உண்மை,அறிவு,அதிகாரம் குறித்த விளிம்புநிலை இஸ்லாம் என்ற கோட்பாடு

This entry is part [part not set] of 37 in the series 20080925_Issue

எச்.முஜீப் ரஹ்மான்


முன்னுரை

வாசகர்களே
தமிழ்சூழலில் தத்துவம்களும்,கொள்கைகளும்,கோட்பாடுகளும் மேற்கத்திய அறிவுதுறை சார்ந்து அதிகம் விவாதிக்கப்படுகிறது.காந்தியம்,அம்பேத்காரியம்,பெரியாரியம் உட்பட கொள்கை,கோட்பாடுகள் இந்தியாவில் தோன்றி வளம் பெற்றதும் உண்டு.ஆனால் தற்போது தலித்தியம் என்ற கோட்பாடு கூட மேற்கத்திய சிந்தனையின் தாக்கத்தால் தான் உருவாகி பீடுநடை போடுகிறது.அதன் பிறகு கோட்பாடுகள் தோன்றவோ,உருவாக சாத்தியம் இல்லாமல் போனது.பின்நவீனத்துவமும்,பின்னை காலனியமும் தமிழில் வளம் பெற்று வருகின்றன.ஆனால் சுயாதீனமான கோட்பாடும்,தத்துவமும் தமிழில் உருகாமல் இருக்கின்ற நிலையை காணலாம்.இந்நிலையில் விளிம்புநிலை இஸ்லாம் என்கிற இந்த கோட்பானது
தற்காலசூழலில் நடைப்பெற்று வரும் நிகழ்வுகளால் உருவானதாகும். இந்த கோட்பாடு பின்னை தலித்தியம் என்ற கோட்பாட்டின் துவக்க நிலையாக இருக்கிறது.பின்னை தலித்தியம்,விளிம்பு நிலை இஸ்லாம் ஆகிய இரண்டும் ஒரே கோணத்தில் பயணிக்கும் தத்துவமாகும்.தமிழ்சூழலில் சுயாதீனமான ஒரு கோட்பாட்டை,தத்துவத்தை இதன் மூலம் வாசகர்கள் அடையாளம் காணலாம்.இந்த கோட்பாடுகள் கூட இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் விவாதிக்கப்பட்ட உலக தத்துவம்களின் தொடர்ச்சியாக மலருகிறது.இதன் நிறை குறைகளை வாசகர்கள் சுட்டிகாட்டுவதை நான் வரவேற்கிறேன்.

Philosophical discourse has always maintained an essential relation to the law, the institution, and the contract, all of which are the Sovereign’s problem, traversing the ages of sedentary history from despotic formations to democracies.

Gilles Deleuze

தற்கால அறிவுஜீவிகளில் பலரும் பல துறை சார்ந்து மேற்கத்திய சிந்தனையை நெருக்கடிக்குள்ளாக்கினார்கள்.நவீனத்துவத்துக்கும்,பின் நவீனத்துவத்துக்குமான போராட்டமாக இது இருந்த போதிலும் பலவிதமான கோட்பாடுகளுக்கு அவை வழிவகுத்தன.பொதுவாக அனைத்து கோட்பாட்டாளர்களும் நீட்ஷேவிலிருந்தே துவஞ்குகிறார்கள்.இதற்கு காரணம் நீட்ஷே அறிவொளிகால,மனிதாபிமான சட்டகஞ்களை கேட்விக்குட்படுத்தியதும் எவை நவீனத்துவத்துக்குரியவை என்று அடையாளம் காட்டியதும் ஆகும்.நீட்ஷேவிலிருந்து பின்நவீனத்துவம்,அடிக்கட்டுமானவாதம்(fundationalism),அபௌதிகம்(metaphyisics)முதலிய விஷயஞ்களை அறிவு சார்ந்த கேள்விகளாக முன்வைத்தது.பின் அமைப்பியல் போன்றவை நவீனத்துவ கட்டுமானஞ்களை உடைத்து எறிந்தமையாலும்,பெண்ணியம் போன்ற கோட்பாடுகள் மேற்கத்திய சிந்தனைகளின் அறிவு கோட்பாட்டு ஆதாரஞ்களை(epistemological foundations) நீர்மூலம் செய்தது.பின்நவீனத்துவமும்,பெண்ணியமும் அறிவு பற்றிய மனித மைய விளக்கஞ்களை கேட்விக்குட்படுத்தின. அறிவொளிகாலகட்டத்தில் இருந்தே அவை மனிதமையம் சார்ந்து உருவகபடுத்தப்பட்டதினால் தளைகள் நீஞ்கிய உண்மையை(emanicipatory reality) வெளிகாட்ட வேண்டியிருந்தது.இவ்விதமான தீவிர நிலைபாடுகளுடன் விளிம்புநிலை இஸ்லாம்(marginal islam) பற்றிய தளைகளற்ற உண்மைகளை சொல்லவேண்டியிருக்கிறது.

