ஸ்கொட்டிஸ் வேட்டைக்காரரின் நாய்

This entry is part [part not set] of 33 in the series 20090212_Issue

நடேசன்



சிலகாலத்தின் முன் சுயகரமைத்துனம் என்று ஒரு வார்த்தையை பார்த்து விட்டு அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள பல காலம் சென்றது. எழதியவர் கையாட்டம் எனும் தமிழ் சொல்லையோ மாஸ்ரபேசன் என்ற ஆங்கிலச் சொல்லையோ பாவித்திருக்கலாம். மிருகவைத்தியம் படிக்கிற காலத்தில் ஆண் பன்றியிலும் காளை மாட்டிலும் விந்தை பெறுவதற்து எங்கள் கைகளைப் பாவித்து பன்றியில் ஒரு கிளாஸ் நிரம்பவும் காளையில் செயற்கையான பெண் யோனியை பாவித்து சிறிய கண்ணாடி குளாயில் எடுத்துக்கொள்வோம். இப்படியான தொழில்பாட்டை எப்படி தமிழில் வர்ணிக்க முடியும்? யூராவது தமிழ் பண்டிதர் ஒருவரைத்தான்
கேட்கவேண்டும். இதேவேளையில் எனக்கு தெரிந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன்.

என்னுடன் வேலை செய்யும் ஹசன் என்ற மிருக வைத்தியர்.லெபனானை சேர்ந்தவர். புதினான்கு வயதிலே இவரிடம் பதினைந்து துப்பாக்கிகள் இருந்த பின்பு அவைகளை விற்று வந்த பணத்தில் தான் அஸ்திரேலியாவுக்கு வர விமான டிக்கட் வாங்கியது எனக்கூறினார்.சிறு வயதில் இருந்தே வேட்டைக்காரர் ஆன இவரிடம் குறைந்த பட்சம் தற்போது பன்னிரண்டு துப்பாக்கிகள் உள்ளது.. இதைவிட இவரது வேட்டைக்கு உதவுதற்கு நாலு ஸ்பிறிங்கர் ஸ்பனியல் என்ற சாதியை சேர்ந்த நாய்கள் உண்டு.

இவரது வேட்டைக்கார நண்பர்களை சந்தித்துள்ளேன். இவர்கள் ஒரு தனி உலகத்தை சேர்ந்தவர்கள் போல் எனக்கு தென்படுவார்கள். இவர்களது பேச்சு பெரும்பாலும் வேட்டை சம்பந்தமாகத்தான் இருக்கும்.நாய்களும் துப்பாக்கிகளுமே இவர்களது பேச்சின் கருப்பொருளாக இருக்கும்.அடுத்த வேட்டையை பற்றியோ அல்லது கடந்த வேட்டையை பற்றி தொடர்சியாக பேசுவார்கள். வேட்டையாடுதல் எனக்கு கற்கால வழக்கமாக தெரிவதால் குறைந்த பட்சமான சம்பாசணையுடன் இவர்களை தவிர்த்து கொள்வேன். எனது நண்பனின் பல துப்பாககி;கள் வாங்குவதற்கு சாட்சியாகியுள்ளேன்.ஆனால் அந்த துப்பாக்கிகளை தொடுவதைகூட தவிர்த்துக் கொள்வேன். இலங்கையில்; பார்த்த துப்பாக்கிகள் ஏற்படுத்திய அருவருப்போ தெரியவில்லை.

ஆஸ்திரேலியாவில் அமரிக்காவைப் போல் அதிக அளவு கொலைகள் துப்பாக்கியால் தற்காலத்தில் நடக்காதது மனத்துக்கு ஆறதலானது. அமரிக்காவில் ஒவ்வொரு குடிமகனக்கும் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையுள்ளது. ஆதனால் இலகுவாக கடைகளில் வேண்டிக்கொள்ளலாம். ஆஸ்திரேலியாவில் அது போல் இலகுவாக இல்லை. இந்த நாட்டின் வரலாறும் பல கறைகள் நிறைந்தது.

