சம்பந்தமில்லை என்றாலும் – மதுரை மாவட்ட சுதந்திர வரலாறு ( ந. சோமயாஜுலு )

This entry is part of 42 in the series 20080207_Issue

எஸ்ஸார்சி. வெளியீடு மதுரை ஜில்லா வீரர் சங்கம்
ஆண்டு 1980. அச்சகம்: மீலாத் பிரிண்டர்சு. பிற : குறிப்புகள் இல்லை பக்கங்கள்->304


டாக்டர். செண்பகராமன் பிள்ளை ( 1891-1934)
‘எட்டு வீட்டு பிள்ளைமார்’ என்ற சிறப்புப்பெற்ற தமிழ்க்குடியில் பிறந்தவர். புரட்சித்தடத்தில் இந்தத்தமிழ் வீரர் வங்க வீரர் சுபாச்சந்திர போசுக்கு உண்மையிலேயே வழிகாட்டியாக விளங்கியிருக்கிறார்.
தமது ராணுவத்திட்டத்திற்கு ‘இந்தியன் நேஷனல் வாலன்டியர்சு’ என்னும் இந்திய தேசிய தொண்டர்படையை அமைத்தவர்.
ஜெய் ஹிந்த் என்ற தேசிய முழக்கத்தை முதன் முதலில் முழங்கிய தமிழ் வீரர்.
முதல் உலக மகாயுத்தத்தின் போது சென்னைக்கடற்கரையில் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திர்கு எதிராக குன்டு வீசிய ‘எம்டன்’
என்னும் ஜெர்மானியக்கப்பலின் தலைமை இஞ்சினீயர் டாக்டர் செண்பகராமன் பிள்ளை.
ஹிட்லரை மன்னிப்புக்கேட்கவைத்த வீரத்தமிழன். பக்கம்-299


அமெரிக்காவில் இந்தியப்புரட்சிக்கு ப்புதிய வலுவான திருப்பத்தை அளித்தவர் 1911 முதல் ஹர் தயாள் மாதூர் என்பவரே.
கத்தர் கட்சிக்கு அமெரிக்காவில் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கிளைகளை ஏற்படுத்தினர். வெளிநாடுகளில் குடியேறிய சீக்கியர்களே இக்கட்சியின்முதுகெலும்பு.
டிசம்பர் 9 1905-ல் ‘காயலிக் அமெரிக்கன்’ ‘ இந்தியா அன் அயர்லான்ட் வர்கிங் டுகெதர்’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டது.
டால்சுடாயின் ‘ லேட்டெர் டு எ ஹின்டு’ என்ற பகிரங்க கடிதம் வெளி வர தாரகநாத் தாசு அவர்களே காரணம்.
கத்தர் புரட்சி இயக்கத்தினர் 1914-ல் கோமகட்டமாரு என்ற கப்பலை வாங்கி அதில் நிறைய ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு கல்கத்தா துறைமுகம் வந்துசேர்ந்தபோது வேட்டையாடப்பட்டனர். கப்பல் முற்றுகை இடப்பட்டு அதன் மீது பீரங்கிப்பிரயோகம் நடைபெற்றது இதில் பதினாறு பேர் மரணம் அடைந்தனர்.பலர் கைது செய்யப்பட்டு முப்பது ஆன்டுகளுக்குமேல் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். பக்கம்-300


பரிபூரண சுதந்திரம் சோஷலிசம் குடியரசு ஆகிய முப்பெரும் தத்துவங்களை இந்திய அரசியல் சிந்தனையில் ஒருங்கிணைத்து அளித்தது பகத்சிங்கின் குழு. விடுதலை அந்நிய ஆதிக்கத்திடமிருந்து மட்டுமல்ல உள்நாட்டு ஆதிக்கத்தினிடமிருந்தும்தான் எனப் பிரகடனப்படுத்தி சுரண்டலற்ற சோஷலிச சமுதாய அமைப்பிர்காகப்போராடியவர்கள் பகத் சிங் குழுவினர். புரட்சி இயக்கத்தின் சிந்தனையில் மதவழிப்பட்ட சிந்தனையை அகற்றியது பகத் சிங் குழு. பக்கம்-282