இஸ்லாமிய வரலாற்றில் தூய இஸ்லாம் எனும் அறிவொளி அறிவாதாரம்
(enlightment epistemology) பற்றிய கட்டமைப்புகளே நவீன இஸ்லாத்திற்க்கு வித்திட்டன.இஸ்லாத்தில் நவீனத்துவம் செயல்பட்டபோது ஆண்சார்ந்த இயக்கமாக வளர்ந்தது,நவீனத்துவம்,சோசலிசம்,மனிதாபிமானவாதம்(humanism),பெண்ணியம் போன்ற கருத்துருவாக்கஞ்கள் இஸ்லாத்தை பாதித்தன.நவீனத்துவம் கட்டமைத்த பகுத்தறிவு x பகுத்தறிவின்மை,அகம் x புறம் பற்றிய கருத்தாக்கஞ்களை பின்நவீன வாசிப்பு சார்ந்து கேட்விக்குபடுத்தவேண்டியது இஞ்கே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.நவீனத்துவ சட்டபூர்வமாக்கல்(legacy) பற்றிய கருதுகோளை தற்காலத்தில் விளிம்புநிலை இஸ்லாம் சார்ந்து மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் போது தாரளவாதம்(liberalism),(secularism)மதமற்றசுதந்திரம் போன்ற மத்திய முக்கியத்துவம் கொண்ட விஷயஞ்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

விளிம்பு நிலை இஸ்லாத்தில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் அதிகம் இருக்கிறது என்பதை மறுப்பதற்க்கில்லை.பின்நவீன சிந்தனை வெளிச்சத்தில் சமூக விஞ்ஞானம்களுக்கும்,இயற்கை விஞ்ஞானத்துக்குமான தொடர்பை ஆயும் முறையியல்(methodology) பல விஷயம்களை தெளிவாக்கும்.முறையியல் சார்ந்த விவாதம்கள் சமூக விஞ்ஞானம்களில் நேர்காட்சிவாதமாகவோ(positivism)அல்லது அனுபவவாதமாகவோ (empiricism) இஸ்லாமிய சிந்தனை வட்டத்தில் முன்வைக்கப்படுகிறது.பின்நவீனத்துவம் பெரும்கதையாடல்களின் தகர்வை வலியுறுத்துவதால் இஸ்லாமிய பெரும்கதையாடல்களின் தகர்வும் சாத்தியமாகியுள்ளது விளிம்பு நிலை இஸ்லாத்தில் அது ஒரு கோட்பாட்டுருவாக்க நிகழ்வு நடைபெறுவதால்.அறிவுவாதத்தின் சட்டகம்(paradigm)விஞ்ஞான முறையாக இருந்த போதிலும் நேர்காட்சிவாதமோ,மனிதாபிமானவாதமோ இயற்கை விஞ்ஞானத்தை அதிகம் விவாதித்ததில்லை.எனவே தான் பெண்சார்ந்த மரபார்ந்த பார்வை இஸ்லாத்தில் நவீன காலத்திலும் நீடித்து வருகிறது.விஞ்ஞானம் கூட ஆண்,பெண் பாலின பேதத்தை ஆமோதிப்பதால் இஸ்லாம் அதை அம்கிகரித்ததில் வியப்பேதுமில்லை.ஆனால் பின்நவீனத்துவம் அறிவின் படிநிலைதரம் பற்றிய பார்வையை கேட்விக்குட்படுத்திய போது அறிவு வாதம் நெருக்கடிக்குள்ளானது.

