• Home »
  • அரசியலும் சமூகமும் »
  • சம்பந்தமில்லை என்றாலும் – மாசுகோவில் தமிழன் – தரு. ராமச்சந்திரன். (ஆங்கிலம்- மிஷன் டு மாசுகோ)

சம்பந்தமில்லை என்றாலும் – மாசுகோவில் தமிழன் – தரு. ராமச்சந்திரன். (ஆங்கிலம்- மிஷன் டு மாசுகோ)

This entry is part of 30 in the series 20080214_Issue

எஸ்ஸார்சி


சம்பந்தமில்லை என்றாலும்
மாசுகோவில் தமிழன் – தரு. ராமச்சந்திரன். (ஆங்கிலம்- மிஷன் டு மாசுகோ)
தமிழாக்கம்- எசு. சங்கரன். வெளியீடு. சிற்பி நூலகம்,31 ஹாரிங்டன் ரோடு,சென்னை-30
முதர்பதிப்பு:1959 டிசம்பர், விலை:75 காசு


இரும்புத்திரைக்குப்பின்னே என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள க்கிடைத்த வாய்ப்பை நல்லமுறையில் பயன் படுத்திக்கொண்டு தாம் கண்டதை தகுந்த ஆதாரங்களுடன் தருகிறார் நண்பர் தரு. ராமச்சந்திரன். – பதிப்புரையில்


சர்வதேச இளைஞர்களின் இந்த மாபெரும் விழா 1957 ஜூலை மாதம் 28-ம் தேதி முதல் ஆகசுடு 11-ம் தேதி வரை பதினைந்து நாட்கள்நடைபெற்றது. வரலாற்றிலே இடம் பெறும் இந்த விழாவில் உலகின் ஐந்து கண்டங்களிலுமுள்ள 132 நாடுகளிருந்து 32000 பேர்களுக்கு மேல். கலந்து கொண்டனர். ,,,,,,,,,,,உலக மக்களின் தொடர்பே இல்லாமல் துண்டிக்கப்பட்டு 40 வருட காலமாக தனியே அடைத்துவைக்கப்பட்டிருந்த அவர்களுக்கு உண்மையிலேயே இது ஒரு மகத்தான வாய்ப்புத்தான். பக்கம்-9


இரண்டாவது உலகப்போரில் சோவியத் ரஷியா 70 லட்சம் ஆண்களைப் பலிகொடுக்க வேண்டியதாயிற்று. அதன் காரணமாக இன்று ரஷிய சமூகத்தில் ஆண்கள் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் தொகையில் ஏறக்றைய 55 முதல் 60 சதவிகிதம் வரை பெண்களாக இருக்கிறார்கள். பக்கம்-12


பார்லிமென்டரி ஜனநாயகம் குறித்து நான் பேசிக்கொண்டிருந்தபோது கேரளாவில் கம்யூனிச்ட் ஆட்சி நடைபெருவது பற்றிக்குறிப்பிட்டேன்..
நான் சொன்னவற்றை அவர்கள் நம்பவில்லை என்பதை அவர்கள் கண்கள் புலப்படுத்தின. திடுக்கிட்டேன், திகைத்து நின்றேன்!
அரசியல் சட்டத்தை ஏற்றுக்கொள்ளும் எந்த கட்சியானாலும் ஜனநாயக ஆட்சிமுறையில் மக்கள் ஔட்டுக்களைப்பெற்று ஆட்சிக்கு வரமுடியும் என்று அவர்களுக்கு விளக்கிக்கூறினேன். அவர்கள் இதை நம்பும்படிச்செய்ய நான் அதிகம் சிரமப்பட வேண்டியதாயிற்று. தங்களுக்கு இது தெரியாதென சிலர் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டனர். பக்கம்-15


மக்கள் ஜனநாயகத்தைப்பற்றிப் புரிந்துகொண்டவர்கள் அவர்களின் தேர்தல் முறையினை நன்றாக அறிவார்கள். பொதுத்தேர்தல், சர்வஜன வாக்கு ரகசிய ஔட்டுமுறை, போன்ற சொற்கள் தவறாகப்பயன்படுத்தப்படுகின்றன. நடைமுறையில் இந்த சொற்கள் அதன் பொருளை இழந்துவிட்டன. சொற்களுக்குரிய பொருள்களைக்கூட கம்யூனிச்ட் கட்சியும் சர்க்காரும் பறித்துவிடுகின்றன.
பக்கம்-18.சோவியத் ரஷ்யாவைப்பற்றிய பல பொய்களுள் மிகப் பெரிய பொய் அந்த ஐக்கியத்திலுள்ள அங்க நாடுகள் பரிபூரண சுதந்திர நாடுகள் என்று கூறப்படுவதுதான். பக்கம்-19


இது போன்ற விழாக்களை சோவியத் ரஷ்யா ஆண்டு விடாது பத்தாண்டுகள் நடத்தி வருமானால் இறுதியில் என்ன நடக்கும் என்பதைநம்மால் கூற முடியாது? பக்கம்-24


ஏட்டளவில் அரசியல் அமைப்பு உரிமைகளை வழங்கி விட்டு நடைமுறையில் அதை மறுக்கும் முறை அதிக நாட்கள் நீடிக்க முடியாது.
இவை இரண்டிற்கும் என்றாவது ஒரு நாள் மோதல் ஏற்பட்டேதான் ஆக வேண்டும். அதற்கான அறிகுறிகள் பல காணக்கிடைக்கின்றன.
பக்கம்- 31


தெருவில் ஐசுக்ரீம் விற்பவன் கூட அரசாங்கத்தைச்சேர்ந்தவன். பக்கம்-39


காரல் மார்க்சே தான் ஒரு மார்க்சீயவாதி அல்ல என்று கூறியிருப்பதை க்கூட நான் அவர்களுக்கு எடுத்துக்கூறினேன்..
பக்கம்-42


தனிமனிதனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை எதிர்ப்பவர் மார்க்ச். தனக்கு இதன் பேரிலுள்ள வெறுப்பையும் புலப்படுத்தச்செய்தார்.
அவர் ஒரு நாத்திகர். பிரிட்டனில் நாத்திகர்கள் மாநாடு ஒன்றை சார்லசு பிராட்லா என்ற ஒரு நாத்திகர் கூட்டினார்.. மார்க்சை அந்த மாநாட்டிலே கலந்துகொள்ளுமாறு அழைத்தார். .மார்க்சு அதில் கலந்துகொள்ள மறுத்ததோடு சார்லசு பிராட்லாவை ’நாத்திக மத குரு’
என்று கிண்டல் செய்தார். பக்கம்-48


essarci@yahoo.com

Series Navigation