்லை. இது போன்ற எதிரும் புதிருமான சக்திகள் வாழ்க்கையின் இயல்போடு சம்பந்தப்பட்டவை. தொடர்ந்து எதோ ஒரு வகையில் ஒன்றையொன்று அழித்தும், அதன் மீது முற்றிலும் மாறுபட்ட வீரியமிக்க ஒரு கோட்பாட்டை, அக்கோட்பாட்டைக் கொண்ட ஒரு சமுதாயத்தை ஏற்படுத்திக் கொண்டும்தான் இயற்கை இருக்கிறது. ஆதலால் இது குறித்து கவலை கொள்ள வேண்டாம். அப்படி செயல்படும் சக்திகள், உமது நோக்கம் பொதுநலம் என்றால் இச்செயல்பாடுகளின் பலனாக உம்மை இச்சுழலில் இருந்து விடுபடும் நிலைக்கு கொண்டு செல்லும்”.

***

அச்சித்தரின் வாக்கா அல்லது அந்த நம்பிக்கை ஏற்படுத்திய விளைவா என்று தெரியவில்லை அதன் பின் எனக்கு கிடுகிடுவென்று முற்றிலும் எதிர்த்திசையில், ஆக்கபூர்வமான மாற்றங்களாக மாறிவிட்டன. இந்த சில ஆண்டுகள் எனது முன்னேற்றத்தை துரிதப்படுத்தி வாழ்வின் எல்லா முகங்களிலும் (in different facets of my life) என்னை மேன்மேலும் முன்னேற்றியுள்ளன.

இப்போது திரும்பிப் பார்க்கையில், கடவுள் – அமானுஷ்ய சக்திகள் எதுவும் இது போன்ற விஷயங்களில் ஈடுபாடு காட்டுவதில்லை இதெல்லாம் நமது மனதின் செயல்பாடு என்றே தோன்றுகிறது. கடவுள், பேய், பிசாசு, அமானுஷ்ய சக்தி, ஜின் என்றெல்லாம் நாம் நம்பி சோர்ந்தும் போகலாம், உயரவும் செய்யலாம். நமது நம்பிக்கைகள் மனதின் அடியாழத்திற்கு சென்று நம்மை முன்னேறவோ, பின்னடையவோ செய்கின்றன என்ற முடிவுக்கே நான் வந்திருக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் ஒரு நபி, அவதாரம், ரிஷி, மகான் தோன்றி ஒரு கூட்டத்திற்கு வழிகாட்டும்போது அக்கூட்டம் பெரும் வெற்றியடைவதையும், விரிந்து பரவுவதையும் சரித்திரத்தில் காணமுடிவது இதனால் தான். இந்திய வரலாறே ரிஷிகளின் தோற்றத்தில் தான் உருவானவை. இந்தியாவின் முதல் க்ஷத்திரிய குலம் என்று வரலாற்றில் காணப்படும் குருவம்சம் இப்படியே உண்டானது. ஒவ்வொரு முறையும் இவர்களின் நம்பிக்கையாளர்கள் தோன்றி ஒரு ராஜ்ஜியத்தை, சாம்ராஜ்ஜியத்தை ஏற்படுத்தியதை புராணங்களில், நாட்டார் கதைகளில், வரலாற்றில் காணமுடிகிறது. இதற்கெல்லாம் பின்னே கடவுளின் கரம் இல்லை. மனிதர்களின் நம்பிக்கை, அந்த நம்பிக்கையின் விளைவாக ஏற்படும் முனைப்பு, அந்த முனைப்பின் காரணமாக வெளிப்படும் அசாத்திய உழைப்பு, முயற்சி இருக்கிறது.

நம்பிக்கையாளர்கள் சுவனத்தாலோ, வீடு பேறாலோ, கடவுளின் திருவடியாலோ, நற்செயல்களை தாம் செய்கிறோம் என்ற எண்ணத்தினாலோ பெரும் முனைப்பை அடைகிறார்கள். மனதின் அத்தனை சக்திகளும் தூண்டப்பட்டு ஒரே நோக்கத்தோடு செயல்படுகிறார்கள். அப்படி தூண்டப்படும் ஆழ்மனதின் சக்திகள் அந்த நோக்கத்திற்கு மட்டும் உதவுவதில்லை, எவ்விஷயத்தில் கவனத்தை செலுத்தினாலும் பலன்களை கொண்டு வருகின்றன.

***

இந்த ஆய்வுகளின் காரணமாக வாழ்வே இஸ்லாமாக மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டு எனது குடும்பத்தாரிடமிருந்து, நண்பர்களிடமிருந்து, இணைய நண்பர்களிடமிருந்து உண்டு.

ஆன்மீகப்பாதையில் இந்திய மரபில் ‘ஏகாக்கிர சிந்தனை’ என்ற ஒரு நிலை உண்டு. ஒரு கடவுளின் மீது அல்லது தத்துவத்தின் மீது அல்லது கர்மயோகம் போன்ற மரபுகளில் செயல்களின் மீது பிடிப்பு ஏற்படும் நிலையில் மனதின் எல்லா தளங்களையும் ஒரே விஷயம் ஆக்கிரமித்து, மனமே அதாகும். பின்பு அந்த ஒன்றும் அழிந்துபோய் அதனூடே அந்த மனமும் இல்லாது போகும். இது மனதிற்கு அப்பால் நமது சுயமாக விளங்கும் நிலையை (கடவுள் என்ற பெயரும் இந்நிலைக்கு உண்டு) நமது இயல்பாக ஆக்கும்.

கிட்டத்தட்ட இந்த ஏகாக்கிர நிலைக்கு என் மனம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். கனவுகளிலும், சிந்தனைகளிலும், பேச்சிலும், தினசரி அல்லது நூலை படிப்பதிலும், இணைய உலாவல்களிலும் இஸ்லாமே முழுமையாய் மனதை ஆக்கிரமித்துவிட்டது இந்த ஐந்தாண்டுகளில். இது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை, அது நல்ல நோக்கம் என்ற எண்ணத்தால் பெருமிதத்தை, சுயமரியாதையை அளித்துள்ளது. நான் முன்பு செய்துவந்த தியானம் மற்றபிற ஆன்மீக முயற்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விட்டேன், முயற்சி செய்து அல்ல என்னையறியாமலேயே நிகழ்ந்துவிட்டது இது. சித்தபுருஷரிடம் கேட்டபோது, இதுவே ஆன்மீகம் என்றார். இதையெல்லாம் எழுதும்போது நான் ஒரு பெரும் ஆன்மீகவாதியாக ஆகிவிட்டதாக கருதுவதாகவோ சொல்லுவதாகவோ எண்ணிவிட வேண்டாம். இன்றும் பக்கத்து சீட்டு பாவையால் சலனமடைபவனாக (நன்றி : இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பான பட்டுக்கோட்டை பிரபாகர் – தற்போது பகோபி காவி தரிக்காத சந்நியாசியாகிவிட்டார் என்று அறிகிறேன்), அடுத்தாத்து அம்புஜங்களைப் பற்றிய சுவனக்கனவுகளில் அலைபவனாக, வக்கிரமும், துர்க்குணங்களும் நிரம்பியவனாகத்தான் இருக்கின்றேன். ஆனால், ஒவ்வொரு தருணமும் இஸ்லாமிய ஒப்பிடல் தோன்றிமறைகிறது உள்ளத்துள்ளே. அதனால் தான் முன்பு எழுதியிருந்தேன் வாழ்வே இஸ்லாத்தின் பல படிநிலைகளாகவே தோன்றுகிறது என்று. எனது எல்லா குறைகளையும் மீறி வாழ்வில் நிறைவைத்தரும் எதாவது ஒரு விஷயமுண்டென்றால் அது இந்த இஸ்லாமிய விமர்சனங்கள் என்றே தோன்றுகிறது.

***

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் அது வீரியம் கொண்டிருந்ததற்கும் கிடுகிடுவென விரிந்து பரவியதற்கும் மேலே கண்டது மட்டும் முழுக்காரணமல்ல. மற்ற சமூகங்கள் புரிந்து சுதாரிக்குமுன்னரே பெரும் தாக்குதல்களுக்கு உள்ளாயின. புரிந்து, சுதாரித்து எழுந்து நிற்க முயன்றவர்களிடம் இந்த பரவல் நின்றுவிட்டது. ஸ்பெயின் போன்ற பிரதேசங்களில் திரும்பியும் சென்றது.

அல்குவைதாவின் பிரசங்கங்களில் மீண்டும் மீண்டும் ஆண்டலூசியா (இன்றைய ஸ்பெயினில் ஒரு பகுதி) குறிப்பிடப்படுவதைக் காணலாம். ஆண்டலூசியாவிலிருந்து இந்தியாவரை இழந்த பிரதேசங்களாக இஸ்லாமிஸ்டுகள் கருதி அதை மீட்டெடுக்க பழைய காலத்திற்கு திரும்பிச் சென்று அன்றிருந்த அதே நம்பிக்கையை தமக்குள் நிலை நிறுத்தி ஜிஹாத் புரிந்து மீட்கவேண்டும் என்று கருதுகின்றனர். இஸ்லாமிய நிலப்பரப்பு சுருங்கியதற்கு காரணம் அல்லாஹ் கடவுளின் கட்டளைகளை இன்றைய சமுதாயம் முழுமையாக பின்பற்றாததுதான் என்கின்றனர் அல்குவைதா, தாலிபான், லஷ்கரே தொய்பா மற்றும் தெருவுக்கு தெரு தோன்றியுள்ள ஏகத்துவ – தாவா மையங்கள்.

ஆனால், இன்று புற சமூகங்கள் விழித்துக் கொண்டுவிட்டன. இஸ்லாமிய பிரச்சாரங்கள், திட்டமிடல்கள் பற்றிய விழிப்புணர்வு எங்கும் பரவிவிட்டது. காஷ்மீர் இந்தியாவிற்குள் தாம் ஏற்படுத்தப்போகும் ஷரீயத்து ராஜ்ஜியத்தின் நுழைவு வாயில்தான் என்று லஷ்கரே தொய்பா பேசுவதை சின்னாளப்பட்டியில் தினமலர் படிப்பவர் உணரமுடிகிறது. பெஸ்லனில் நடப்பவை தெருமுனை இணைய உலாவகத்தில் தெரிகின்றது.

இன்றைய உலகமும் ஒரு நம்பிக்கையாளர்களின் உலகம் தான். இந்த நம்பிக்கைகள் மனித உரிமை, சமத்துவம், சுதந்திரம், பெண்ணுரிமை, மதமாச்சர்யங்கள் கடந்த நீதிமுறைகள் ஆகியவற்றின் மீது கட்டப்பட்டிருக்கின்றன. அன்றைய நம்பிக்கையாளர்களின் உத்வேகம் இன்றைய நவீன இளைஞர்களுக்கும் இருக்கின்றது.அதனாலேயே இன்று இந்த நம்பிக்கையாளர்களின் நிலப்பரப்பு விரிந்து கொண்டே வருகிறது. தொடர்ந்து இஸ்லாமிய நிலப்பரப்பு சுருங்கிவருவதற்கும் இதுவே காரணம். இஸ்லாமிய சமுதாயம் மேன்மையும், உன்னதமும் அடைய ஒரே வழி இந்த நாகரிக உலகின் நம்பிக்கைகளை (மனித உரிமை, சமத்துவம், சுதந்திரம், பெண்ணுரிமை, மதமாச்சர்யங்கள் கடந்த நீதிமுறைகள் இன்னபிற) ஏற்பதுதான்.

சச்சார் கமிட்டிகள் சொல்ல மறுக்கும் உண்மை இது. இஸ்லாமிய சமூகத்தின் மீது உண்மையிலேயே நல்லெண்ணம் கொண்ட இயக்கங்களும், தனிமனிதர்களும் இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இஸ்லாமிய சமூகத்தின் பிற்போக்கு வாதத்தை, அடிப்படைவாதிகளை ஆதரித்து அச்சமுதாயத்தை பின்னுக்கு கொண்டு செல்வதையே அவர்களின் பால் அக்கறைகொண்டவர்கள் போல பாவனை செய்யும் அரசியல் இயக்கங்களும், அறிவுஜீவிகளும், மதச்சார்பின்மை வாதிகளும் செய்கின்றனர்.

இவர்கள் செய்ய மறுப்பதை நான் சிறிதாவது செய்கிறேன் என்ற ஆத்ம சந்தோஷம் எனக்கும் எனது நண்பர்களுக்கும் இருக்கிறது. பலவித கவனக்கவர்தல்களுக்கிடையே எமது நேரத்தை, எமது சக்தியை, எமது சிந்தனையை, எமது வளங்களை இப்பணிக்கென்று செலவிட்டது வாழ்க்கையை நிறைவுள்ளதாக ஆக்கியுள்ளது என்றே நினைக்கின்றேன். இந்த வாய்ப்பை நல்கியதற்காகவாவது நான் இந்த இஸ்லாமிய ஆய்வுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

– நேசகுமார்

Series Navigation

நேச குமார்

நேச குமார்

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 8

This entry is part [part not set] of 28 in the series 20090702_Issue

நேசகுமார்


வஹ்ஹாபி சொன்னதில் சில உண்மைகள், சில தவறுகள், பல குழப்பங்கள் உள்ளன. அதை சுட்டிக் காட்டுவது நல்லது என்று நினைக்கின்றேன்.

1. அடிமைப் பெண்கள் விஷயமாக சுன்னாஹ்(முஹம்மதின் நடத்தை) எப்படி இருந்தது என்று ரஹிக்குல் மக்தூம் விவரிக்கின்றது(முஹம்மதின் வாழ்க்கையை சொல்லும், சவுதி அரசின் அங்கீகாரம் பெற்ற நூல் இது), இவ்வாறு
குறிப்பிடுகிறது:

A few elements of the enemy embraced Islam and their lives, wealth and children were spared. As for the spoils of the war, the Prophet (Peace be upon him) divided them, after putting a fifth aside, in accordance with Allâh’s injunctions. Three shares went to the horseman and one to the infantry fighter. Women captives were sent to Najd to be bartered with horses and weaponry. For himself, the Prophet (Peace be upon him) selected Rehana bint Amr bin Khanaqah, manumitted and married her in the year 6 Hijri. She died shortly after the farewell pilgrimage and was buried in Al-Baqi..(பக்கம் 145, INVADING BANU QURAIZA, Ar-Raheeq Al-Makhtum )

2. இன்று ஜிஹாத் நடைபெறும் இடங்களில் எல்லாம் இந்த பெண்களை ஏலத்தில் விடுதல் நிகழ்கிறது. சூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய இடங்களில் இருக்கும் அடிமைச்சந்தைகளை இணையத்தில் தேடினால் காணலாம். ஏனெனில், இது சுன்னாஹ்! இது சம்பந்தமான ஒரு நல்ல கட்டுரையை சுட்டிக் காட்ட விழைகின்றேன்:

http://frontpagemag.com/readArticle.aspx?ARTID=28953

இந்த கட்டுரை, இதற்குப் பின்னால் இருக்கும் மதக்காரணங்களை எளிதாக விளக்குகின்றது.

3. மிகவும் நாகரிகமாக, வஹ்ஹாபி உரிமையாளன் என்று எழுதுகிறார், நமது அங்கீகாரத்திற்காக. ஆனால், அடிமைகளின் உரிமையாளர் நடந்து கொள்வதுபோல ஒரு கணவன் நடந்து கொள்வாரா, அதை இஸ்லாம் அனுமதிக்கின்றதா என்று அவர் தாம் தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில், அடிமைகளின் உரிமையாளர் அவர்களிடம் உடலுறவு கொள்வதற்கு அனுமதி கோரத்தேவையில்லை, உலகிற்கு அந்த உறவை அறிவிக்கவும் தேவையில்லை என்பதே சுன்னாஹ்.

4. சபிய்யா விஷயத்தில், என்ன நிகழ்ந்தது என்பதை சொல்லும் ஒரு ஹதீதை வஹ்ஹாபியின் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன்.

Volume 7, Book 62, Number 89:
Narrated Anas:
The Prophet stayed for three days at a place between Khaibar and Medina, and there he consummated his marriage with Safiyya bint Huyay. I invited the Muslims to a banquet which included neither meat nor bread. The Prophet ordered for the leather dining sheets to be spread, and then dates, dried yogurt and butter were provided over it, and that was the Walima (banquet) of the Prophet. The Muslims asked whether Safiyya would be considered as his wife or as a slave girl of what his right hands possessed.

முஹம்மது சஃபியாவை அடிமையாக வைத்துக் கொள்கிறாரா அல்லது மனைவி எனும் அந்தஸ்தை கொடுக்கிறாரா என்பது அங்கே இருந்த யாருக்கும் தெரியாது. சஃபியாவை பர்தா போட்டு மூடியதைப் பார்த்தவுடன் தான் சஃபியா மனைவி எனும் அந்தஸ்தைப் பெறுவது கூட இருந்தவர்களுக்கு தெரிகிறது.

ஒரு பெண்ணின் கணவனை கொலை செய்துவிட்டு, அப்பெண்ணின் தந்தையை சித்தரவதை செய்துவிட்டு அப்பெண்ணை அடிமையாக படுக்கைக்கு அழைத்துச் சென்றதை ‘பூ’வின் குணம், அது உலகிற்கு அழகிய எடுத்துக் காட்டு, அது இன்றும் முஸ்லீம்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுன்னாஹ் என்று சொல்வது எவ்வளவு கொடூரமானது?

5. வஹ்ஹாபி செய்துள்ள இன்னொரு விஷயம், வெறுமனே படுக்கைக்கு எடுத்துச் சென்றதை ‘மணம்’ என்று எழுதி, அதை திருமணத்துடன் சேர்த்து குழப்பி வாசகர்களை குழப்புவது. முஹம்மது முறையாக சஃபியாவை (வஹ்ஹாபி சொல்லியிருப்பது போல ஒரு இஸ்லாமிய நிக்காஹ்வுக்கான விதிமுறைகளுடன்) மணக்கவில்லை. அதுபோலவே ஜைனப், மரியம் மற்றும் பல பெண்களையும் மணம் புரியவில்லை.

ஜைனப் விஷயத்தில், அந்த திருமணம் வானுலகில் நடைபெற்றுவிட்டது என்று குரான் வசனம் இறங்கிவிட்டது. மரியம் விஷயத்தில் இன்னும் இஸ்லாமிய அறிஞர்களிடையே கூட ஒருமித்த கருத்து இல்லை, அவர் மனைவியா அடிமையா, வேலைக்காரப் பெண்ணா என்று. ஆனால், அந்த மரியத்துடன் முஹம்மது உறவு கொண்டது ஹதீதில் பதிவாகி இருக்கிறது. அப்படி உடலுறவு கொண்டது இன்னொரு மனைவி ஹஃப்சாவின் அறையில். அந்த உறவுக்கு பிறந்த குழந்தையின் காரணமாகவே மரியத்துக்கு மரியாதை தரப்பட்டது. அது கூட கலீஃபா உமர் மரியத்தின் மரணத்திற்கு மரியாதை தந்தார், அதனாலேயே கொஞ்சம் மரியாதை.

இல்லையென்றால், இஸ்லாம் காட்டிய வழி இதுவே, அடிமைகளுக்கும் பணியாளர்களுக்கும் வித்தியாசம் கிடையாது. அவர்களுடன் வல்லுறவில் ஈடுபடலாம், அவர்கள் பொருட்களைப் போன்றவர்கள். இஸ்லாம் காட்டிய வழி என்று சொல்லும்போது நான் வஹ்ஹாபியின் மொழி நடையைப் பின்பற்றுகிறேன் அவ்வளவே. காரணம், இஸ்லாம் என்று ஒன்றுமில்லை. முஹம்மது காட்டிய வழி. முஹம்மது செய்த செயல்கள் எல்லாம் மதமாக, கடவுளின் சட்டமாக, கடவுள் உலகிற்கு எடுத்துக்காட்டிய நடத்தைகளாக இவர்களால் கருதப்படுகின்றது.

முஹம்மது மட்டுமல்ல, சரியாக வழிநடத்தப்பட்ட கலீஃபாக்கள் என்ற கருத்தியலின் காரணமாக முஹம்மதுவுக்குப் பின்பு வந்த நான்கு கலீஃபாக்களும் செய்ததெல்லாம் கடவுள் ஆமோதித்த செயல்களாகின்றன. இதில் ஷியாக்கள் சில கலீஃபாக்களை ஒப்புக்கொள்ளவில்லை என்பதால், அவர்களது இஸ்லாம் வேறு மாதிரி இருக்கிறது, சுன்னிகளின் இஸ்லாம் வேறு மாதிரி இருக்கின்றது.

உதாரணமாக, வஹ்ஹாபி சொன்ன அக்காளும் தங்கையுமாக அடிமைகளை பிடித்து வைத்து புணரமுடியாது என்று சொன்ன ‘இஸ்லாமிய கோட்பாடு’ முஹம்மது மரியத்தின் சகோதரியை இன்னொரு தோழருக்கு அனுப்பி வைத்ததால் ஏற்பட்டது. தாயையும், மகளையும் சேர்த்து பிடித்து வைத்து புணர முடியாது என்ற சொன்ன ‘கடவுளின் வழிகாட்டுதல்’ கலீஃபா உமரின் காலத்தில் ஏற்பட்டது.

6. முஹம்மது செய்தது தவறா?

முஹம்மது செய்தது தவறோ சரியோ, இன்றைக்கு அவர் செய்ததெல்லாம் இஸ்லாம் என்று இவர்கள் சொல்வதால், இன்றைய சூழலை கருத்தில் கொண்டே முஹம்மதின் நடத்தையை எடை போட வேண்டும். இன்று ஒரு போலிச்சாமியார் இது போன்று நடந்து கொண்டால் என்ன ஆகும்? அதை எப்படி பிறர் சகித்துக் கொள்வார்கள்? அந்த நிலைப்பாட்டையே நாகரிக சமுதாயம் இந்த தாலிபான்களை/ஜிஹாதிகளை நோக்கி எடுக்கிறது.

முஹம்மது அரசர் கிடையாது. அவர் போர் புரியவில்லை, அவர் ஜிஹாது செய்தார். அந்த ஜிஹாதில் அந்தக் கால போர் தர்மங்கள் எதுவும் கடைப்பிடிக்கப் படவில்லை. குரானின் போதனைகள் அப்போதைய தர்மங்களை நிராகரித்து சூழ்ச்சியின் மூலமாக அப்பாவி பாகன் அரபிகளை அடிமைப் படுத்தியது. எனவே போர் தர்மம், அரசர் இப்படித்தான் நடந்து கொள்வார் என்றெல்லாம் சொல்லி, என்றைக்குமான கடவுளின் சட்டமாக இன்று வஹ்ஹாபிகள் முன்வைக்கும் இந்த அடிப்படைவாத மதக்கோட்பாடுகளை நியாயப்படுத்தக் கூடாது.

நேசகுமார்

Series Navigation

நேச குமார்

நேச குமார்

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 7

This entry is part [part not set] of 37 in the series 20090625_Issue

நேசகுமார்



சகோதரர் வஹ்ஹாபி அவர்களுக்கு, நண்பர் வெங்கட் சாமிநாதன் அளித்திருந்த விளக்கங்களை கண்டேன். மிகவும் அழகாக, அவருக்கே உரிய nostalgical நடையில் எழுதியுள்ளார். இதை தமிழில் எப்படி சொல்வது என்று சரியாகத் தெரியவில்லை. இனிய பழங்கனவு நடை என்று சொல்லலாமென்று நினைக்கிறேன். (அப்படி சொன்னால், அது ஆங்கில வார்த்தையை படிக்கும்போது எளிதாக புரிந்து கொள்வது போல புரிந்து கொள்ளப்படுமா என்பது தெரியாததால், இரண்டையும் எழுதுகிறேன் ).

மிகவும் அழகாக, நான் பல கட்டுரைகளில் திரும்பத் திரும்ப சொல்லும் விஷயத்தை வெ.சாவும் சொல்கிறார்:

//ஒரு காலத்தில் சதி, உடன் கட்டை ஏறுதல் எல்லாம் ஹிந்து சமுதாயத்தில் ஆங்காங்கே சில இடங்களில் இருந்தன தான். அப்போதும் அக்கொடுமைகளுக்கெல்லாம் சாஸ்திர நியாயம் சொன்னார்கள். இக்கொடுமைகளை எதிர்த்தவர்களை ஹிந்து விரோதிகள் என, மிலேச்சர்கள் என குற்றம் சாட்டினர். எந்த சாஸ்திரத்தில் எழுதியிருக்கிறது? என்று ராஜா ராம் மோஹன் ராய் கேட்டார். பதில் இல்லை. அது ஒரு கால கட்டம். அதைத் தாண்டி ஹிந்து சமுதாயம் வந்து விட்டது. யூத கிறித்துவ சமுதாயம் பெண்ணுக்கு கல்லெறிந்து சாவு என்று தண்டனை என்று கட்டத்தைத் தாண்டி வந்துவிட்டது போல. இன்று இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் மத, சாஸ்திர நியாயம் சொன்னால் சிரிப்பார்கள்.//

***

இதுதான் ஏனைய சமுதாயங்களுக்கும் இஸ்லாமிய சமுதாயத்திற்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம். மற்றவர்கள் மதத்திலிருந்து, ஜாதியிலிருந்து, குல வழக்கங்களிலிருந்து, பாரம்பரியம் என்ற பெயரில் நிகழ்ந்தவைகளிலிருந்து தம்மை விலக்கி, தள்ளி நின்று பார்க்கிறார்கள். நாகரிகத்தை, முன்னேற்றத்தை, புதிய சமுதாய வழக்குகளை எடைபோட்டு ஏற்கத்தோன்றினால் ஏற்கின்றார்கள். நிராகரிக்க வேண்டும் என்று அவரவர் மனதிற்கு தோன்றினால் நிராகரித்து முன்னேறுகிறார்கள்.

ஆனால், இஸ்லாமிய சமுதாயம் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பிருந்த காலத்தை பொற்காலமாக கணிக்கிறது. அப்போது நிகழ்ந்தவை சரிதான், நியாயமானதுதான் என்று வாதிடுகிறது. அக்காலத்தை மீண்டும் இன்று கொண்டுவர முயல்கிறது.

தாலிபான், அடிப்படைவாத இஸ்லாம் மீட்சி பெறும் பாகிஸ்தானியப் பகுதிகளில் இருக்கும் நிலவரம் பற்றிய பிபிசி குறும்படத்தை சில மாதங்களுக்கு முன்பு பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு சிறு பெண் நான்காம் வகுப்புக்கு மேலே பெண்கள் பள்ளிக்கு செல்லக் கூடாது என்று தாலிபான் மதக்கட்டளை பிறப்பித்திருப்பதாக (ஃபத்வா) சொன்னது. அதைப் பற்றி அந்த விவரணப்படத்தில் விரிவாக சொல்லவில்லை. ஆனால், பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அதன் அடிப்படை விளங்கியது. அது இதுதான் – முஹம்மதுவின் இளம் மனைவி ஆயிஷாவோடு அவர் வாழ்க்கை நடத்தத் துவங்கியது ஆயிஷாவின் ஒன்பதாவது வயதில் என்ற ஒரு கருத்து இஸ்லாமிய அறிஞர்களிடையே/முல்லாக்களிடையே உண்டு. ஆறு வயது, ஏழு வயது என்றெல்லாம் கருத்து இருந்தாலும், அதிகபட்சம் அதை நீட்டிக்க ஏதுவாக இருக்கும் ஹதீது இந்த ஒன்பது வயதில் இல்லற வாழ்க்கை துவங்கியது என்ற ஹதீதுதான். எனவே இதை தாலிபான்கள் பிடித்துக்கொண்டு ஐந்து வயதில் பள்ளியில் சேர்ந்தால், ஒன்பது வயதாகும்போது நான்காம் வகுப்பிற்கு ஒரு பெண் குழந்தை வரும். ஆகவே, ஒன்பது வயதில் ஒரு பெண்(குழந்தை) இல்லற வாழ்க்கையில் ஈடுபட குறைந்த வயது என்பது கடவுளின் கட்டளை, அதனால் ஒன்பது வயதிற்கு மேலும் ஒரு பெண்(குழந்தை) ஆண்களை பார்த்தால், பேசினால் அது பாலியல் சீர்கேட்டிற்கு வழிகோலும், கடவுள் அதைக் கண்டு கோபப்படுவார், எனவே தாம் கடவுளின் வழிகாட்டுதலை, சத்திய மார்க்கத்தை, நேர் வழியை, மெய் வழியை உலகில் நிலைநாட்ட வேண்டுமென்றால், நான்காவது வகுப்பிற்கு மேல் இருக்கும் பெண்களின் கல்விநிலையங்களை எல்லாம் குண்டு வைத்து தகர்க்க வேண்டும், எரித்துவிட வேண்டும், அது மெக்காவுக்கு மேலே ஏழு வானங்களுக்கு அப்பால் அர்ஷில் அமர்ந்து உலகத்தை கண் கொத்திப்பாம்பாக பார்த்துக் கொண்டிருக்கும் கடவுளின் உள்ளத்தை குளிரச்செய்து அவர் தமக்கு ஹூரிகளை, கை படாத கன்னிகளை தர ஏது செய்யும் என்று கருதியிருக்கின்றனர்.