விளிம்புநிலை இஸ்லாம் என்ற இப்புதிய கோட்பாடு சமூக,இயற்கை விஞ்ஞானம்களின் பார்வை கோளாறுகளை கண்டும் காணாமல் இருக்க முடியவில்லை.அறிவுவாதம் ஆணாகவும் பகுத்தறிவின்மை பெண்ணாகவும் உருவகப்படுத்தப்பட்டிருப்பதால் பெண் இயல்பு போன்ற விஷயம்களை மரபார்ந்த சிந்தனையோடு தான நவீன இஸ்லாமும் பார்த்தது என்பதை சொல்ல தேவையில்லை.ஹெபர்மாஸ் போன்ற சிந்தனையாளர்கள் கூட நவீனத்துவத்தின் தவறுகளிலிருந்தும்,நிகழ்வுகளிலிருந்தும் நாம் பல பாடம்களை படிக்கவேண்டியிருக்கிறது என்று கூறியது சிந்திக்கதக்கதாகும்.ஏனெனில் விடுதலை,சமத்துவம்,உரிமை போன்ற நவீன சொல்லாடல்கள் வெற்று கோஷம்களாகிப்போனது கடந்த கால வரலாறு நமக்கு கற்று தருகிறது.எனவே விளிம்புநிலை இஸ்லாம் என்ற கோட்ப்படு எடுத்திருக்கும் முக்கிய நிலைபாடுகளை பார்க்க வேண்டும்.முதலாவதாக சமூக விஞ்ஞானம்கள் குறித்து இதுவரை இஸ்லாம் கட்டமைத்துள்ள உண்மைகளையும் இஸ்லாம் குறித்து சமூக விஞ்ஞானம்கள் கட்டமைத்துள்ள கற்பிதம்கள் குறித்தும் மறுவாசிப்பு செய்யப்பட வேண்டும்.இரண்டாவதாக் நவீனத்துவம் சார்ந்து இஸ்லாம் உருவாக்கியுள்ள கருத்தாக்கம்கள் பற்றி விவாதிக்க வேண்டும்.மூன்றாவதாக இன்றைய பின்நவீன காலத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை முஸ்லிகள் குறித்த உரையாடலை மேற்கொள்ள வேண்டும்.இதை ரிச்சர்டு ரோட்டியின் வார்த்தைகளில் சொல்வதானால் மனிதயினத்தின் உரையாடல் எனலாம்.
வைதிக இஸ்லாமும்,நவீன இஸ்லாமும் முன்வைக்கும் உண்மை பற்றிய விளக்கம் அறிவொளிகால சிந்தனையை ஒத்திருக்கிறது.எனவே உண்மை மற்றும் பகுத்தறிவு\அறிவுவாதத்தை விமர்சனபடுத்த வேண்டியிருக்கிறது.இதை மொழிமையவாததில்(logocentarism) இருந்து தான் கண்டடையவேண்டியிருக்கிறது.அமெரிக்க பின்நவீனத்துவ சிந்தனையாளரான ரிச்சர்டு ரோட்டி தனது தத்துவம் மற்றும் இயற்கை கண்ணாடி என்ற நூலில் அடிக்கட்டுமானவாத சிந்தனைகளை தாக்குதல் தொடுத்திருப்பார்.அடிக்கட்டுமான சிந்தனைகளை தகர்ப்பதும் விளிம்புநிலை இஸ்லாமிய கருத்தாக்கமாகும்.மேலும் உண்மை பற்றிய கருத்தாக்கம்களை விவாதிக்கவேண்டியுள்ளது .மேற்கத்திய தத்துவவியலாளர் ஹர்சலை பொறுத்த வரை உண்மை என்பது அகவயமானது .எனவே உண்மை பற்றிய அறிதலையே தத்துவவாதிகள் காலம்காலமாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்றும் உண்மை,அறிவு,அறிதல் என்பன போன்ற பகுத்தறிவுக்கு உட்பட்ட நிலைபாடுகளே சகல கற்பிதம்களுக்கும் காரணமாக அமைந்துள்ளது என்ற சீரிய சிந்தனையினை விளிம்பு நிலை இஸ்லாம் ஏற்றுக்கொண்டு உண்மை பற்றிய விவாதம்களை தொடம்கியுள்ளது.இதை காடமர்(Gadamer) என்ற தத்துவவாதியின் விவாதம்களில் இருந்து உருவாக்கிக்கொள்வோம்.அறிவுக்கு பகுத்தறிவுவாதம் தேவை என்பது ஆர்கிமிடியன் பார்வையில் இருந்து உருவானதாகும்.ஆர்கிமிடியன் பார்வையானது அறிபவரையும்,அறிவதையும் பருண்மையாக பகுத்தறிவிலிருந்து பெறலாம் என்கிறது.காடமரை பொறுத்தவரை முறையான அறிவு தளம் என்பதை மறுக்கிறார்.காடமரின் சிந்தனையின் படி பகுத்தறிவுவாதத்தின் பெரும்கதையாடல்களை மறுப்பதோடு அறிவு என்பது மரபு,தப்பெண்ணம்(prejudice) ஆகியவற்றால் ஆனது என்கிறார்.அது சர்வபொதுவானதோ பருண்மையானதோ நிச்சயம் மனித புரிதலுக்கு உட்பட்டதாகவோ இருக்கவேண்டும் என்பதில்லை.மேலும் காடமர் பண்பாட்டு அதிகாரத்தின் நெருக்கெடி பற்றியும் விவாதித்துள்ளார்.நவீனத்துவத்தின் சட்டபூர்வமான அறிவு மாற்றப்பட்டதும் அறிவுசார் சொல்லாடல்கள் புதிய திசைவழியில் பயணிப்பதும் தற்காலத்தில் புதிய நிகழ்வுகளே.விளக்கவுரை(hermeneutics) மரபில் ஒரு தத்துவவாதி மரபு,தப்பெண்ணம்,செவ்வியல் பார்வைகளுடன் பிரதிகளை வியாக்கியானப்படுத்துவார்,ஆனால் காடமர் உண்மையும்,முறையியலும் என்ற நூலில் காரணகாரிய கருத்தாக்கத்தை விமர்சனம் செய்தார்.தத்துவ விளக்கம் (philosophical hermeneutics) வழியாக மனித விஞ்ஞானம் குறித்த முறையிலை அவர் வகுத்துகொண்டார்.

Schleiermatcher,Delthey,Gadamar போன்றோர்கள் ஹைடேக்கருக்கு பிறகு விளக்கவுரை இயலை தத்துவ அடிப்படையில் விளக்கியவிதம் சற்று மாறுபாடானதாக இருந்தது.காடமரின் நூலில் மொழியல் வழியாக மனித தொடர்பு எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பது குறித்து அதிகமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது.உண்மையின் அனுபவம் என்ற கருத்து மூலம் இயற்கை விஞ்ஞானம்களை விளக்கினார்.காடமரின் கோட்பாட்டின் மூலம் உண்மை,காரணம்,பகுத்தறிவு,மனித விஞ்ஞானம்கள்,இயற்கை விஞ்ஞானம்கள் அணுகிற போது எல்லா அறிவுகளும் அதிகாரத்தை நிறுவும் பொருட்டு கட்டமைக்கப்பட்டவை என்பதை புரிந்து கொள்ளமுடியும்.இந்த முறையியல் மூலம் இஸ்லாமிய வரலாற்றில் வைதீகமரபையும்,நிறுவன ஆதிக்கம்களையும்,நவீன சொல்லாடல்களையும் புரிந்து கொள்ளமுடியும்.

