இந்திய வரலாற்றில் ஜிஹாத் : பசுமலை இறையியல் பயிற்சி மையத்தின் முதல்வர் ரெவரண்ட் டாக்டர் பனிங்கரின் கட்டுரை (1923)

This entry is part of 34 in the series 20081016_Issue

நேசகுமார்


கடந்த நூறு வருடங்களில் குறைந்த பட்சம் 51 ஜிஹாத் கலவரங்கள் மாப்ளாக்களால் [1] நிகழ்த்தப்பட்டுள்ளன. ஜூலை 6, 1922 தேதியிட்ட வெஸ்ட் கோஸ்ட் ஸ்பெக்டேடர்(West Coast Spectator]) மாப்ளா-ஜிஹாதிகளால் பாடப்படும் இறைப்பாடலின் பகுதியை பதிப்பித்துள்ளது. இப்பாடல் காஃபிர்களை அழித்து இறைபாதையில் போரிட்டு மடியும் ஷஹீதுகளுக்கு[2] வழங்கப்படும் நிரந்தர சொர்க்கம் குறித்தும், அங்கே அவர்களுக்கு கடவுள் தரும் அழகிய ஹூரிகள்[3] பற்றியும் விரிவான விவரனைகளை கொண்டிருக்கின்றது. மாப்ளாக்கள் தங்களது தீவிரவாதச் செயல்களின் போது இந்த பாடலின் பிரதியை தம்முடன் வைத்திருந்ததை இந்த செய்தி விவரிக்கிறது.
….இந்த கலவரங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரித்த மூன்று நீதிபதிகளடங்கிய விசேஷ ட்ரிப்யூனல்(காலிகட்) தமது தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிடுகிறது:
“கடந்த நூறு வருடங்களாக மாப்ளா சமுதாயம் அவ்வப்போது இந்த திடீர் வன்முறையில் ஈடுபட்டு அவப்பெயரை சம்பாதித்து வருகிறது. இஸ்லாமிய அடிப்படைவாதம் இதற்கு ஒரு காரணம். மாப்ளாக்கள் மிகுந்திருக்கும் எர்னாடு [11] தாலுக்காவிலிருந்து திடீரென்று கிளம்பி இவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். கல்லா மூடர்களான இவர்களது மனது காஃபிர்களை கொல்வதன் மூலம் கடவுளிடமிருந்து சொர்க்கம் கிட்டும் என்ற அடிப்படைவாத இஸ்லாமிய போதனைக்கு பலியாகிவிடுகிறது. அவர்கள் திடீரென்று கிளம்பி இந்த ஜிஹாதில் ஈடுபடுவார்கள். எந்த ஹிந்துக்கள் கைக்கு அகப்படுகிறார்களோ அவர்களை எவ்வித முகாந்திரமுமின்றி கொல்வார்கள். அவர்களது நோக்கம் பிரிட்டிஷ் ஆட்சியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக உலகளாவிய இஸ்லாமிய ஆட்சியை (காலிஃபேட்) [4]தீவிரவாதத்தின் மூலமாக ஏற்படுத்த வேண்டும் என்பதாம்”.
….1921 மாப்ளா கலவரங்களுக்கு பின்னால், விவசாய குறைபாடுகளும், விவசாய பிரச்சினைகளும் இருக்கின்றன என்பது பொய்யான தகவல்களாகும். அப்படி என்றால், பிராம்மண – நாயர் நிலச்சுவாந்தார்களின் நிலங்களை நிர்வகித்த இந்த மாப்ளாக்களிடம் வேலைபார்க்கும் இந்து குடியானவர்களே[5] இப்படிப்பட்ட கலவரங்களில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஏனெனில், அவர்களது நிலையே மிகவும் மோசமானது. ஆனால், அவர்களின் மேலாளர்களாக இருந்து அவர்களை துன்புறுத்தி வந்த மாப்ளா முஸ்லீம்கள் இந்த தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கு எவ்வித முகாந்திரமும் கிடையாது.