ஆனால், இது சில மாதங்களிலேயே போய், எல்லா பெண்கள் பள்ளிக்கூடங்களையும் அவர்கள் அழிக்கும்படி ஆனது. மதவாதம் என்பது இப்படித்தான் செயல்படும். அது ஒரு முடிவில்லா கொடுஞ்சுழல். எல்லோரையும் மேலும் மேலும் கீழே கொண்டு போய்க்கொண்டே இருக்கும். அதுதான் இஸ்லாமிய அடிப்படைவாத விஷயத்தில் நிகழ்கிறது. முதலில் கேரளாவில் இஸ்லாமியப் பெண்கள் சுதந்திரமாக உடையணிந்துவந்தார்கள். பின்பு, அந்நிய ஆடவர்கள் வந்தால் பேருக்கு தலையில் துணியை இழுத்துவிட்டுக் கொள்வார்கள். அதன் பின்னர் முழு உடலை மறைக்கும் படி துணியை சுற்றிக்கொண்டார்கள்(இப்போதும் கேரளாவில் செட்டிலான பல தமிழ் இராவுத்தர் வீட்டு பெண்கள் இதைக் கடைப்பிடிக்கின்றனர், மதத்தின் பல அங்கங்களிலும் அங்கே இது நீள்கிறது. இது போன்ற விஷயங்கள் காரணமாகவே மாப்ளாக்கள் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மலையாள முஸ்லீம்களை தாழ்வாகப் பார்ப்பதும் உண்டு). பின்பு புர்கா வந்தது. இப்போது தாலிபான் புர்காக்களை எங்கும் பார்க்க முடிகிறது. அடுத்ததாக, முழுவதும் மூடியிருந்தாலும், சவுதியில் இருப்பது போல ஆண் துணையின்றி தனியாக முஸ்லீம் பெண்கள் வரக்கூடாது என்ற மதக்கட்டளை கூட வரலாம்.

***

இங்கே ஒரு முக்கியமான, ஆனால், இந்த திண்ணை விவாதங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயத்தை குறிப்பிட வேண்டும். வெங்கட் சாமிநாதன் என்ற பிறப்பால் பிராம்மண ஜாதியைச் சேர்ந்தவர்கள் தற்போது மதச்சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் துறப்பதையும் நிந்திப்பதையும் பார்க்க முடிகிறது. ஆனால், தமிழ் சமுதாயத்தில் பிராம்மண வெறுப்பு என்பது எப்போதோ நிகழ்ந்த நிகழ்வுகளை, எப்போதோ நிலவிய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் மீண்டும் ஒரு குறிப்பிட்ட குழுவை குற்றம் சாட்டுவதிலும், நிந்திப்பதிலும், இகழ்வதிலும், வெறுப்பை பரப்புவதிலுமே இருக்கின்றது.

அதே விஷயங்களை இன்று செய்யும், அதைவிட வன்மையாக செய்யும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை எந்த திராவிட இயக்கத்தவரும் கண்டிப்பதில்லை, நிந்திப்பதில்லை. இவ்வளவு ஏன், அப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வது கூட இல்லை.

***

பிராம்மண வெறுப்பு என்பது, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆபிரகாமிய கருத்தியல். ஆபிரகாமிய மதங்களில் எப்போதும் ஒரு விஷயத்தை கவனிக்கலாம். அவை தன்னையொத்த கருத்தியல்களையே உடனடியாக அழிக்கப்பட வேண்டியவையாக கருதும். உதாரணமாக, பாகிஸ்தானை எடுத்துக் கொண்டால் இந்துக்களை விட அங்கிருக்கும் இஸ்லாமியர்கள் அதிகம் வெறுப்பது அஹமதியா முஸ்லீம்களை.

உலக அளவில் எடுத்துக் கொண்டால், சிலை வழிபாடு செய்யும் இந்துக்களை விட அதிகம் வெறுப்பு பரப்பப் படுவது யூதர்களுக்கு எதிராகத்தான். இத்தனைக்கும் யூதர்கள் ஏகத்துவத்தை ஏற்பவர்கள், அந்தக் கோட்பாடு புறப்பட்டதே யூதர்களிடமிருந்துதான். ஜிஹாத், பிராம்மண வெறுப்பு ஆகியவற்றின் ஆதிமூலம் யூத சமுதாயம் தான்.

ஆபிரகாமியக் கருத்தியலை ஒத்ததுதான் பிராம்மணீயம். இங்கே நான் இதைக் குறிப்பிடும்போது ஒரு விளக்கத்தை அளிக்க வேண்டும். திராவிட இயக்கம் பிராம்மணீயத்தை நிந்திப்பதாக சொல்லி பிராம்மணர்களை நிந்தித்தது. ஆனால், நான் பிராம்மணீயத்தை நிந்திக்கவும் இல்லை, அதனுடன் பிராம்மண ஜாதியில் வந்தவர்களை சேர்த்துப்பார்த்து நிந்திக்கவும் இல்லை. பிராம்மண வெறுப்பை நிந்திக்கும்போது, அதனுடன் சேர்த்து பிராம்மணீயத்தை ஆதரிக்கவோ, பாதுகாக்கவோ விரும்பவில்லை. இதே விஷயம் இஸ்லாத்துக்கும் பொருந்தும். இஸ்லாமிய அடிப்படைவாதத்தை விமர்சிப்பது வேறு, இஸ்லாமியர்களை வெறுப்பது வேறு. இந்த வித்தியாசத்தை நான் ஆரம்பத்திலிருந்தே கடைப்பிடித்து வருகிறேன். அதனால் தான் எனது எழுத்துக்களில், பேச்சில், வாதங்களில் எப்போதும் அடிப்படைவாத இஸ்லாத்தை குறிப்பிடுகிறேன் அல்லது பொதுவான இஸ்லாமியர்களிடமிருந்து அடிப்படைவாதிகளை பிரித்துக்காண்பதற்கு இஸ்லாமிஸ்டுகள் என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகிறேன். தனிப்பட்ட முறையில் நான் மிகவும் அன்பு செலுத்தும், நட்பு பாராட்டும் இஸ்லாமிய நண்பர்கள், தோழிகள் உள்ளனர்.

***

ஆபிரகாமியத்துக்கு தனது இனம் இந்த பிராம்மண இனவாதம் – பிராம்மணீயம் என்பது அடியாழத்தில் புரிந்திருக்கிறது என்றே கருதுகிறேன். அதனால் தான் அது இந்தியாவுக்குள் நுழைந்தவுடன் தனது பிரதான எதிரியாக பிராம்மணர்களைக் கண்டது. யூத எழுச்சியிலும், கிறிஸ்துவ பரவலிலும் இதை காணலாம். முதலில் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டது பாகன்களிடையே இருந்த பிராம்மண(அதாவது இந்திய பிராம்மண ஜாதிகளைப் போன்ற) ஜாதியினர்தான்.

இதைப் புரியாமலேயே மூளைச்சலவை செய்து ஏற்றோம் நாம். விளைவு, அப்பட்டமான வெறுப்பு பிராம்மணர்கள் மீது பரப்பப் பட்டது. இதன் வீச்சு இல்லாத பிராம்மணரல்லாதோரை நான் கண்டதில்லை. நான் உட்பட அவ்வப்போது இதற்கு பலியானதும் உண்டு. ஒரு பெரிய மீம் ஆக, சிந்திக்காமல் நாம் உணர்வு நிலையில் இருந்து செயல்படும் கருத்தியலாக இந்த பிராம்மண வெறுப்பு தமிழ்நாட்டில் உருவாக்கப் பட்டுள்ளது.

இஸ்லாமிய ஆய்வை மேற்கொண்ட ஒரு கட்டத்தில் நான் இந்த பிராம்மண வெறுப்பு, அதன் அடிப்படைகள் ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தின் மீதும் இஸ்லாமிய சமூகத்தினுள் நிலவுவதைக் கண்டேன். நம்மிடையே பிராம்மணர்கள் பற்றிய பிரச்சாரக்கற்பனைகள் பல உண்டு. பிராம்மணர்கள் கோழைகள் என்ற கற்பிதம் உண்டு. இது ஒரு பெரிய புரட்டு என்பதும் அதை விளக்க தனியே கட்டுரை எழுத வேண்டும் என்பதும் தனி விஷயம் என்றாலும், அதே கற்பிதம் இந்து சமுதாயம் பற்றி இஸ்லாமிய சமூகத்தில் நிலவுவதைக் கண்டேன். அடிபணிந்தவர்கள் இஸ்லாமியர்கள் ஆனார்கள், ஆயிரமாண்டுகளாக அடிபணியாதவர்களே, சுதந்திர விரும்பிகளே இந்துக்களாக இன்றும் நிற்கின்றார்கள் என்பதை எந்த இஸ்லாமியரும் கவனிப்பது கிடையாது.

அதே போல, பிராம்மணன் என்றால் சூழ்ச்சி செய்பவன் என்ற கருத்தாக்கம் நம்மிடையே உண்டு. பிராம்மணன் என்பவன் நயவஞ்சகன், எதிர்த்து போரிடாமல் முதுகில் குத்துபவன், ஒழுக்கமற்றவன், வாழ்க்கை நடத்துவதற்காக எதையும் செய்யத் தயங்காதவன் என்ற வெறுப்பியல் கருத்துகள் தமிழ் சமுதாயத்தில் திராவிட இயக்கங்களால் பரப்பப்பட்டதைப் போலவே, இந்துக்களைப் பற்றி இஸ்லாமியரிடையே அதே கருத்துக்கள், அதே வார்த்தைகள், வசவுகள் நிலவுவதைக் கண்டேன். இது ஆரம்பத்தில் பெரிய அதிர்ச்சியாகக் கூட இருந்தது.தமிழ் இஸ்லாமியர்களிடையே புழக்கத்தில் உள்ள ‘மாவு’ என்ற தமிழரைக் குறிக்கும் வசைச் சொல்கூட பெரும்பாலும் கோழை என்ற அர்த்தத்தில் பொதுவாக பயன்படுத்தப் படுகிறது. இப்போது வஹ்ஹாபிசம் பரவப்பரவவே எங்கும் காபிர் என்ற வார்த்தை தமிழரைக் குறிக்க பயன்படுத்தப் படுகிறது.

***

இஸ்லாமியர்களிடையே காபிர்களுக்கு எதிரான இந்த வெறுப்பியல் தங்களது வித்தியாசங்களை மறைத்துக்கொள்ளவும், அதை மீறிய ஒரு சகோதரத்துவத்தை கொண்டு வரவும் பயன்படுவதைப் போலவே, தமிழ் சமூகத்தில் நம்மிடையே உள்ள பிரச்சினைகளை, வித்தியாசங்களை மூடி மறைக்க, கண்டும் காணதது போல் மூளைச்சலவை செய்ய பிராம்மண வெறுப்பு பயன்படுகிறது.

இஸ்லாமிய சமூகத்தில் மேல் வர்க்கம் இதை தமக்கு வசதியாக பயன்படுத்திக் கொள்வதைப் போலவே, நமது இடைப்பட்ட ஜாதிகள் (intermediary castes), இந்த பிராம்மண வெறுப்பை வசதியாக பயன்படுத்திக் கொண்டன.

முதலில் இதனால் பெரும் பலன் பெற்றது வெளாள சாதிகள் தாம். திராவிட இயக்கத்தினால் பெரும் பலன் பெற்றது வெளாள சாதிகள். பின்பு எம்.ஜி.ஆரின் பிளவு, அவரின் வளர்ச்சி வெளாளருக்கு அடுத்த படிநிலையில் இருந்த சாதிகளுக்கும், பாமகவின் பரவல் வளர்ச்சி அடுத்த படிநிலையில் இருந்த சாதிகளுக்கும் (பாமக எதிர்பார்க்கவில்லை என்றால் கூட அதன் வளர்ச்சி தென் தமிழ்நாட்டில் பெரிய அளவில் வன்னியரல்லாத மிகவும் பிற்பட்ட சாதிகளுக்கு உதவி செய்தது) உதவியது. இப்படி இடைப்பட்ட சாதிகள் தொடர்ந்து எல்லா வசதிகளையும் பெற பிராம்மண வெறுப்பு என்ற கருத்தியல் பெருந்துணை புரிந்தது.

இதனால் அடைந்த பலன்கள் பல், வியாபாரத்தில் – அரசியலில் – நிலவுடமையில் – கல்வியில் – பதவிகளில் – அதிகாரத்தில் – வசதியில் – சமூக அந்தஸ்தில் இன்று பிற்பட்ட சாதிகளின் சொர்க்க புரியாக தமிழ்நாடு விளங்குகிறது. எனது சாதியினால் வாழ்க்கையில் எத்தனை கதவுகள் திறந்திருக்கின்றன என்று இப்போது பின்னோக்கிப் பார்க்கிறேன். இதனால், ஒடுக்கப்பட்டது பிராம்மணரிடையே பின் தங்கியிருந்தோரும், தலித்துகளிடையே பெரும்பான்மை சமுதாயமும் தான். பிராம்மணர்களிடையே இருந்த உயர்வர்க்கம், நடுத்தர வர்க்கம் ஆகியவை சமாதானப்படுத்திக்கொண்டு ஒட்டி வாழ்ந்தது அல்லது புலம் பெயர்ந்தது. தலித்துகளிடையே புத்திசாலிகள் அந்தஸ்தும், வசதியும், அதிகாரமும் பெற்று தமது சமுதாயத்திடையே ஒரு சிறு குழுவை தமக்கென உருவாக்கிக் கொண்டனர். வெளிப்படையாக இல்லையென்றாலும், மிக இயல்பாக அந்த குழுவிடம் பி.ச/மி.பி.ச ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு அதற்கு எல்லா வசதிகளையும் தந்து, அந்த குழுவர்க்கத்தின் செயல்பாடுகளுக்கு பாதுகாப்பளித்து ஆனால், இது ஒரு சிறு குழுவாக மட்டும் இருக்குமாறு பார்த்துக் கொண்டது.

***

இந்த பார்கெய்ன்/பரிவர்த்தனை மிகவும் இயல்பாக, மெதுவாக, யாரும் கவனிக்கா வண்ணம் நிகழ்ந்திருப்பதைப் பார்க்கலாம். எந்தவொரு தலித் பிரமுகரையும் எடுத்துக் கொண்டால் சொந்தத்தில் ஒரு எம்.எல்.ஏ, எம்.பி, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், நீதிபதிகள் என்று இருப்பதைப் பார்க்கலாம். சிற்சில சமயங்களில் ஒரே குடும்பத்தில் எல்லாமே குவிந்திருப்பதைப் பார்க்கலாம். இப்படி ஒரு குழு உருவானது திட்டமிட்டு நிகழவில்லை என்றாலும், அப்படி உருவாகிறாற்போல் பொதுசமுதாயம் பார்த்துக் கொண்டது. இது அவர்களுடன் ஒரு எழுதப் படாத ஒப்பந்தத்திற்கும், பெரும் எண்ணிக்கையிலான தலித் சமுதாயத்தின் கவனம், கோபம் பிற்பட்ட சமுதாயத்தின் மீது திரும்பாத வகையிலும் கவனமாக பாதுகாப்பு சுவரொன்றை ஏற்படுத்தியது.

இதுவே இன்றைய இஸ்லாமிய சமூகத்திலும் நிகழ்வதைப் பார்க்கலாம். திட்டமிட்டு சவுதி, பாகிஸ்தான் போன்ற நாடுகளால் பரப்பப்படும் அடிப்படைவாதம், முன் வைக்கப்படும் வஹ்ஹாபிசம் அங்கே இருக்கும் ஆளும் உயர்வர்க்கத்திற்கு பேரம் பேச வசதியாக இருக்கிறது. அவர்களது நிலை தாழாமல், மற்ற இஸ்லாமியர்களை தள்ளி வைக்க, அடக்க, அவர்களது கவனத்தை திசை திருப்ப ஏதுவாக இருக்கிறது. வழிகேடு, சீர்கேடு, தமிழ் சமுதாயத்தின் ஒழுக்கக் கேடுகள் என்று தாவா செண்டர்களின் கணினி மையங்களிலிருந்து, கொடையாக அளிக்கப்பட்ட மடிக்கணினிகளிருந்து எலக்ட்ரானின் புலம்பலை, பிரச்சாரத்தை நிகழ்த்தும் வஹ்ஹாபிகளில் எவரும் சவுதி அரச குடும்பத்தை, அரபி உயர்வர்க்கத்தை, அதன் சீர்கேடுகளை, அதன் ஒடுக்குமுறைகளை எதிர்க்க மறுப்பதை, கவனிக்க மறுப்பதை காணலாம். தமக்குள்ளாக நிலவும் பாரபட்சங்கள் இந்து சமுதாயத்தில் நிலவுவதை விட அதிகம் என்பதை காணமறுக்கிறார்கள் அவர்கள். இத்தனை நூற்றாண்டுகள் கழித்து சவுதியின் மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு கறுப்பு இமாம் நியமிக்கப் பட்டிருக்கிறார். பிலால் பற்றி கவிதை என்ற பெயரில் எதையவது கிறுக்கும் வஹ்ஹாபிகள் இத்தனை நூற்றாண்டுகாலம் நிலவிய இனவெறியை, இனவெறுப்பை கவனிப்பதும் இல்லை, கவனத்தில் கொண்டு வந்தாலும் கூட அதற்குப் பின்னால் எதையாவது இறைவனின் திட்டத்தை கண்டுபிடித்து முன்வைக்கிறார்கள். ஈராக்கில் காயடிக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்ட கறுப்பின அடிமைகளின் கதை சொல்லும் குடியிருப்புகள் இன்று அமெரிக்க படை அங்கே சென்ற பின்பே உலகின் கவனத்திற்கு வருகின்றன. சவுதியின் கறுப்பினத்தவர்களைப் பற்றி, அவர்கள் மீது அங்கே நிலவும் ஒடுக்குமுறை பற்றி, சூடானில் அழித்தொழிக்கப்பட்ட மில்லியன் கணக்கிலான கறுப்பினத்தவர் பற்றி இன்றும் இஸ்லாமிய சமூகம் கவனிப்பது கிடையாது.

இங்கே கிளப்பப் படும் பிராம்மண வெறுப்பியல் என்பது இடைப்பட்ட சாதியினருக்கு தரும் பாதுகாப்பை, வசதியை, உப்பரிகையைப் போலவே அங்கும் இந்த பிறமத/பிற சமூக வெறுப்பு உயர் சமூகத்திற்கும், அந்த உயர்சமூகத்தை எட்ட முயலும் இடைப்பட்ட சமூகத்திற்கும் வசதியைத் தருகிறது. வசதி வரும்போது அது நபியின் சுன்னாஹ்வை பின்பற்றுவதால் கிடைக்கும் வளப்பேறாக அங்கே கருதப்படுகிறது. இங்கேயோ நாங்களிங்கே ‘பெரியார் இல்லையென்றால் நாமெல்லாம் ஆடு மேய்த்துக் கொண்டிருப்போம்’ என்று எதோ பக்கத்தில் கேரளாவில், கர்னாடகாவில், ஆந்திராவில் இடைப்பட்ட சாதிகள் எல்லாம் பிராம்மண சேவகம் செய்து கொண்டிருப்பது போன்ற கற்பனையில் உழன்று கொண்டிருக்கிறோம். பெரியார் துதி என்பது நபி புகழ்சி போன்ற ஒரு மத அந்தஸ்தை பெற்றுவிட்டது நம்மிடையே.

***

இஸ்லாமிய ஆய்வு என்பது எனது பல பார்வைகளை மாற்றியிருக்கிறது. எல்லா வகையிலும் நான் மாறிவிட்டதாக, மேம்பட்டுவிட்டதாக நான் கருதவில்லை. சில சமயங்களில் இஸ்லாத்தைப் பற்றி நான் சொல்லும் அதே குற்றச்சாட்டை நானும் செய்கிறேன் என்று கூட தோன்றும். சிற்சில சமயங்களில் வாழ்வே பல படிநிலைகளில் இஸ்லாமாகக் கூட தென்படுவதும் உண்டு. அப்படிநிலையில் மேலே இருப்பது இஸ்லாம், அவ்வளவே.

ஆனால், மாற்றங்களை முழுமையாகக் கொண்டு வரவில்லை என்றாலும் கூட அடிமனதில் நெருடலை, பார்வையில் ஒரு புதிய கோணத்தை, புரிந்துணர்வில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. அதில் ஒரு முக்கியமான மாற்றம் இந்த பிராம்மண சாதி பற்றிய பார்வை. இந்த வெறுப்பியலைப் பற்றி, கருத்தியலைப் பற்றி கொஞ்சமாவது எழுதுவதன் மூலம் நான் எனது குற்றவுணர்வை குறைத்துக் கொள்ள முயல்கிறேன். இதைச் செய்யாமல், ‘இஸ்லாமிய சமூகத்தினுள் இருக்கும் பெரும்பான்மையோர் காபிர்களுக்கு எதிரான வெறுப்பியலை மசூதியினுள், தமது சமூகத்தினுள் எதிர்க்கவில்லை, தமக்கு வசதியாக இருக்கிறது என்பதற்காக அமைதி காக்கின்றனர்’ என்ற எனது குற்றச்சாட்டுக்கு தார்மீக நியாயத்தை எனக்குள்ளாகவே கற்பித்துக் கொள்ளவும் முயல்கிறேன். இஸ்லாமிய சமூகத்தின் வசதி, சவுகரியம் என்பது காபிரின அழிப்பின் மீது கட்டமைக்கப் பட்டிருப்பதைப் போலவே நானும், நான் சார்ந்த சமூகமும் அடித்தள மக்களின் உழைப்பையும், வேறு எவருக்கோ கிட்டவேண்டிய கனிகளை சூழ்ச்சியால், வன்முறையால் பறித்துக் கொண்டிருப்பதையும் உணர முடிகிறது. இதிலிருந்து வெளிவர முடியவில்லை, அது சாத்தியமில்லை, அதற்கான தைரியம் எனக்கில்லை என்பது புரிந்திருந்தாலும், இந்த புரிதலை ஏற்படுத்தியதற்காகவாவது இந்த இஸ்லாமிய ஆய்வுக்கு நன்றி சொல்ல வேண்டும்.


நேசகுமார்

http://nesakumar.blogspot.com

Series Navigation

நேச குமார்

நேச குமார்

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 6

This entry is part [part not set] of 36 in the series 20090618_Issue

நேசகுமார்



அடிமை முறை பற்றிய வஹ்ஹாபியின் கட்டுரை/விளக்கம் எனக்கு அதிர்ச்சியையோ, வருத்தத்தையோ ஏற்படுத்தவில்லை. ஜெயமோகன் சொல்லியிருப்பதுபோல, மதவெறியர்கள் இப்படித்தான் சிந்திப்பார்கள் என்று ஒற்றை வரியில் உதாசீனப்படுத்திவிட்டு போய்விடவும் முடியவில்லை. வஹ்ஹாபிக்கு தனியே பதில் எழுதுகிறேன். ஆனால், பதிலையும், விவாதத்தையும் விட முக்கியமான ஒன்று இருக்கிறது. அதை இங்கே சுட்டிக்காட்ட விழைகிறேன்.

வஹ்ஹாபி மட்டுமல்ல, இஸ்லாமிய சமூகத்தில் பெரும்பாலோனர் இப்படித்தான் இருக்கிறார்கள். நாகூர் ரூமி அவர்கள் கல்லால் அடிப்பதைப் பற்றி சொல்லும்போது, இசை பற்றிய தனது கருத்தை சொல்லும்போது, “மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்று சொல்வதற்குப் பின்னால் ஒரு பெரிய மத உளவியல் இருக்கிறது. அதாவது, இப்படி ‘முஹமது சொல்லியிருக்கிறார் என்று ஆதாரபூர்வமாக சொன்னால், நான் உடனடியாக இந்த நிலையிலிருந்து இறங்கிவந்து கல்லால் அடிப்பது சரிதான், இசை ஹராம் தான் என்று ஒப்புக்கொள்வேன்’ என்பது அதன் அர்த்தம்.

இஸ்லாமிய சமூகத்தில் திடீரென்று வன்முறை கிளம்பியிருப்பது இதனால்தான். அமைதியாய் இருந்து, அரபியே தெரியாமல், நாட்டார் இஸ்லாத்தை, பண்பட்ட – மாறிவிட்ட கலாச்சார முறையை பின்பற்றி அன்பாக, இனியவர்களாக இருந்த நமது இஸ்லாமியர்கள் திடீரென்று மாறியது இதனால்தான். திடீரென்று தமது மூலத்தை படித்த இளைய தலைமுறை, அடிப்படைகள் வேறுமாதிரி இருப்பதையும், அதுதான் ஆதாரபூர்வமானது என்பதையும் அறிந்த பிறகு, இத்தனை நாட்கள் அடைந்த முன்னேற்றத்தை, சமாதானத்தை, மத நல்லிணக்கத்தை மூட்டை கட்டிவிட்டு ஜிகாதிய பாதைக்கு திரும்பிவிட்டது.

***

லோஷன் என்ற ஈழத்தமிழ் பதிவரின் பதிவில் ஒரு Triump என்ற பெயரில் எழுதும் ஈழப்பெண் ஒருவர் தனக்குத் தெரிந்த இஸ்லாமியரைப் பற்றி எழுதியிருக்கிறார். இங்கே இருப்பவர்களில் பலருக்கு அங்கே போய் படிக்க முடியாவிட்டால், அந்த அற்புதமான எழுத்தை தவற விட்டுவிடலாம் என்பதால், அதை இங்கே மீள்பதிவு செய்கிறேன்.

//எனக்கு இஸ்லாம் பற்றி முதலில் தெரிய வந்தது வாப்பா தாத்தாவால் தான். அவரின் பெயர் மிகவும் நீளமானது.. எனது பெற்றோரும் அவரை வாப்பா என்டு அவரின் பிள்ளைகள் போல் கூப்பிட நாங்களும் வாப்பா தாத்தா என்டு தான் கூப்பிடுவம். அவர் எனக்கு காட்டிய‌ இஸ்லாம் வேறு.. நான் இங்கு யுனியில் பார்க்கும் இஸ்லாம் வேறு.

வாப்பா தாத்தா, தன் வீட்டுப் பெண்களிடம், உங்களுக்கு பிடித்தால் ஹிஜ்சாப் அணியுங்கள் என்று சொல்லி இருந்தார். அவரின் மனைவி அணிவார். மகள்கள் அணிவதில்லை. அவர்களுக்கு யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்ய அனுமதி இருந்தது. ஆனால் அவர்கள் விரும்பியது இஸ்லாம் மதத்தை சேர்ந்த மாமா (அவர்களை அப்படி தான் அழைப்பேன். வேறு அர்த்தமில்லை) ஆட்களைத்தான். ஒன்றே ஒன்று தான் வாப்பா தாத்தா அந்த மாமாக்களிடம் கேட்டார். பெண்களை சக மனிதர்களாக மதிக்கும் படி.. அவரின் நல்ல மனதிற்கு வீட்டிற்கு வந்த மாமாக்களும் நல்லவர்கள்..
……………………..

எனக்கு கடவுள் இருக்கா இல்லையா என்ட ஆராச்சியில் விருப்பமில்லை.. கடவுள் இருந்தால், அவர் பாத்துக்கொள்ளுவார் என்டு சோம்பி இருக்கவும் இஷ்டமில்லை.. இல்லாவிடடால், நானே கடவுள் என்டு மதம் பிடித்து அலையவும் இஷ்டமில்லை..