விளிம்புநிலை இஸ்லாம் என்ற இக்கோட்பாடு இஸ்லாமிய பெரும்கதையாடல் பரப்பில் இதுவரை நிலவிவந்த அத்துணை கோட்பாடுகளையும் சர்ச்சைக்கு உட்படுத்துகிறது.பண்பாட்டு இஸ்லாம்(cultural islam),(seculer islam)மதநீக்க இஸ்லாம்,தாரளவாத இஸ்லாம்(liberal islam),(folk islam)நாட்டார் இஸ்லாம் போன்ற பின்நவீன இஸ்லாமிய கருத்தாக்கம்களுடன் இக்கோட்பாடு புதிய உரையாடலை நடத்துகிறது.பின்நவீன காலத்தில் இச்சொல்லாடல்கள் பயன்படுத்தப்படும் விதம் நிறுவன,வைதீக,நவீன இஸ்லாத்தில் வேறுபட்டதாக இருக்கிறது.எனவே அனைத்துவகை நிறுவன,அதிகார கட்டமைப்புகளுக்கு வெளியே நிற்கும் விளிம்பு நிலை முஸ்லிம்களின் சார்பாகவே இக்கோட்பாடு விவாதிக்கப்படுகிறது.

பகுத்தறிவு x அ-பகுத்தறிவு(பகுத்தறிவின்மை)
வினைசெய் உயிரி(அகம்) x வினைபடு பொருள் (புறம்)
பண்பாடு x இயற்கை
விதியொழும்கு x விதிமீறல்(விடுபடல்கள்)
என்ற வகையில் இக்கோட்பாடு அறிவாதரம்கள் மீது சர்ச்சையை உருவாக்கிறது.

இதில் பண்பாடு x இயற்கை பற்றிய எதிர்வுகள் விளிம்புநிலை முஸ்லிம்களை இயற்கையோடும் வைதீக,நவீன முஸ்லிம்களை பண்பாடோடும் இணைக்கிற அரசியல் முக்கியமானதாகும்.இயற்கையோடு இயந்திருக்கிற ஒடுக்கப்பட்டோர்கள் பகுத்தறிவற்றவர்,பண்பாடற்றவர் என்ற சட்டகத்தின் கீழ் இணைக்கப்படுவதை காணமுடியும்.இயல்போடு வாழுதல் என்பது மோசமானது என்பதை பகுத்தறிவு சித்தரிக்கிறது.விலம்குகள் தாம் இயல்போடு வாழும் பகுத்தறிவுள்ளவர்கள் பண்பாடோடு வாழுவார்கள் என்று பகுத்தறிவு கூறுகிறது.இஸ்லாம் ஒரு விஞ்ஞான மார்க்கம் என்ற பெயரில் பகுத்தறிவு,பண்பாடு,விதியொழும்குகள் கடைபிடிக்கப்படுகின்றன.பின்நவீனத்துவம் பகுத்தறிவு வாதத்தை கேள்விக்குட்படுத்தியதும்,பெண்ணியம் விஞ்ஞானத்தின் பாலியல் பேதத்தை கட்டுடைத்ததையும் விஞ்ஞான பகுத்தறிவுவாதத்தின் பலகீனமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.பண்பாடு எப்போதுமே பெருமரபுகளை ஆதரித்து சிறுமரபுகளை புறம் தள்ளி விடும்.உயர்பண்பாடும்,வெகுஜன பண்பாடும் இடைவெளிகளால் நிரம்பினாலும் ஒடுக்க பட்டோர்களின் பண்பாடுகளை இழிவாகவே பார்க்கிறது.ஏனெனில் ஒடுக்கப்பட்டோர்கள் காட்டாண்டி நிலையில் இருப்பதாக பகுத்தறிவு கட்டமைத்துள்ளது.