(அங்கேயிருந்த) இந்து சமுதாயம் இந்த திடீர் வன்முறைகளுக்கு பலியானது. அவர்களுக்கு(இந்துக்களுக்கு) நிகழ்த்தப்பட்ட கொடுமைகளை விவரிக்கவும் மனம் அஞ்சுகிறது. … மலபார்(கேரளா) மாநிலத்தின் பெண்கள் கவுண்டஸ் ஆஃப் ரீடிங்கிற்கு அளித்த மகஜரில்[6] மிகவும் வருத்தம் தரத்தக்க விவரங்கள் அடங்கியுள்ளன. சிதைக்கப்பட்ட உடல்களால் நிரப்பப்பட்ட கிணறுகள், துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொல்லப்பட்ட கர்ப்பினிப் பெண்கள், தாய்மார்களின் கரத்திலிருந்து பிடுங்கி கொல்லப்பட்ட குழந்தைகள், பெண்களின் கண்கள் முன்னாலேயே அவர்களது கணவர்கள், தந்தைகள் சித்திரவதை செய்யப்பட்டு, சாட்டையால் அடிக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்டது, தூக்கி செல்லப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் சோகக்கதைகள், இடிக்கப்பட்ட வீடுகள் என்று பெரும் பட்டியல் அதில் தரப்பட்டுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் மாப்ளா முஸ்லீம்களால் அங்கே இடிக்கப்பட்டோ, சேதப்படுத்தப்பட்டோ உள்ளன. அந்த ஆலயங்களில் நுழைந்து சொத்துகளை சூறையாடிவிட்டு[7], அங்கே ஆவினங்களை கொன்று அவற்றின் தசைகளை அங்கிருக்கும் கடவுள் சிலைகளின் மீது மாலையைப் போன்று போடுவதை[8] இவர்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றார்கள். கற்பனை செய்துபார்க்கவும் முடியாத கொடூரங்களை அவர்கள் மலபாரில் நிறைவேற்றியிருக்கிறார்கள்.
…இந்த மாப்ளா கலவரங்களின் போது பல இடங்களில் அச்சுறுத்தி வலுக்கட்டாயமாக இந்துக்களை இஸ்லாமியர்களாக மதம் மாற்றியுள்ளனர்[7]. வன்முறை முடிந்த பின்பும் இவர்கள் இந்துவாக தமது சமூகத்திற்கு திரும்ப முடியாததற்கு இரண்டு காரணங்கள், ஒன்று – இஸ்லாமிய மதத்திலிருந்து வெளியேற முயல்பவர்களுக்கு அந்த சமுதாயம் தரும் அதீத தண்டனை[9], இரண்டாவது – இந்து மதம் திரும்பவும் அவர்களை தன்னிடையே அழைத்துக்கொள்ள மறுத்து கதவுகளை மூடிவைத்திருப்பது[10].
——
குறிப்புகள்:
பனிங்கர் – Dr. J. J. Banninga, an American graduate of the Western Theological Seminary, spent forty two years in India, serving for 25 years as head of the Union Theological Seminary at Pasumalai in South India.