மனிதனாக வாழவே விருப்புகிறேன்.. மோட்சமோ நரகமோ எதுவாயினும் எனக்கு சரி… எங்கும் வாழ முடியும் என்ட நம்பிக்கை இருந்தால் போதும்…. அது தலைக்கனமில்லை.. தன்னம்பிக்கை :)//

(பதிவில் எதிர்வினை ஆற்றியவருக்கு திண்ணையில் பிரசுரம் செய்வது உடன்பாடா என்று தெரியாத நிலையில், முழுப் பதிவை இங்கே வெளியிட இயலவில்லை. இதன் பதிவு முகவரி கீழே தரப் பட்டுள்ளது – திண்ணை குழு)

லோஷனின் பதிவு: http://loshan-loshan.blogspot.com/2009/05/blog-post_12.html

ட்ரியம்பின் பதிவு: http://the-nutty-s.blogspot.com

***

ட்ரியம்ப் சொல்லியிருப்பது போன்றவொரு இஸ்லாமிய வாப்பாவை, காக்காவை, அண்ணனை, மாமனை நம்மில் ஒவ்வொருவரும் சந்தித்திருப்போம். எனக்கு ஒரு நண்பர் இருந்தார். எனக்கு அப்போது இளம் வயது, அவருக்கு எழுபது வயதிருக்கும் என்னைவிட பல பத்தாண்டுகள் மூத்தவர். ஆயினும் வயது வித்தியாசத்தை மீறி, நண்பராக – இனிய நண்பராக இருந்தார். வீட்டு முற்றத்தில் வந்து உட்கார்ந்து கொள்வார். நல்ல உயரம், அரேபிய சாயல் தெரியும் தோற்றம். முழங்காலுக்கு மேலே லுங்கியும், மேலே வெள்ளை நிறத்தில் நீள அங்கியும் அணிந்திருப்பார். மாலைப் பொழுதுகளில் சித்தர் பாடல்களை வெள்ளி பொடி டப்பாவிலிருந்து அவர் போட்டுக்கொண்டே பாட நான் கேட்டிருந்த காலங்கள் உண்டு. ஆண்டுகள் பல கழிந்துவிட்ட நிலையில் இப்போது அதே ஊரில், அதே பகுதியில் இப்படிப்பட்ட பெரியவர்கள் இஸ்லாமிய சமூகத்தில் இருப்பார்களா என்பது சந்தேகம்தான். இருந்தாலும் வெளிப்படையாக பேசமாட்டார்கள். இதற்குக் காரணம் வஹ்ஹாபியின் இந்த மனோபாவம்தான். இதுதான் முஹம்மது சொன்னது, இப்படித்தான் அவர் நடந்து கொண்டார் என்று ஹதீதுகளை, குரான் வசனங்களை, அவற்றிற்கான இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கங்களை காட்டிவிட்டால் போதும், உடனடியாக அதை நியாயம் என்று வாதிடத் துவங்கிவிடுகிறார்கள் இஸ்லாமிய சகோதர சகோதரிகள். எனது ஒரு தோழி, வங்கதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண், வஹ்ஹாபி பாணியில் சரிதான் என்று சில வருடங்களுக்கு முன்பு ஆவேசமாக வாதிட்டார்.முதலில் பர்தா அணியாததை சுட்டிக்காட்டி பர்தா அணிந்து கொண்டு மூலையில் இருப்பதுதானே என்றேன். ரொம்ப புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து இன்றைய தேதியில் இப்படி நான் இருந்தால் தான் ஒரு நல்ல வாழ்க்கை துணையை ஈர்க்க முடியும், தேர்வு செய்ய முடியும் என்றார். அடுத்த படியாக, “நீங்கள் வேறு நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்கள் என்பதற்காக உங்களை ஒரு இந்து மத சாமியார் வன்புணர்ந்து அடிமையாக பிடித்துச் சென்றால் என்ன சொல்வீர்கள், அது போர் தர்மம் என்று சொல்வீர்களா? 1400 வருடங்களுக்கு முன்பாக இதைவிட ஐரோப்பாவின் பார்பாரியன்கள் மோசமாக நடந்துகொண்டார்கள், இது பரவாயில்லை அல்லது மங்கோலியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்படியே தமது கடவுள் தமக்கு ஆணையிட்டதாகக் கருதி செய்தார்கள் என்று சமாதானம் சொல்வீர்களா” என்றேன். அப்பெண் அதற்கப்புறம் என்னுடன் பேசுவதை குறைத்துக் கொண்டார். மனதிற்குள் திட்டியிருக்கவும் கூடும். பல மாதங்கள் கழித்து ஒரு நாள் என்னிடம் வந்து நீங்கள் சொல்வதில் சில சரிதான், ஆனால் இஸ்லாம் ஏன் இப்படி சொல்லியிருக்கிறது என்பதற்கான காரணம் எனக்கு புரியவில்லை அல்லது இஸ்லாத்தைப் பற்றி சொல்லியவர்கள் தவறாக சொல்லியிருக்கலாம் என்று சொல்லி, இந்து மதத்தை திட்ட ஆரம்பித்து விட்டார். திட்டுங்கள் என்று அமைதியாக இருந்துவிட்டு பின்பு ஹமீது ஜாஃபரிடமும், வஹ்ஹாபியிடமும் இப்போது சொல்வதையே அப்போதும் சொன்னேன், “மற்ற மதம் தவறு என்பதால் உங்களது நம்பிக்கைகள் சரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று. ஆனாலும், அவர் இன்றுவரை மாறவில்லை. நல்லவெளையாக நட்பு உடைந்து போகவில்லை. மனதிற்குள் என்னைப் பற்றி என்ன உண்மையிலேயே எண்ணுகிறார் என்பது இன்றும் புரியவில்லை. எப்படியோ, எனது மனதிற்கு பட்டதை பகிர்ந்து கொண்ட திருப்தி எனக்கு. இப்போது திண்ணையில் எழுதுவதும் அதனால் தான். இதனால், பணமில்லை, புகழில்லை, அதிகாரமில்லை, சுவர்க்கம் கிட்டும் என்ற தூண்டுதல் இல்லை. ஆனால், வாழ்க்கை வாழ்வதில் எதோ பயனுள்ள ஒன்றை செய்கிறோம். வாழ்க்கையில் எல்லா வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு இருக்கும் நிலையில், சமூகத்திற்கு பகரமாக இந்த சிறு விவாத்தை கூட தூண்டவில்லை என்றால் எப்படி என்ற எண்ணம்தான் காரணம்.

***

இந்த இறையியலை, மத உளவியலை இஸ்லாத்தில் மட்டுமல்ல, இந்து மதத்திலும் பார்க்கலாம். மற்றபடி சிறந்த ஆன்மீகவாதியான, தீர்க்கமான ஞானமுள்ளவராக இருந்த மறைந்த காஞ்சி பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி அவர்கள், பாரம்பரியம் – இதுதான் ஆதி சங்கரர் சொன்னது என்பதற்காக பிறப்பின் அடிப்படையிலான வர்ண முறையை நியாயப்படுத்தி பேசியிருப்பதை பார்க்கலாம். பால் பிரண்டனுக்கு ரமணரை காட்டியவர், அவரிடம் சென்று அவரை வழிகாட்டியாக ஏற்றுக்கொள் என்று சொன்னவர், அவரை மறுப்பதற்கு மடத்தின் பொறுப்பு தடையாயிருக்கிறது என்றவர் எப்படி குலத்தொழில் முறையை நியாயப்படுத்த முடியும், எப்படி ஜாதிப்பாகுபாடு சமுதாய அமைதிக்கு வழிகோலும், அதுவே இந்து மதத்தை காக்கும் என்று கருத முடியும் என்ற உறுத்தல் எனக்கு உண்டு. அவரது தெய்வத்தின் குரலில் ஆங்காங்கே தென்படும் பல வரிகள் மனதில் பெரும் சஞ்சலத்தை உருவாக்குகிறது. அதே போன்று, அவர் அப்படி சொன்னார் என்பதற்காக இன்று பல நல்ல நண்பர்களும் நியாயப்படுத்தி பேசுகின்றார்கள். இதற்கும் இஸ்லாமிய மனோபாவத்திற்கும் டிகிரி/படிநிலையில் வேண்டுமானால் வித்தியாசம் இருக்கலாம். ஆனால், அடிப்படை மனோபாவம் ஒன்றுதான். முன்னோர் வெட்டிய கிணறு என்பதால் உப்புத்தண்ணீரும் அமிர்தமாகிவிடுகிறது. பகுத்தறிவு, சுய சிந்தனை, மனிதாபிமானம், மனச்சாட்சி எல்லாம் விடை பெற்றுக் கொள்கிறது.

இஸ்லாமிய மனோபாவத்தை நான் விமர்சிக்கும்போது என்னை ஆதரிக்கும், பாராட்டும் பல நண்பர்களுக்கு நான் இப்படி திரும்பி நமது முதுகைப் பார்ப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இது அரசியலோ என்ற சந்தேகத்தோடு பார்க்கிறார்கள் அல்லது எனக்கு ஜாதிக்காழ்ப்பிருக்கிறது என்ற நெருடலோடு என்னோடு தர்க்கிக்காமல் நகர்ந்து விடுகிறார்கள். ஆனால், இஸ்லாத்தை நெருங்கிப் பார்க்கும்போது நமது பழைய காலம் நினைவுக்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை.

***

இந்த மாத Periyar Era வை படித்துக் கொண்டிருந்தேன். திரு.வே.ஆனைமுத்து அவர்கள் பதிப்பிக்கும் இதழ் இது. இதில் மனுநீதியிலிருந்து பெரியார் ஈவேரா மேற்கோளிட்டுக் காட்டியதாக சில வசனங்களை கண்டேன். திம்மியாக இருக்காத சூத்திரர்களின் சொத்துகளை கொள்ளையிடலாம் என்ற வசனங்கள் அவை. இதற்கும் முஹமது/அல்லாஹ் அனுமதித்த கனீமா என்ற கருத்தியலுக்கும் வித்தியாசம் இல்லை. ‘ஜிஸ்யா கொடுத்து, அடிபணிந்து இழிவான வாழ்வு வாழ்ந்தால் உனது உயிருக்கு, கற்புக்கு, உடமைகளுக்கு உத்திரவாதம் ,இல்லையேல் உனக்கு அழிவுதான்’ என்று சொல்லும் இஸ்லாமிய ஆன்மீக கருத்தாக்கமே இங்கும் எதோ ஒரு வகையில் ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. நபித்துவம் உலகெங்கும் இருந்த ஒன்று என்று இஸ்லாமியர்கள் நம்புவது, வெறும் நம்பிக்கை மட்டுமல்ல உண்மையும் கூட என்று தோன்றுகிறது. ஒவ்வொரு சமூகத்திலும் ஒரு காலகட்டத்தில் மதம் வன்முறையால் உருவாகி, ஆசைகளை தூண்டிவிட்டு அதன் மூலம் பெரும் நிலப்பரப்பில் பரவி இருக்கின்றது. இன்று அது இங்கே ஏற்கப்படவில்லை, பழம் சரித்திரமாக ஒதுக்கப்பட்டு விட்டது. இஸ்லாத்தில் நிதர்சனமாக இருக்கிறது. தாலிபான், தூய்மையான இஸ்லாம் ஓங்கியுள்ள பாகிஸ்தானில் அதனால் தான் ஜிஸ்யா கொடுக்காத சீக்கியர்களை தாக்குகிறார்கள், இந்துக்களை துன்புறுத்துகின்றார்கள்.

சோழ மன்னன் வைணவக்கோவில்களை இடித்ததற்கும், வஹ்ஹாபி நியாயப்படுத்தும் அடிமை முறை பற்றிய கருத்தியலுக்கும் இருக்கும் தொடர்பு அல்லது தொடர்பற்ற தன்மை இதுதான். இன்று, இந்து சமுதாயத்தில் அல்லது கிறிஸ்துவ சமுதாயத்தில் மதத்தில் இப்படி சொல்லியிருக்கிறது என்பதற்காக அதை நியாயப்படுத்த முனைவதில்லை. அல்லது அப்படி முனைபவர்கள் சிறுபான்மையினராக பார்க்கப்படுகின்றனர். ஜாதி முறை, குலதர்மம், குலத்தொழில் பற்றிய சந்திரசேகர சரஸ்வதியின் கருத்துக்களை அவர் வாழ்ந்த காலத்திலேயே பிராம்மண சமூகம் கூட ஏற்கவில்லை. மேலுக்கு அவரை புகழ்ந்தார்கள், பொன்னபிஷேகம் செய்தார்கள், ஆனால் மறுநாள் காலை எழுந்து தத்தமது சூத்திர, வைசிய, க்ஷத்திரிய தர்மங்களை சிரமேற்கொண்டு செய்தார்கள். ச.சே.சரஸ்வதிக்கு மாலைபோட்டு மரியாதை செய்து ஆனால், வாழ்க்கையின் ஒரு ஓரத்தில் ஒதுக்கி வைத்தார்கள் பிராம்மணர்கள். மற்ற சமூகங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். தூர இருந்து பெரும் கும்பிடு போட்டு தத்தமது கருத்துக்களையும், நாகரிக முன்னேற்றங்களையும் பின்பற்றி சென்று கொண்டே இருந்தார்கள்.

***

ஆனால், இங்கோ ஒரு பெரும் சமூகமே பின்னால் சென்று கொண்டிருக்கிறது. பன்மைத்தன்மையின் அழிவு வெளிப்படையாக தென்படும் தாலிபான் புர்காக்களில் தென்படுகிறது. ஊருக்கு ஒரு அரபி மதராஸா தென்படுகிறது. எங்கு முஸ்லீம் வீடுகள் தென்பட்டாலும் அங்கே தமுமுகவின் சுவர் வாசகக்கள் தென்படுகின்றன, தினமலரை திட்டி போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதை காணமுடிகிறது. மேலப்பாளையத்தில் கற்பு தவறியதாகக் கருதிய இஸ்லாமியப் பெண்ணை, ஆப்கானிஸ்தான் பாணியில் கல்லால் அடிக்கின்றனர் மதத்தை கற்ற இளைய இஸ்லாமியர். சின்னப்பா, செல்லப்பா, தம்பி, செல்லவாப்பா எல்லாம் அரபி பாணியில் அபூ, இப்னு என்று பெயர் சூட்டிக் கொள்கிறார்கள். அரபி மோகம் என்பது ஆன்மீகத்திலிருந்து வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பிரதிபலிக்கிறது இன்றைய இந்திய இஸ்லாமிய சமூகத்தில். அரபு நாடுகளோ வன்முறையை நம்மைப் போன்ற நாடுகளுக்கு அவுட்சோர்ஸ் செய்துவிட்டு அங்கே ஒரு சிறு பொறி தென்பட்டால் கூட உடனடியாக அடக்கி, முளையிலேயே கிள்ளிவிடுகின்றன. அவர்களின் வீச்சை அதிகரிக்க வரும் அபரிமிதமான வருமானத்தில் ஒரு சிறு பகுதியை இந்தியா போன்ற நாடுகளின் இஸ்லாமிய சமூகங்களை நோக்கி வீசி, பெரும் ஏவல் படையை உருவாக்கிக் கொள்கின்றார்கள்.

ஒரு பெரும் சுழலில் இஸ்லாமிய சமூகம் செல்கிறது. விண்ணிலிருக்கும் கறுப்பு ஓட்டைகள் (Black Holes) சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் இழுக்க முற்படுவதுபோல, இந்த இஸ்லாமிய சுழல் அந்த சமூகத்தை மட்டுமல்ல நம்மையும் இழுத்துச் செல்ல முற்படுகிறது. இது எங்கு போய் முடியும் என்பதும், இதற்கு நமது சமுதாயம் என்ன தீர்வு வைத்திருக்கிறது என்பதும் புரியவில்லை. இதோ பக்கத்தில் இருக்கும் ஈழத்தில் நடைபெற்றுள்ளதுபோல ஒரு பெரிய ஹோலோகாஸ்டை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோமா, உலகின் இரண்டாவது பெரிய இஸ்லாமிய சமூகம் நம்மிடையே இருக்கும் நிலையில் சிறு சிறு அளவிலேயே இருக்கும் பிரித்தன், அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்றவை சமாளிக்க முடியாமல் திணறும்போது, பக்கத்தில் இருக்கும் இஸ்லாமிய நாடுகளே இதனுடன் பெரும் சமர் செய்து திணறும்போது, நாம் என்ன செய்யப்போகிறோம், இந்த அளவுக்கு அடிப்படைவாதத்தால் கவரப்படும் இளைஞர் கூட்டத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் நாமும் ஒரு இலங்கையைப் போல, ஆப்கானிஸ்தானைப் போல, பாகிஸ்தானின் பெரும்பகுதியைப் போல அமைதியான வாழ்க்கையை தொலைத்துவிட்டு அடிப்படைவாதிகளுடன் தினம்தோறும் சமரையும், அழிவையும் சந்திக்கப் போகிறோமா என்று தெரியவில்லை.


http://nesamudan.blogspot.com

Series Navigation

நேச குமார்

நேச குமார்

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 5(3)

This entry is part [part not set] of 36 in the series 20090611_Issue

நேசகுமார்


இதைப் பற்றி கேட்கும்போது தரப்பட்ட ஃபத்வாக்கள் இணையத்தில் உள்ளன. அதிலொன்று இவ்வாறு சொல்கிறது: “However, it seems that intercourse with slaves was probably considered a method of contraceptive sexual enjoyment through coitus interruptus (`azl), since the slave owner could practice `azl without prior permission from his slave mate while he could not do so with his free wife without prior permission from her. And if the contraception intended by this `azl failed and the slave woman still bore a child from her master, her child was automatically freed and obtained a son or daughter’s rights including inheritance. In addition, the mother herself could no longer be sold and was freed upon the owner’s death……..the word concubine literally means bed-mate and applies to any female slave that shares the bed of her master. The man is liable to support any child of his and whatever need of its mother that is related to that liability. He is not obliged to marry her but is definitely held to the responsibilities of a father including inheritability whether the mother is a Muslim or not, her child being Muslim. Nor is she entitled to any inheritance unless he decides to marry her AND she is Muslim. Allah knows best.”
http://muslimvillage.com/forums/index.php?showtopic=13918&pid=190898&mode=threaded&show=&st=&

“Praise be to Allaah.

The Prophet (peace and blessings of Allaah be upon him) DID NOT MARRY MARIYAH AL-QIBTIYYAH, RATHER SHE WAS A CONCUBINE who was given to him by al-Muqawqis, the ruler of Egypt. That took place after the treaty of al-Hudaybiyah. Mariyah al-Qibtiyyah was a Christian, then she became Muslim (may Allaah be pleased with her).

Ibn Sa’d said:

The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) lodged her – meaning Mariyah al-Qibtiyyah and her sister – with Umm Sulaym bint Milhaan, and the Messenger of Allaah (S) entered upon them and told them about Islam. He took Mariyah AS A CONCUBINE and moved her to some property of his in al-‘Awaali… and she became a good Muslim.”
http://www.answering-islam.org/Shamoun/mary_concubine.htm

(2) குரானில் தொடர்ந்து பல வசனங்கள் தமது அடிமைகள்/வேலைக்காரப் பெண்களுடன் முஸ்லீம்கள் உடலுறவு கொள்ளலாம் என்று அனுமதி வழங்குகின்றன. உதாரணமாக,

குரான் வசனம் 033.050
“O Prophet! We have made lawful to thee thy wives to whom thou hast paid their dowers; and those whom thy right hand possesses out of the prisoners of war whom Allah has assigned to thee; and daughters of thy paternal uncles and aunts, and daughters of thy maternal uncles and aunts, who migrated (from Makka) with thee; and any believing woman who dedicates her soul to the Prophet if the Prophet wishes to wed her;- this only for thee, and not for the Believers (at large); We know what We have appointed for them as to their wives and the captives whom their right hands possess;- in order that there should be no difficulty for thee. And Allah is Oft-Forgiving, Most Merciful.”

இது போன்றே பிற குரான் வசனங்கள் 23:5-6, 4:24 சொல்கின்றன.
(3) Sahih Bukhari – Volume 1, Book 1, Number 1:

Narrated ‘Umar bin Al-Khattab:

I heard Allah’s Apostle saying, “The reward of deeds depends upon the intentions and every person will get the reward according to what he has intended. So whoever emigrated for worldly benefits or for a woman to marry, his emigration was for what he emigrated for.”

இப்படி பிடிக்கப்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளும்போது அவர்கள் மூலம் பிள்ளை பெறாதவாறு பார்த்துக்கொண்டனர் முஹமதின் காலத்தில் அவருடன் இருந்த முஸ்லீம்கள். இந்த நடைமுறையை தமிழ் எழுத்தாளரும், திமுக பிரமுகருமான சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ நாவலில் காணலாம். அதில் தலித் பெண்ணுடன் உறவு கொள்ளும் முஸ்லீம் ஆண், அவள் பிள்ளை பெறாதவாறு பார்த்துக்கொள்வான். இது சுன்னாஹ்/நபி அனுமதித்த செயல்முறை. அது குறித்த ஹதீஸை இங்கே காணலாம்:

Sahih Bukhari – Volume 7, Book 62, Number 137:
Narrated Abu Said Al-Khudri:
“We got female captives in the war booty and we used to do coitus interruptus with them. So we asked Allah’s Apostle about it and he said, “Do you really do that?” repeating the question thrice, “There is no soul that is destined to exist but will come into existence, till the Day of Resurrection.”

http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/hadith/bukhari/062.sbt.html#007.062.137

இன்னொரு ஹதீஸ் இதைத் தெளிவாக விளக்குகிறது. யூதர்கள் இப்படி உடலுறவின் போது குடும்பக்கட்டுபாட்டை கடைப்பிடிப்பது குறித்து அது கடவுளுக்கு புறம்பானது, பெண் குழந்தைகளை உயிரோடு புதைப்பதற்கு சமம் என்று கருதினர் (அப்துல் கையூம் குறிப்பிட்ட அந்த தடையை முஹமது விதித்தது யூதர்களை பார்த்துத்தான்). ஆனால், முஹமதுவோ குழந்தை பிறப்பதும் பிறக்காததும் கடவுளின் கையில் இருக்கிறது(அதனால் விருப்பப்படி உடலுறவின் போது முஸ்லீம்கள் அடிமைப்பெண்களிடம் நடந்து கொள்ளலாம்) என்று தெரிவித்தார்.

Sunan Abu Dawud – Book 11, Number 2166:

Narrated AbuSa’id al-Khudri:

A man said: Apostle of Allah, I have a slave-girl and I withdraw the penis from her (while having intercourse), and I dislike that she becomes pregnant. I intend (by intercourse) what the men intend by it. The Jews say that withdrawing the penis (azl) is burying the living girls on a small scale. He (the Prophet) said: The Jews told a lie. If Allah intends to create it, you cannot turn it away.

http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/hadith/abudawud/011.sat.html#011.2166

இன்னொரு ஹதீஸில் தெளிவாகவே, குடும்பப் பெண்களிடம் இப்படி நடந்து கொள்ள முடியாது ஆனால், அடிமைப் பெண்களிடம் நடந்து கொள்ளலாம் என்றும் முஹமது தெரிவிக்கிறார்:

Abu Dawood, 29.29.32.100: “Yahya related to me from Malik from Humayd ibn Qays al-Makki that a man called Dhafif said that Ibn Abbas was asked about coitus interruptus. He called a slave-girl of his and said, ‘Tell them.’ She was embarrassed. He said, ‘It is alright, and I do it myself.’ Malik said, ‘A man does not practise coitus interruptus with a free woman unless she gives her permission. There is no harm in practicing coitus interruptus with a slave-girl without her permission. Someone who has someone else’s slave-girl as a wife does not practice coitus interruptus with her unless her people give him permission.’”
http://www.faithfreedom.org/challenge/rapist.htm

முஸ்லீம்கள் பிரச்சாரங்களின் போது ‘இஸ்லாம் பெண்களையும், குழந்தைகளையும் கொல்வதை தடை செய்கின்றது’ என்று திருப்பித்திருப்பி சொல்வது வழக்கம். ஆனால், சொல்லாமல் விடும் ஒரு விஷயம், பெண்களும் குழந்தைகளும் பொருட்களைப் போல முஸ்லீம்கள் பங்குபோட்டுக் கொள்ளக் கூடிய பொருட்கள்(கனீமா) என்ற அல்லாஹ்வின்/முஹமதுவின் இறையியலை. பொருட்கள் எனவே, அந்தப் பொருட்களைப் பெறுவதற்காக ஜிஹாதில் ஈடுபடுவதும், ஈடுபட்டு வெற்றி பெற்றவுடன் பொருட்களை பங்குபோட்டுக் கொள்வதும் முஹமதுவின் காலத்திலிருந்து வழக்கமாக இருக்கிறது. அப்படியும், ஜிஹாதில் பெண்களையும், குழந்தைகளையும் கொல்லலாம் என்று கூறும் ஹதீஸும் இருக்கிறது.
Sahih Muslim –
Book 019, Number 4321:
It is reported on the authority of Sa’b b. Jaththama that the Prophet of Allah (may peace be upon him), when asked about the women and children of the polytheists being killed during the night raid, said: They are from them.

Book 019, Number 4322:
It is narrated by Sa’b b. Jaththama that he said (to the Holy Prophet): Messenger of Allah, we kill the children of the polytheists during the night raids. He said: They are from them.

Book 019, Number 4323:
Sa’b b. Jaththama has narrated that the Prophet (may peace be upon him) asked: What about the children of polytheists killed by the cavalry during the night raid? He said: They are from them.
http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/hadith/muslim/019.smt.html#019.4321

இது குறித்த ஒரு மதம் மாறிய (புதிய) முஸ்லீம் ஒருவரின் வெளிப்படையான எண்ணங்களை இங்கே காணலாம்:

“When the class reached the five minute break, I asked the Shaikh, whether it was permitted for a male master to sleep with slave women against their will. He immediately said yes, and he added this was agreed upon by all four Sunni schools – Shafi’i, Hanafi, Maliki and Hanbali. I asked to clarify, so if there was a slave market today, I could go and buy a fourteen year old girl just in order to sleep with her? He said yes, and he added, not only was it permitted, it was also common practice among early Muslims. Ali Ibn Abi Talib, the shaikh said, had children from his slaves. The class was shocked, especially the female students. One female student asked, what if the slave woman did not want to? The sheikh affirmed that this was not relevant. Another female student asked, whether this was still applicable today? The shaikh did not address this question – he did not seem to understand what the student meant by “applicable” – but he added that when agreements against slavery came up the Muslim countries “were the first ones to sign”. The shaikh said sex slavery was perfectly according to the Qur’an. I later checked with a more reform-oriented scholar who assured me that the Qur’an does not permit this kind of abuse of human beings.

ow let me be absolutely clear that this was more than just the words of a crazy fiqh teacher. What our shaikh told us is perfectly in line with the consensus of more than thousand years of Islamic scholarship. Let me spell it out:

t is permitted (halal) according to all traditional schools (madhabs) to have sexual intercourse with slave girls of the age of nine years or above against their will and without marrying them. And when I say according to the traditional schools, I mean it was consensus among the scholars of all classic schools of Islamic law be it Sunni or Shia. It is all over the classic sources of Islamic law where this issue is elaborated to great detail.

ow what the past scholars said is one thing, how modern Muslim scholars deal with it is another. Unfortunately, the question is rarely asked, because most Muslims are unaware of the problems, but if it is asked, traditionally oriented scholars fail to condemn sex slavery. Even some of the most influential contemporary scholars are defending and justifying sex slavery [1].

unnipath is one of the favourite places where Western Muslims go for Islamic education and fatwas (legal opinions) on everyday life issues. Ask any of the great scholars living today who adhere to traditionalist Islamic thinking. They will all say you have to put the issue of slavery and sex slavery into historical context, but they will all agree that these are permissible in principle, at best suspended due to the lack of a proper Islamic state. And they will refuse to call it abuse or rape or evil.”

http://www.averroes-foundation.org/articles/sex_slavery.html

மேலும் விரிவான விவாதங்களை இங்கே காணமுடியும்: http://www.jihadwatch.org/archives/018219.php

Series Navigation

நேச குமார்

நேச குமார்

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 5(2)

This entry is part [part not set] of 36 in the series 20090611_Issue

நேசகுமார்


பாகிஸ்தானில் ரவுடிகளும், முல்லாக்களும் மதம் மாற்றப்பட்ட பெண்கள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை விவரிக்கும் பல கட்டுரைகளை இணையத்தில் பார்க்க முடியும். “When a Hindu is forced to become a Muslim, zealot Islamics gather at the shrines, chanting and singing and marching in the streets. Such a ruckus is made that if the young kidnapped girl appears in court, the fanatic Muslims yell, scream, throw rose petals into the air and follow the youth into the building so that she is so intimidated that she can hardly speak.” (http://www.americandaily.com/article/10362)

இதே போன்றதொரு நடத்தையை, உளப்பாங்கைத்தான் இது குறித்து புல்லரிக்கும் வஹ்ஹாபியும், நாகூர் ரூமியும் வெளிப்படுத்துகின்றனர். இது தனி நபர் உணர்வல்ல. ஒரு மனநோய். இது இஸ்லாமிய அடிப்படையுடன் சம்பந்தப்பட்டது. குரானில்(2), ஹதீஸ்களில்(3) முஹமது, பெண்களுக்காக தம்முடன் வந்து சேர்ந்து கொள்பவர்களுக்கு பெண்கள் தரப்படுவர் என்று சொல்வதால், முஹமதின் காலத்தில் முஸ்லீம்கள், மதம் மாறாத தமது சமூகத்தினரின் பெண்களை வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்வதையும், வன்புணர்வதையும் கடவுள் தமக்களிக்கும் வெகுமதியாக கருதினர். மத்திய காலங்களில் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த ஜிஹாதிகளின் கீழும், முதலில் ஜிஹாதிகளாக வந்து பின்பு மன்னர்களான முகமதியர்களின் ஆட்சியிலும் இது வழமையான ஒன்றாக இருந்தது. தமிழ்நாட்டில் படையெடுத்து வந்த முஸ்லீம்கள் இங்கே இருக்கும் பெண்கள் கருப்பாக, அழகற்றவர்களாக இருக்கின்றனர் என்று புலம்புவதை வரலாற்றாவணங்களில் காண முடியும். பஞ்சாபில் சீக்கியர்கள் இப்படி முஸ்லீம்கள் பெண்களை பிடித்து அடிமைகளாக ஈரானுக்கு கொண்டு செல்வதை தடுத்து, அவர்களை விடுவித்து மணமும் புரிந்துகொண்டு புதிய சமுதாயத்தை ஏற்படுத்தினர்.