காடமரின் சிந்தனை எதிர்கட்டுமான தத்துவத்துடன் நெரும்கியதாக இருப்பதால் எல்லாவகை அறிவும் சூழல்சார்ந்து,வரலாறு சார்ந்து,சமூகம் சார்ந்து இயம்குகிறது என்பதை தவிர்த்து முக்கியத்துவம் ஏதுமில்லை என்கிறார்.அவர் தேவையியல்(essentialism) மற்றும் அடிக்கட்டுமானவற்றை சர்வ பொது பண்பாக ஒருபோதும் அவற்றால் இருக்க முடியாது என்பதால் அதை நிராகரிக்கிறார்.அடிக்கட்டுமானம் மற்றும் தேவையியல் சார்ந்ததாக பண்பாடு,ஒழுக்கம்,சட்டம்,விதிகள் ஆகியவை இருப்பதாக கொள்வோம்.ஒரு கட்டுமானவாதம் மற்றொரு காலத்தில் நிராகரிக்கபடுவதால் இஸ்லாமிய பெரும்கதையாடல்களை இக்கோட்பாடு நிராகரித்துவிடுகிறது,மேலும் சூழல்,காலம் சார்ந்த பொது பண்பேதும் இஸ்லாத்தால் நிலைநிறுத்திகொள்ளமுடியாது என்பதை வரலாறு பல கட்டம்களிலும் காண்பித்து தந்துள்ளது.எனவே இஸ்லாம் கட்டமைத்துள்ள அறிவு,விதிகள்,பண்பாடு ஆகியவை ஒடுக்கப்பட்டமக்களுக்கு எதிரானதாக இருக்கிறது.அதேசமயம் இஸ்லாமிய தத்துவமரபில் எழுப்பட்டுள்ள பலசிந்தனைகளும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஒருக்கிறது.இந்த வகையில் விளிம்பு நிலை இஸ்லாமிய கருத்தோட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் அறிவு பற்றிய பிரக்ஞையை வேறு தளத்தில் உருவாக்கம் செய்வது என்பது முக்கியமானதாக இருக்கிறது.பின் நவீனத்துவ சிந்தனையாளரான பூக்கோ அறிவு அதிகாரமாக மாறி ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக எப்படி செயல்படுகிறது என்பதை முன்னமே விவாதித்துள்ளார்,ஆக அடுத்ததாக அதிகாரம் பற்றிய இக்கோட்பாட்டின் நீட்சியை காண்போம்.

The theory of the State, the traditional analysis of State apparatuses certainly do not exhaust the field in which power functions and is exercised. This is today’s great unknown: who exercises power? and where? Today, we know more or less who does the exploiting, where the profit goes, into whose hands, and where it gets reinvested, whereas power… We know very well that power is not in the hands of those who govern. But the notion of “ruling class” is neither clear nor well developed. There is a whole loosely knit group of notions that need analysis: “dominate,” “manage,” “govern,” “state apparatus,” “party,” etc.

எலியா கானெட்டி என்ற தத்துவியலாளர் அதிகாரத்தின் மூலக்கூறுகளை பற்றி சொல்லுகிறபோது ஆற்றல்,அதிகாரம்,வேகம்,தீர்ப்பு,கருணை போன்ற விஷயம்கள் அதிகாரத்தை நிறுவும் தன்மை உடையது என்பதை விளக்கினார்.விளிம்பு நிலை முஸ்லிம்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருந்தாலும் வைதீக,நவீன,நிறுவன இஸ்லாம் சொல்லும் வாழ்க்கையை வாழ்பவரல்லர்.ஆனால் அவர்களை போல பாவனை செய்வதன் மூலம் தமது ஒடும்கும் நிலையை உறுதிசெய்கின்றனர்.இவர்கள் தம்களை தாழ்ந்தவர்களாகவும்,தகுதியற்றவர்களாகவும்,கேவலமானவர்களாகவும்,பேசுவதற்கு சொல்லற்றவர்களாகவும் உணர்ந்து மௌனமாகி வினைசெய் உயிரி என்ற நிலையை இழந்து வினை படு பொருளாக மாறிபோயினார்.

இந்த பாவனையை மௌனப்பண்பாடு மூலம்,பண்பாட்டு ஆக்கிரமிப்பாக ஒடுக்கப்பட்டவர்கள் மீது மற்றவர்கள் நடத்துகின்றனர்.ஒடுக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது மற்றவர்கள் முஸ்லிம்களாக இவற்றை கடைபிடியும்கள் என்று சொல்வது ஆற்றலுக்கும்,அதிகாரத்துக்கும் அவர்களை அடிபணிய வைப்பதற்க்கான முறையே அன்றி வேறல்ல.அதிகாரத்தின் தொடக்க நிலையான, ஒழும்கற்ற வெளிபாடுகளே ஆற்றல் என்கிறார் எலியா கானெட்டி.பூனை எலியை பிடிக்க ஆற்றலை பயன்படுத்துகிறது.அதைப்பற்றி பிடித்து தனது பாதம்களில் இறுக்கி இறுதியில் கொல்கிறது.ஆனால் எலியோடு பூனை விளையாடும் போது அம்கு வேறொரு தன்மையும் காணப்படுகிறது.எலியை போக விட்டு கொஞ்சம் ஓடவிட்டு வேறுபக்கம் கூட பூனை உட்கார்ந்து கொள்ளும்.இச் சமயத்தில் எலி பூனையின் ஆற்றல் வளையத்துக்குள் இருப்பதில்லை.ஆனால் இப்போதும் எலி பூனையின் அதிகாரவளையத்துக்குள் தான் இருக்கிறது.எப்போது வேண்டுமானாலும் அது பிடிக்கப்படலாம்.பூனை ஆதிக்கம் செய்யும் அந்த வெளி எலிக்கு நம்பிக்கை தரும் விதமாக அது அனுமதிக்கும் தருணம்கள் எலியை அழிக்கும் எண்ணத்தை கொஞ்சமும் தளர்த்தி கொள்ளாமல் எலியை கண்காணித்து கொண்டிருக்கும் தன்மை இவையாவும் சேர்த்து வெளி,நம்பிக்கை,கண்காணிப்பு,அழிக்கும் எண்ணம் இவையாவும் சேர்த்தே அதிகார அமைப்பு எனப்படுகிறது.

