தடயங்களை விட்டுச்செல்கிறது, காலம்! மோகன் சந்த் ஷர்மாவும்… அப்பாவி முஸ்லீம் இளைஞர்களும்…

This entry is part [part not set] of 24 in the series 20081113_Issue

எஸ். அர்ஷியா


தலைநகர் டெல்லி, தன் பரபரப்பைத் தொலைத்து, ஆழ்ந்த மெளனத்துக்குள் போய்விட்டது போலானதொரு சித்திரம் உருவாகியிருக்கிறது. டெல்லிவாசிகள் விதிர்த்துப் போயிருக்கிறார்கள். குண்டுவெடிப்புச் சம்பவம் அவர்களை பாதித்துள்ளதைப் போலவே, பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் சம்பவம் அவர்களை பீதிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

குண்டுவெடிப்பில் உயி¡¢ழந்தவர்களுக்கு அவர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். காயமடைந்தவர் களுக்கு ஆறுதல் சொல்கிறார்கள். என்கவுண்டா¢ல் உயி¡¢ழந்த இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் ஷர்மா வின் பழைய நடவடிக்கைகளில் பிரமித்திருந்த அவர்கள், இப்போது பா¢தாபம் காட்டுகிறார்கள். குண்டுவெடிப்புச் சம்பவங்களின் ‘மாஸ்டர் மைண்ட்ஸ்’ என்று வர்ணிக்கப்பட்டு, சுட்டுக்கொல்லப் பட்ட நிராயுதபாணி இளைஞர்களான மொகம்மத் அதீப் அமீன் மற்றும் மொகம்மத் சாஜித்தின் மீது, அவர்கள் பலமடங்கு அனுதாபம் கொள்ளவே செய்கின்றார்கள்.

ஏனென்றால், அந்த இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படும் காட்சியை, அவர்கள் நோ¢ல் பார்த்திருக் கிறார்கள்.

போலீஸ் தன் பிடிக்குள் வைத்திருந்த அந்த இருஇளைஞர்களும், தங்கள் மீது என்ன குற்றச்சாட்டு என்பது தொ¢யாமலும், எதற்காக பிடித்துக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது பு¡¢யாமலும், கேட் பதற்கும் பேசுவதற்கும் கூட அவகாசம் கொடுக்கப்படாமல் சுற்றிவளைத்துக் கடுமையாகத் தாக்கப் பட்டு, பின்பு குண்டுகளுக்கு இரையாகிறார்கள்.

அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு, ”டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவம் மட்டுமல்ல… அதற்கு முன்புநடந்த அஹமதாபாத், ஹைதராபாத், பெங்களூரு குண்டுவெடிப்புச் சம்பவங்களின் ‘மாஸ்டர் மைண்ட்ஸ¥’ம் இவர்கள் தான்” என்பதாகும்!

சுட்டுக்கொல்லப்பட்ட இருவா¢ல் ஒருவரான மொகம்மத் சாஜித்தின் வயது 17 க்குள் தான். 11 ம் வகுப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு தயாராகி வந்த பள்ளி மாணவர், அவர். மற்றொரு இளைஞரான மொகம்மத் அதீப் அமீன் விமானப்படையின் பைலட் ஆகவேண்டுமென்ற கனவில் இருந்தவர். இருவரது கனவும் குண்டுதுளைப்பால் கலைந்துபோனது. இவர்களுடன் இன்னும் மூன்றுபேர் பாட் லா ஹவுஸின் எல்.18 எண்ணுள்ள வீட்டில் தங்கியிருந்தார்கள்.

அந்த வீட்டை வாடகைக்கு எடுத்தபோது, தன்னார்வத்துடன் முறையாக போலீஸின் பா¢சீலனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு குடி வந்திருக்கிறார், மொகம்மத் அதீப் அமீன். டிரைவிங் லைசென்ஸ் வாங்கும்போது துல்லியமான விவரங்களை கொடுத்துத்தான் அதையும் பெற்றிருக்கிறார். மின்னிதழ் வலைப்பக்கத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் அவர், தனக்குப் பிடித்த படமாக ‘மதர் இந்தியா’வையும், ‘ரங் தே பஸந்தி’ யையும் குறிப்பிட்டுள்ளார்.

அரசும், போலீஸ¥ம், புலனாய்வு நிறுவனங்களும் தற்போது ஒருபுதிய வார்த்தையைக் கண்டுபிடித்து புழக்கத்தில் விட்டிருக்கின்றன. ‘sleeper terrorists’ எனும் அந்தவார்த்தைக்கு அவர்கள் காட்டும் உதாரணம், மொகம்மத் அதீப் அமீன் மற்றும் மொகம்மத் சாஜித்! ‘sleeper terrorists’ என்பவர்கள், மிகவும் அமைதியாக இருப்பார்களாம். எல்லா விஷயங்களிலும் நேர்மையைக் கடைபிடிப்பார்களாம். மிகவும் எளிமையாகக் காணப்படும் அவர்கள், சட்டத்தை மதித்து நடப்பவர்கள்போல தங்களைக் காட்டிக்கொண்டு, குற்றத்தைச் செய்துவிட்டு தப்பித்து விடுவார்களாம்.

