சம்பந்தமில்லை என்றாலும் – குருகுலப்போராட்டம் – நரா. நாச்சியப்பன்

This entry is part of 44 in the series 20080410_Issue

எஸ்ஸார்சிசமூகநீதியின் தொடக்க வரலாறு. வெளியீடு: அன்னை நாகம்மை பதிப்பகம் 2/141 கந்தசாமிநகர் பாலவாக்கம் சென்னை-41
டிசம்பர்-1994, விலை ரூ 12

——————————————————————————————————————
தகுதியும் திறமையும் உள்ள மேலாதிக்கசாதியாரின் சதியினால்தான் நாடு பின்தங்கியுள்ள தென்பதை நாட்டுமக்கள் உணர்ந்துவிட்டார்கள்,
முன்னுரையில்
———————————————————————————————————————-நான்கு வேதங்களையும் நுட்பமாக ஆராய்ந்து சிந்து வெளித்தமிழகத்தின் சீர்மையை விளக்கி எழுதியவரும், குத்தூசி குருசாமி வாழ்க்கை வரலாற்றுறாசிரியரும், அடிநாள் தொட்டு திராவிட இயக்கத்தொடர்புடையவரும் ஆகிய தோழர் குருவிக்கரும்பை வேலு,,,,,,,,,,,அவர்களுக்கு
என் மனம் நிறைந்த நன்றி நன்றியில்
———————————————————————————————————————-
இழிவு கொண்ட மனிதர் என்ப
திந்தியாவில் இல்லையே,,,,,,,,,,,,
வாழிகல்வி செல்வம் எய்தி
மனமகிழ்ந்து கூடியே
மனிதர்யாரும் ஒருநிகர்
சமானமாக வாழ்வமே,,,,,,,,
பாரதியார் எந்த உணர்வோடு பாடினார். ,,,,,,,,விடுதலைப்போராட்டத்தைத்தலைமை ஏற்று நடத்தியவர்கள்
இந்தத்தூய்மையான மனத்தோடு இருந்தார்களா? பக்கம் 12
———————————————————————————————————————-
பெரியார் மட்டும் உறுதிபடைத்தவராக இல்லாதிருந்தால் நாம் தமிழ்மக்கள் எந்த அளவுக்குப்பின்தங்கியிருந்திருப்போம் என்று சொல்லவேமுடியாது,,,,,,,,,சூது சூழ்ச்சி வஞ்சகம் பொறாமை ஆகியவற்றை எதிர்த்துப் பெரியார் தொடங்கிய பெரும் போராட்டம்தான் இந்த குருகுலப்போராட்டம். பக்கம் 13
———————————————————————————————————————-
ஆங்கிலம் படித்தவர்கள் மேலானவர்கள் என்ற எண்ணம் இன்னும் ஒழியவில்லை. ஆங்கில மொழியின் மீதுள்ள மோகம் இன்னும் தணியவில்லை,,,,,,,,,,,
காமராசர் பெரியார் போன்ற ஒப்பற்ற தலைவர்கள் ஆங்கிலம் இல்லாமலே பெருஞ்சாதனைகளை நடத்திக்காட்டமுடியும் என்று மெய்ப்பித்துக்காட்டிய பிறகும் இந்த அதிகார வர்க்கம் திருந்தவில்லை என்பது வேதனைக்குரியது. பக்கம் 19
———————————————————————————————————————-
தமிழ் நாட்டிலே காங்கிரசுக்கட்சியின் தூண்களாகவும் மக்கள் போற்றும் தலைவர்களாகவும் விளங்கியவர்கள் மூன்று மணிகள்-ஒப்பற்ற
பொன்மணிகள்.
சேலம் வரதராசுலு நாயுடு
திருவாரூர் கலியாண சுந்தர முதலியார்
ஈரோட்டு இராமசாமி நாயக்கர்
இந்த மூன்று பேருடைய அயராத உழைப்பால்தான் தமிழ் நாட்டில் நாட்டுணர்வு வளர்ந்தது. பக்கம் 24
———————————————————————————————————————
வரகனேரி ,,,, வெங்கடேச ஐயரின் மகன் தான் சுப்பிரமணிய ஐயர்.,,,,,,மேற்படிப்புக்கு இலண்டன் சென்றார்.
திருக்குறளை ஐயம் திரிபறக்கற்றவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். ஆங்கிலத்தில் கம்பராமாயண ஆராய்ச்சி
நூல் எழுதியுள்ளார்.