இந்தநிலையில் தான் விளிம்புநிலை முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.பார்க்கும் போது சுதந்திரமாக,ஜனநாயகமாக திரிவதாக தோன்றினாலும் அதிகார வளையத்துக்குள் தான் இருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும்.இந்த அதிகாரத்தை நிறுவன இஸ்லாம் செய்து கொண்டிருக்கிறது.ஆனால் நவீன இஸ்லாம் வேறொரு விதம் அதிகாரத்தை கட்டமைக்கிறது.அதாவது கடவுள் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவருக்கும் கடவுள் சர்வ அதிகாரம் கொண்டவராக இருக்கிறார் என்று தெரியும்.கடவுள் தமது பிரத்தேகமான வழியில் அதிகாரத்தை செலுத்துகிறார்.எனவே கடவுளின் ஆணைகளை நிறைவேற்றுவது தான் விசுவாசியின் மீது கடமையாக இருக்கிறது.இது கடவுளின் வாய்க்குள் இருப்பது போல அடுத்த கணமே விழும்கபடுவது போன்றதாகும்.எனவே தான் வாழ்வை ஒரு போராக கருதுகிற போர் என்பதையே வாழ்வின் உண்மையான வெளிப்பாடு என கருதுகிற ஒரு போர்விரனை ஒத்த நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதன் காரணமாகவே ஜிஹாத் அவர்களுக்கு நம்பிக்கை தருகிறது.இத்தகைய நம்பிக்கையே புனித போர் நடக்கவும் காரணமாகிறது.ஆக விளிம்பு நிலை முஸ்லிம்கள் அதிகார வளையத்துக்குள் தான் இருக்கிறார்கள் என்பது புலனாகிறது.இந்த வளையத்துக்குள் இருந்து கொண்டு இருந்து கொண்டு அதிகாரத்தை எதிர்ப்பது முக்கியமான செயல்திட்டமாகும்.பாதிப்பை அறிந்து கொள்வதையும் அதை உணர்வோடு எதிர்க்க வேண்டும் என்ற பிரக்ஞையை விளிம்புநிலை இஸ்லாம் அளிக்கிறது.

இனி முக்கியமாக விளிம்புநிலைமுஸ்லிகளை விளிம்புநிலையில் வைத்திருக்க விரும்புகிற அதிகார குணம் முக்கியமாக விவாதிக்கபடவேண்டும்.விளிம்பு நிலையினர் மோசமாக தான் இருப்பார்கள் என்று சொல்லுவதன் மூலம் தீர்ப்பொன்றை வழம்குவதிலுள்ள சந்தோஷம்.இப்படி சொல்லுவதன் மூலம் தன்னை நடுநிலைவாதியாக காண்பித்து கொள்ளும் மனோபாவம் முக்கியமானதாகும்.அந்த சந்தோஷம் வக்கிரமான உணர்வாகும்.நாம் ஓர் உயர்ந்த குழுவை சேர்ந்தவர்கள் என்று யூகித்துக் கொண்டு தம்மைவிட கீழான நிலையில் உள்ள குழுக்கென்று சிலவற்றை ஒதுக்குகிறது.பிறரை இழிவுபடுத்துவதன் மூலம் நம்மை நாம் உயர்த்திக் கொள்கிறோம்.எதிரெதிரான தன்மை கொண்ட எதிரெதிரான மதிப்பு கொண்டவற்றின் இருப்பு இயற்கையானது என்றும் தவிர்க்க முடியாது என்றும் கருதப்படுக்கிறது.நல்லது எப்போதும் கெட்டதற்க்கு எதிரானதாக இருக்கும் என்று புரிந்து கொள்ளபடுகிறது.இதில் எதை எது சார்ந்தது என்பதை நாம் தான் தீர்மானிக்கிறோம்.

எனவேதான் விளிம்புநிலையினர் பகுத்தறிவற்றவர்களாக,பண்பாடு அற்றவர்களாக,விதிமீறல் புரிபவர்களாக,வினைபடு பொருளாக கருதுவதின் மூலம் தன்னை அதிகாரம் மிக்கவர்களாக காட்டிகொள்வதும் சந்தோஷம் அடைவதும்,உயர்ந்தவர்களாக மதிப்பதும் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது.வைதீகமும்,நவீனமும்,நிறுவனமும் போர்கள அணிவகுப்பை எப்போதும் விரும்புகின்றன.எனவே சில முரண்களை அவை உருவாக்குகின்றன.நட்பு முரண்,பகை முரண்,விருப்ப முரண் என்பன போன்றவை.விருப்ப முரணில் விளிம்பு நிலையினரை வைத்து நல்லது,கெட்டது என உருவாக்கிய தீர்ப்பின் மூலம் உள்ளார்ந்த உஷ்ணத்தை எப்போதும் தக்கவைத்துகொள்கின்றன.இவ்வாறான விருப்ப முரணை கட்டமைத்து கொள்வதன் மூலம் கருணையை அதிகாரமாக மாற்றுகின்றனர்.விருப்ப முரணை தண்டனைக்கு உட்படுத்தாமல் கருணை மூலம் அதிகாரத்தின் வளையத்துக்குள் சிக்கியிருக்க செய்யும் தந்திரம் அதிகாரத்தின் அரசியலில் பட்டதாகும்.இதன் மூலம் இறந்தவர்களை உயிர்பிக்க முடியும் என்ற வைதீக சிந்தனையை புதுபித்து சந்தோஷம் அடைகின்றனர்.விருப்ப முரணை தண்டிக்கும் புனித கடமையை காரணம் காட்டி தண்டனையை வழம்கி பின்னர் மன்னித்தல் என்ற சலுகை அளித்து அவர்களை பாதுகாப்பதும் அதிகாரத்தின் மூலக்கூறுகளேயாகும்.