ஆஸ்திரேலியாவில் பலகாலமாகாக துப்பாக்கிகள் பழங்குடி மக்களுக்கு எதிராக இருந்தன.1800 ஆரம்ப காலத்தில் தஸ்மேனியாவில் ‘கறுப்பு போர்’ எனக் கூறி ஏராளம் பழங்குடியினர் கொல்லப்பட்டனர்ர. பு¢ன்பாக 1815ல் ஏழு வெள்ளை இனத்தவர்கள் பதுஸ்ட்(டீயுவுர்ருளுவு ஐ§ §ளுறு ) கொல்லப்பட்ட பின.பு இராணுவ சட்டம் பிரகடனப்பட்டது. இதன் பின்பு நூறு ஆண்டு காலம் தொடர்சியாக ஆஸ்திரேலியப் பழங்குடீயினர் கொலை செய்யப்படடனர். இருபதாம் நூற்றாண்டில் நிலைவரம் திருந்தியது

1996 ஏப்பிரல் 28 ம் திகதி தஸ்மேனி¢யாவில் போட்ஆதர் என்ற உல்லாசப்பிரயாணிகள் வரும் இடத்தில் மன நலம் அற்ற மாட்டின் பைரன்ட( ஆயசவ¨¦ டீசலயவெ) ஒரு நிமிடத்தில் இருபது பேரை கொலை செய்யப்பட்டதும் முழு அஸ்திரேலியாவும் விழித்து எழுந்தது.துப்பாக்கிகளை கட்டப்படுத்தும் சட்டம் கொண்டுவரப்பட்டு நாலு இலச்சம் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு நசித்து ஏறியப்பட்டடது.
தற்பொழுது சொட்கன்(ளூழசவ புர¦)எனப்படும் துப்பாக்கிகள் மட்டுமே விவசாயிகளிடமும் பொழுது போக்கிற்காக வேட்டை ஆடும் கிளப் அங்கத்தவரகளிடம் உள்ளது.

இந்த கிளப்பொன்றில் டாக்டர் ஹசனும் அங்கத்தினர் ஆனபடியால் இவர்கள் பல இடங்களில் இருந்து தங்களது வேட்டை நாய்களை கொண்டு எனது கிளினிக்கு வருவார்கள். ஏதாவது அவசரமாக இருந்தால் மட்டுமே நான் அவர்களது நாய்கனை பாரிசோதிப்பேன். முடிந்தவரையில் எனது நண்பனிடம் அனுப்பி விடுவேன்.

ஓரு முறை மருத்துவ பரிசோதனை ரிப்போட் ஒன்று எனக்கு வந்தது அதை எடுத்து படித்துப்பார்த்ததும் சிறு நீரகம் இரண்டும் மொத்தமாக பழுதடைந்த நாய் ஒன்றினது என புரிந்து கொண்டேன்.

ஏனது நேர்சிடம் கேட்டேன் ‘இது டாக்டர் ஹாசனது நண்பரின் நாய். பன்னிரண்டு வயதான ஆண் நாய்’

‘இந்த நாய்க்கு எந்த சிகீச்சையும் செய்ய முடியாது. என்ன செய்வதாக உத்தேசம்?’

‘நாயின் சொந்தக்காரர் ஒரு வயதானவர். அந்த நாயை மிகவும் மிகவும் நேசிப்பவர்’

;’சரி அவரும் டாக்டர் ஹாசானும் பட்டபாடு’ என கூறி விட்டு நான் அந்த விடயத்தை மறந்து விட்டேன்

சில நாடகளுக்குப் பின் நான் வந்த போது கரும் சிவப்பு ஸ்பிறிங்கர் ஸ்பனியல் நாய் ஒன்றுக்கு சேலையின் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்து.