ஓரளவுக்கு கிறிஸ்துவ, பவுத்த சமூகங்களில் இருப்பவர்கள் கூட இஸ்லாமிய அச்சுறுத்தல்களிலிருந்து தப்பிக்க முடியும். ஏனெனில், நிறுவனமயமான மதங்கள் அவை. எகிப்தில் ஒரு கோப்டிக் கிறிஸ்துவப் பெண் தானாக மதம் மாறினால் கூட, அங்கிருக்கும் இஸ்லாமிய அரசு சர்ச்சுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறது, அந்தப் பெண்ணை மதம் மாற்ற தயக்கம் காட்டுகிறது (http://world.mediamonitors.net/content/view/full/12223). ஆனால், இந்து சமூகத்தில் நிறுவனமயமான தன்மை இல்லை. இருந்த நிறுவனமயமான தன்மை ஜாதி முறைதான், அது இப்போது உடைந்துவிட்டது. மீண்டும் அதை உருவாக்கவோ, பலப்படுத்தவோ சமூகம் திரும்பவும் கற்காலத்திற்கு செல்லவேண்டும். இத்தனையாண்டுகால முன்னேற்றத்தில் உடைந்த சாதி அமைப்பை திரும்ப மீட்பது மீண்டும் மாட்டு வண்டியில் பயணிப்பது போல என்பதை கிட்டத்தட்ட ஒட்டு மொத்த சமூகமும் உணர்ந்து இருக்கிறது. சமயத்தில் ஜாதி முறையை ஆழ்ந்து கவனிக்கும்போது அது அப்படியே ஆபிரகாமிய மதங்களையொத்து இருப்பதாகக் கூட எனக்கு புலப்படுகிறது. ஒரு பிற்போக்குத்தனம்தான் இன்னொரு பிற்போக்குத்தனத்தை தடுத்து நிறுத்த வல்லதாக இருக்கிறது. இதுதான் இயற்கையின் நியதி போலும்.

இந்நிலையில், இந்துக்களில் பாதுகாப்பாக உணர்வது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற இந்துத்துவ அமைப்புகளில் இருப்பவர்கள் தாம். அங்கேதான் இஸ்லாமிய அச்சுறுத்தல்களை தாங்குகிற, திருப்பித் தாக்குகிற வலு இருக்கிறது. அப்படியும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் தெளிவாக தாங்கள் ஒரு கட்டத்தை மீறி வன்முறையை கையிலெடுக்க மாட்டோம் என்கிறார்கள். அப்படி எடுத்து அழிந்துபோன இயக்கங்களை, கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் கம்யூனிஸ்டுகளுடன் மோதி ஒட்டு மொத்த சக்தியும் அதிலேயே சென்று விட்டதை உதாரணமாகக் காட்டி, ஒட்டு மொத்த சமுதாயமும் முன் வந்தால் ஒழிய, எதுவும் செய்ய தாங்கள் தயாராக இல்லை என்று மறுக்கிறார்கள். அப்படியே இந்துத்துவ இயக்கங்களை சார்ந்து நிற்க முயன்றால், அதற்கு அங்கும் நமது சுய விமர்சனங்களை விட்டுவிட்டு ஒரு சட்டகத்தினுள்ளே வரவேண்டியிருக்கும். இப்படி ஒரு இக்கட்டான நிலையில் தான் இந்து சமூகம் இருக்கிறது இன்று. இதை வேறெவரையும் விட என்னால் முழுமையாக உணரவும் புரிந்து கொள்ளவும் முடிகிறது. நிறுவனமயமான மதங்கள் தொடுக்கும் தாக்குதலில் இருந்து தப்பிக்க இரண்டே வழிகள் தான் தென்படுகின்றன. ஒன்று, கற்காலத்திற்குப் போவது. இரண்டாவது நமது மனிதத்தை, சுய சிந்தனையை ஒரு நிறுவனத்திற்கு அடகுவைத்து தற்காத்துக் கொள்வது.

***

அவரது எல்லா புகழ்ச்சி வசனங்களையும் மீறி, கமலாதாஸ் இஸ்லாத்தை புகழ்ந்தது வேறு வழியில்லாமல் தான் என்று தோன்றுகிறது. இது உண்மையாக இருக்கலாம் அல்லது எனது, ஜெயமோகனின், தஸ்லீமா நஸ்ர் ரீனின், கோடானுகோடி நபர்களின் கற்பனையாகக் கூட இருக்கலாம். ஆனால், கமலா தாஸ் தொடர்ந்து பலரிடம் பொய் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. முதலில் தான் இனி சுரையா இல்லை மாதவிக்குட்டிதான் என்றார், பின்பு அச்சுறுத்தல்கள் வந்தவுடன் பல்டி அடித்தார். தஸ்லீமாவை வரவேற்று அவரிடம் தான் முஸ்லீமாக மாறியது குறித்து வருந்தினார். பின்பு தனது சமீப நூலை இஸ்லாமிய சமூகத்தின் அச்சுறுத்தல்கள் காரணமாக தள்ளி வந்து கனடாவில் வெளியிடுகிறேன் என்றார், இப்படி தொடர்ந்து அவர் தனது எதிர்ப்பை மறைமுகமாவது வெளிப்படுத்தினார்.

அவர் மனதிற்குள் கமலாதாஸாக இருந்தாரா அல்லது சுரையாவாக இருந்தாரா என்பது அல்லாஹ்வுக்கே வெளிச்சம். ஆனால், வெளி உலகிற்கு முஸ்லீமாகவே இருந்து மறைந்தார். இது உண்மை. வேறு வழியின்றி உள்ளே மாட்டிக்கொண்ட பிறகு, அதை நியாயப்படுத்திக்கொள்ள ஜகாதைப் பற்றியெல்லாம் சொல்லி கமலாதாஸ் தம்மை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கக் கூடும். ஆயினும், கமலாதாஸின் செயல்பாடுகள் அவரது உள்ளத்தடுமாற்றத்தை, அடக்குமுறையை முழுவதும் ஏற்க முடியாத தன்மையை தெளிவாகக் காட்டுகின்றன. இதைப் போலவே பல சுரையாக்கள் முஸ்லீம் முஹல்லாக்களுக்குள் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. மதம் இத்தனை அடக்குமுறைகளையும் மீறி பெண்களை முழுமையாக அடக்கிவிட முடியவில்லை. ஆண்களுக்கு இல்லாத தைரியம், துணிச்சல் இப்படி பல இஸ்லாமிய பெண்களுக்கு இருக்கிறது. தெருவுக்கு தெரு தஸ்லீமாக்கள், சுரையாக்கள், சல்மாக்கள், வாஃபா சுல்தான்கள், ஹிர்ஸி அலிகள் இருக்கின்றார்கள். பொது சமூகம் இவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதைப் பொறுத்தே இவர்கள் வெளிப்படையாக தங்கள் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்த முடியும்.

நேசகுமார்

http://islaamicinfo.blogspot.com
http://nesamudan.blogspot.com

—-

குறிப்பு:

(1) மேலே சுட்டியுள்ள மரியானா பாபரின் கட்டுரையில், அவர் நேர்முகம் காணும் பீர் இவ்வாறு சொல்கிறார்,”In many cases Hindu girls are kidnapped and kept as keeps. But these keeps are not converted. But believe me, they are very happy.”

இதற்குப் பின்னாலும் முஹமதின் சுன்னாஹ் இருக்கிறது. முஹமது ஜிஹாதில் பிடிக்கப்பட்ட மாற்று மதத்தவர்களின் மனைவியரை, மகள்களை, அவர்கள் முஸ்லீமாக மாறவில்லை என்றால், அடிமையாக வைத்துக் கொண்டார். ரைஹானா என்ற யூதப்பெண்ணின் தந்தையையும், சகோதரர்களையும் கொன்ற பிறகு அப்பெண்ணை முஹமது பிடித்து அடிமையாக வைத்துக்கொண்டார். மதம் மாறாத காரணத்தினால் சாகும் வரை அப்பெண் அடிமையாகவே இருந்து இறந்தாள்.

அடிமைகளுடன் அவர்களது விருப்பத்தையும் மீறி உறவு கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கின்றது. முஹமது, அவரது மருமகன் அலி ஆகியோர் இவ்வாறு அடிமைப்பெண்களுடன் உறவு வைத்துக்கொண்டதை இஸ்லாமிய வரலாற்றிலும் பார்க்க முடிகிறது. முஹமது தன்னுடைய கோப்டிக் கிறிஸ்துவ அடிமை மிரியத்துடன் உறவு வைத்துக்கொண்டார், ரைஹானா என்ற யூதப்பெண்ணை அடிமையாக வைத்துக்கொண்டார். அலி முஹமதுவே கடவுளினால் மனித குலத்துக்கு அனுப்பப்பட்ட அழகிய முன்னுதாரணம் என்ற (குரான் வசனம்) நம்பிக்கையினால், இந்த செயல்களை எல்லாம் முஸ்லீம்கள் கடவுளால் அனுமதிக்கப்பட்டவை என்று நம்பி எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் இருக்கின்றனர்.

Series Navigation

நேச குமார்

நேச குமார்

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 5(1)

This entry is part [part not set] of 36 in the series 20090611_Issue

நேசகுமார்



கடந்த திண்ணை இதழில் வஹ்ஹாபி என்ற பெயரில் எழுதும் இஸ்லாமிய சகோதரர் கமலாதாஸ்/சுரையா/மாதவிக்குட்டி இஸ்லாத்தை புகழ்ந்து பேசியதை குறிப்பிட்டுள்ளார். அப்படி எழுதும்போது, எழுத்தாளர் ஜெயமோகன், தமது வலைத்தளத்தில்( http://jeyamohan.in/?p=2819) கமலாதாஸ் இஸ்லாத்துக்கு மதம் மாறியது குறித்து வருந்தியதை விவரித்து எழுதியுள்ளது தவறு என்றும் வாதிட்டுள்ளார்.

இது இஸ்லாத்தில் ஒரு முக்கியமான அம்சம். இஸ்லாம் துவங்கிய நாள் முதல் அது ஒரு வழிப்பாதையாகவே இருந்து வந்துள்ளது. உள்ளே எப்படியும் வரலாம் – கீழே கண்ட வகைகளின் மூலமாக

1.இஸ்லாத்துக்கு சம்பந்தமே இல்லாத சூஃபியிஸம் மூலமாக (ஏ.ஆர்.ரஹ்மான்),
2.கழுத்திற்கு கத்தி வந்தவுடன் (அபூ சூஃப்யான் இஸ்லாத்துக்கு வந்தது போல),
3.அரசியல் காரணங்களுக்காக ,
4.ஜிஸ்யாவிலிருந்து தப்பிப்பதற்காக(அவுரங்கசீப் காலத்தில் ஏராளமான இந்துக்கள் மதம் மாறியது போல) ,
5. சிறைத்தண்டனைக் கைதிகள் அதிலிருந்து விடுபடுவதற்காக (சவுதி அரசாங்கம் இன்றும் இதை செய்கிறது),
6.திருமணத்திலிருந்து வெளியேறுவதற்காக (சமீபத்தில் ஹரியாணாவின் துணை முதல்வராக இருந்த சந்தர் மோகன் சந்த் முஹம்மதுவாக மாறி அனுராதாவை பாலை ஃபிசா(Fiza)வாக மாற்றி நிக்காஹ் செய்து கொண்டது போல),
7.காதல் ஜிஹாத் மூலமாக(மசூதிகளில் இதற்கு ரேட் நிர்ணயம் செய்திருக்கிறார்கள் – காதலித்து மதம் மாற்றி பெண்களை இஸ்லாத்திற்குள் கொண்டு வருவதற்காக),
8. ஜாதி முறைகளிலிருந்து தப்பிப்பதற்காக (மீனாட்சிபுரம்),
9. எஜமானர்களிடமிருந்து, அடிமை முறையிலிருந்து தப்பிப்பதற்காக(பிலால்)

(குறிப்பு: கடைசியில் இருக்கும் இரண்டு முறைகளிலும் ஷரீயத்து என்ன சொல்கிறது என்றால், ஒரு தலித் தன்னைவிட மேலே ஜாதிப்படிநிலையில் இருப்பவர்கள் முஸ்லீமாக இல்லாத பட்சத்தில் முஸ்லீமாக மதம்மாறி ஜாதி ஒடுக்குமுறைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், மேல் ஜாதிக்காரர்கள் முதலில் இஸ்லாமியர்களாக மதம் மாறினால், அவர்களுக்கு தமது ஜாதி மேலாண்மையை தக்கவைத்துக்கொள்ள அனுமதி வழங்குகிறது – பாகிஸ்தானில் இதனால் தான் இன்னமும் மேல் ஜாதி முஸ்லீம்கள் சகலவித ஒடுக்குமுறைகளையும் செய்துகொண்டு மேல் ஜாதியினராகவே இருக்கின்றார்கள். எல்லா பாகிஸ்தான் பிரதமர்களும், இராணுவ தளபதிகளும், அரசு அதிகாரிகளும் மேல் ஜாதி முஸ்லீம்களே – அடிமை முறையிலும் இதே சட்டம் தான். முஸ்லீம் எஜமானரிடமிருந்து அடிமை தப்பித்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியாது. முஸ்லீம் எஜமானரே மனதுவைத்து போனால் போகிறது என்று கொடுத்தால் தான் உண்டு. காஃபிர் எஜமானரிடமிருந்து தப்பி வருபவர்களுக்கே இஸ்லாம் விடுதலை வழங்குகிறது. முஹமதிடமே சாகும் வரை தலித் அடிமைகள் இருந்தனர்).

***

இப்படி உள்ளே எப்படியும் வரலாம். மேலே சொன்னதுபோல எப்படியும் இஸ்லாத்துக்கு உள்ளே மானுடர்களை கொண்டு வருவதை இறைக்கடமையாக நினைத்து உலகெங்கும் வெறித்தனத்துடன் பல இஸ்லாமிய இயக்கங்கள் இயங்கியும் வருகின்றன. இவற்றிற்கு தற்போது அரபு நாடுகளிலிருந்து ஏராளமான பணமும் வருகின்றது. ஆனால், இப்படி உள்ளே வருபவர்கள் வெளியே எப்படியும் போக முடியாது. அதற்கு அல்லாஹ்வின் தண்டனை – தலையை வெட்டுவதுதான். அதனால் தான், இஸ்லாத்துக்கு உள்ளிருந்தே எதிர்ப்பை தெரிவிக்கும் முறை தோன்றியது. சூஃபியிஸம், ஷியா இஸ்லாம், அஹமதியா இஸ்லாம், பஹாய் இஸ்லாம் போன்றவற்றில் இந்த முறையைக் காணலாம். ஷியாக்கள் ஹஜருல் அஸ்வத்தை கைப்பற்றி பஹ்ரைனுக்கு எடுத்துக் கொண்டு போய் உடைத்தாலும், அவர்களால் தாங்கள் தங்களது பாரம்பரிய மதத்துக்கு திரும்பிவிட்டோம் என்று வெளிப்படையாக அறிவிக்க முடியவில்லை. மூடத்தனம் மூர்க்கமாய் உடைந்து போன அணை வெள்ளம் போன்று செல்லும்போது அந்த நீரோட்டத்தை சுய சிந்தனையுள்ள தனிநபர்கள் அல்லது சிறு குழுக்கள் எப்படி எதிர்க்க முடியும்? வெளிப்படையாய் முக்காடு போட்டுக்கொண்டு உள்ளே குமைந்து கொண்டு இருக்க மட்டுமே முடியும்.

இதுதான் கமலா தாஸ் விஷயத்திலும் நடந்தது. வஹ்ஹாபியின் கட்டுரையிலேயே அதற்கு சான்றுகள் இருக்கின்றன. எப்போதும் அடிப்படைவாத முஸ்லீம் அடியாட்கள் எட்டுபேர் கூட இருக்கும் நிலையில் வயதான ஒரு பெண்மணிக்கு, அதுவும் நிறுவனப்படாத ஒரு மதத்தில், சமூகத்தில் இருந்து வரும் ஒரு கலகக்காரப் பெண்மணிக்கு மனதில் தோன்றியதை வெளிப்படையாக சொல்ல எப்படி தைரியம் வரும்? அல்லது அப்படி சொல்லி கடைசி காலத்தில் எந்தவொரு இஸ்லாமிய அடிப்படைவாதியினால் கழுத்தறுபட்டு சாக யாருக்குத்தான் விருப்பமிருக்கும்? விதியை நொந்துகொண்டு, எல்லாவற்றையும் விழுங்கிக்கொண்டு, ‘எல்லாம் புகழும் அல்லாஹ்வுக்கே’ என்று புன்சிரிப்புடன் சொல்ல வேண்டியதுதான். அதைத்தான் கமலாதாஸ் செய்தார்.

ஆயினும், இதனூடாகவே தனது எதிர்ப்பையும் மறைமுகமாக காட்டவும் தவறவில்லை. அதனால் தான் இஸ்லாத்துக்கு எதிரான தனது கருத்துக்களை வெளிப்படையாக முன்வைத்த தஸ்லீமா நஸ் ரீனை தனது வீட்டிற்கு வெளிப்படையாக வரவேற்று அவரிடம் தான் ஒரு முஸ்லீமிடம் காதல் வயப்பட்டு அதன் காரணமாகவே மதம் மாறியதாகவும் அதற்கு தாம் இப்போது வருந்துவதாகவும் தெரிவித்திருக்கிறார். திருவனந்தபுரத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தஸ்லீமா இதைத் தெரிவித்த செய்தி அப்போது பல பத்திரிகைகளிலும் வெளிவந்தது. இப்போதும் இணையத்தில் இருக்கிறது (http://ibnlive.in.com/news/islam-is-history-says-taslima/19373-3.html).

***
கமலாதாஸை சுற்றி என்.டி.எஃபின் அடியாட்கள் இருக்கும்போது, வயதான ஒரு பெண்மணியிடம் அவரை கொல்ல ஆட்கள் தயாராக இருக்கிறார்கள், விஷம் வைத்து கொல்லப்போகிறார்கள் என்றெல்லாம் ஃபோபியாவை ஏற்படுத்தி, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ‘பாதுகாப்பு’ கொடுக்கும்போது, ஒரு வயதான பெண்மணியால், ‘தான் இந்த தலைவெட்டி கல்ட்டிற்குள் உள்ளே வந்து மாட்டிக்கொண்டு அவஸ்தைப் படுகிறோம்’ என்பதை வெளிப்படையாக எப்படி சொல்ல முடியும்? மிரட்டலையும் விட மோசமானது அன்பான அரவணைப்பு. கமலாதாஸ் மதம் மாறிவிட்டார் என்றவுடன் சாரி சாரியாக வீட்டிற்கு படையெடுத்துவிட்டார்கள் இஸ்லாமிய ஆண்கள், பெண்கள். தன்னை வந்து பார்ப்பதே பாக்கியமாக பல இஸ்லாமிய பெண்கள் கருதுவதாக கமலாதாஸ் தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தானில் இது தொடர்ந்து நிகழ்வதை பார்க்க முடியும். முஸ்லீம் ரவுடிகள் இந்து பெண்களை கடத்திச் சென்று வலுக்கட்டாயமாக மதம் மாற்றி நிக்காஹ் புரிந்து கொள்வார்கள். பின்பு அந்தப் பெண்களின் பெற்றோர்கள் போலீஸ், கோர்ட் என்று அலைந்து, பத்திரிகைகள், என்.ஜி.ஓ அமைப்புகள் என்று போராடி அந்தப் பெண்கள் கோர்ட்டிற்கு அழைத்து வரப்படும்போது இஸ்லாமிஸ்டுகள் கும்பலாக கூடி நின்று அந்தப்பெண்கள் கடவுளின் மார்க்கத்திற்கு வந்துவிட்டதாக கூக்குரலிட்டு, அல்லாஹ்வைப் புகழ்ந்து கோஷமெழுப்பி அவர்கள் மீது பூக்களைத் தூவுவார்கள். அந்த அப்பாவி பெண்களால் என்ன சொல்ல முடியும்? தான் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு, வன்புணரப்பட்டதை, மதம் மாற்றப்பட்டதை சொல்லி மதம் திரும்பவும் முடியாது, ஏனெனில் இஸ்லாம் ஒரு வழிப்பாதை. சட்ட ரீதியாக பாதுகாப்பு கொடுத்தால் கூட , ஈமான் இதயம் முழுவதும் நிரம்பிய எதாவது ஒரு அடிப்படைவாதி கடவுளின் கட்டளையை நிறைவேற்றுவதாகக் கருதிக்கொண்டு கழுத்தை அறுத்துவிடக் கூடும். சொந்த சமூகத்திலோ சாகும்வரை இது ஒரு களங்கமாக பார்க்கப்படும். சொந்த தாயையும், தகப்பனையும் பார்ப்பதைக் கூட இஸ்லாம் அனுமதிப்பதில்லை – ஏனெனில் அவர்கள் காஃபிர்கள், மதம் மாறியவுடன் ஒரு முஸ்லீமுக்கு தனது முந்தய சமுதாயத்துடனான உறவு முழுவதுமாக அறுந்துவிடுகிறது. உள்ளே இருப்பவர்களையே தீட்டானவர்கள்/அசுத்தமானவர்கள்/நஜூஸிகள் என்று கடவுள் சொல்லியிருப்பதாக நம்பும் இவர்கள், காபிர்களை அவர்கள் தந்தைதாயாக இருந்தபோதிலும் பக்கத்தில் வரக்கூட விடுவதில்லை (http://blog.taragana.com/n/sindh-court-asks-police-to-produce-hindu-girls-on-april-9-21775/).

எனவே, இவர்கள் உள்ளேயே ஒருவருக்கொருவர் விற்கப்பட்டோ அல்லது ஒரு இஸ்லாமிய ஆணுக்கு மூன்றாம் அல்லது நாலாந்தாரமாகவோ ஆகி கடைசியாக அந்தப்பெண்கள் எல்லாம் வேறு வழியின்றி இஸ்லாமிய சமூகத்தில் அடைக்கலமாகி விடுகின்றனர். இப்படி இஸ்லாத்துக்கு மதம் மாறாதவர்கள் கடைசி வரை செக்ஸ் அடிமையாக, வைப்பாட்டியாக இருக்க வேண்டியதுதான்(1). இது சம்பந்தமாக மரியானா பாபர் அவுட்லுக்கில் எழுதிய விரிவான கட்டுரை இந்த விவரங்களை விளக்குகிறது(http://www.islam-watch.org/MarianaBaabar/HindusInPakistan.htm).

***

Series Navigation

நேச குமார்

நேச குமார்

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 4 (காபா ஆலயத்தின் தூண்கள் மற்றும் கறுப்புக் கல்)

This entry is part [part not set] of 27 in the series 20090604_Issue

நேசகுமார்.


கடந்த திண்ணை இதழில், சமகாலத்தய இலக்கியவாதியும், இலக்கிய விமர்சகர் என்று இந்தியா முழுவதும் அறியப்படுபவருமான திரு.வெங்கட் சாமிநாதன் காபாவின் உள்ளே இருக்கும் கம்பத் தெய்வங்கள் பற்றி நான் குறிப்பிட்டுருப்பதை குறித்து எழுதியிருக்கிறார். அதைப் பற்றி நான் மெல்லத் தொட்டுவிட்டு முழுவதுமாக பின்பு தனியே எழுதுகிறேன் என்றும் சொல்லியிருந்தேன்.

உள்ளே செல்வதற்கு முன்பாக ஒரு விஷயத்தை நான் சொல்லிவிட வேண்டும். இந்த ‘இறையுதிர் காலம்’ என்ற சொல்லை முதன் முதலில் தன்னுடைய எழுத்தில் பயன்படுத்தியது சக தமிழ் எழுத்தாளரும், இறையியல் ஆய்வாளருமான திரு. அரவிந்தன் நீலகண்டன். இப்பதத்தை உருவாக்கியதற்கு அவருக்கு எனது நன்றிகள், இதை சுட்டிக் காட்டிய கால்கரி சிவா அவர்களுக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

***

முதலில் இந்த ஆய்வின் அவசியம் என்ன என்பது குறித்த கேள்வி இயல்பாகவே எழும். காபாவின் உள்ளே என்ன இருக்கிறது, இல்லை, இதன் ஆரம்பம் என்ன, இது உருமாறியது எவ்வாறு, மதங்கள் குறித்த ஆய்வு அவசியமா என்ற ஏராளமான கேள்விகள் எழுவதும் இயல்பானதே.

இந்த கேள்விகளுக்கு விடை கண்டுபிடிப்பது, நம்மை மனிதர்களாக மாற்றும். இயல்பான வரலாற்று நிகழ்வுகளை, விபத்துகளை, இயற்கையான விஷயங்களை அமானுஷ்யமாக கருதுவதும், அது நமது கண்ணுக்கு தெரியாத நல்ல/தீய சக்திகளால் நிகழ்கிறது என்று நம்புவதும், மனிதர்களை மிருகங்களாக மாற்றிவிடுகின்றன. இன்றும் சூனியக்காரிகள் என்று குற்றம் சுமத்தப்பட்டு மத்திய பிரதேச வனாந்திரங்களில், மலைவாழ் குழுக்களிடையே கொல்லப்படும் பெண்மணிகள் இருக்கின்றனர். மத்திய காலத்திலோ, இங்கிலாந்து போன்ற பிரதேசங்களில் கூட தெருவுக்கு தெரு சூனியக்காரிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். அறியாத விஷயங்களைப் பற்றிய பயம், அறியாமையே இந்த குற்றச்செயல்களில் ஈடுபட மனிதர்களைத் தூண்டுகின்றன. இதற்கும் இன்று நடக்கும் குண்டு வெடிப்பு – கொலை – கலவர ஜிஹாதுக்கும் வித்தியாசமொன்றுமில்லை.