ஏற்க முடியாத இந்த ஆய்வுரை, ஒன்றும்தொ¢யாத அப்பாவிகள் மீது குற்றம் சுமத்துவதற்கான அத்தனை சாத்தியங்களையும் கொண்டதாகவே அல்லவா இருக்கிறது?

இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் ஷர்மாவின் உயிரைக் காவுகொடுத்து, பா¢தாபத்தைச் சம்பாதித்து, தாங்கள் நடத்திய ‘திட்டமிட்ட படுகொலை’ச் சம்பவ நாடகத்தை மூடிமறைக்க நினைத்தவர்கள்… குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கெல்லாம் தீர்வு கண்டுவிட்டதாக ‘டமாரம்’ அடித்துக்கொள்ள முற்பட்டவர்கள்… சாயம் வெளுத்துப்போன நா¢யாக ஓடி ஒளிந்து வருகின்றனர். பொதுமக்களின் கோபம் இப்போது போலீஸ் பக்கமே திரும்பியிருக்கிறது.

ஜனநாயக நாட்டின் அரசியலமைப்புச் சட்டம், நீதி உலவும் பூமியாகவே இருக்கிறது. அங்கே குற்றம் நிரூபிக்கப்படாதவரை சம்பந்தப்பட்ட நபர், ‘innocent’ தான் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு இருஇளைஞர்களும் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாக்கப்பட்ட பின்பு, அவர்கள் மீது ‘பயங்கரவாதிகள்’ என்றும், ‘குண்டுவெடிப்புச் சம்பவங்களின் மாஸ்டர் மைண்ட்ஸ்’ என்றும் குற்றச்சாட்டுகள் முத்திரைகளாகக் குத்தப்படுகிறது.

அரசும், போலீஸ¥ம், புலனாய்வு நிறுவனங்களும் இறையாண்மையிலிருந்தும், வகுக்கப்பட்ட விதி முறைகளிலிருந்தும் பிறழ்ந்தவர்களாக மாறி வருகின்றனர். அவர்கள் வெளியிடும் அறிக்கைகள் பொய்யுரைகளாகவே இருக்கின்றன. முஸ்லீம் சமூகத்தையும் அச்சமூகத்தின் இளைஞர்களையும் குற்றவாளிகளாக சித்தா¢க்க முயலும் அவர்களின் நடவடிக்கைகள், புதியதொரு நெருக்கடியை உருவாக்கிவிட்டிருக்கிறது. அதன் ஒருமுகம்தான், தாங்கள் யார் என்பதை தெளிவுபடுத்தக்கூட வாய்ப்பளிக்காமல் இருஇளைஞர்களும் இரக்கமற்ற முறையில் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டு, பின்பு சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்!

அந்தக் காட்டுமிராண்டித்தனத்தின் சாட்சியமாக, போலீஸின் கண்காணிப்பில் சடலங்களைப் புதைக் கும் மதச்சடங்கின்போது செல்லிடைப்பேசி கேமராக்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இருக்கின் றன. மொகம்மத் சாஜித்தின் உடம்பில் ஆறுக்கும் மேற்பட்ட குண்டுகாயங்கள் உள்ளன. கையறு நிலையில் இருந்த இளைஞன் கண்மூடித்தனமாக குண்டுகளால் துளைக்கப்பட்டிருக்கிறான். இதே நிலைதான் மொகம்மத் அதீப் அமீனுக்கும். கூடுதலாக அந்த இளைஞனின் உடம்பு முழுவதும் போலீஸ் அடி வாங்கியதன் அடையாளங்களாக, தோல் கிழிந்து சதை தெறித்திருந்தது.

படுபாதகச் செயலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இவர்கள் என்றால்… அவர்களை உயிரோடு பிடித்து, நாட்டில் நடந்த அனைத்து குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கான ஆதாரங்களைத் திரட்டியிருக்க லாமே?

போலீஸ¥க்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் போர் நடந்ததுபோலானதொரு பிம்பத்தை உருவாக்க காற்றிலும், சுவற்றிலும், பூந்தொட்டிகளை நோக்கியும் சுட்டுப் பழகியவர்களுக்கு, ஆரோக் கியமாகச் சிந்திக்கும் பழக்கம் எப்படி வரும்?