theoretical totalization in the form of the “truth.” What constitutes the generality of the struggle is the system of power itself, all the forms in which it is exercised and applied.

முரண்களை கட்டமைக்கின்ற போது விருப்ப முரணை ஏமாற்றுவதற்க்காக மற்ற முரண்களின் முகமூடிகளை அம்பலப்படுத்துவதும் வேகமாக நடைபெறும்.எனவே அதிகாரம் முகமூடிகளை அணிந்து கொண்டு மற்ற முரண்களின் முகமூடிகளை பேசச் செய்வதன் மூலம் தனது இருப்பை தக்க வைத்துக் கொள்கிறது.வைதீகம்x நவீனம் என்கிற நட்பு முரணை பாசிசம் என்கிற முகமூடியை பேசச் செய்வதன் மூலம் தம்களது பாசிச முகமூடிக்கு பம்கம் வராதவாறு பார்த்து கொள்வதும் இதன் உள் கிடம்கையாகும்.இந்நிலையில் ஒடுக்கப்படும் மக்களின் பிரச்சனையை எளிதில் புரிந்து கொள்ளவிடாதவாறு அரைகுறையாக புரியப்ப்டும் அரைகுறை உணர்வுநிலையை [semi-intransitive] கட்டமைக்கிறது.இந்த உணர்வு நிலை பழமையை நோக்கிய ஏக்கமாக உருவாக்கமுடியும்.பிரச்சனையை உருவாக்கி வீண்விவாதம்களில் மக்களை பேச வைப்பது அதிகாரத்தோடு தொடர்புடைய விஷயமாகும்.வீண்விவாதம்கள் உருவாகிற போது உண்மையான பிரச்சனை என்ன என்று புரியாமல் மாற்றத்துக்கெதிரான உணர்வு நிலை[Intransitive consiousness) அமிழ்த்து விடப்படுகிறது [Submerge].பல சமயம்களிலும் உண்மைநிலை வெளியாகுகின்ற தருணத்தில் அச்சவுணர்வை உருவாக்குவது அவர்களை மந்தைகளுக்குள் முடக்கும் [Gregariousness] தந்திரமேயாகும்.

முரண்பாடுகளில் இருந்து பிரச்சனையை கவனமாக கட்டமைத்து அதன் மூலம் அச்ச உணர்வை அல்லது அச்ச வளையத்தை ஏற்படுத்துவது தம்களின் அதிகார வளையத்தில் தொடர்ந்து இருக்க செய்வதே அன்றி வேறல்ல.அச்ச வளையத்துக்குள் சிக்குகின்ற போது பெரும்கதையாடல்களின் எடுத்துரைப்பை பின்பற்ற வேண்டிவரும்.இப்படி எடுத்துரைப்பை சொல்லும் போது பாதுகாப்பு தேடியலையும் மனநிலை உருவாகும்.பொது முரணை காரணம் காட்டி நட்பு முரணும்,விருப்ப முரணும் நட்புறவு கொண்டாடி படித்தர அதிகாரத்தை எளிமையாக பொதுமைபடுத்தி விடுகின்றன.படித்தரம் தோன்றிய உடனே அவர்கள் மீது அதிகாரத்தை செலுத்துகின்றன.