இதுவும் தமது மதமென்று நம்புவது அமானுஷ்ய சக்தி ஒன்றால் உருவாக்கப்பட்டது. இதில் இருக்கும் ஒவ்வொன்றும் பலம் கொண்ட ஒரு சக்தியின் செயல். மதமென்று கருதுவதை மீறுவது, அது மானுடத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும், கடவுளுக்கு எதிரானது என்ற கருத்து வலுவாக பிடித்துக் கொண்டு மனிதர்களை ஆட்டுவிக்கின்றது. கண்ணுக்கு முன்னே இருக்கும் இந்த வாழ்க்கையை சுகமானதாக, வளமானதாக, நாலு பேருக்கு நல்லது செய்வதாக ஆக்கி, நிம்மதியாய் இருப்பதை விட்டுவிட்டு எப்போதோ இறந்தபின்பு கிட்டப்போகும் சொர்க்க வாழ்க்கையைப் பற்றிய கனவில் வன்முறைக்கு வாழ்க்கையை தொலைத்துவிட்டு தங்களையும் வருத்திக்கொண்டு பிறரையும் வருத்துகிறார்கள் மதவாத நோயால் பீடிக்கப்பட்ட மனிதர்கள்.

***

காபாவின் உள்ளே தற்போதும் மூன்று தூண்கள் உள்ளன. அவை உத்திரத்தை தொடுவதில்லை. முஹமது அவர்கள் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் பாகன்களின் பல வழக்கங்களை அங்கீகரித்தார். அவற்றுள் இந்த காபாவின் தன்மையுடன் இணைந்த கம்ப தெய்வ வழிபாடு, ஹஜருல் அஸ்வத் என்ற கறுப்புக் கல் (ஹூபல் கடவுள்) வழிபாடும் அடங்கும். மற்ற இடங்களில் இவை நீக்கப்பட்டுவிட்டாலும், முஹமது அங்கீகரித்தபடியால் அவை காபாவில் இன்றும் இருக்கின்றன.

***

கம்ப தெய்வ வழிபாடு என்பது யூத மதத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தது. இஸ்லாத்தில் நிகழ்ந்த அனைத்தும் யூதமதத்தை பின்பற்றி ஏற்படுத்தப்பட்டவையே.

யூத மதத்தில், ஆரம்ப கால கட்டத்தில் ஜெஹோவா என்ற ஆண் கடவுளுக்கு இணையான கடவுளான அஷெரா என்ற பெண் தெய்வம் இருந்தது. இந்த பெண் தெய்வம் மத்திய கிழக்கில் பல பெயர்களில் வழிபடப்பட்டது. அல்லாத் என்ற பெயரும் அதில் ஒன்று. அரேபியாவில் முழுவதும் ஒழித்துக் கட்டப்பட்டுவிட்ட அல்லாத்தின் படங்கள் எகிப்தில், பிற பிரதேசங்களில் அகழ்வாராய்சிகளில் கண்டெடுக்கப் பட்டிருக்கின்றன.

இந்த அல்லாத் தேவியை மூன்று தேவிகளுள் ஒருவராக வழங்குவதும் யூத மதத்தின் ஆரம்ப காலத்தில் இருந்த முறையே. அதுவே, அரேபியாவில் அல்லாத் – மனாத் – உஸ்ஸா வழிபாடாக இருந்தது. இந்த அல்லாத் தேவி எழுச்சியை காட்டக் கூடிய ஒரு கம்பமாக, கனிகள் தரக்கூடிய மரமாக உருவகப்படுத்தப் பட்டாள்.

***

காபா என்பதும் இஸ்லாத்தில் தோன்றியதல்ல. மத்திய கிழக்கில் வழிபடப்பட்ட இறையில்லங்களின் பெயர்கள் காபாக்கள். ஜோர்டானில் இருக்கும் பெத்ரா காபாவின் பல படங்களை இணையத்தில், ஜோர்டான் அரசின் அதிகாரபூர்வ இணைய தளத்திலேயே காண முடியும். அவை மெக்கா நகரின் காபாவைப் போன்ற சதுர வடிவிலேயே அமைந்திருப்பதையும் காண முடியும்.

இஸ்லாமை முகமது தோற்றுவிப்பதற்கு முன்பான காலகட்டத்தில் காபா எனும் சதுரவடிவ ஆலயங்கள் அரேபியாவில் பல இடங்களில், குறிப்பாக அரபி பாலைவனத்தில் நீர்நிலை இருக்கும் வியாபாரத்தலங்களில் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்த ஜோர்டான் (பெத்ரா) காபாவில், மெக்காவின் காபாவில் இருப்பதைப் போன்றே ஹூபல்/அல்லாஹ் கடவுளை நீள் வடிவ உருவமாக சித்தரித்து சிற்பமாக செதுக்கியுள்ளதையும் காண முடிகிறது.

இந்த காபாக்களுள் என்ன இருந்திருக்கும் என்பது குறித்த யூத கற்பனைகள் பல இருந்தன. இன்று தொல்பொருள் ஆய்வில் அதற்குள் இருந்தவற்றை கண்டுபிடித்துள்ளனர். அநேகமாக எல்லா இடங்களிலும் (பெத்ரா, கெஸல் இன்னபிற), காபாவில் பெண் தெய்வமாக வணங்கப்பட்ட கம்பங்கள் இருந்ததை அகழ்வாராய்ச்சியில் கண்டெடுத்துள்ளனர். இயேசு கிறிஸ்து பிறக்கும் முன்புவரை இந்த காபாவின் நகலான பெட்டகம் யூதர்களின் வழிபாட்டு முறையில் முக்கிய இடம் பிடித்தது. இதை உடன்படிக்கை அடங்கிய பெட்டி என்று யூதமதம் குறிப்பிடுகிறது(Ark of Covenant). ஆனால், இந்த பெட்டியில் இருந்தவற்றுள் முக்கியமான ஒன்று இந்த பெண் தெய்வ வழிபாட்டு உருவகமான கம்பம்/மரத்தின் வடிவு.

இந்த பெட்டி-காபாவின் மீது கடவுள் அமர்ந்திருப்பதாக கருதப்பட்டது (தற்போதைய இஸ்லாத்திலும் அந்த நம்பிக்கையே திரிந்து, காபாவிற்கு மேலே ஏழு வானங்களுக்கப்பால் கடவுள் அமர்ந்து உலகை பரிபாலிப்பதாக சித்தரிக்கப்படுகிறது).

மெக்காவின் காபாவிற்கு (அதாவது பாகன் அரபிகளின் ஆலயத்திற்கு) யூதர்கள் எப்படி பாகன்களிடமிருந்து கடன் வாங்கியதற்கு ஏகத்துவ சாயல் கொடுத்தார்களோ அதே போன்றதொரு புராண கதையை முஹமதுவும் கொடுத்தார்.

“Moses was directed to consecrate the Ark, when completed, with the oil of holy ointment (Ex. 30:23-26); he was also directed to have the Ark made by Bezalel, son of Uri of the tribe of Judah, and by Aholiab, the son of Ahisamach of the tribe of Dan (Ex. 31:2-7). These instructions Moses carried out, calling upon every “wisehearted” one among the people to assist in the work (Ex. 35:10-12). Bezalel the artist made the Ark (Ex. 37:1); and Moses approved the work, put the testimony in the Ark, and installed it.”

http://en.wikipedia.org/wiki/Ark_of_the_Covenant

இந்த காபாவை/பெட்டியை மோஸஸ் ஸ்தாபித்ததாக யூதர்களிடையே இருக்கும் புராணக்கதைபோல, இபுறாகீம் நபி மெக்காவின் காபாவை கட்டியதாக இஸ்லாமியர்களிடையேயும் நம்பிக்கை எழுந்தது.

யூதர்கள் தாக்குதலுக்குள்ளான சமயத்தில் தமது சமய வழிபாட்டு அம்சமான காபாவை பெட்டியாக தூக்கிச் சென்றது எங்கோ யூத சமய வழிபாட்டு அம்சமாக மாறி பெட்டியாக சுருங்கியுள்ளது. இது ஆயுவுக்குரியது.

***
இந்த பெட்டியினுள் நின்ற நிலையில் கம்பம் இருந்தது என்பதை யூத நூல்களில் காண முடிகிறது.

In Numbers 17, Korah’s rebellion against Moses’ proclamation of the tribe of Levi as the priesthood has been quashed and the entire congregation’s ensuing rebellion has resulted in a plague, ended only by the intercession of Moses and Aaron. In order to “stop the complaints” of the Israelites, God commands that each of the Twelve Tribes provide a rod; and only that of the tribe chosen to become priests will miraculously sprout overnight. Aaron provides his rod to represent the tribe of Levi, and “it put forth buds, produced blossoms, and bore ripe almonds” (Numbers 17:8), as an evidence of the exclusive right to the priesthood of the tribe of Levi. In commemoration of this decision it was commanded that the rod be put again “before the testimony” (Numbers 17:10). According to tradition, the rod of Aaron bore sweet almonds on one side and bitter on the other; if the Israelites followed the Lord, the sweet almonds would be ripe and edible, but if they were to forsake the path of the Lord, the bitter almonds would predominate. A later tradition asserts (Hebrews 9:4) that the rod was kept in the Ark of the Covenant. The main fact, however, is thus confirmed, that a rod was preserved in the Tabernacle as a relic of the institution of the Aaronic priesthood.

http://en.wikipedia.org/wiki/Rod_of_Aaron

யூத மதத்தில் தோன்றிய முக்கியமான ஒரு அம்சத்தை டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட் போன்றவர்கள் குறிப்பிடுகிறார்கள். அது, எதோ ஒரு காலகட்டத்தில் ஏகத்துவ சிந்தனை தோன்றி, ஒன்றைத் தவிர மற்றதெயெல்லாம் அழிப்பது – ஒரு கடவுள், ஒரு நபியைத் தவிர மற்றவர்களையெல்லாம் கொன்று அழிப்பது (பெண்கள், குழந்தைகள் உட்பட) கடவுளின் ஆணையாக ஆனது. அப்படி ஏற்கப்படும் அந்த ஒன்று, அந்த நபி தோன்றும் பகுதியில் அல்லது மதம் பரவும் பகுதியில் இருந்த பாகன் நம்பிக்கை/வழிபாட்டு முறையாக ஆனால், அந்த மதம் விடுவிடுவென்று பரவுவதற்கு ஏதுவாக அந்த பாகன் நம்பிக்கை/வழிபாட்டு முறை செயல்பட்டது.

இதற்கு நல்ல உதாரணம், கிறிஸ்துவத்தில் இருக்கும் கன்னிமேரி கடவுள். கிறிஸ்துவ அடிப்படையில் எவ்வித ஆதாரமும் இல்லையென்றாலும், பரவிய இடங்களில் இருந்த பாகன் கருத்துகள் ஊடுறுவியதால் ஏற்பட்ட இந்த வழிபாட்டு முறையே கிறிஸ்துவம் பெருமளவில் பரவுவதற்கு உறுதுணை புரிந்தது. அதே போன்றே சூஃபியிஸம் என்ற பாகன் வழிபாட்டு முறையே துரதிர்ஷ்டவசமாக பலரை இஸ்லாத்திற்குள் கொண்டுவந்து சேர்த்தது. வஹ்ஹாபி என்ற பெயரில் எழுதும் அன்பர், திலீப்குமார் ரஹ்மானானதை குறிப்பிட்டு ஜெய்ஹோ என்று முழங்குகிறார் திண்ணையில். ஆனால், திலீப்குமார் இஸ்லாத்தின் வட்டத்திற்குள் வந்தது இஸ்லாத்தால் இல்லை. தன் வீட்டில் சூனியம் வைத்துவிட்டார்கள் என்ற நம்பிக்கையில், அந்த சூனியத்தை நீக்கிய சூஃபி ஒருவரின் ஆளுமையால் இஸ்லாத்திற்குள் வந்தார். சூனியம்/சூஃபியிஸம் இரண்டையுமே வஹ்ஹாபிகள் இஸ்லாத்தால் ஏற்கப்பட்டது என்று ஏற்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

***

இதே போன்றே ஆபிரகாமிய மதங்கள், பாகன் வழிபாட்டு முறைகளில் சிலதை ஏற்று, அதை ஒரு இடத்தில் மட்டும் ஏற்பதும், மீதமுள்ள இடங்களில் நிராகரித்து அதே வழிபாட்டு முறையை தூற்றி கடவுளுக்கு எதிரானது என்று அழிப்பதும் வழக்கமாக இருக்கிறது. இந்த வழக்கத்தை அடியொற்றியே யூத பாரம்பரியத்தை எல்லா வகையிலும் ஏற்ற முஹமது, பாகன் அரபிகள் புனிதமாக வழிபட்ட கம்பங்கள், ஹஜருல் அஸ்வத் லிங்கம் ஆகியவற்றை மெக்காவில் இருக்கும் காபாவில் அனுமதித்து, மற்ற இடங்களில் அதே விஷயங்களை சைத்தானாக, கடவுளுக்கு எதிரானதாக விவரித்து அழிக்கச் சொன்னார்.

யூத மதத்தில் ஏகத்துவம் நுழைந்த போது ஜெஹோவா என்ற குழுத்தேவன் உயர்த்தப்பட்டு, அஷெரா விரட்டியடிக்கப் பட்டாள். கம்பம்/கனிகள் தோன்றும் மரமான fertility goddess ஒழித்துக் கட்டப்பட்டது. இதே போன்றதொரு நிகழ்வு இஸ்லாத்திலும் நிகழ்ந்தது. அரபிகளின் தெய்வங்களுள் தலையான தெய்வமான லா(ஹ்) கடவுள், ஏகத்துவ இறைவனாக ஏற்கப்பட்டு, அத்தெய்வத்தின் இணையாக அல்லது அத்தெய்வத்திடமிருந்து வெளிப்படும்(மகள்) சக்தியான அல்லாத் வழிபாடு ஒழிக்கப் பட்டது.

ஆனால், யூத மதத்தில் ஏனைய கம்பங்கள் அழிக்கப்பட்டு ஏகத்துவம் நிலைநாட்டப்பட்ட பின்பும், Ark of Covenant என்ற பெயரில் அழைக்கப்பட்ட பெட்டக காபாவில் இருந்த கம்பம் பாதுகாக்கப் பட்டது போலவே முஹமதாலேயும், பாகன் அரபிகளின் காபாவில் இருந்த கம்பத்தெய்வங்கள், ஹஜருல் அஸ்வத்(கறுப்புக் கல்) பாதுகாக்கப் பட்டது. முஹமதின் காலத்திற்குப் பின்பு வந்தவர்களுக்கு, இதற்குப் பின்னால் இருக்கும் இறையியல் புரியாவிட்டாலும், கடவுளின் தூதர் செய்யாத ஒன்றை தாம் செய்ய அஞ்சி அதை விட்டு வைத்தனர்.

***

இஸ்லாமியர்கள் ஏன் சாத்தானை கல்லால் அடிக்கின்றார்கள், ஏன் காபாவில் உள்ள அந்தக்கால சிவலிங்கத்தை இன்றும் முத்தமிடுகிறார்கள் என்றெல்லாம் கேட்டால் அதற்கு வெளியில் உள்ள முஸ்லீமல்லாதவர்களுக்கு உயர் விளக்கங்களை இட்டுக்கட்டி இஸ்லாமிஸ்டுகள் சொல்கிறார்களே தவிர, உள்ளே நிகழும் குத்பா பிரசங்கங்களில் உண்மையான அடிப்படையை பகிர்ந்து கொள்கிறார்கள். இதோ இந்த பிரசங்கம் அதை தெளிவுபடுத்துகிறது:

“You don’t need your scientific reasoning to tell you why you stone the devil, or kiss the black stone. The Prophet(s) did it, so just do it.”

http://issu1.stanford.edu/?q=node/45

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டில் படிக்கும் இஸ்லாமியர்களுக்கே இந்த அறிவுரை என்றால், எது உண்மை, எது அடிப்படை என்பது பற்றி எந்தக் குழப்பமும் வேண்டியதில்லை. எதை வணங்கவேண்டும் என்று தீர்மானிப்பது எங்கோ இருக்கும் லாஹ் கடவுள் அல்ல, அவரது தூதராக தம்மை சொல்லிக்கொண்ட முகமதுதான். முகமதின் சீடரும், தோழரும், மாமனாரும், இரண்டாவது காலிஃபுமான உமர் இப்படி சொல்கிறார்.

Volume 2, Book 26, Number 679: Narrated Zaid bin Aslam that his father said:
“I saw ‘Umar bin Al-Khattab kissing the Black Stone and he then said, (to it) ‘Had I not seen Allah’s Apostle kissing you, (stone) I would not have kissed you.’

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/026.sbt.html#002.026.679

முகமது வணங்கினார் என்றால், உமரும் வணங்குகிறார். ஆயிஷாவிடம் சஃபா மர்வா குன்றுகளை கிரிவலம் வரலாமா என்று முகமதின் மறைவுக்கு பின்பு சந்தேகம் கேட்டபோது, செய்யலாம் ஏனென்றால் முகமது அப்படி செய்தார் என்று அவர் பதிலளிக்கிறார். அதாவது முகமது செய்த உருவ வழிபாடுகளெல்லாம், ஏற்கப்படுபவையாகவும், அவர் செய்யாத ஒரு விஷயம் கடவுளுக்கு பிடிக்காததாகவும், கடவுள் அந்த வழிபாடுகளள ஏற்காததாகவும் இஸ்லாத்தில் கருதப்படுகின்றது. முகமது கடவுள் சொல்லியதாக சொன்னால், அது கடவுளின் சொல்லாகிறது. முகமதின் நண்பர்கள் இது தவறு என்று சுட்டிக்காட்டினால், அதை முகமது ஏற்று குரானின் வசனங்களை மாற்றினால் அது சாத்தானின் வேத வசனங்களாகிறது(லாத் தேவி வழிபாட்டை அபுபக்கர் தடுத்து நிறுத்தியதைப் போல). குரான் காலப்போக்கில் பல மாறுதல்களுக்கு உட்பட்டு, பல வசனங்கள் முகமதாலேயே திருத்தப்பட்டன. இதை நியாயப்படுத்த முன்பிருந்ததைவிட இன்னும் நல்ல குரான் வசனங்களை கொண்டு வருவோம் என்று குரானே சொல்கிறது. இஸ்லாத்தின் முக்கிய அடிப்படையான ஹதீஸ்களே கடவுளின் குணத்தை, கட்டளைகளை தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த ஹதீஸ்களில் பெரும்பாலானவை ஆயிஷா, அலி போன்று எதிரெதிராக சண்டையிட்டுக் கொண்ட முகமதின் குடும்பத்தார், தோழர்கள், பின்பு ஆட்சிக்கு வந்த கலீபாக்களால் தீர்மானிக்கப்படுபவை. ஆகவே, எது கடவுள் என்பதை தீர்மானிப்பது முகமதுவின் செயல்பாடுகள் தாம், பகுத்தறிவெல்லாம் அங்கே கிடையாது. ஆனால், ஒரு நம்பிக்கையை பகுத்தறிவு என்று முன்வைத்து, மற்றவர்களின் நம்பிக்கையை ஏளனம் செய்கின்றனர் இஸ்லாமிய அடிப்படைவாதிகள்.

***

ஆனால், இந்தியர்கள் தம் கண்முன் காணும் பல உன்னத ஆன்மீகவாதிகள் சொன்னதை ஏற்றார்கள், செய்ததை ஏற்றார்கள். முஹமது சொன்னதால் கல்லை மதிப்பது, முத்தமிடுவது ஏற்புடையதாகிறது என்றால், இராமகிருஷ்ண பரமஹம்சர், ரமணர் போன்ற அப்பழுக்கற்ற ஆன்மீகவாதிகள் சுட்டிக்காட்டிய கடவுளை கல்லில் வழிபட்டு கடவுளை அடைவது, மலையை சுற்றி வந்து அகமுன்னேற்றம் அடைவது ஆகியவையும் ஏற்கத்தக்கவைதானே என்று இந்துக்கள் கேட்கிறார்கள். இஸ்லாமியர்களோ தங்களது உருவ வழிபாடுகள் உருவ வழிபாடுகளே இல்லை என்றும், மற்றவர்களின் உருவகங்கள் உருவ வழிபாடு என்றும் நம்பி வருகின்றனர்.

***

கல்லில் கடவுள் இருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பும் இஸ்லாமியர்கள் ஒன்றை கவனிப்பதில்லை, சொல்வதில்லை. அது, கல்லில் சாத்தான் வசிக்கிறது, பெண் தெய்வங்கள், ஜின்கள் வசிக்கின்றன என்ற இஸ்லாமிய நம்பிக்கை. முஹமதின் தோழர்கள் அவரது உத்தரவின் போது பெண் தெய்வச்சிலைகளை உடைத்தபோது அந்த சிலைகளிலிருந்து கறுப்பாக, தலைவிரி கோலமாக பெண் தெய்வங்கள் ஓடியதை கண்டதாக ஹதீஸ்கள் சொல்கின்றன. முஹமதே கடவுள் சிலைகளை காபாவில் உடைத்தபோது, அவற்றின் கண்ணை குத்தினார் – ஏனெனில் அதில் இருந்த சாத்தானின் கண்கள் குருடாகிப் போகுமென்று! கல்லில் கடவுள் இல்லை என்றால், கல்லில் சாத்தான் மட்டும் எப்படி வசிக்க முடியும்?

தற்போதும் கம்பத் தெய்வத்தை சைத்தான் என்று கருதி கல்லால் அடிக்கும் வழக்கம் ஹஜ்ஜுக்கு செல்லும் இஸ்லாமியரிடையே இருக்கிறது. யூத மதத்தில் இந்த கம்பங்களை எரிப்பதும், மரங்களை வெட்டி வீழ்த்துவதும் சைத்தானை ஒழித்துக் கட்டும் உன்னத செயலாக கருதப்பட்டது. இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் முஹமதின் கட்டளையின் பேரில் அவரது சஹாபிகள் இப்படி தெய்வங்களாக க்ருதப்பட்ட மரங்களை வெட்டினர்.
பிற்காலத்தில் வஹ்ஹாபிகள் தலையெடுத்த போது அவர்களும் மரங்களை சைத்தானின் குறியீடு என்று குற்றம் சாட்டி வெட்டிச் சாய்த்தனர்.

***

இஸ்லாமியர்கள் ஏன் கடவுளை அல்லாஹ் என்று குறிப்பிடவேண்டும், ஏன் வேறு பெயர்களில் குறிப்பிடக் கூடாது என்று கேட்டால், பலவித சால்ஜாப்புகளை சொல்வார்கள். அதிலொன்று அல்லாஹ் என்பதற்கு பெண் பால் அரபியில் கிடையாது என்று. அது தவறு. மேலே குறிப்பிட்டுள்ளது போன்று அல்லாத் என்ற பெண் தெய்வம் அல்லாஹ்வைப் போலவே அன்றைய அரேபியாவில் இருந்திருக்கிறது. அத்தெய்வங்களுள் ஆண் தெய்வத்தை மற்றும் ஏற்று, பெண் தெய்வத்தை ஷைத்தானாக விரட்டியது இஸ்லாம். அடிப்படையில் ஆணை மயக்கி சொர்க்கத்திலிருந்து தள்ளியது பெண்ணே என்ற யூத கருத்தாக்கமே இது போன்று பெண்களை தெய்வங்களாகவோ, நபிகளாகவோ ஏற்க ஆபிரகாமிய மதங்கள் மறுப்பதன் அடிப்படை.

பெண் தன்மையை அடக்கும்போது, இயல்பாகவே அத்தன்மையுடன் கூடிய மனிதத்தன்மை, இரக்க மனோபாவம் ஆகியவை பின்னுக்குப் போய் ஆன்மீகவெளியிலும், அகவெளியிலும் சமச்சீர்தன்மை கெடுகிறது.

***

லாத் – ராத் எனும் பெண் தெய்வம் பற்றிய குறிப்புகள், சித்திரங்கள் எதுவும் இன்றைய சவுதியில் இல்லை – அவை முகமது காபாவைக் கைப்பற்றிய பின்பு முகமதாலும், அபுபக்கர் போன்ற முகமதின் தோழர்களாலும் அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால், எகிப்து போன்ற இடங்களில் அல்லாத் தலைக்குமேல் சூரியனுடன் இருக்கிறது, மனிதர்களை பிறவிப் பெருங்கடலில் இருந்து விடுவிக்கும் சக்தியாக இந்த அல்லாத் தேவி உருவகப்படுத்தப்படுகின்றார். சந்திரன் ஆணாகவும் (ஆண் கடவுள்) சூரியன் பெண்ணாகவும் கருதும் வழக்கு அக்கால அரேபியாவிலும் எகிப்திலும் இருந்தது. சிற்சில இடங்களில் இப்பெண் கடவுள் உயர் கடவுளின் பெண் வாரிசாகவும் கருதப்பட்டது, இந்த அல்-லாஹ் மற்றும் அவரின் மகள்களான அல்-லாத், அல்-உஷா, அல்-மனாத் போன்ற பெண் தெய்வங்களை குரானின் அத்தியாயம் 53(53:19) குறிப்பிடுகிறது. “உங்களுக்கெல்லாம் மட்டும் ஆண் பையன் ஆனால் (லாஹ்) கடவுளுக்கு மட்டும் பெண் பிள்ளைகள் ” என்று முகமது குரானில் சொல்கிறார்(அவருக்கு ஆண் பிள்ளை இல்லை என்ற வருத்தம் இருந்தது இங்கே பிரதிபலிப்பதைக் காணலாம்):

Quran 053.019-22
“Have you then considered the Lat and the Uzza, and Manat, the third, the last?
What! for you the males and for Him the females!
This indeed is an unjust division! ”

http://www.usc.edu/dept/MSA/quran/053.qmt.html#053.019

ஒரு அசைவற்ற பரம்பொருளில் இருந்து, அதில் அசைவேற்பட்டு உத்வேகத்துடன் கூடிய, பிரபஞ்சத்தை வெளிப்படுத்தக் கூடிய தாய்த்தன்மையுடன் வெளிவரும் இறைத்தத்துவத்தை வெளிப்படுத்த பாகன்கள் இந்த அமைதியான ஆண்கடவுளிடமிருந்து பிறக்கும் மகளாக பெண் தெய்வத்தை உருவகப்படுத்தியிருக்கலாம்.

இதில் சில சமயங்களில் அல் – லா(ஹ்) கடவுள் இரவிற்கான கடவுளாகவும், அந்த இரவோடு இணைந்த மூன்று காலகட்டங்களை இந்த மூன்று பெண் தெய்வங்களும் குறிப்பதாகவும் ஒரு கருத்து உள்ளது. Al-Uzza என்ற அதிகாலையின் கடவுள், உஷை என்ற ரிக்வேத கால பெண் தெய்வத்தின் பெயரையொத்திருப்பதும் இங்கே கவனிக்கத் தக்கது. ரிக் வேதத்திலும் இது அதிகாலையின் கடவுளாக, இரவு நீங்கி பகல் வருவதைப் போல மனதின் இருள் நீங்கி ஆன்மீக ஒளி நம்முள் தோன்றுவதை கட்டியம் கூறும் பெண் தெய்வமாக இந்த உஷை ரிக்வேத பாடல்களில் குறிப்பிடப் படுகின்றார்.

***

குரான் வசனம் 113:4. இதில் சூனியம் செய்வதை எதிர்த்து சொல்லப்படும் வசனங்கள் உள்ளன. இந்த வசனங்கள் உஷை தேவியிடம் சூனியத்திலிருந்து எங்களைக் காப்பாற்று என்று சொல்வதாக அமைந்துள்ளன. இந்த வசனங்கள் குரானே இல்லை என்று கருதிய பல ஆரம்பகால முஸ்லீம்களும் இருந்தனர் (அப்துல்லாஹ் பின் மசூத் போன்ற ஆரம்பகால சஹாபாக்கள் – இவர் சொல்வதே உண்மையான குரான் என்று முகமது சொல்லியதாக ஒரு ஹதீதும் இருக்கிறது – இந்த வசனங்கள் குரானா இல்லையா என்ற சந்தேகத்தினாலேயே குரானின் கடைசியில் அவற்றை கலீபாக்கள் தொகுத்திருக்க வேண்டும்) – ஆனால், இன்றைய இஸ்லாமியர்களால் மிகவும் மதிக்கப்படும் மவுதூதி, இதுவும் குரானின் அங்கமே என்று அடித்தம் திருத்தமாக சொல்கிறார். பார்க்க:
http://www.usc.edu/dept/MSA/quran/maududi/mau113.html

(அப்துல்லாஹ் பின் மசூத் போன்ற ஆரம்பகால சஹாபாக்கள் சொல்வதே உண்மையான குரான் என்று முகமது சொல்லியதாக ஒரு ஹதீது இருக்கிறது – ஆனால் சரித்திர விபத்தாக இந்த குரான் வசனம் அப்போதிருந்த கலீபாக்களால் குரானாக திரட்டப்பட்டு தொகுக்கப்பட்டுவிட்ட நிலையில், மவுதூதி அதை ஏற்பதே சரி என்ற முடிவுக்கு வந்திருக்க வேண்டும்).