[1] – மாப்ளாக்கள் – இந்திய கரைகளில் வந்திறங்கிய தாற்காலிக அரபு தந்தைகளுக்கும் இந்திய பெண்களுக்கும் பிறந்தவர்கள். அரபிகளைவிட அந்தஸ்து குறைவானவர்கள். இஸ்லாம் பரவிய இடமெங்கும் இந்த வித்தியாசம் இருந்த்து. அரபு எஜமானர்களுக்கும் அடிமைப் பெண்களுக்கும் பிறந்தவர்கள் மாவ்ளாக்கள்(மாவளி- பன்மை) என்றழைக்கப்பட்டவர்கள் பல சமயங்களில் இஸ்லாம் அனுமதிக்கப்பட்ட போரில் பிடிக்கப்பட்ட மாற்றுமதப் பெண்களுக்கு பிறந்து வேறு வழியின்றி இஸ்லாமியர்களான பிள்ளைகளையும், பிடிமக்களையும் குறிக்கிறது – இஸ்லாமிய வரலாறெங்கும் அரபுகளுக்கும் மாவ்ளாக்களுக்குமான வித்தியாசம் நீடித்தது. மாவ்ளாக்கள் என்றால் நேரடியாக அடிமை என்றர்த்தமும் உண்டு. இஸ்லாத்துக்கு முந்தய காலத்தே மாப்ளாக்கள் இருந்திருக்கின்றனர் என்கின்றனர். அது கேரளக்கரைகளுக்கு தாற்காலிகமாக வந்த அரபு வியாபாரிகளுக்கும் இந்து பெண்களுக்கும் பிறந்த குழந்தைகளை குறிக்கும் பொதுச்சொல்லாக இருக்கலாம். கிறிஸ்துவ மாப்ளாக்கள் பற்றிய குறிப்புகள், அவர்கள் திப்பு சுல்தானின் படையெடுப்புகளின் போது வலுக்கட்டாயமாக முகமதியர்களாக மாற்றப்பட்ட்தை காட்டுகின்றன.
பார்க்க: The Rise of Islam by Mathew Gordon, page 41. “Known as mawali (sing- mawla), these were formerly prisoners of war and their descendents; most were Persian speakers. Enslaved in large numbers during the Arab-Islamic campaigns, these were settled (or chosen to settle) in Arab garrison cities. They attached to Arab tribes through clientage, and, in most cases converted to Islam.” திருநெல்வேலி முஸ்லீம்கள் தங்களை மாப்ளா முஸ்லீம்கள் வழி வந்தவர்கள் என்றே கருதுகின்றனர். http://www.geocities.com/kadayanallur_muslims/kadayanallur_history.html?20051/
[2] – ஷஹீது – அல்லாஹ்வுக்காக போரிட்டு மடிபவர்கள். இது நடைமுறையில் முஸ்லீம் மத த்துக்காக போரிட்டு மடிபவர்களையும் குறிக்கிறது. இந்தவகை மரணத்தை எய்துபவர்களுக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் பெண்களையும், அவர்களுடன் கூடும் காம வலிமையையும் தருவார் என்பது ஜிகாத் பற்றிய முக்கிய இஸ்லாமிய நம்பிக்கைகளுள் ஒன்று.
[3] – ஹூரிகள் – சுவனக் கன்னியர். இவர்களைப் பற்றிய விவரணைகளை இஸ்லாமிய நூல்கள் எங்கும், இஸ்லாத்தை முஹமது தோற்றுவித்த நாள் முதல் காணலாம். வெண்மையான நிறமும், பெருத்த மார்புகளையும் அழகிய கண்களையும் உடைய இவர்கள், ஷஹீதுகளின் காம இச்சைகளை தீர்த்து வைப்பவர்களாகவும் தமக்கென சுயமான மன இச்சைகள் இல்லாதவர்களாகவும் இவர்கள் ஹதீதுகளில் சித்தரிக்கப்படுகின்றனர்.
[4] – காலிஃபேட் – இஸ்லாமிய மதவாதிகளின் கையில் ஆட்சியதிகாரம் இருக்கும், மதவாத ஷரீய்யா சட்டமே அரசாங்கத்தின் சட்டமாக இருக்கும், உலகளாவிய ஒரு மத அரசு. இப்படிப்பட்ட உலகளாவிய காலிஃபேட்டை நிறுவது தமது இறுதி நோக்கம் என்று அல் குவைதா அறிவித்துள்ளது. இது சம்பந்தமான இங்கிலாந்து அரசின் ஆய்வுகளை இங்கே காணலாம்: “They assert that the solution to this problem is to eradicate Western influences from the Muslim world, replace existing governments with a supranational “caliphate” and impose a strict and exclusive form of government based on their particular interpretation of Sunni Islam.” http://www.mi5.gov.uk/output/Page546.html
[5] – மாப்ளாக்களை விட கடுமையான கொடுமைக்கு இந்து குடியானவர்கள் உள்ளானர்கள். பல சமயங்களில் நம்பூதிரி மற்றும் நாயர் (ஜன்மிமார்) நிலங்களில் மாப்ளாக்கள் மேலாண்மையில் அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள். ஆனால், மாப்ளாக்களின் கலவரத்தில் இவர்களும் குறிவைத்து தாக்கப்பட்டார்கள், காஃபிர்கள் என்ற காரணத்தினால்.