நான்இதைப்பற்றி விசாரித்தபோது ‘இதுதான் அந்த சிறுPரகம் பழுதாகிய நாய். உடலில் தண்ணீர் வற்றிப் போய்விட்டது. அதுதான் இன்று சேலையின் ஏற்றப்படுகிறது;

‘இந்த நாய் பிழைக்காது. பேசாமல் ஊசியை ஏற்றி கருணைக்கொலை செய்யவேண்டிணதுதானே’

‘அதுதான் செய்யப்படபோகிறது. ஆனால் இந்த நாயின் விந்தை அதற்கு முதல் எடுத்து பாதுகாக்கப்போகிறார்கள்.. இந்த நாய் வேட்டையில் மிகவும் திறமையானது. இதனது விந்தை வேறு ஒரு பெண் நாயியின் கருப்பையில் ஏற்ற விரும்புகிறார்கள். இன்று மொனாஸ் மிருக வைத்தியசாலைக்கு விந்தை எடுக்க கொண்டு சொல்லப்போகிறார்கள்’

இப்படி நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது அறுபத்தைந்திற்கு மதிக்கத்தக்க ஒருவர் உள்ளே வந்தார்

‘எங்கே டாக்டர் ஹாசன்?’ ஸ்கொட்லாந்து பேச்சு முறைபோல் இருந்தது.

‘சிறிது நேரத்தில் வந்து விடுவார்’ என எனது நேர்சிடம் இருந்து பதில் வந்தது

சொன்னபடியே சிறு¢து நேரத்தில் டாக்டர் ஹாசன் வந்ததும் அந்த நாயின் காலின் நாளத்தின் ஊடாக சென்று கொண்டிருந்த சேலையினை நிறுத்தி கூட்டிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டது.

அந்த சென்னிறமான ஸ்பிறிங்கர் ஸ்பனியல் சிறிது உற்சா¡கமாக நின்றது. முகத்தில் ஒரு களையுடன் பொலிவாக காட்சியளித்தது. உள்ளே போய் இருந்த கண்கள் இப்பொழுது வெளியே வந்து பிரகாசமாக இருந்தன இதற்கு காரணம் ஒரு லீட்டர் சேலையினா அல்லது இறுதியாக தனது ஆண்மையை நிட்சயப்படுத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பம கிடைக்கிறது என்ற விடயத்தை ஏற்கனவே புரிந்து கொண்டதாலோ தெரியவில்லை.

ஹென்றி என்ற நாயின் உரிமையாளரும் டாக்டர் ஹாசன்னும் ஆக காரில் ஸ்பிறிங்கர் ஸ்பனியலை காரில் ஏற்றி சென்றார்கள்.

இந்த விடயத்தில் பல கருத்து வேறுபாடுகள் எனக்கு இருந்தாலும் இந்த செயல் ஆச்சரியத்தை எனக்கு அளித்தது. இதைவிட இந்த வேட்டையாடுபவரகளிடம் இருந்த தோழமையை என்னால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

இரண்டு நாட்களுக்கு பின்னால் டாக்டர் ஹாசன் வந்த போது கேட்டேன்.

‘நாய்க்கு என்ன செய்தார்கள?;’

‘என்ன செய்வது? ஆங்கே மாஸ்ருபேற் செய்தார்கள்?

‘எவ்வளவு காசு அதற்கு?’
‘500 டாலர்’

‘500 டாலரா ?’

‘பின்னே அவர்கள் அதை லிக்குவிட் நைதரசனில் பாதுகாக்கவேண்டும்’

‘நாய்க்கு என்ன நடந்தது?

‘நாய்க்கு ஒரு புலட்டை பாவிக்கவிருப்பதாக ஹென்றி சொன்னா¡ர்’

‘நாங்கள் அமைதியாக கருணை கொலை செய்யலாமே?

‘எங்களிலும் பார்க்க புலட் மலிவு என ஹென்றி நினைக்பிருக்கலாம். உனக்கு தெரியும்தானே ஹென்றி ஸ்கொட்டிஸ் என்று

நன்றி யுகமாயினி ஜனவரி 09

Series Navigation

நடேசன்

நடேசன்