இப்படி தனது ஆன்மீக வாழ்வை துவக்கிய முகமது, இதற்கடுத்த நிலையில் கிறித்துவத்தின் பால் /ஏகத்துவத்தின் பால் ஈர்க்கப்பட்ட பாகன் அரபிகளாலும்(நஃபால், கதீஜா, அரபி ஹனஃபிக்கள்), யூதர்களிடம் நபியின் வருகை பற்றி கேட்டிருந்த மதீனாவின் பாகன் அரபிகளாலும் நபியாக ஏற்கப்பட்டார். முதலில் தமது ஆதரவாளர்களை கிறித்துவ நாடொன்றிற்கே அனுப்பி ஆதரவு தேடினார். அவர்களும் அங்கிருந்த மன்னரிடம் தமது தலைவர் இயேசு கிறித்துவை ஏற்பவர் என்று அறிமுகம் செய்து கொண்டனர். குரானில் சில வசனங்கள், கிறித்துவர்களே இஸ்லாம் பற்றி பரிவு காட்டுபவர்கள் என்று சொல்கின்றன. ஆனால், கிறித்துவர்களில் பெரும்பாலோர் தம்மை ஒரு தேவதூதனாக ஏற்கவில்லை என்றவுடன், யூதர்களிடம் போய் அவர்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் மெஸய்யா(நபி) தாம் தான் என்றார். தற்போதைய ஹாகரிஸ ஆய்வாளர்கள், முகமது தன்னை யூத மதத்தை பரப்பும் பிரச்சாரகாரகவே முதலில் அடையாளம் காட்டிக் கொண்டார் என்கிறார்கள்.( யூத நபிமார்கள் பலரும் ஆரம்பத்தில் இந்த மந்திர-தந்திர உச்சாடனர்களாக இருந்ததும் கவனிக்கத் தக்கது, எனவே இது கூட நபித்துவத்தின் பகுதியாக இருந்திருக்கலாம்).

ஆனால், யூதர்களும் தம்மை ஏற்கவில்லை என்றவுடன் – அதுவரை கடவுளின் இருப்பிடமாக தாம் அடையாளம் காட்டிய ஜெருசலேம் நகரின் காபாவிலிருந்து (இந்த காபாவிற்கு மேலேதான் கடவுளை புராக் பயணத்தின் போது முகமது கண்டார் – முகமதியர்கள் இன்றும் பின்பற்றும் பல இஸ்லாமிய நம்பிக்கைகள், ஐவேளை தொழுகை உட்பட இந்த விண்வெளிப்பயணத்தின் போதுதான் முகமதுவால் அருளப்பட்டது) கடவுளை இடம் மாற்றி, பாகன் அரபிகளின் காபாவையே, அங்கிருந்த கடவுளையே தமது கடவுளாக தேர்ந்தெடுத்தார். இதை ஏற்காதவர்களை ‘கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதை புரிந்து கொள்ளாத முட்டாள்கள்’ என்று குரான் திட்டுகிறது:
Quran 002.142
“The fools among the people will say: What has turned them from their qiblah which they had? Say: The East and the West belong only to Allah; He guides whom He likes to the right path.”

http://www.usc.edu/dept/MSA/quran/002.qmt.html

***

கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என்றால், காசியை கிப்லாவாக ஏன் ஏற்கக்கூடாது? சிரீரங்கத்தை ஏன் காபாவாக ஏற்கக்கூடாது? குரானில் விடை இருக்கிறது:

“(நபியே!) உம்முடைய முகம், அடிக்கடி வானத்தை நோக்குவதை நாம் காண்கிறோம். ஆதலால், நீர் விரும்பும் ‘கிப்லா’ (வாகிய மக்கா) வின் பக்கமே நாம் உம்மை நிச்சயமாகத் திருப்புகின்றோம். எனவே நீர் (தொழும்போது மக்காவிலுள்ள) ‘மஸ்ஜிதுல் ஹராமி’ன் பக்கமே உம்முடைய முகத்தைத் திருப்புவீராக! விசுவாசிகளே! நீங்களும் எங்கிருந்த போதிலும் (தொழுகையில்) அதன் பக்கமே உங்களுடைய முகங்களைத் திருப்புவீர்களாக!….” (குரான் 2: 144)

மற்ற மதத்தவர்கள் தம்மை ஏற்க மறுத்த நிலையில், முஹமது தீர்மானித்தார் தமது குலதெய்வக்கோவிலையே கடவுளின் இருப்பிடமாக ஏற்பது என்று. இப்படியாக முகமதுவின் உள்மன உந்துதலே அப்போதிருந்த அரபி பாகன், யூத, கிறித்துவ நம்பிக்கைகளில் சிற்சில பகுதிகளை ஏற்று அப்படி ஒன்று திரட்டியதையெல்லாம் கடவுளாக, மதமாக முன்னிறுத்தியது. இல்லையென்றால், முஹமது விரும்புவதால் தமது இருப்பிடத்தை கடவுள் ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும்? அப்படி மாற்றிக்கொள்வது, முஹமதுவுக்கு பாகன் அரபிகளை தம் பக்கம் இழுத்து தனது அடிமைகளாக மாற்றுவதற்கு வழி செய்தது.

இப்படி முகமதுவின் விருப்ப வெறுப்புகள் எல்லாம் லாஹ் கடவுளின் விருப்ப வெறுப்புகளாக இஸ்லாத்தால் முன்னிறுத்தப்படும் நிலை. ஆபிரகாமிய மதங்களில் கடவுள் என்பது கட்டளைகளைப் பிறப்பிப்பதாகவும், சமூக நெறிகளை வகுத்துத் தருவதாகவும் இருக்கிறது. முகமது மட்டுமல்ல, அவரது மனைவியான ஆயிஷா, நண்பர்கள், கலீஃபாக்கள் எல்லோரும் இதுதான் கடவுள், இதுதான் கடவுளின் கட்டளை என்று தீர்மானிக்கும் அதிகாரம் படைத்தவர்களாக இருப்பதை இஸ்லாமிய வரலாற்றில் பார்க்க முடிகிறது.

***

இவற்றை கடவுளின் வார்த்தைகள், கடவுளின் அங்கீகாரம் பெற்றவை என்று முகமதியர்கள் கருதுவதில் நமக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால், தனது நம்பிக்கை மட்டுமே உண்மையானது, மற்றவையெல்லாம் இழிவானது, பொய்யானது என்று சொல்லி வன்முறையில் ஈடுபடுவது தவறானது. அதனாலேயே இதன் பின்னால் இருக்கும் வரலாற்றை, கண் முன்னே இருந்தும் காண மறுக்கும் உண்மையை சுட்டிக் காட்ட வேண்டியிருக்கின்றது.

மதத்தின் பெரிய சக்தி இதுதான், எல்லாவிதமான ஆய்வுகளும் தமது நம்பிக்கைகளுக்கேற்ப இருக்க வேண்டும் என்று நம்புவது, முடிவுகளை முன்பே மனதினுள் அமைத்துக்கொண்டு அதற்கேற்ற விடைகளை மட்டும் தேடுவது என்பது மதவாதிகளின்/நம்பிக்கையாளர்களின் இயல்பான குணம். அதை மற்றவர்கள் கேள்விக்குள்ளாக்கும்போது அது மனதை புண்படுத்துவதாக அமைகிறது, ஆனால் உருவ வழிபாடு சைத்தானின் செயல் என்பதே இந்துக்களின் நம்பிக்கையை புண்படுத்துவதாக இருக்கும்போது, அதையே அடிப்படைக் கோட்பாடாக ஏற்போர், தமது நம்பிக்கையை மற்றவர்கள் கேள்விக்குள்ளாக்கும்போது மட்டும் கொதித்து எழுகிறார்கள், அவதூறு என்று குற்றம் சாட்டுகின்றார்கள். இன்றைய இந்துக்கள், படித்தவர்கள், ஆய்வாளர்கள் பல பாகன் கடவுள்கள் எப்படி பெரிய கடவுளாக மாற்றம் பெறுகின்றன என்பதை ஆய்ந்துள்ளார்கள், தமது நம்பிக்கைக்கு எதிராக இருந்தாலும் ஏற்கிறார்கள், குறைந்த பட்சம் வன்முறையில் ஈடுபடாமலாவது இருக்கின்றார்கள். கிறிஸ்துவர்களும் அப்படியே, கன்னிமேரி கடவுள் பாகன் கடவுள் என்று நான் எழுதிவிட்டு அஞ்சத் தேவையில்லை. எல்லா மதங்களும் அடிப்படையில் ஒரே போன்று மூடநம்பிக்கை கொண்டனதான், எல்லா மதங்களுமே மனதை குழப்பியும், மூளைச்சலவை செய்துமே பிழைக்கின்றன. படிநிலைகள் தான் வெவ்வேறு என்றாலும், இஸ்லாத்தை தவிர பிற மதங்களில் இந்த அளவுக்கு வன்முறை இல்லை, அச்சுறுத்தல் இல்லை.

நான் சொல்வது சாதாரண, மூளைச்சலவை செய்யப்பட்ட, சிறு வயதிலிருந்து அமானுஷ்ய சக்தி இருக்கிறது என்று கற்பித்து பயத்தை ஊட்டி வளர்க்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு புரியாமல் இருக்கலாம். அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தலாம். ஆனால், சற்றே படித்த, படித்தவர்களுடன் பழகக் கூடிய, மற்றவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கக் கூடிய நிலையில் இருப்பவர்களாவது பெற்றோர் பயிற்றுவித்தவைகளை மீறி ஆய்வுப்பார்வையை மேற்கொள்ள வேண்டும். நாகூர் ரூமி, ஹமீது ஜாஃபர், அப்துல் கையும் மற்றும் பல சக எழுத்தாள இஸ்லாமிய சகோதரர்களுக்கான எனது வேண்டுகோள் இதுதான். வன்முறை தவிர்ப்போம், மதங்களை ஆய்வுக்குட்படுத்தி மூளைச்சலவையிலிருந்து வெளிவருவோம், அன்பும் அமைதியும் தழைக்கும் வையகத்தை உருவாக்குவோம். நமது காலத்தில் இது நடக்காவிட்டால் கூட, இதற்கான அடித்தளத்தை அமைத்துவிட்டுச் செல்வோம். நாம் இதற்கு முயற்சி செய்யவில்லை என்றால், நமது அடுத்த தலைமுறை நம்மை நிந்திக்கும்.


http://nesakumar.blogspot.com
http://nesamudan.blogspot.com
http://islaamicinfo.blogspot.com

Series Navigation

நேச குமார்

நேச குமார்

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 3

This entry is part [part not set] of 31 in the series 20090528_Issue

நேசகுமார்



ஹமீது ஜாஃபர் எனக்கு பதிலளித்து மே 14,2009 திண்ணை இதழில் ஒரு கடிதம் எழுதியிருந்தார்(http://www.thinnai.com/?module=displaystory&story_id=80905123&format=html).

கடிதத்தில் இருக்கும் எள்ளல் தொணியையும், பயன்படுத்தியிருக்கின்ற வார்த்தைகளையும் தவிர்த்து விடுகிறேன். இஸ்லாத்தைப் பற்றி எழுதத் துவங்கிய காலத்திலிருந்து வசவுகளையும் மிரட்டல்களையும் சந்தித்து வருவதால் இது பெரிதாகவோ, மனம் வருந்தவைக்குமளவுக்கோ இல்லை. அதற்காக ஹமீது ஜாஃபரை நான் நொந்து கொள்ளவும் இல்லை. ‘நம்பிக்கையாளர்களின்’ விசேஷ குணாம்சம் இது. எதிராளியை அடித்து மிரட்டுவதும், முடியாவிட்டால் வசைபாடுவதும், அதுவும் முடியாவிட்டால் மனதிற்குள்ளே வெறுத்து புலம்புவதும் ஈமானின் அம்சம் என்று ஒரு ஹதீஸில் முஹம்மது குறிப்பிடுகிறார். அதை அப்படியே மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் போல ஈமானிகள் பின்பற்றிவருகின்றனர். இதில் ஹமீது அவர்களை குறைசொல்லிப் பிரயோசனம் இல்லை என்பது எனக்கு தெரியும். இது எனக்கு இன்னொரு நம்பிக்கையாளரை நினைவுக்கு கொண்டு வருகிறது. அது ஒரு விசித்திரமான கதை, நம்ப முடியாத அளவுக்கு, மேஜிக்கல் ரியலிஸ கதைகளையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடும் அளவுக்கான ஆனால் நிஜக்கதையது.

***

பல வருடங்களுக்கு முன்பு எனக்கு ஒரு நண்பர் இருந்தார். மிகவும் பண்பான மனிதர், மனித நேயமிக்கவர், ஆன்மீகவாதி இன்றிருக்கும் பெரிய மனிதர்களைப் போலில்லாமல் நிஜமாகவே பெரிய மனிதர். தற்போது அவரது எழுத்துக்கள் எல்லாம் நூல்களாகவும் வந்துள்ளன.

வெறுமையாய்த் தெரிந்த நாளொன்றில் அவரது நூல் ஒன்றை புரட்டிக் கொண்டிருந்தேன். ஒரு இடத்தில், ‘இறைவனுக்கான வழியை காட்டுபவர் சொன்னால் கொலையும் செய்ய வேண்டும்’ என்று எழுதியிருந்தார். தூக்கிவாரிப் போட்டது.

இதைத் தொடர்ந்து அந்த கல்ட் தலைவரை, வழிநடத்துபவரின் எழுத்துக்களை, பிரசங்கங்களை படிக்க ஆரம்பித்தேன். ஒரு பெரிய விழிப்புணர்வுக்கு அது இட்டுச் சென்றது.

***

நண்பர் அவரை சந்தித்தபோது முதல் பார்வையிலேயே நண்பரின் ஆன்மீக அனுபவங்கள் குறித்து அந்த கல்ட் தலைவருக்கு தெரிந்திருக்கிறது. நண்பருக்கு அப்போது மண வாழ்வுக்கு வெளியே ஒரு தொடர்பும் இருந்திருக்கிறது. அதையும் அந்த தலைவர் சொல்லி, இந்த ஆன்மீக குழுவில் இருப்பவர்களிடம் அது போன்ற வழக்கங்கள் இருக்கக் கூடாது என்று சொல்லி இரண்டாவது மனைவியாக முறைப்படி, வெளிப்படையாக அந்தப் பெண்ணை ஏற்றுக்கொள்ளச் சொல்லியிருக்கிறார்.

இதைத் தவிர எண்ணற்ற அற்புதங்களை அவர் தமது ஆன்மீக வழிகாட்டியிடம் நேரடியாக கண்டிருக்கிறார். தியானத்தில் அமர்ந்தால் நாள் கணக்கில் அப்படியே இருப்பாராம். ஒருவித இறை ஆவேச நிலையில் அவரிடமிருந்து குழறலாக சொற்கள் வெளிப்படுமாம். அந்த தலைவர் சொன்னதை ஒரு நூலாக தொகுத்திருக்கின்றார்கள், சாதாரண தமிழர்களே தடுமாறும் அளவுக்கு கடினமான, வித்தியாசமான நடை- அது போன்ற ஒன்றை இயற்றுவது மனிதர்களால் சாத்தியமானது இல்லை என்ற நம்பிக்கை அந்த குழுவினரிடையே இருக்கிறது.

தலைவரின் பாக்கள் நிரம்பிய அந்த நூலைப் படிக்கும்போது அதை இயற்றியவருக்கு தமிழக சித்தர் பாரம்பரியத்துடன் நிரம்ப பரிச்சியம் இருந்திருக்கிறது, நிறைய தமிழ் ஆன்மீக நூல்களை கற்றவரால் தான் இப்படியெல்லாம் இயற்ற முடியும் என்று தோன்றுகிறது. ஆனால், வழிகாட்டியோ பாரம்பரிய ஆன்மீகக் கல்வி இல்லாதவர். வியாபாரம் செய்துவந்த அவர் ஒரு குருவிடமிருந்து நேரடியாக சில ஆன்மீக வழிமுறைகளை கற்றிருக்கிறார். இந்தியா முழுவதும் சுற்றி வந்திருக்கிறார், அவ்வளவே. சைவ சித்தாந்தங்கள் பற்றிய கல்வியோ, சித்தர் பாரம்பரியத்துடன் தொடர்போ அற்றவர் அவர்.

***

அவரது பிரசங்கங்கள் சிலவற்றை படித்தேன். மிக முக்கியமான மறந்துபோன, மறைக்கப்பட்ட ஆன்மீக அடிப்படைகளை அவர் சுட்டிக் காட்டுகிறார். ‘முப்புரி நூல்’ என்பது உள்ளே இருக்கும் சில சக்தியோட்டங்களின் புற அடையாளம்; காயத்ரி மந்திரம் உள்ளே இருக்கும் ஆன்மீக ஒளியை தரிசிப்பதை குறிக்கிறது; ஆலயங்கள் என்பன உள்ளார்ந்த பயணத்தின் புறக்குறியீடு இப்படி பலவும் சொல்லி, “இதையெல்லாம் மறந்துவிட்டு, புறக்கணித்துவிட்டு குறியீடுகளையும், சடங்குகளையும் பிடித்துக்கொண்டு தவறான பாதையில் பயணிக்கின்றீர்களே, நீங்கள் நேர் வழிக்கு, சத்திய மார்க்கத்திற்கு வாருங்கள்” என்ற கோரிக்கையை அவர் அவநம்பிக்கையாளர்களிடம் விடுக்கின்றார்.

தாம் வள்ளலார், திருமூலர் போன்ற தமிழக சித்தர்களின் பாரம்பரியத்துடன் வந்தவர் எனவும், அந்த சித்தர்களெல்லாம் சொன்னவற்றை பிறர் திரித்துவிட்டார்கள், மறைத்துவிட்டார்கள் எனவும் சொல்கிறார். கடவுள் என்று எல்லோரும் ஏத்தும் மறைபொருளை தம்மால் நேரடியாகக் காட்டிட முடியுமென்றும் சொல்கிறார். அவருடன் இருந்த நண்பரைப் போன்ற பல நம்பிக்கையாளர்களுக்கு தியான நிலையில் ஒரு வித அதிசய நிகழ்வை நிகழ்த்திடவும் அவராம் முடிந்திருக்கிறது.

இதுவும் எனது நண்பரின் நம்பிக்கைக்கு ஒரு மிக முக்கிய காரணம் என்று தோன்றியது. முறையான கல்வியில்லாத, சித்தாந்தங்களுடன் சிறிதும் முறைப்படியான பயிற்சி இல்லாத ஒருவர், இறை நிலையிலிருந்து உண்மைகளை வெளிக்கொணர்கிறார், ஒரு அற்புதமான, initiationன் போது வாங்குபவர்களை அதிசயிக்க வைக்கும் உணர்வலைகளை எழுப்புகிறார், முந்தய வேதங்களின் உண்மைப் பொருள்களை எல்லாம் சுட்டிக் காட்டுகிறார் – இது அமானுஷ்யமான விஷயமில்லாது வேறென்ன என்ற நம்பிக்கை எனது நண்பரின் மனதில் ஆழப்பதிந்துவிட்டது.

***

அந்த கல்ட் தலைவருடனேயே வசிக்க ஆரம்பித்தார் நண்பர். அதற்கு முன்பு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர், தற்போது முழுக்க முழுக்க ஆன்மீகவாதியானார். அந்த ஆன்மீக குழுவை சேர்ந்தவர்கள் தமது தலைவரை சுற்றியே தமது வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். தலைவர் ‘ராஜ கம்பீரத்துடன்’ சிம்மாசனத்தில் அமர சுற்றி வாள்கள் போன்ற ஆயுதங்கள் இருக்கும் புகைப்படத்தையும் ஒரு நாள் நான் பார்த்தேன்.

தலைவரை சுற்றி எழுந்த சமுதாயம், தனக்கென ஒரு விசேஷமான புற அடையாளத்தை உருவாக்கிக் கொண்டது. ஜாதி/மத வித்தியாசங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சமுதாயம் கட்டியமைக்கப் பட்டது. ஆனால், இந்த சமுதாயம் மூடப்பட்டதாகவும், பிற சமுதாயங்கள் வழிகேட்டிலும், தவறான பாதையிலும் உள்ளன என்ற முன்முடிவிலும் இருந்தது.

அநேகமாக என்ன நிகழ்ந்தது என்று துல்லியமாக எனக்கு தெரியாவிட்டாலும், அந்த கல்ட் , நபித்துவ கோட்பாட்டை பின்பற்றியே அமைந்திருந்ததை என்னால் உணர முடிந்தது. ஃபார்முலா அதே தான் – பிறர் தவறான பாதையில் இருக்கிறார்கள், பிறரது ஆன்மீகம் தவறானது, தம்முடைய பாதை அறிவுபூர்வமானது – சரியானது என்ற நம்பிக்கை, அங்கே அந்த கல்ட் தலைவரை ஏற்ற ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதிந்து இறக்கும் வரை அவர்கள் ஏகப்பிடிப்புடன் இருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால், மரணமே அவர்களது நம்பிக்கையை இன்னும் உறுதிப்படுத்தியது. அங்கே மரணிப்பவர்களின் மரணம், வித்தியாசமான ஒன்றாக மல-ஜலம் வெளியாகாமல், உடல் நாறாமல், மரணத்தை வென்றவர்களாக, மரணமே இல்லாதவர்களாக, நித்திய வாழ்வு வாழ்பவர்களாக தம்மை அவர்கள் கருதிக்கொண்டனர்.

அந்த கல்ட் தலைவரை கல்கி அவதாரமாக, கடைசி நபியாக, கலியுக மீட்பராக விவரித்து எழுதிய நூல்கள் எல்லாம் இருக்கின்றன. அவரும் மாற்று சமுதாயத்தினரால் துன்புறுத்தப்பட்ட கதைகள் இருக்கின்றன, அவரது சமூகமான ராவுத்தர் சமுதாயமே அவரின் வீட்டை எரித்ததாம். தப்பி ஹிஜரத்து செய்தாராம் என்றெல்லாம் (அதே நபித்துவ கதைகள், அவை உண்மையாக இருக்கலாம் – ஆனால் அந்த ஒப்புமையை நினைத்துக் கொள்கிறேன்) சொல்லப் படுகின்றன.

***

ஒரு சரியான பாதைக்கு சனங்களை கொண்டு வருவதற்கு தாம் எவ்வித பாதையையும் கையாளலாம் என்ற இஸ்லாமிய கோட்பாடு அவர்கள் உள்ளத்தில் பதிந்திருந்ததா என்ற எனது சந்தேகத்திற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை, தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால், கிட்டத்தட்ட வஹி உட்பட எல்லாவற்றிலும் முஹமதின் பாணியை நான் கண்டேன். இஸ்லாமிய ஆய்வுக்குப் பின்புதான் இந்த உளவியலை நான் முழுவதுமாக புரிந்து கொள்ள முடிந்தது.

இந்த உளவியல் தம்மை தாம் தேர்ந்தெடுத்த ஆன்மீகப்பாதையின் காரணமாக உயர்வானவர்களாக கருதுகிறது, பிறரது பாதை அவர்களை படுகுழியில், இருள் நரகத்தில் தள்ளிவிடும் என்று அச்சுறுத்துகிறது. தமது கல்ட் தலைவரே விடுவிக்க, காப்பாற்ற வல்லவர், அவர் மூலமே இறைப்பாதை திறக்கும் என்று போதிக்கிறது. இதையே இன்று ஹமீது ஜாஃபர் சொல்கிறார், கொஞ்சம் மாறுதல்களுடன். (முஹம்மதுக்கான சில விசேஷத்தன்மைகளை தவிர்த்து) இதையே வஹ்ஹாபிகள் சொல்கின்றனர். இதையே அஹமதியா முஸ்லீம்கள் சொல்கின்றனர், (பஹாவுல்லாஹ் என்ற நபியின் நம்பிக்கையாளர்களான, அந்த நம்பிக்கையின் காரணமாக ஈரானின் இஸ்லாமிய அரசால் துன்புறுத்தப்படும்) பஹாய் முஸ்லீம்கள் சொல்கின்றனர். ஒரு அளவில் கிறிஸ்துவமும் இதையே சொல்கிறது.

இந்த நபித்துவ கோட்பாட்டை பின்பற்றும் ஒவ்வொரு குழுவும் இதையே சொல்கிறது. ஆனால், இங்கே ஹமீது ஜாஃபருக்கும் மற்றவர்களுக்கும் அடிப்படையான கேள்வி ஒன்று இருக்கிறது. ஒரு மதத்தில் தவறு என்றால், அடுத்த மதம் சரியானதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கரூராரும், பட்டினத்தாரும் கோவில் சிலையை உடைத்ததில்லை. மாறாக தஞ்சைப் பெரிய கோவிலின் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தது, இராஜராஜனின் குருவான கருவூரார் என்ற கதையே தமிழகத்தில் புழங்குகிறது; அதை ஊர்ஜிதம் செய்வது போல கருவறையில் கருவூராரின் ஓவியம் இன்றும் இருக்கிறது, கருவறைக்குப் பின்னால் கருவூராரின் சமாதியும் இருக்கிறது. ‘நட்ட கல்லும் பேசுமோ’ என்று சடங்குகளில் ஆழ்ந்திருந்தோரை தட்டியெழுப்ப முயன்ற தமிழகச் சித்தர்கள், தான் முத்தமிடும் கல்லை முத்தமிடுவது உயர்ந்த வழக்கு என்றும், பிறரது கடவுள்கள் அடித்து நொறுக்கப்பட வேண்டிய கற்கள் என்ற இருமை நிலையை பின்பற்றவில்லை. இந்த இருமையே ஆபிரகாமியத்தில் இருண்மையை ஏற்படுத்தி, இன்றுவரை வன்முறையை ஓடவைத்துக் கொண்டிருக்கிறது, நம்பிக்கையாளர்களின் மனதிலும், அவர்கள் பெரும்பான்மை நிலையை அடையும்போது அந்த சமூகங்களிலும்.

***

மேலும் ஒரு முக்கிய அடிப்படை வாதத்தை இங்கே எதிர்கொண்டாக வேண்டும். ஹமீது ஜாஃபரின் வாதத்தை, வாதத்துக்காக வேண்டியாவது ஏற்று இந்து மதத்தில் ‘உண்மைகள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டன’ , யாம் வழிகேட்டிலிருக்கிறோம் என்பதை ஏற்றால், அதற்காக முஹமது சொன்னதெல்லாம் முழுமையான உண்மைகள், அதுதான் சத்திய மார்க்கம் என்பது உண்மையாக இருக்க வேண்டியதில்லை, அதை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.

முஹம்மதுவை விமர்சிப்பவர்கள் எல்லாம் அவரது காலத்தில், அவரது தூண்டுதலினாலே கொல்லப்பட்டார்கள். அது சுன்னாஹ்வாக ஆனதினால், அது இன்றளவும் அவரை நம்புபவர்களினால் பின்பற்றப்படுகிறது, ஜிஹாதாக, இறைக்கடமையாக ஆகிறது. அஹமதியாக்களின் நபியான மிர்ஸா குலாம் அஹமது தன்னுடன் வாதிட்ட ஆரிய சமாஜிகளை தனது நம்பிக்கையாளர்களை அனுப்பி கொலை செய்தார். அடிப்படையில் ஒரு நபியின் வாழ்வே பிற சமுதாயத்தை விமர்சிப்பது, அவர்களது நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குவது, அவர்களை தூற்றுவது, அவர்களை அவதூறு செய்வது என்றுதான் இருக்கிறது. குரானின் ஏராளமான வசவு வசனங்களே இதற்கு அத்தாட்சி. ஆனால், இப்படி விமர்சிக்கப்படுவோர், நபியென்று தன்னை பிரகடப்படுத்திக் கொள்பவரை கேள்வி கேட்பதோ, விமர்சிப்பதோ அவதூறாக பார்க்கப்பட்டு நம்பிக்கையாளர்கள் அப்படிப்பட்ட விமர்சனங்களை தடுத்து நிறுத்துவது இறைக்கடமையாக சித்தரிக்கப்படுகிறது, இந்த கல்ட்களினால்.