[6] – இதில் குறிப்பிடப்பட்டுள்ள மகஜர், நிலாம்பூர் ராணியால் அளிக்கப்பட்டது. (India and the British: A Quest for Truth By Patricia Kendal ).
[7] – மாப்ளா கலவர ஜிகாதில் இடிக்கப்பட்ட இந்து ஆலயங்களின் எண்ணிக்கை 300ஐ தாண்டும். இந்த ஜிகாதில் 320 இந்து ஆலயங்கள் உடைத்து அழிக்கப்பட்ட்தாகவும், 900 இந்துக்கள் பயங்கரவாத் அச்சுறுத்தலின் மூலம் முஸ்லீமாக மதம் மாற்றப்பட்ட்தாகவும் conroy wood தெரிவிக்கிறார். http://repository.upenn.edu/cgi/viewcontent.cgi?article=1000&context=uhf_2008
இறந்த இந்துக்களின் எண்ணிக்கை பற்றிய பல்வேறு தகவல்கள் கிட்டுகின்றன. அதே போன்று பிரிட்டிஷ் ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்ட மாப்ளாக்கள் பற்றிய எண்ணிக்கை குறித்தும் உறுதியான தகவல்கள் இல்லை. இரண்டாயிரத்து முன்னூறு மாப்ளாக்களும், 500-600 பொதுமக்களும் கொல்லப்பட்டதாக நயீம் குரேஷி தனது Pan Islam in British Indian Politics நூலில் குறிப்பிடுகிறார். மற்றொரு இட்த்தில், இந்துக்களைப் போல பத்துமடங்கு முஸ்லீம்கள் பாதிக்கப்பட்ட்தாக செய்திகளை மேற்கோள் காட்டி குறிப்பிடும் நயீம் குரேஷி, வலுக்கட்டாயமாக இந்துக்கள் முகமதியராக மதம் மாற்றப்பட்டதையும்(பக்கம் 456) சுட்டிக்காட்டுகிறார்.
[8] – முதலில் சிந்து பிரதேசத்தில் நிகழ்ந்த இஸ்லாமிய ஜிகாதிலும், இது பின்பற்றப்பட்டிருப்பதைக் காணலாம். சிந்து மாகாணத்தின் முல்தானை கைப்பற்றிய முகமது பின் காசிம், அங்கிருந்த சூரியனார் கோவிலின் கருவறையில் வைக்கப்பட்டிருந்த சூரியதேவனின் சிலைமீது மாட்டிறைச்சியை தொங்கவிட்டான்(அல் பெருனி). மாற்றுமதங்களின் புனித்த்தலங்களுக்கும், கடவுள்களுக்கும் சக்தியில்லை என்பதைக் காட்ட இது போன்ற செயல்களில் முகமதியர்கள் ஈடுபட்டனர்.