டெல்லியிலும் அதன் சுற்றுப்புறத்திலும் ரவுடிகளையும், நாட்டுக்கும் அரசுக்கும் போலீஸ¥க்கும் தேவைப்படாதவர்களையும் இதுவரை 35 பேருக்குமேல் ‘போட்டுத் தள்ளியவர்’ மோகன் சந்த் ஷர்மா. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்! அந்தக் கில்லாடியையே போட்டுத்தள்ளிவிட்டார்கள் பயங்கரவாதிகள் எனும் பிம்பத்தை உருவாக்கினால், தங்களின் போலி நடவடிக்கைளுக்கு வலு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நடத்திய நாடகம்தான், இந்த என்கவுண்டர்!

ஆனால்… என்ன ஒருகொடுமை என்றால், கில்லாடி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான மோகன் சந்த் ஷர்மாவைப் போட்டுத்தள்ள, அவர் இருந்த துறைக்குள்ளிருந்தே இன்னும் ஒருநிழல் கில்லாடியை உருவாக்கியது தான். ஆனால் அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராகி அரசின், போலீஸின், புலனாய்வு நிறுவனங்களின் முகத்திரை கிழிந்துவிட்டது.

பிள்ளையை மருத்துவமனையில் பார்க்கச் சென்றிருந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் மோகன் சந்த் ஷர்மா, அவசரமாக அழைக்கப்பட்டு பாட்லா ஹவுஸ் என்கவுண்டருக்குச் செல்கிறார். தொழிலுக்கு வந்த இடத்தில், நிழல் கில்லாடியால் சுட்டுக்கொல்லப்படுகிறார். அதனால்தான் அவர், என்கவுண் டருக்குச் செல்லும்போது அணியும் குண்டு துளைக்காத உள்சட்டையை அணியவில்லை!

அவரது மரணம் பூடகம் நிறைந்ததாகவே இருக்கிறது. ஆனால் போலீஸ் சொல்கிறது. மொகம்மத் அதீப் அமீன் மற்றும் மொகம்மத் சாஜித்தும் வீட்டுக்குள் நுழைந்து பிடிக்கச்சென்ற அவரை துப்பாக்கியால் சுட்டார்கள் என்று.

அடித்து இழுத்துவரப்பட்டு, மோகன் சந்த் ஷர்மா முன்பு நிராயுதபாணியாக நிறுத்தப்பட்டவர்களால், கையறுநிலையில் எப்படி சுட்டிருக்க முடியும்?

‘பயங்கரவாதத்தை வேரறுக்கும் திராணியற்ற உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், அந்தப் பதவிக்கு பொறுத்தமற்றவர். பதவியிலிருந்து அவர் விலக வேண்டும்’ என்று ‘காவித்தனமாய்’ பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்து வைத்துவரும் கீழ்த்தரமான கோ¡¢க்கைகளால் உசுப்பேற்றப்பட்டிருக்கும் பாட்டீல், தனது பதவியின் புஜ பலத்தைக் காட்டவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளார். அதன் குயுக்தியான நடவடிக்கைளே, இவை!

கில்லாடியாக உலவி வந்தவரை, தங்கள் தேவைக்காக தீர்த்துக் கட்டியிருக்கிறார்கள். முன்னாள், இந்நாள் உள்துறை அமைச்சர்கள் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டிருக்கிறார்கள். குடியரசுத் தலை வர் பிரதிபா பாட்டீல் இரங்கல் செய்தி வெளியிடுகிறார். பிரதமரோ நிவாரண நிதி வழங்குகிறார். எத்தனை போலீஸ் அதிகா¡¢கள் இதற்கு முன் உண்மையாகவே பயங்கரவாதிகளின் குண்டுகளுக்கு இரையாகியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் வராத கா¢சனம்… கலந்து கொள்ளாத இறுதிச்சடங்கு நிகழ்ச்சி… கொடுக்கப்படாத இரங்கல் செய்தி… இப்போது மட்டும் என்ன புதிதாக?

பயங்கரவாதிகளை பிடிக்கச்சென்று அங்கே உயி¡¢ழந்ததால் தானாம்!

எதை மறைக்க, இது?

கேட்பதற்கு நன்றாகவா இருக்கிறது?
·

ஜாமியா நகர் என்கவுண்டருக்குப் பின், இந்திய முஸ்லீம் சமூகத்தின் அடிவயிற்றில் பயம் தங்கிப் போயிருக்கிறது. அங்கே இரண்டு இளைஞர்களை கொடூரமாக பறி கொடுத்திருக்கிறது, அச்சமூகம்.

இன்று அவர்களுக்கு நடந்தது, நாளைக்கும் நமக்கும் நடக்கலாம். ஏனென்றால்… இங்கே கேள்வி கேட்கவும், நீதியைப் பெறவும் கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது.

arshiyaas@rediffmail.com

Series Navigation

எஸ். அர்ஷியா

எஸ். அர்ஷியா