லூயி ப்ரெயிலின் 200ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்

This entry is part [part not set] of 24 in the series 20090101_Issue

Venkatesh Babu


அன்புடையீர்,

வணக்கம்.பார்வையற்றவர்களுக்கான ப்ரெயில் எழுத்துக்களைக் கண்டுபிடித்த லூயி ப்ரெயிலைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.குறிப்பாக, படித்த பார்வையற்றவர்களுக்கு லூயி ப்ரெயில் குறித்த விழிப்புணர்வும், நன்றியுணர்வும் மிகவும் உண்டு. காரணம்,ப்ரெயில் எழுதுமுறை என்ற ஒன்றை உருவாக்கி வெறும் ஆறே புள்ளிகளில் (அவற்றின் வெவ்வேறு இணவுகளில்) உலகிலுள்ள அத்தனை மொழிகளையும் பார்வையற்றோர் கற்கக் கூடிய வழியமைத்துத் தந்தவர் அவர்! பார்வையற்றோருக்குக் கல்விக் கண்ணைத் திறந்து விட்டவர்.பார்வையற்றோரும் கல்வி கற்று வேலை பார்க்கவும், சுயமாக இயங்கவும் வழியமைத்துக் கொடுத்தவர் லூயி ப்ரெயில்.

லூயி ப்ரெயிலின் 200ஆவது பிறந்த நாள் கொண்டாட்டமாக ஜனவரி 2008 முதல் ஜனவரி 2009 முடிய உலகெங்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தேறி வருகின்றன. லூயி ப்ரெயிலின் அரிய பணியைப் போற்றிப் பாராட்டும் விதமாக அவருடைய 200ஆவது பிறந்த நாளை மகத்தான வழியில் கொண்டாடுமாறு ஐ. நா சபை உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. அவருடைய சீரிய பணியை நாட்டு மக்களுக்கு அறியச் செய்யும் விதமாய் லூயி ப்ரெயில் உருவம் பதித்த தபால் தலையை வெளியிட இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள நான்கு பார்வையற்றோர் நன்நல அமைப்புகள் -The Indian Association for the Blind, The Tamil Nadu Association of the Blind, Visually Impaired Women’s Association and, The Welfare Foundation of the Blind, நான்குமே தில்லியிலுள்ள ALL INDIA CONFEDERATION OF THE BLIND என்ற அகில இந்திய அமைப்பில் உறுப்பினர்களாக அங்கம் வகிப்பவை, மற்றும் வேறு இரண்டு அகில இந்திய அமைப்புகளான National Association for the Blind, National Federation of the Blindஆகியவற்றின் தமிழ்நாட்டுக்கிளைகளும் இணைந்து லூயி ப்ரெயில் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டம் தொடர்பான ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை உருவாக்கிச் செயல்பட்டு வருகின்றன.
இந்த ஒருங்கிணைப்புக் குழு லூயி ப்ரெயில் நினைவைப் போற்றும் விதமாகவும், பார்வையற்றோர் வாழ்வில் ப்ரெயில் எழுத்துக்களுக்கு உள்ள முக்கியத்துவத்தைப் பற்றியும், பார்வையற்றோரின் பிரச்னைகள், திறனாற்றல்கள் ஆகியவை குறித்தும் மக்கள் மத்தியில் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளை இந்த ஓராண்டு காலமாக நடத்திக் கொண்டு வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள பார்வையற்றோர் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு ப்ரெயில் எழுதும், வாசிக்கும் திறன் சார் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. பார்வையற்ற கல்லூரி மானாக்கர்களுக்காக ப்ரெயிலின் முக்கியத்துவம் குறித்த கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
ப்ரெயில் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக WELFARE FOUNDATION OF THE BLIND இந்த நூலை வெளியிடுகிறது. இதில் லூயி ப்ரெயிலின் வாழ்க்கை வரலாறு, மற்றும் ப்ரெயில் எழுத்துமுறை பற்றிய, இந்த ஆண்டு தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்த அளவில் நடந்தேறிய மொழிபெயர்ப்புப் பயிலரங்கில் பார்வையற்ற மாணாக்கர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு மொழிபெயர்த்த கட்டுரைகள் ஆகியவை இடம்பெறுகின்றன.
பார்வையற்றோர் நலனில் அக்கறை கொண்டு, அந்த இலக்கை நோக்கிய எங்கள் பயணத்தில் எங்களுக்கு ஆதரவும், உதவியும் நல்கி உறுதுணையாக இருந்து வரும் அனைவருக்கும் இந்த நேரத்தில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடைய முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்று எல்லோரையும் அன்போடு வேண்டிக் கொள்கிறோம்.
Venkatesh Babu
Secretary
Welfare Foundation of the Blind

Series Navigation

Venkatesh Babu

Venkatesh Babu