பாரத கலாச்சாரத்தை நிலை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் குருகுலம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இருந்தார்.
பக்கம் 29
———————————————————————————————————————-
ஔமாந்தூர் இராமசாமி ரெட்டியார் ஒரு நல்ல தலைவர்.,,,,,,,,,1948 ஆம் ஆன்டு வாக்கில் தமிழக முதலமைச்சராக இருந்தார்..
ஔமாந்தூரார் பையன் அப்பள்ளியில் பயின்றான்.
பிராமண பசங்கன்னா ஒசத்தியா நயினா? ஒருநாள் தண்ணீர் தாகமெடுத்தது. வழியில் இருந்த பானையில் மொண்டு குடித்தேன்
நான் தொட்டதும் தீட்டாகிப்போச்சாம். அந்த வழியாக வந்த பிரமச்சாரி வாத்தியார் பாதித்தண்ணீர் குடிக்கும்போதே என் கன்னத்தில் ஔங்கி
அறைந்தார். சூத்திரப்பய உனக்கு என்ன கொழுப்பு என்று பொரிந்து தள்ளினார் தீட்டுன்னா என்ன நயினா? என்று கேட்டான் பையன்.
பக்கம்43
———————————————————————————————————————-
‘நீ ஈரோட்டுக்குப்போ பள்ளிக்கூடத்தில் நடந்த அட்டூழியங்களை ராமசாமி நாயக்கர் நயினாவிடம் செப்பு’ ரெட்டியார் அனுப்பிவைத்தார்.
தனித்தனிச்சாப்பாடு-தனித்தனிதண்ணீர்பானை-சாதிவேற்றுமை- உயர்வு தாழ்வு பெரியாருக்கு சினம் பொங்கியது.
பக்கம் 45
———————————————————————————————————————-
அது ஒரு தேசிய நிறுவனம் என்ற நிலையில்தான் தமிழ் நாடு காங்கிரசு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை அளித்தது.
பக்கம் 50
———————————————————————————————————————-
காங்கிரசு செயற்குழு திருச்சியில் 1925 ஏப்ரல் 27 ம் நாள் கூடியது. பக்கம் 49
———————————————————————————————————————-
மகாத்மா காந்தியடிகள் குருகுலம் குறித்துப்பேசும்போது, ‘நடந்தது சரி . இனிமேல் சமபந்தி நடத்துவதாக வாக்குக்கொடுங்கள். நான் நாயுடுவிடமும் நாயக்கரிடமும் பேசி இந்தப்பிரச்சினையை முடிவுக்குக்கொண்டு வருகிறேன் ‘ என்று கூறினார்.
அண்ணல் காந்திடிகளின் சொல்லையும் ஐயர் ஏற்றுக்கொள்ளவில்லை. பக்கம் 58
———————————————————————————————————————-
மூதறிஞர் ராஜாஜி
கே. சந்தானம்
டாக்டர். சந்தானம்
இவர்களெல்லாம் வ வே சு ஐயர் செய்த ஒரு மோசமான செயலை ஆதரிக்கிறார்கள் என்றால் அதன் பின்னணி என்ன?
பக்கம் 63
———————————————————————————————————————-
இந்தியா முழுவதும் யாரைத்தங்கள் விடிவு காலத்தை உருவாக்கத் தோன்றிய கதிரவன் என்று எதிர்பார்த்தார்களோ அந்தக்கதிரவன்
பார்ப்பனீய மூடுபனியால் மறைக்கப்பட்ட கதிரவனாகி விட்டார்.
அப்படிப்பட்டவர்கள் வலையில் காந்தியடிகள் சிக்கிக்கொண்டார். பக்கம் 71
———————————————————————————————————————-
காந்தி அடிகள் தடம் புரண்ட வரலாறுகள் ஒன்றா இரண்டா ? பக்கம் 72
———————————————————————————————————————-
ஒரு தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடனைத் தோள்மேல் கைபோட்டு அக்கிரகாரத்துக்குள் அழைத்து வந்த பாரதியைச் சாதியிலிருந்து விலக்கி
வைத்த அக்கிரகார வாசிகள் எப்படி உயர்வு கொடுப்பார்கள் என்று காந்தியடிகளால் கருத முடிந்தது. பக்கம் 78
———————————————————————————————————————-

Series Navigation