அடுத்ததாக அதிகாரத்தின் இலக்கு மொழியேயாகும்.பண்பாடற்றவர்களின் மொழி கொச்சையானதாக,பாமரத்தன்மை மிக்கதாக இருப்பதன் காரணமாக தாழ்ந்தவர்களாக திகழ்கிறார்கள் என்பன போன்ற அதிகார செயல்பாடு மொழியின் வாயிலாக மௌனமாக நடைப்பெற்று வருகிறது.வைதீகமும்,நவீனமும் புனித மொழியை அதிகம் பயன்படுத்துவதன் காரணமாக புனித மொழியை கற்காதவர்களை மோசமானவர்களாக சித்தரிக்கிறார்கள்.தரமான மொழியை பயன்படுத்த வேண்டும் என்று சொல்லுவது அதிகாரத்தின் செயல்பாடேயாகும்.பிரதேச வழக்குகளும்,இழிவழ்க்குகளும்,கொச்சைத்தனமும் மிக்க மொழியை பேசும் விளிம்பு நிலையினர் மற்றவர்களின் மொழியை புதுமையாக பார்ப்பதும் அதன் மேல் விருப்புறுவதும் அதிகாரம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதன் அடையாளம்களாகும்.தாம்கள் பேசுகின்ற மொழி இழிவானது என்று எண்ணவைக்கின்ற சாதுர்யம் முக்கியமானதாகும்.விளிம்பு நிலையினர் கல்வியறிவற்று இருப்பதன் காரணமாக பேச்சு மொழியையே பிராதானமாக பயன்படுத்துவதாலும் மொழிச்செயல்பாடு அவர்களவில் சுரும்கியதாகவே இருக்கிறது.ஆனால் பொழுது போக்க பாடல்கள் பாடியும்,உயர்மொழியை போல செய்தும் பயன்படுத்தும் பயன்பாடுகள் மொழி விழிப்புணர்வை அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதாகும்.மொழியை சார்ந்து அவர்களது உணவு,இருப்பிடம்,ஆடை,தொழில் போன்ற நடவடிக்கைகள் அமைவதால் தொழிற்சார்ந்த மொழியே அதிகம் புழக்கத்திலுள்ளது.பெண்கள்,சிறுவர்கள் என்று அனைத்து தரப்பினரும் தொழில்களில் ஈடுபடுவதால் நளினமான மொழியை அவர்கள் உபயோகிப்பது இல்லை.இவ்விதமான மொழியின் மீது அதிகாரத்தின் நிழல் படிகிற போது தம்களது உணர்வுகளும்,உணர்வு சார்ந்த நடவடிக்கைகளும் கட்டுபடுத்தப்படுகிறது.மொழியை கட்டுப்படுத்தும் இந்த அதிகார செயல்ப்பாடு மொழியை மொழியில் இருந்து அன்னியபடுத்தும் நோக்கில் அமைந்ததாகும்.மேலும் அதிகாரத்தில் குரலுக்கு செவிமடுத்து தம்கள் மொழியை பயன்படுத்தாமல் மௌன மொழியை கடைபிடிப்பதை காணலாம்.மௌனமொழி பயன்படுத்துதல் அதிகாரத்தின் ஆட்சியை உறுதி செய்வதாகும்,

மேலும் பயத்தின் அரசியல் விளிம்புநிலை இஸ்லாமிய கருத்தாக்கத்தில் முக்கிய இடம் வகிக்கிறது.நம்பிக்கை சார்ந்த பயம் என்ற உணர்வுக்கு பதிலாக அஞ்சி நடும்க வைப்பதும்,அச்சவுணர்வில் எப்போதும் இருக்கும்படியாக செய்வதும் அதிகாரத்தின் மற்றொரு வன்கொடுமையாகும்.நம்பிக்கையின் வாயிலாக தொடம்கின்ற இந்த அச்சவுணர்வை போதிய அளவில் விளிம்புநிலையினரிடத்தில் காணமுடியாது.இதற்கு காரணம் கடவுள் என்ற பயவுணர்வுக்கு பதிலாக அவர்களிடம் தீய ஆவிகள்,மந்திரதந்திரம்,சோதிடம் போன்ற இன்னபிற சிறுமரபு நம்பிக்கைகள் அவர்களின் பயவுணர்வுக்கு அடிதளமாக இருக்கிறது.தொழில் சார்ந்தும்,பரிவர்த்தனைகள் சார்ந்தும் சமூகத்தில இயம்க வேண்டியிருப்பதால் மற்றவர்கள் குறித்த பயமும்,இயற்கை பற்றிய பயமும் அதிகமாக இருக்கிறது.எனவே அச்சம்,குறித்த தன்மையானது இயல்பிலேயே அமையப்ப்ட்டாலும் எப்போதும் அச்சவுண்ர்வில் அல்லது அச்ச வளையத்தில் இருக்க செய்யும் வழிகள் நிறுவன,நவீன,வைதிக இஸ்லாமிய கூட்டமைப்பில் மிகவும் பயம்கரமானதாக இருக்கிறது.மேலும் இஸ்லாத்தில் உடலரசியல் வன்முறையை தூண்டுவதாக அமைந்திருக்கிறது.இஸ்லாமிய பயம்கரவாதம் தோன்றவும் இந்த உடலரசியல் காரணமாக இருந்தது.இன்னும் விவதிக்கப்படவேண்டிய பல விஷயம்களும் விளிம்புநிலை இஸ்லாமிய கோட்ப்பாட்டின் இரண்டாம்நிலை,மூன்றாம் நிலை ஆகியவை இனிவரும் காலத்தில் நாம் பம்கு கொள்வோம்.

intellectuals realize that the masses can do without them and still be knowledgeable: the masses know perfectly well what’s going on, it is perfectly clear to them, they even know better than the intellectuals do, and they say so convincingly enough. But a system of power exists to bar, prohibit, invalidate their discourse and their knowledge—a power located not only in the upper echelons of censorship, but which deeply and subtly permeates the whole network of society. The intellectuals are themselves part of this system of power, as is the idea that intellectuals are the agents of “consciousness” and discourse. The role of the intellectual is no longer to situate himself “slightly ahead” or “slightly to one side” so he may speak the silent truth of each and all; it is rather to struggle against those forms of power where he is both instrument and object: in the order of “knowledge,” “truth,” “consciousness,” and “discourse.”

Michel Foucault

Series Navigation

எச்.முஜீப் ரஹ்மான்

எச்.முஜீப் ரஹ்மான்