[9] – கடவுளால் அளிக்கப்பட்டதாக முகமதியர்கள் நம்பும் ஷரீயத்து சட்டத்தின் படி, முஸ்லீமாக இருக்கும் ஒருவர் வேறு மதங்களுக்கு மாறினால் அவருக்கு மரண தண்டனை தரப்பட வேண்டும். இதையொட்டி ஆஃப்கானிஸ்தான், ஈரான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் மரண தண்டனை அளிக்கப்படுகிறது. பார்க்க: http://www.crosswalk.com/news/religiontoday/11582099/
http://www.cbsnews.com/stories/2006/03/22/world/main1428951.shtml
[10] – சரித்திரமெங்கும் இந்து சமூகம் தன்னகத்தே மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள தொடர்ந்து சேர்த்துக் கொண்டே வந்துள்ளது. ஆனால், மத்திய கிழக்கின் தேவாலயங்கள் இஸ்லாமிய தாக்குதல்களின் காரணமாக மதமாற்றங்களில் ஈடுபடாத்துபோன்று, இந்து சமூகமும் தன்னகத்தே மதம் மாறி வந்தவர்களை சேர்த்துக்கொள்ள மறுத்தது. ஆனால், இந்து சமூகம் தன்னம்பிக்கை பெறும்போதெல்லாம் மீள்-மதமாற்றங்கள் நிகழ்ந்தன. உதாரணமாக விஜயநகர சாம்ராஜ்யத்தை ஏற்படுத்திய புக்கராயர் முஹமது பின் துக்ளக்கினால் இஸ்லாமியராக மதம் மாற்றப்பட்டு மீண்டும் இந்து சமூகத்துக்கு திரும்பியவர். சிவாஜியின் பிம்பம் எனக்கருதப்பட்ட நேதாஜி பால்கர் வாள் முனையில் முகலாயர்களால் முஹம்மது குலி கானாக மதம் மாற்றப்பட்ட பின்னர், சிவாஜியை சந்தித்து மதம் திரும்பி இந்து சமூகத்தில் இணைந்து கொண்டார். மாப்ளா கலவரங்களைத் தொடர்ந்து இந்துமகாசபையின் மதன் மோகன் மாளவியா, அச்சுறுத்தி மதம் மாற்றப்பட்டவர்களை மீண்டும் இந்து சமூகம் தன்னகத்தே சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்[Hindu Muslim Relations in British India by G.R.Thursby, pages162-164].
[11] – எர்னாடு மற்றும் வள்ளுவநாடு ஆகிய இரு பிரதேசங்களும் இஸ்லாமிய அரசாக அறிவிக்கப்பட்டன. இந்த இரு பிரதேசங்களிலும் மாப்ளா முஸ்லீம்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருந்தனர்.
பின் குறிப்பு : 1922ல் நிகழ்ந்த மாப்ளா கலவரங்கள் கேரளாவில் பாரிய அளவில் நிகழ்ந்தன. ஆனால், இதைத் தொடர்ந்து இந்தியாவெங்கும் ஆங்காங்கே இஸ்லாமியர்கள் கலவரங்களில் ஈடுபட்டனர். முல்தான்(பஞ்சாப்), அஜ்மீர்(ராஜஸ்தான்), சிந்து மாகாணம், ஜபல்பூர்(உபி), ரேபரேலி(உபி) ஆகிய இடங்களிலும் கலவரங்கள் நிகழ்ந்தன.
http://repository.upenn.edu/cgi/viewcontent.cgi?article=1000&context=uhf_2008
மாப்ளா கலவரங்கள் பற்றிய தகவல்கள் பொது ஊடகங்களில் வெளியாகி இந்து சமூகத்தில் பெரிய அதிர்வை ஏற்படுத்தின. இதே சமயத்தில் நிகழ்ந்த முல்தான் கலவரங்களில் நிகழ்த்தப்பட்ட கொலைகள், மற்றும் கற்பழிப்புகள் ஆகியவையும் இதனுடன் சேர்ந்து இந்து மகாசபை வலுவான அமைப்பாக உருவாக வழிவகுத்தது.
இஸ்லாமிய மத்திலிருந்து இந்து மத்த்திற்கு திரும்பியவர்களைக் குறிவைத்து இந்த ஜிஹாத் நிகழ்த்தப்பட்ட்து என்று Robert Hardgrave குறிப்பிடுகிறார். http://repository.upenn.edu/cgi/viewcontent.cgi?article=1000&context=uhf_2008
இக்கட்டுரை, ஆண்ட்ரூ போஸ்தமின் The Legacy of Jihad நூலை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. http://www.andrewbostom.org/loj//content/view/143/28/

Series Navigation