அப்துல் கையூம் எள்ளி நகையாடுவது போன்று குஷ்புவையும், நயந்தாராவையும் இந்துக்கள் கோவில்கட்டி கும்பிடுகிறார்கள் என்றால், அது நகைப்பிற்குரியது என்றால், முஹமதையும் அஹமதையும், பஹாவுல்லாஹ்வையும், முஸலமாவையும், ஏசு கிறிஸ்துவையும், நாகூர் ஆண்டவரையும், புதுக்கோட்டை ஆண்டவரையும் ஏக நபியாக, உலகின் ஒரே வழிகாட்டியாக , ஒரே மீட்பராக, ஒரே வழிகாட்டியாக, ஒரே வழியாக ஏற்பதும் நகைப்புக்குரிய ஒன்றுதான். குஷ்புவிற்கு கடவுள் தன்மை இருக்கிறது அல்லது குஷ்பு கடவுள் என்பது நகைப்பிற்கிடமான விஷயமென்பதை சொல்ல முடிகிறது, விவாதிக்க முடிகிறது. ஆனால், இந்த நபிமார்களை – மெஸய்யாக்களை – மீட்பர்களை பற்றி விவாதிப்பது அவதூறு என்று அவர்களது அடியார்களால் ஆவேசமாக கண்டிக்கப்படுகிறது, கொலையையும் செய்ய இவர்களை தூண்டுகிறது. அப்படி கொலை செய்வது கடவுளின் பணி என்று தம்மை நபியாக முன்னிறுத்துவர்கள் மூளைச்சலவை செய்தது போல இந்த நடிகைகள் செய்வதில்லை.

முன்னது மூடத்தனம் என்றால் பின்னது பெரும் மூடத்தனம். இந்த ஒப்புமை, மனப்பாங்கின் நகை முரண் இஸ்லாமியர்களுக்கும் ஏனைய ஆபிரகாமிய வழியினருக்கும் புலப்படாமல் போனது அவர்களுடன் சேர்ந்தே வரும் வன்முறையினால் தான். இதற்கு அஞ்சி, அல்லது பெருந்தன்மையின் காரணமாக, அல்லது வேறு வழியின்றி அமைதி காக்கும் உலகம் என்றாவது ஒருநாள் முழுமையாக திரும்பினால் இந்த விமர்சனமற்ற கோட்டைகள், வெறும் நம்பிக்கையின் மீதும் கற்பனைக்கதைகளின் மீதும், ஆவேச உணர்வுகளின் மீதும் கட்டப்பட்ட கற்பனைகள் வெடித்துத் தகர்ந்துபோகும், சோவியத் யூனியனின் கம்யூனிஸம் தகர்ந்தாற்போன்றே என்றே தோன்றுகிறது.

அது வருத்தத்திற்குரிய ஒன்றுதான். ஏனெனில், எந்தவொரு மோசமான கோட்பாட்டிலும் நல்ல தன்மைகளும் கலந்திருக்கின்றன. இது மிகவும் இயல்பான ஒன்று. ஏனெனில் எப்படி நல்ல தன்மை என்ற ஒன்று மட்டுமே இருப்பது இயலாத ஒன்றோ அது போன்றே எவ்வளவு கொடூரத்தன்மை இருந்தாலும், வெறும் தீமை மட்டுமே இருக்கும் ஒரு சித்தாந்தம், கோட்பாடு, சமுதாயமும் இல்லாத ஒன்றுதான். எல்லா அமைப்புகளுமே காலவாக்கில் தம்மிடையே ஒரு பாதையை அமைத்துக்கொண்டு முன்னேற முயல்கின்றன. இஸ்லாத்திலும் சூஃபியிஸம் அப்படியே தம் அடியார்களை ஓரளவிற்காவது முன்னேற்ற முயன்றது.

குஷ்புவையும் நயந்தாராவையும் கடவுளாக கருதி வழிபட்டால், கடவுள் தன்மை என்பது வணங்குபவர்களின் இயல்பான குணாம்சமாக இருக்கும் பட்சத்தில் அந்த கடவுள் தன்மை, மனதின் சரணாகதித் தன்மையின் காரணமாக இயல்பாகவே வெளிப்படும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் காரணமாகவே எல்லா மதங்களையும் ஏற்கின்றனர் இந்துக்கள், அந்த நம்பிக்கையின் விளைவாகவே சகிப்புத்தன்மை இன்னும் இந்த மண்ணில் இருக்கின்றது. அது நகைப்பிற்குரிய விஷயமாக தோன்றினாலும், ஆழ்ந்து நோக்கும்போது அது எப்பேற்பட்ட அரக்கத்தனத்தையும் நாளாவட்டத்தில் மாற்றிவிடும் வல்லமை கொண்டதாக இருப்பது புரியும். எல்லா வழியும் இறைவழியே என்பது பலகீனமல்ல, வழிகேடு அல்ல, அசத்தியம் அல்ல, தொன்று தொட்டு இருந்து வரும் இந்த சமூகம் தமது நெடிய பயணத்தின் விளைவாக சோதித்து, செயல்படுத்தி பார்த்து கண்டு பிடித்த உண்மை . இது தவறு என்பது, வன்முறையின் காரணமாக ‘இதோ கடவுளின் வழிகாட்டி, இதைத்தவிர மற்றதெல்லாம் சைத்தானிஸம், இதுதான் கடவுளின் வசனம், மற்றதெல்லாம் கடவுளின் எதிரியின் வசனம்’ என்று எவ்வித அடிப்படையும் இல்லாமல் திடீர்க்கண்டுபிடிப்பு நிகழ்த்திய அல்லது இந்த கண்டுபிடிப்பை ஏற்றவர்களின் காமாலைக் கண்ணோட்டமே.

இதுவும் ஒரு நம்பிக்கைதான், ஆனால் கடவுளைப் பற்றிய கற்பனைகளைப் போன்றதுதான் இதுவும். பல கடவுள்கள் இருக்க முடியாது ஒரே கடவுள் தான் இருக்க முடியும் என்பது ஒரு நம்பிக்கை, கடவுள் பல வடிவத்தில் தோன்றலாம், வடிவம் இல்லாமலும் இருக்கலாம், வணங்கலாம், உருவாய் அருவாய் உளதாய் இலதாய் இருக்கலாம் என்பதும் ஒரு நம்பிக்கையே. எல்லாமே நம்பிக்கை எனும்போது இதில் உயர்வென்ன, தாழ்வென்ன, சரியென்ன தவறென்ன. உனது பாதை உனக்கு எனது பாதை எனக்கு என்று ஒதுங்கிப் போவதே பண்பாடு. அது இந்தியாவில் நடைமுறையில் இருக்கிறது. இஸ்லாத்தில் வெறும் வசன அளவில் இருக்கிறது என்பதே ஹமீது ஜாஃபருக்கு நான் சொல்ல விரும்பும் பதில்.

***

கடைசியாக, நண்பர் இப்போது இறந்துவிட்டார். ‘மரணமில்லாப் பெருவாழ்வை’ போதித்த நபியும் இறந்துவிட்டார். கோவிலை கிண்டல் செய்த நபியின் நம்பிக்கையாளர்கள் தற்போது அவரது வாசகங்கள் அடங்கிய நூலை பாராயணம் செய்கிறார்கள். ‘நட்ட கல்லும் பேசுமா நாதனுள்ளிருக்கையில்’ என்று ஏளனம் செய்து தியானத்தில் அமர்ந்து இறைநிலையை நேரடியாக தரிசிப்பதே ஈடேற்றத்திற்கு வழி என்று வாதிட்டவர்கள் இன்று அந்த நபியின் சமாதியை நம்பிக்கையுடன் சென்று வழிபடுபவர்களுக்கும் அதிசயப்பாதை திறக்கிறது, மரணத்திற்குப் பின்பு உடலில் அதிசயங்கள் தென்படுகின்றன என்று சொல்கிறார்கள். அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த நான் “அப்படியென்றால் இதற்கும் கோவிலில் சென்று ‘கல்லை’ கும்பிடுவதற்கும் என்ன வித்தியாசம்” என்று மனதினுள் நினைத்துக் கொண்டேன். வெளியில் சொல்லவில்லை, ஏனெனில் இன்னொரு நம்பிக்கையாளரை புண்படுத்த நான் விரும்பவில்லை, காலம் அவருக்கு இதை புரியச் செய்யும் என்ற நம்பிக்கை மனதில் இருக்கிறது. இந்தியாவின் நெடிய வாழ்வு இதையே நமக்கு கதை கதையாக, காலம் காலமாக சொல்லி வருகின்றது.


நேசகுமார்

http://nesakumar.blogspot.com

Series Navigation

நேச குமார்

நேச குமார்

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 1

This entry is part [part not set] of 24 in the series 20090521_Issue

நேசகுமார்


இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும்

கடந்த வார திண்ணையில் எனக்கு பதிலளித்து எழுதியிருந்த அப்துல் கையூம்(http://www.thinnai.com/?module=displaystory&story_id=80905129&format=html), நாகூர் ரூமி(http://www.thinnai.com/?module=displaystory&story_id=80905126&format=html), ஹமீது ஜாஃபர், வஹ்ஹாபி ஆகியோரின் கடிதங்களைப் பார்த்தேன். எந்த வித்தியாசமும் இல்லை, அதே பதில்கள் – சற்றும் யோசிக்காமல் சொல்லும் பதில்கள்,வாதங்கள், கோபங்கள்…. உலகம் முழுவதும் இருக்கும் இஸ்லாமியர்கள் இப்படியே சிந்திக்க, பேச, எழுத முயல்கிறார்கள். இது சமயத்தில் வியப்பாகக் கூட இருக்கிறது. ஒட்டு மொத்த சமூகமே எவ்வித சுயவிமர்சனமும் இல்லாமல், அல்லது அப்படி விமர்சனங்கள் எழும்போது கூட இப்படி அதை மிகக்குறுகிய வரையறைக்குள்ளே வைத்துவிட்டு இருக்க முடியுமா என்று. ஆனால், துரதிர்ஷ்டவசமாக உண்மையும் அதுதான். இன்றுவரை இஸ்லாமிய சமூகத்தினுள் ஒரு பெரியார், ஒரு பாரதி, ஒரு விவேகானந்தர் எழ முடியவில்லை. சுய சிந்தனையுள்ளவர்கள் எல்லாம் முர்தாதாக, இனத் துரோகியாக, apostate ஆக பார்க்கப் படுகின்றனர். இப்படி விமர்சனங்கள் எல்லாம் முடக்கப்பட்டு விட்ட நிலையில், விமர்சகர்கள் மிரட்டப்பட்டு அமைதிப்படுத்தப் பட்டுவிடும் நிலையில் ஒரு சமூகம் என்னவாகும்? விடை – வன்முறையும், மூடநம்பிக்கையும், காட்டுமிராண்டித்தனமும் பெருகிப் போகும். அதைத்தான் இன்று பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும், பங்களாதேஷிலும், ஈராக்கிலும் காண்கிறோம். இஸ்லாத்தின் வருகைக்கு முன்பு கல்வியும், பண்பும், கலாச்சாரமும் உயர்ந்திருந்த பிரதேசங்கள் இவை.

***

இஸ்லாமிய சமூகம் என்றில்லை, ஒரு அளவில் எல்லா மதங்களுமே இப்படித்தான் இருக்கின்றன. இஸ்லாத்தைப் பற்றி துவங்கிய எமது ஆய்வு அதன் அடியொற்றி முன்னேறிச் சென்று பிற ஆபிரகாமிய மதங்களிலும் இந்த traits இருப்பதை கண்டு அதிர்ந்தது. ஆம், யூத மதத்தில் எதோ ஒரு காலகட்டத்தில் பன்மைத்தன்மை அழிக்கப்பட்டு ஏகத்துவ இருள் பரவியது. அது அடிநாதமாய் கிறிஸ்துவத்திலும் தொடர்ந்தது. இஸ்லாத்தில் உச்சத்தை எட்டியது.

இந்த ஆய்வு இத்துடன் நின்றுவிடவில்லை. இதைத் தொடர்ந்து இந்து மதத்திலும் இதன் வேர்கள் ஆங்காங்கே இருந்ததைக் கண்டோம். இங்கே பன்மையில் நான் குறிப்பிடுவதற்கு ஒரு காரணமுண்டு. ஆரம்பம் முதலே நான் ஒரு குழுவுடனேயே இந்த ஆய்வை, இந்த உள்நோக்கிய பயணத்தை மேற்கொண்டேன். இதில் ஒவ்வொரு கட்டத்திலும் எனது பார்வைகள் கூட இருந்த நண்பர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி, பின்பு மெல்ல அவர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு கொண்டுவந்தது.

முழுவதுமாக நான் எனது மதம் கற்றுவித்தவற்றிலிருந்து வெளிவந்துவிட்டேன் என்று சொல்ல முடியாது. முயல்கிறேன், துவல்கிறேன், சந்தேகம் கொள்கிறேன், முன்னகர முயல்கிறேன், சோர்ந்திருக்கும் சமயங்களில் பயிற்றுவிக்கப்பட்டவைகளை பிடித்துக்கொண்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ள, எனது பயணங்களுக்கு காரணம் கற்பிக்க முயல்கிறேன். முழுவதுமாக இலைகள் உதிராவிட்டாலும், அவற்றின் தன்மையை கவனிக்கும் பார்வை கூர்மை பெறுவதையும் உணர்கிறேன். இப்பார்வைகளினூடாக நான் முன்னகர்ந்திருப்பதையும் காண்கிறேன்.

மனித குலமே இப்படித்தான் செல்லும் என்று தோன்றுகிறது. முதலில் எந்த நம்பிக்கையாயினும் அதில் சந்தேகம் முளைக்கிறது. அடுத்த கட்டமாய் அது உடைபடும்போது அதிர்ச்சியை அளிக்கிறது. பின்பு சார்ந்திருக்கும் சமூகத்தைப் பொறுத்து சால்ஜாப்புகளையும், கோபத்தையும், வன்முறையையும் உருவாக்குகிறது. தனது நம்பிக்கைகளை தக்கவைத்துக்கொள்ள உள்ளும் புறமுமாக பெரும் சமர் செய்கிறது. கடைசியில் அது வேறு வழியின்றி மாற்றத்தை, அடுத்த நிலைக்கான முன்னேறுதலை ஏற்கிறது.

***

நான் இஸ்லாத்தின் பரவல் குறித்து எழுதியுள்ளதைக் கண்டு நாகூர் ரூமிக்கும் அவரையொத்தவர்களுக்கும் கோபம் வருகிறது – ஆனால், உண்மை என்னவோ நாகூர் ரூமி அவர்களின் கற்பனைகளுக்கு, நம்பிக்கைகளுக்கு மாறாகத்தான் இருக்கின்றது.

இஸ்லாத்தில் இல்லாத சூஃபியிஸம், பாரசீகத்தில் – இஸ்லாம் தன்னைவிட மேலான ஒரு கலாச்சாரத்தை எதிர்கொண்டபோது, அங்கு apostacy யாக, இஸ்லாத்துக்கு எதிரான புரட்சியாக, இந்தியத் தாக்கத்தால் தோன்றியது. அதனால் தான் இன்றும் அனேகமாக அனைத்து சூஃபி தரீக்காக்கள் அலியை தமது ஆதிகுருவாக கொள்கின்றன. அலியே சூஃபியின் இறை பயணத்தின் கதவை திறப்பவராக இருக்கின்றார். இதே அலி, இஸ்லாத்தின் ஆரம்ப நூறு ஆண்டுகள் வரை மசூதிகளில் வசைபாடப்பட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது (பின்பு இரண்டாம் உமரின் காலத்தில் தான் இது நின்றது). அலி பற்றி கீழேயும் எழுதியுள்ளேன்.

அரபிகளின் இஸ்லாத்தை வேறு வழியின்றி ஏற்ற, அவர்களை விட அறிவிலும், ஞானத்திலும், ஆன்மீகத்திலும் மேம்பட்ட ஆனால் அரபிகளின் மூர்க்க – நயவஞ்சக தாக்குதலால் அரசியல் ரீதியாக தோல்வியுற்ற பாரசீகர்கள் இதை தமது உள்ளிருந்தே எதிர்க்கும் வழியாகக் கண்டனர். இஸ்லாத்தையும் மீறி ஆன்மீகமும், மேலான மனித உணர்வுகளும் சூஃபியிஸம் மூலம் தழைத்தன.

தன்னை சூஃபியிஸ ஆதரவாளராக காட்டிக்கொள்ளும் நாகூர் நண்பர்களுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் கண்ணில் படாமலே போவது ஆச்சர்யத்தையளிக்கவில்லை, ஏனெனில் ஒரு அளவில் இந்த கண்மூடிப்பார்வையை எல்லா மதங்களிலும் காண்கிறோம்.

***

இஸ்லாத்துக்கு வெளியிலிருந்து பார்க்கும் இன்னொரு உண்மை ரூமியவர்களுக்கு புலப்படாமல் போனதில் ஆச்சர்யமில்லை – அது ஒரே இஸ்லாம் உலகெங்கும் இல்லை என்பது. பிணங்களை புதைத்து வைத்து அவற்றை வணங்குவது இந்தியாவில், பாகிஸ்தானில், பங்களாதேஷில் பிரபலமான ஒன்று. பிரிவினை காலகட்டங்களில் நிகழ்ந்த நிகழ்வுகளைப் பற்றிய கதைகள் எழுதிய சாதத் ஹஸன் மாண்டோவின் சிறுகதையொன்றில் ‘பல்லி பாபா’வின் தர்காஹ் பற்றி வரும். சிறுவயதில் ஒரு பல்லியை புதைத்து விளையாடும் சிறார் பின்னாளில் வந்து பார்க்கும்போது அது பல்லி பாபாவாக, பிரபல தர்காஹ்வாக எழும்பியிருப்பது கண்டு அதிர்ச்சியடையும் கதையது.

இந்த இஸ்லாமிய வழக்கம் இன்று சவுதியில், பிற அரபு நாடுகளில் இல்லை. அவர்கள் இதை இஸ்லாமாக பார்க்கவில்லை, குஃபார் – இறைமறுப்பாகத்தான் பார்க்கிறார்கள். அதனாலேயே தூய்மையான இஸ்லாத்தை பின்பற்ற முனைபவர்கள் பாகிஸ்தானிலும், ஈராக்கிலும்,இந்தியாவிலும் தர்காஹ்க்களில் குண்டு வைக்கின்றார்கள். ஏன், தமிழில் தேடிப்பார்த்தால், நாகூர் தர்காஹ்வை தகர்த்துவிட்டு அங்கே பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்று நாகூர் வஹ்ஹாபிகளே எழுதியிருப்பதைக் காணமுடியும். அஜ்மீரில்ரிந்து, பாகிஸ்தானின் ரஹ்மான் பாபா மசூதி வரை வஹ்ஹாபிகள் ஏற்கெனவே குண்டு வைத்து தகர்க்க முனைந்திருக்கிறார்கள்/தகர்த்திருக்கிறார்கள்.

***

இன்றைய இஸ்லாமிய சமூகம் மூன்று பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது. மூன்றிற்குள்ளும் பல பிரிவுகள், பல குழுக்கள், சச்சரவுகள் இருக்கின்றன என்றாலும், மூன்றுவகை இஸ்லாம் இருப்பது உண்மை என்பது இன்று இஸ்லாமிய சமூகமே பொதுவாக ஏற்கும் ஒன்று. அவையாவன

(1) சுன்னி இஸ்லாம் – இதுவே பெரும்பாலோனோர் பின்பற்றும் இஸ்லாம். இதனுள் இருக்கும் முக்கிய குழு சூஃபியிஸத்தை ஏற்பது, ஆனால் அது தற்போது கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கையையும், நிலப்பரப்பையும் இழந்து வருகின்றது.

(2) தூய்மையான இஸ்லாத்தை பரப்ப முயல்வோர் – இதில் பெரிய குழு இன்று சலாஃபி/வஹ்ஹாபி என்று அறியப்படுகிறது

(3) ஷியா இஸ்லாம்.

இதில் கொஞ்சம் கொஞ்சமாக கடைசி இரண்டு இஸ்லாம்களும் முதல் இஸ்லாத்தை மென்று தின்று முன்னேறி வருகின்றன. இஸ்லாமிய உலகம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினையையும், அதிகமதிகம் கிளறிவிட்டு அதன் மூலம் தம் பக்கம் ஆள் சேர்க்கவும், தமது ஆதிக்கத்தை விரிவுபடுத்தவும் முயல்கின்றன.

உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இன்று அதிகமாக பரவி வருவது இஸ்லாம் இல்லை – ஷியா இஸ்லாம் மற்றும் வஹ்ஹாபி இஸ்லாம். பாலஸ்தீனப்பிரச்சினை, ஈராக் பிரச்சினை, ஆப்கானிஸ்தான் என்று எல்லாவற்றையும் கையில் எடுத்திருப்பது இந்த இரண்டு குழுக்களில் ஒன்று அல்லது இரண்டுமே. பாலஸ்தீனப்பிரச்சினையை கையிலெடுத்து அதன் மூலம் ஈரான் தனது ஆதிக்கத்தை பாரிய அளவில் கடந்த சில ஆண்டுகளில் விரிவுபடுத்தியுள்ளது. வஹ்ஹாபி இஸ்லாத்தின் கோட்டைகளில் கூட தற்போது ஷியாக்கள் மதமாற்றத்தில் ஈடுபடுகின்றனர். ஷியாக்களின் அபரிதமான அரசியல் செல்வாக்கும், வளர்ச்சியும் பாரம்பரிய சுன்னி உலேமாக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளன.

தமிழ்நாட்டில் கூட வஹ்ஹாபிகள் மற்ற முஸ்லீம்களை காபிர்கள் என்று அழைப்பதையும், மண உறவுக்கு மறுப்பதையும் பற்றிய சர்ச்சைகள் உண்டு என்பது அனைவரும் அறிந்தவொன்றுதான். காபிர்களுடனான மண உறவே இஸ்லாத்தால் விலக்கப்பட்ட ஒன்று.

***

இந்து மதத்திலும் இன்று ஏற்பட்டிருக்கக் கூடிய பல மாற்றங்கள்/ சீர்திருத்தங்களுக்கு அவநம்பிக்கையாளர்களின், மதத்துக்குள்ளிருந்தாலும் மாற்றிச் சிந்தித்தவர்களின் முனைப்பே காரணம். தேவதாசி முறை, சதி, பெண்களுக்கு சம உரிமை மறுப்பு மற்றும் பல சீர்திருத்தங்கள் நம்பிக்கையாளர்களிடமிருந்து எழவில்லை, அக்கூட்டத்திற்கு வெளியே இருந்துதான் புறப்பட்டது.

இஸ்லாத்தில் இப்படிப்பட்ட அவநம்பிக்கையாளர்கள் முர்தாத்தாக பார்க்கப் படுவதால், அவர்கள் மீது ஏகப்பட்ட வன்முறை ஏவப்படுவதால் இன்று இஸ்லாமிய விமர்சனங்கள் அதிகமதிகமாக இஸ்லாத்துக்கு வெளியே இருந்தே புறப்படுகின்றன. தனிப்பட்ட அளவில் பல இஸ்லாமியர்கள் இதை அவ்வப்போது ஏற்றுக்கொண்டாலும், மதத்தையும் மீறி சமூகம் என்ற சுருக்குக் கையிறு கழுத்தைச் சுற்றி இருப்பதால் தாவிக்குதிக்க தயங்குகின்றனர்.

எனது எழுத்துக்களை ‘அவதூறு’ என்று குற்றம் சாட்டும் நாகூர் ரூமி, இதே குற்றச்சாட்டை ‘இஸ்லாத்தில் ஏனில்லை ஒரு பெண் நபி’ என்று கவிதை மூலம் கேட்ட ஹெச்.ஜி.ரசூல் அவர்களைப் பற்றியும் சுமத்தினார். நான் இஸ்லாத்தின் வட்டத்திற்கு வெளியே இருப்பதால் என்னை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால், ஹெச்.ஜி.ரசூல் தமது சமுதாய அறிஞர்களால்(!), இஸ்லாமிய மதகுருமார்களால் ‘காஃபிர்’ என்று சமுதாய விலக்கம் செய்யப்பட்டார்.

ஒருவரையொருவர் அவதூறு புரிகிறார் என்று குற்றம் சாட்டிக்கொள்வது இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடையே வழமையான ஒன்று. தமிழக இஸ்லாமியப் பிரச்சாரகர்கள் பற்றிக்கூட இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்படுவதுண்டு. இது எவ்வித மாற்றுச்சிந்தனையையும், மாற்றுக்கருத்தையும் முடக்கும் ஒருவகையான மனநோய். இப்படியே மிரட்டி, காற்றில் எழுப்பப்பட்ட மாயக்கோட்டையை, மனதில் எழுப்பப்படும் கற்பனைக் கோட்டையை எவ்வளவு நாள் தான் காபந்து செய்ய முடியும்?

நேசகுமாரின் முகவரியை கேட்கிறார் நாகூர் ரூமி. எனது கருத்துக்களுக்கும் முகவரிக்கும் என்ன சம்பந்தம்? குடிசைப்பகுதியில் இருந்தாலோ, மாளிகையில் இருந்தாலோ எனது கருத்துக்களின் வீச்சு மாறிவிடுமா என்ன? ஒரு வேளை முழுமையான தகவல்கள் தெரிந்தால் இன்னும் அதிகமதிகம் பேர் ஆர்வத்தில் படிக்கக் கூடும். ஆனால், இஸ்லாமிய உலகின் வன்முறைக்கு பயந்து இஸ்லாமியர்களே அமைதி காக்கும் வேளையில், தனி ஆள் அல்லது குழு என்ன செய்ய முடியும்.

ஏற்கெனவே எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களை சென்று அவர்தான் நான் என்று நினைத்து மிரட்டியது பற்றி அவரே விரிவாக எழுதியிருக்கிறார் (எனக்கும் அவருக்கும் இருக்கும் ஏராளமான வித்தியாசங்களும், இருவரும் பல விஷயங்களில் நேரெதிர் என்பது கூட புரியாதவர்களும் இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யத்தையே அளிக்கிறது). ஜெயமோகன் இவ்வாறு எழுதியிருக்கிறார்:

“பல வருடங்களுக்கு முன்பு யமுனா ராஜேந்திரன் ‘பதிவுகள்’ இணைய தளத்தில் நேசகுமார் என்ற பேரில் எழுதுவது நானே என்று எழுதியிருந்தார். திட்டமிட்டு அவரால் செய்யப்பட்டது அது. ஏனென்றால் நேசகுமார் வேறு ஒருவர் என அப்போது அவருக்கு நன்றாகவே தெரியும். அதையொட்டி மிக உச்சகட்ட மிரட்டல்கள் எனக்கு வந்தன. நான் மீண்டும் மீண்டும் விளக்கங்கள் கொடுத்து மன்றாடி என்னைக் காத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அந்த அனுபவங்களை நான் இப்போது எழுதக்கூட முடியாது . பல மாதங்கள் மன உளைச்சல் நீடித்தது. அப்போது நான் பல மின்னஞ்சல்களை யமுனா ராஜேந்திரனுக்கு அனுப்பினேன். அவர் அவற்றுக்கு பதில் போடவில்லை என்பதுடன் என் கதை முடியப்போவதாக பிறரிடம் சொல்லி சிரிக்கவும் செய்தார்.”

இஸ்லாம்: மிரட்டல்கள், அவதூறுகள்

எனவே, ரூமியவர்களின் இந்த வேண்டுகோளின் உள்நோக்கம் என்ன என்பது புரிகிறது, இதை உதாசீனப்படுத்தி விட்டு போவதே சிறந்த வழி, தாற்காலிகமாகவாக என்று தோன்றுகிறது. வேறு எதுவும் சொல்ல இல்லாத நிலையில் , பதிலளிக்க முடியாமல் போகும் நிலையில் இப்படியே சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்டு அல்லது மிரட்டி தனக்குத்தானே முதுகில் தட்டிக்கொடுத்துக் கொண்டு தனது மண்கோட்டையே கல்கோட்டை என்று கனவு கண்டுகொண்டிருக்க பேராசிரியர் ரூமி நினைத்தாலும் சரி, அல்லது அவர் சொல்லியிருக்கும் பட்டியல் பற்றி விவாதிக்க முன்வந்தாலும் சரி – எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று அனைத்தையும் ஏற்கிறேன் நான்.
***
அடுத்த நாகூரியான ஹமீது ஜாஃபர் எழுதுகிறார், காபிர் என்பதில் இழிவொன்றுமில்லை, தவறொன்றுமில்லை என்று. இதற்கான பதிலை ரசூலே இதே திண்ணையில் எழுதியிருக்கிறார். காபிர் என்றால், அவரது சொத்துக்களை இஸ்லாமியர்கள் பறித்துக்கொள்ளலாம், கொலையும் செய்யலாம் என்று. ஆம், துரதிர்ஷ்டவசமாக முஹமதின் கூற்றுகளும், சுன்னாவும், அவை எல்லாம் கடவுளின் ஆக்கினைகள் என்று கருதும் அடிப்படைவாத முஹமதீயர்களும் இவற்றை இந்த நூற்றாண்டிலும் நம்பி வன்முறையில் ஈடுபடுகின்றனர்.

முஸ்லீம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் எந்த நாட்டிலும், காபிர் சமூகம் படுகிற பாடே இதற்கு எடுத்துக்காட்டு. பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் அந்த நாட்டின் மண்ணின் மைந்தர்களாகிய தலித்துகளும், பிற்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களும் சொந்த நாட்டிலேயே மூன்றாம் தரக்குடிகளாக, தினந்தோறும் இழிவையும், இன அழிப்பையும் சந்தித்துக்கொண்டிருக்கின்றனர். முஹம்மதின் வாழ்விலேயே இதற்கு முன்னுதாரங்கள் இருப்பதால், ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகமும் இவற்றை கண்டும் – இதற்கு நாமென்ன செய்ய முடியும், இது இறைவனின் ஆக்ஞை என்று கருதி மனிதத்தை துறந்து மவுனம் சாதிக்கிறது.

***

இது இந்துவான எனக்கு புதிதாய்த் தென்படவில்லை. ஏனெனில், இந்து சமூகமும் ஒரு காலத்தில் தமது சமூகம் செய்த பாலியல் எக்ஸ்ப்ளாய்டேஷன்களுக்கு மத வர்ணம் பூசியது – சவுதியில் வேலைக்கு வரும் இந்தோனேஷிய, இலங்கை பணிப்பெண்களை வன்புணர்கிறார்கள் என்றால், இங்கே நம்மிடையே பாரம்பரியம் – தெய்வக்குத்தம் என்ற பெயரில் பாலியல் ஆக்கிரமிப்புகள் நடந்தேறின.

இன்றும் ஆகம விதிப்படி இயங்கும் ஆலயங்களில் பெண் அர்ச்சகர்கள் இல்லை. அங்கே இமாமாக, முல்லாவாக, பிரார்த்தனையை வழி நடத்தக்கூடியவராக ஒரு பெண்ண ஏற்க அதே பாரம்பரியம், முன்னுதாரணம் முஹமதின் காலத்தில் இல்லை என்பதைக் காட்டி உரிமை மறுக்கப் படுகின்றது. ஏன், இதே நாகூர் ரூமியவர்கள் தனது பதிவில் பெண்கள் மசூதிக்கு சென்று தொழுகை நடத்துவதற்கு எதிராக எழுதியவர்தான், சல்மாவை ‘இடித்துக்கொண்டு நிற்க ஆசைப்படுகிற கூட்டம்’ என்று வக்கிரமாக சாடியவர்தான்.

எல்லா மதங்களிலும் அடிப்படைவாதிகள் இப்படித்தான் இருக்கின்றனர். இஸ்லாத்தில் அதன் அடிப்படையோடு சம்பந்தப்பட்ட காரணங்களினால் விகிதாச்சார அளவிலும், எண்ணிக்கையிலும் அதிக அளவில் இருக்கின்றனர், அதுதான் வித்தியாசம்.

***

Series Navigation

நேச குமார்

நேச குமார்

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 2

This entry is part [part not set] of 24 in the series 20090521_Issue

நேசகுமார்


எழுத இன்னும் நிறைய இருக்கிறது என்றாலும், நேரம் மற்றும் படிப்பவர்களின் பொறுமை ஆகியவை கருதி அப்துல் கையூமின் சில கருத்துக்களுக்கு மட்டும் பதிலளித்திட விழைகின்றேன். மற்றவை குறித்து (குறிப்பாக திரு. ஹமீது ஜாஃபர் அவர்களுக்கு) முடிந்தால் தனியே எழுதுகிறேன்.

அப்துல் கையூமின் கடித வரிகள்:

1. //‘கஃபா’ ங்குறது வெறும் கல்மண்டபம். அதப்போயி எந்த முஸ்லீமும் வணங்குறதில்லே. இறைவழிபாட்டுக்காக உலகத்துலே நிறுவப்பட்ட முதல் ஆலயம் அது. இன்னும் சொல்லப்போனா உலகத்துலே இருக்குற எல்லா பள்ளிவாசலும் இறையில்லம்தானுங்க. ஒரு Discipline-க்காக எல்லா முஸ்லீம்களும் கட்டுப்பாடான முறையிலே, ஒழுங்கு முறையைக் கடைப்பிடிச்சு, ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி, ஒரே நேரத்துலே தொழறாங்க அவ்ளோதான். கூட்டுப் பிரார்த்தனையிலே ஒரு ‘பவர்புல் வேவ்ஸ்’ கிளம்புதுன்னு இந்துமத சாஸ்திரங்கள் கூட சொல்லுதுங்களே. //

அப்துல் கையூமிற்கு அடிப்படை தெரியவில்லை. காபாவில் இன்னும் ஆதிகாலத்தில் அரபியர்கள் பெண் தெய்வங்களாக வழிபட்ட கம்பங்கள் இருக்கின்றன. ஹூபலாக வழிபடப்பட்ட ‘ஹஜருல் அஸ்வத்’ – லிங்கம் இன்னும் இருக்கின்றது.

மூன்று கம்பத்தெய்வங்கள்:
http://www.chillnite.com/wp-content/uploads/2007/07/k2.jpg

இவை உள்ளே கபாவை தாங்கும் தூண்கள் அல்ல. இவை உத்திரத்தை தொடவில்லை. இதே கம்பத்தெய்வங்கள் இஸ்லாத்துக்கு முந்தய காலத்தில் மத்திய கிழக்கு முழுவதும் வழிபடப்பட்டன.

ஹஜருல் அஸ்வத் – ஹூபல்:
http://upload.wikimedia.org/wikipedia/commons/1/16/Hajre_Aswad_BlacK_Stone.jpg

(இது சம்பந்தமான விரிவான கட்டுரையொன்றை எழுதியிருக்கிறேன், தனியே திண்ணைக்கு அனுப்புகிறேன்.)

முஹம்மது என்ன செய்தார் என்று அப்துல்கையூமுக்கு தெரியவில்லை. யூதர்கள் தன்னை நபியென்று ஏற்க மறுத்தவுடன் முஸ்லீம்களின் வணக்கஸ்தலத்தை ஜெருசலேமிலிருந்து பாகன் அரபிகளின் பிரபல காபா இருந்த (இது போன்று பல காபாக்கள் அந்தக்கால அரேபியாவில் இருந்தன) மெக்காவை நோக்கி வணங்கும்படி தன்னை நம்பியவர்களுக்கு கட்டளையிட்டார்.

மற்ற இறையில்லங்களும் காபாவும் ஒன்றல்ல. அதன் பெயரே மஸ்ஜிதுல் ஹராம். ஆம், அங்கே வேட்டையாடுவது விலக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது, மற்ற ‘இறையில்லங்கள்’ ஒன்று என்றால் (அ.கையூம் சொல்வது போன்று), அங்கேயும் இந்த தடை இருக்க வேண்டும். ஆனால், வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது போல பல விசேஷ அந்தஸ்துகள் காபாவுக்கு இருக்கின்றன. ஏன், பாகன் ஆலயமாக அது திகழ்ந்த காலத்திலேயே, அங்கே சிலைகள் குவிந்திருந்த காலத்திலேயே ‘அல்லாஹ்’ அதை ஆனைப்படையை அனுப்பு காத்தார் என்ற கதை இஸ்லாத்தின் அடிப்படையுடன் சம்பந்தப்பட்டதாயிற்றே.

நாகூரில் மொட்டையடித்தால் அது குஃபார் என்று வாதிடும் வஹ்ஹாபிகள் அங்கே மொட்டையடிப்பதை ஏற்கின்றனர். இங்கே குர்பானி கொடுத்தால் அது குஃபார் என்று கூக்குரலிடுவோர் அங்கே கடவுளுக்கு பலி கொடுக்கின்றனர். கல்லில் கடவுளை காண்போர் காபிர் என்று கூக்குரலிடுவோர் அங்கே ‘கடவுளின் எதிரியை’ கல்லில் கண்டு கல்லை கல்லால் அடிக்கின்றினர், அது ‘பகுத்தறிவாகவும்’ தெரிகிறது. ஒன்றுக்கும் உதவாத கல்லை கும்பிடுபவர்களை சாடுபவர்கள், அங்கே கல்லை தொட்டு அது பாவத்தை எடுத்துக்கொள்ளும், அதன் காரணமாக ஜிப்ரீல் கொண்டுவந்த சுயம்புலிங்கத்தின் வெண்மை நிறம் மாறி கருமை நிறம் கொண்டுவிட்டது என்று நம்புகின்றனர். அரபி பாகன்கள் வணங்குவதற்கு பின்பற்றிய முத்தமிடுதலை அக்கல்லை நோக்கி நிறைவேற்றுகின்றனர். தர்காஹ்க்களை வலம் வருதல் தவறு என்று வாதிடுவோர், அங்கே அப்பிரதட்சனம் செய்கின்றனர். திருவண்ணாமலையை வலம் வருதல் தவறு என்று கேலி செய்வோர், அங்கே சபா மர்வா குன்றுகளுக்கு இடையே நடந்து கடவுளின் நல்லாசியைப் பெற விரும்புகின்றனர்.

அந்த ‘இறையில்லத்தில்’ நிகழ்த்தப்படும் எதையும் மற்ற மசூதிகளில், தர்காஹ்க்களில் செய்வதில்லை. அப்படி செய்ய முயன்ற சூஃபியிஸத்தை தவறென, கடவுளின் கட்டளைகளுக்கு எதிரானதென கோபத்துடன் பார்க்கின்றனர். இபுராகிமின் தர்காஹ்வில் நிறைவேற்றப்படும் இதெல்லாம் மற்ற தர்காஹ்க்களில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த முரண் யாருக்கும் புரியவே இல்லை.

அப்துல் கையூமுக்கு இதெல்லாம் தெரியாது என்று நினைக்கவில்லை. ஆனால், பிறரை ஏமாற்றுவதற்காக சொல்லும் வாதங்களிலேயே மூழ்கிப்போயிருக்கும் ஒரு சமூகத்திலிருந்து வரும் பதில், எதிராளிக்கு யோசிக்கத் தெரியும் என்று யோசித்து வருவதில்லை.

2. //நீங்க சொல்லுற மாதிரி “அல்லாஹ்”ங்குற கடவுள் கஃபாவுக்குள்ளே இருக்குறதா யாரும் சொல்லலீங்க.//

இல்லை. இறைவன், காபாவுக்கு மேலே ஏழு வானங்களுக்கு மேலே தனது இருப்பிடத்தில் இருப்பதாகத்தான் இஸ்லாம் சொல்கிறது – அல்பைதுல் மு’முர் என்ற இறையில்லம் அங்கே இருக்கிறது (அதாவது முஹம்மது தனது புராக் பயணத்தில் சொல்லியது இது. பின்னாளில் வணக்கஸ்தலம் காபாவுக்கு இடம்பெயர்ந்த பின்பு, கடவுளும் இடம் பெயர்ந்தார்).

இது சம்பந்தமான ஹதீஸ் இங்கே இருக்கிறது:
http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/hadith/bukhari/058.sbt.html#005.058.227

3. //நீங்க கொடுத்திருக்கிற நிறைய தகவல் பொய்யும் புரட்டுமா இருக்குதுங்க, உதாரணமா ‘ஷியா’ பிரிவினர் நபிகள் நாயகத்தை நபின்னு ஏற்க மறுத்தாங்கன்னு சொல்றது உண்மையில்லீங்க. //

இந்த அரபி வலைத்தளத்தில் சென்று பாருங்கள். அடுக்கியிருக்கிறார்கள்.

http://www.kr-hcy.com/index2.shtml
http://www.kr-hcy.com/shia/kufr.shtml

முஹமதிற்கு கொடுக்கப் பட்ட உரிமைகள் 12 இமாம்களுக்கும் கொடுக்கப் பட்டிருகின்றன என்று சொல்லும் ஷியாக்கள், முஹம்மதின் இறுதி நபித்துவத்தை, விசேஷ நபித்துவத்தை மறுக்கிறார்களா இல்லையா என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று:

//Imamiya- The ‘twelver’ Shi’as. They believe that after the Prophet, twelve Imams have come and they had the same authority of legislation as the Prophet had himself. The majority of the Shi’as we find today are Imamiya. //

http://www.muftisays.com/viewarticle.php?article=ss

இது மட்டுமல்ல. இணையத்தில் இன்று இஸ்லாமியர்களிடையே நடக்கும் விவாதங்களைப் பாருங்கள், தெரியும். இதே திண்ணையில் பேராசிரியர் ரூமி, இந்த இறுதி நபித்துவத்தை நிராகரிப்போர் இஸ்லாமியர்களே இல்லை என்று வாதிட்டிருக்கிறார் என்பதையும் அப்துல் கையூமின் கவனித்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

உடனடியாக அப்துல் கையூம் என்ன சொல்வார் என்று தெரியும், வலைத்தளத்தில் இருப்பதெல்லாம் ஆதாரமில்லை என்பார். உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட self denial mode ல் தான் உள்ளனர். கண்ணை, அறிவை, மனதின் ஈரத்தை மறைக்கும் ஈமான் உலகெங்கும் இருக்கும் இஸ்லாமிஸ்டுகளின் பார்வைக்குறையை ஏற்படுத்திவிடுகிறது. இரட்டை கோபுரங்கள் இடிபட்டால் அது யூதச்சதி என்று நம்புகிறார்கள், அல்லது கோபுரங்களே இடிபடவில்லை என்று சாதிக்கிறார்கள், மும்பை தாக்குதலில் ஈடுபட்டது பாகிஸ்தானிய முஸ்லீம் அடிப்படைவாதிகள் அல்ல பாஜகவினர் என்று நம்புகின்றனர், தர்காஹ்க்களில் குண்டுவைப்பது சக முஸ்லீம்கள் இல்லை, ஈராக்கில் ஷியாக்களை கொல்வது சுன்னிகள் இல்லை, அமெரிக்கர்கள் என்று நிதர்சனத்தை ஏற்க மறுத்து விதண்டாவாதம் செய்கின்றனர். இது தக்கியாவா அல்லது உண்மையிலேயே கண்களுக்கு உண்மை புலப்படவில்லையா, இந்த மனமயக்கம் எந்த வகையானது என்பதெல்லாம் நீண்ட ஆய்வுக்குரிய விஷயங்கள்.

ஷியாக்களை கொன்று குவிக்கும் சுன்னிக்களின் அறிக்கைகள், ஈராக்கில் வஹ்ஹாபிகளின் ஃபத்வாக்களினால் பெருகும் விவாகரத்துகள்(கணவன் – மனைவி, ஷியா – சுன்னியாக இருப்பதால் இந்த விவாகரத்துகள்), குண்டு வைத்து தகர்க்கப்படும் ஷியா வழிபாட்டுத் தலங்கள், அவற்றை செய்பவர்களை கண்டும் காணாதது போலிருக்கும் மற்ற சுன்னி முஸ்லீம்கள் என்று ஏராளமான ஆதாரங்கள் இருந்தும், இது வெறும் பிரிவுகளுக்கிடையேயான சச்சரவுகள் இல்லை, காபிர்கள் என்று ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு கொன்று குவிக்கும் மதப்போர் என்பது கூட புரியவில்லை, கண்ணுக்குப் புலப்படவில்லை என்றால் என்ன செய்வது? பரிதாபப்பட்டு, என்றாவது ஒரு நாள் இவர்களுக்கு விழி திறக்கும் என்று நம்பி முன்னகர்வதுதான் உலகின் முன் இருக்கும் ஒரே வழி. அதைத்தான் இந்திய சமூகம் கடந்த பதிமூன்று நூற்றாண்டுகளாக செய்து வருகிறது.

4.//அந்த காலத்து அரபிங்களை ‘காட்டரபிகள்’ன்னுதான் வரலாறே குறிப்பிடுது. அரபியிலே ‘ஜாஹிலியத்’, இங்கிலீசுலே ‘Barbaric’ ன்னு வருணிக்குறாங்க. கொஞ்ச நஞ்ச அட்டகாசம் இல்லீங்க.//

இது இஸ்லாம் சொல்வது. அதாவது வெற்றி பெற்ற பின்பு அழிக்கப்பட்ட மக்களை இழித்து வென்றவர்கள் எழுதும் சரித்திரமிது. ஆபிரகாமிய மதங்கள் அனைத்திலும் இந்த demonisation இருப்பதைப் பார்க்கலாம். ஏனெனில் ஏகப்பட்ட கொடூரங்களை தம்மைவிட பெருந்தன்மையாகவும், பண்பட்டவர்களாகவும் இருந்த ஒரு கூட்டத்தின் மீது நிகழ்த்திடும் காட்டுமிராண்டிக்கூட்டம் எப்போதும் இந்த பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது. மெல் கிப்சனின் Apocalypto பார்த்தால் இந்த யுக்தி புரியும். தென்னமரிக்க பாகன்களை அழித்த ஆக்கிரமிப்பாளர்களை விடுதலையாளர்களாகவும், மனித நேயப்பண்பாளர்களாகவும், அழிக்கப்பட்ட அந்த தொன்மைக் கலாச்சாரம் அழிக்கப்பட வேண்டியதுதான் என்பதை பார்வையாளர்களின் மனதில் நிலை நிறுத்தும் முயற்சி இது.

இந்த ‘காட்டரபிகள்’ தாம் முஹம்மதின் முதல் மனைவி கதீஜாவை தனக்கு விருப்பப்பட்டவரை மணந்து கொள்ள அனுமதித்தனர் – பின்னாளில் முஹம்மதின் ஷரீயா அதை நிராகரித்து, பெற்றோரின் அனுமதி எனும் கண்டிஷனை இட்டது. அந்த ‘காட்டரபிகள்’ காலத்தில் தான் கதீஜா தனக்கென ஒரு தனியான வியாபாரத்தை நிகழ்த்த முடிந்தது, சுதந்திரமாக செயல்பட முடிந்தது, செல்வம் ஈட்ட முடிந்தது. ஆனால், இதெல்லாம் காட்டுத்தனம் என்றால், இஸ்லாம் நிறுவப்பட்ட பின்பு நிகழ்ந்தவைகளை என்ன சொல்வது? தாலிபான் செய்வதெல்லாம் நாகரிகமான செயல்கள் என்று உலகம் முழுவதையும் ஏமாற்ற முடியுமா என்ன?

5. //அது மட்டுமில்லீங்க. பொம்பளைங்களை ஒரு போகப் பொருளாத்தான் அவுக நெனச்சாங்க. ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துலே ஜெயலலிதாவை சாட்டையாலே அடிச்சு அடிச்சு ஏலம் விடுவாங்க. அந்த அம்மாவும் “ஆடாமல் ஆடுகிறேன், பாடாமல் பாடுகிறேன், ஆண்டவனைத் தேடுகிறேன்”னு சொல்லிப்புட்டு மயங்கி மயங்கி ஒரு தினுசா டான்ஸ் ஆடும். இப்படித்தான் அரபிகளும் பொம்பளைங்களை ஒரு வியாபாரப் பொருளா கருதி ஏலம் விட்டாங்க.//

இந்த ஏலம் விடுவது முஹம்மதும் செய்த ஒன்றுதான். அவர் செய்ததாலேயே, அல்லாஹ்வின் சட்டமாகவும் ஆனது. Infact mohammed institutionalised it by granting it legitimacy in the name of Allah. நாகரிக உலகம் விழித்துக்கொள்ளும் வரை இஸ்லாமிய உலகம் முழுவதும் இது சாதாரண வழக்கமாகவும், சமூக வழக்கமாகவும் இருந்தது. யூதர்களை கொன்றபிறகு அவர்களின் பெண்களை பிடித்து ஏலம் விட்டார், தனது நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்தார், தான் விரும்பிய பெண்களை எடுத்துக்கொண்டார் – இதில் எங்கேயும் அந்த பெண்களின் கருத்துக்களை கேட்டதாக ஹதீஸோ, குரானோ சொல்லவில்லை. மாறாக குரானில், அப்படி பிடிக்கப்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளலாம் என்று கடவுள்(!) சொல்வதாக இருக்கிறது. பார்க்க:

http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/hadith/bukhari/049.sbt.html#003.049.860

http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/hadith/bukhari/050.sbt.html#003.050.885

http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/hadith/bukhari/008.sbt.html#001.008.367

http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/hadith/bukhari/053.sbt.html#004.053.373

குரான் சூரா 23, நம்புபவர்கள் வெற்றியைத் தழுவுவார்கள் என்று சொல்லிவிட்டு (இப்போதும் மசூதியில் இப்படியே அழைப்பு விடுக்கப்படுகிறது – வெற்றியை நோக்கி வாருங்கள் என்று, அந்தக்காலத்தைப் போலவே) நம்புபவர்களே நீங்கள் உங்களது மனைவிகள், உங்களால் போரில் பிடிக்கப்பட்டவர்கள், உங்களது உடமைகள்/அடிமைகள் ஆகியோருடன் உடலுறவில் ஈடுபடுவது அனுமதிக்கப்படுகிறது என்று தெளிவாக அறிவிக்கிறது.

பார்க்க வசனம் 23:06:

YUSUFALI: Except with those joined to them in the marriage bond, or (the captives) whom their right hands possess,- for (in their case) they are free from blame,

http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/023.qmt.html

5. //நான் நாகூர்காரன்தாங்க. அதனாலே What is your Problem? எங்க ஊரு, எத்தனையோ படைப்பாளிகளை தமிழ்மொழிக்கு வேண்டி அர்ப்பணிச்சுருக்கு.//

நான் நாகூரையோ, அந்த ஊர்க்காரர்களையோ தவறாக சொல்லும் தொணி என்னுடைய கட்டுரையில் தெரிந்தால் அதற்கு படிப்பவர்களின் கலர்க்கண்ணாடிதான் காரணமே தவிர, என்னுடைய எழுத்தில் அப்படிப்பட்ட பொதுப்படையான குற்றச்சாட்டு எதுவும் இல்லை. நான் மிகவும் ரசித்து படிக்கும் சாருநிவேதிதாவும் நாகூரிதான். நாகூர் தர்காஹ்வுக்கு நானும் சிறுவயதில் சென்றிருக்கிறேன். கடைசியாக நான்கு வருடங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தொட்டு எழுத ஆரம்பித்த பின்பு, அங்கிருக்கும் சமாதிகள் குறித்த ஆய்வுக்காக நண்பர்களுடன் சென்று வந்தேன். குப்பையும் கூளமுமாக இருக்கும் சென்னையின் மத்திய பகுதியை விட்டுவிட்டு புறநகர்ப்பகுதியிலிருந்து துவங்கினால், கோவளத்திலிருந்து தேங்காப்பட்டினம் வரை தமிழகத்தின் நெய்தல் நிலப்பரப்பு மிகவும் அழகானது, சுகமானது என்பதில் என்ன சந்தேகம்? நல்ல நிலப்பரப்பு நல்ல ஜனங்களையும், நல்ல சிந்தனையையும் தருகிறது. குப்பையும், கூளமுமாக இருக்கும் நிலப்பரப்பு அல்லது தகிப்பும் வெறுமையும் நிறைந்த பாலைவனம் நமது புத்தியை பேதலிக்கச் செய்கிறது. மத்திய காலங்களில் புறப்பட்ட அழிவுக்கோட்பாடுகள் பாலைவனங்களிலிருந்து புறப்பட்டது என்றால், இன்றைய காலகட்டத்தில் குப்பையும் கூளமுமான நகரங்கள் அதையே செய்கின்றன, பெரும் கூட்டத்தின் மனதை ஆக்கிரமிக்கின்றன. சுகமான பிரதேசங்களில் இருக்கும் பன்மைத்தன்மை, எளிமை, அன்பு ஆகியவை இந்த ஆவேசங்களின் முன்பு மண்டியிட்டு திம்மிகளாகின்றன அல்லது எதிர்த்து நின்று அழிவை சந்திக்கின்றன.

அழிவையும் இறைவனாக வணங்கும் ஒரு இந்துவான நான் நடப்பதெல்லாம் இறை சித்தம் என்றே ஏற்கிறேன். இதில் குப்பை கூளத்தையே குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை எனும்போது நாகூரையோ, நாங்கோரிகளையோ இழித்துப் பேசுவதற்கு இடமேது?

***

சுருங்கச் சொல்வதானால், இந்த ஐந்துவருட இணையப் பயணத்தில் நான் கண்ட உண்மை ஒன்றுதான். அது, Empty rhetoric + jingoism + psycho frenzy இந்த மூன்று தான் தமிழ் இஸ்லாமிஸ்டுகளின் மனங்களை முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கிறது, உலக இஸ்லாமிஸ்டுகளைப் போலவே. அங்கே சிந்திப்பதற்கோ, சுய விமர்சனங்களுக்கோ இடமே இல்லை. மெல்ல மெல்ல தாமே உருவாக்கும் சுழலில் தம்மை ஆழ்த்திக்கொள்வதோடு பக்கத்தில் இருப்பவர்களையும் பிடித்து உள்ளே இழுக்க முயல்கின்றனர். அந்த பாணியைத்தான் நான் திண்ணையில் விவாதிக்கும் இஸ்லாமிஸ்டுகளிடம் காண்கிறேன். மிகப் பெரும் அழிவு ஒன்றைத்தவிர வேறு எதுவும் மூடிய ஒரு குழுவை சிந்திக்க வைத்துவிட முடியாது. எனவே எனது கருத்துக்களால் ஒரு ரூமியோ, ஹமீதோ, கையூமோ மாறிவிடுவார்கள் என்ற நம்பிக்கையெல்லாம் இல்லை. இந்த விவாதங்கள் எனக்கு நானே செய்து கொள்ளும் உரத்த சிந்தனைதான். இந்த உரத்த சிந்தனையில் யாரும் எனது கருத்தை அப்படியே ஏற்கவேண்டும் என்ற எண்ணம் சிறிதுமில்லை எனக்கு. படிப்பவர்களின் சிந்தனையை தூண்டினால், அது மானுடத்திற்கு பலனளிக்கும் என்ற எண்ணமே என்னை தொடர்ந்து சிந்திக்க, எழுத, செயல்பட வைக்கின்றது. எதோ ஒரு கணத்தில் எனது சிந்தனைகள், இப்படியும் இருக்குமோ என்று என்றாவது ஒரு நாள் சக மானுடர்களின், சக தமிழர்களின் மனதில் குமிழியாக மேலெழுந்தால், அதுவே எமது உழைப்பிற்கு, நாங்கள் செலவிட்ட நேரக்குர்பானிகளுக்கு, தியாகங்களுக்கு கிடைத்த பலனாக ஏற்பேன். இல்லாவிட்டாலும் பரவாயில்லை, பலனை எதிர்பார்த்து செய்யப்படும் தியாகங்கள் இக-பர சுகங்களையும், பலனை எதிர்பார்க்காமல் செய்யப்படும் தியாகங்கள் பிறவிப்பெருங்கடலைக் கடக்க உதவும் என்ற சிந்தனை திகழும் மண்ணை எனது பாரம்பரிய மண்ணாக ஏற்கும் நான் இந்த இணையப் பயணத்தினால் விளைவு எதுவுமில்லாமல் போனாலும்,நீண்ட இறையுதிர் காலங்களுக்குப் பின்னும் என்னிடம் எனது மூதாதையரின் எச்சங்கள் இருக்கிறது என்ற சிந்தனையுடன் அதையும் இறை செயலாக ஏற்கிறேன்.


http://nesakumar.blogspot.com
http://islaamicinfo.blogspot.com
http://nesamudan.blogspot.com

Series Navigation

நேச குமார்

நேச குமார்