காங்கிரசு தோன்றுவதற்கு ஹ்யூம் காரணமானதுபோல் முசுலிம் லீக் தோன்றுவதற்கும் தியோடர்பெக் என்னும் ஆங்கிலேயர் காரணமாவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தியோடர்பெக் என்பவர் சையது அஹமதுகான் நிறுவிய முசுலிம் கல்லூரியின் முதல்வராகவும், சையது அகமதுகானின் ஆலோசகராகவும் இருந்தார்.
1888 ல் ‘பயோனியர்’ என்னும் பத்திரிகையில் காங்கிரசிற்கு எதிராக முசுலிம்கள் ஒன்றுதிரளவேண்டும் எனத்தொடர்ந்து எழுதிவந்தார்.
1886-1887 ல் அகமது கான் முசுலிம் கல்வி மாநாடுகள் என்ற பெயரில் காங்கிரசு எதிர்ப்பை நடத்தத்தொடங்கினார்.
பக்கம்-182


முசுலிம் பிரிவினை வாதத்திற்கு திட்டவட்டமான உருவம் கொடுத்து வன்முறைக்கிளர்ச்சிகளுக்கு ஊக்கமளித்து பாகிசுதானைக் கண்ட முகமதலி ஜின்னா 1920 வரையில் சிறந்த தேசியவாதிகத்தான் இருந்தவர், கவிஞர் இக்பாலின் தூண்டுதல் ஜின்னாவின் மனமாற்றத்திற்கு ஒரு காரணமாகும்.
முசுலிம் பிரிவினை வாதத்தை எதிர்த்ததில் டியோ பான்ட்(Deoband) இசுலாம் தத்துவ சிந்தனைக்கூடத்திற்கு முக்கிய இடம் உண்டு முசுலிம்களின் தனித்தாயக கோரிக்கைக்கு டியோ பான்ட் சிந்தனையளர்கள் எதிர்ப்புத்தெரிவித்தனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பில்
காங்கிரசிற்கு முழு ஆதரவு அளித்தனர். பக்கம்-182


சென்னை காங்கிரசில் (1887) ஒலித்த முதல் தமிழ்க்குரலுக்கு உரிய திரு. டி. ம மூக்கன் ஆசாரி தஞ்சை முனிசிபல் சபையின்
உறுப்பினர். பக்கம்-180


வங்காளம் 1772 –ல் ஒருபுறம் கிழக்கிந்தியக்கம்பெனியின் படுபாதகமான சுரண்டலாலும் மறுபுறம் சக்தியற்ற மொகலாய நவாபுகளின்
ஆட்சி சீரழிவாலும் ஆழித்துரும்பென அல்லலுற்றது. இந்தச் சூழ்நிலையில் இசுலாமிய மதபோதகர்கள் போர்வாள் ஏந்தி இந்துமதத் துறவிகளைத்தாக்கிப் பலரைக்கொன்று குவித்தனர்.
அப்பொழுது பெயரளவில் மொகலாயச்சக்கரவர்த்தியாய் இருந்தவரிடம் மதுசூதன சரசுவதி என்னும் இந்து சமயத்தலைவர் முறையிட்டும் பயனில்லை. சொல் தோற்றவிடத்தில் வாளுக்கு வழி பிறந்தது. மதுசூதன சரசுவதி க்ஷத்திரிய இனத்தவர்களை துறவிகளாக ஏற்று இந்து சமயத்தைக்காக்க இசுலாமிய மத போதகர்களை நேரடியாகத் தாக்கச்செய்தார்.
இந்து துறவிகளின் இந்த எழுச்சி’ சந்நியாசிகள் கலகமாக வரலாற்றில் இடம் பிடித்துவிட்டது.
1773-ல் வங்காளத்தின் கீழ்ப்பாகத்தில் நடைபெற்ற சந்நியாசிகளின் கலகத்தையே 1882- ல் எழுதிய ஆனந்தமடம் நாவலுக்கு கருவாகக்கொண்டார் பங்கிம் சந்திரர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த மடம் படைத்த வீரத்துறவிகளுள் ஒருவரான பவாநந்தர் இசைத்ததே வந்தே மாதரம்.
பக்கம்- 144


1857 புரட்சியை ஒரு மாபெரும் தேசிய விடுதலைப்போராக சித்தரித்து விநாயக தாமோதர சாவர்க்கார் 1909 ல் எரிமலை என்னும் பெயரில் மராத்திய மொழியில் எழுதினார்.. .. இவரது கையெழுத்துப்பிரதிகள் இந்தியாவிற்கு வந்தும் வெளியிடும் துணிச்சல் எந்தப்பதிப்பகத்தாருக்கும் ஏற்படவில்லை. ,,, ,,38 ஆண்டுகள் தடை செய்யப்பட்டிருந்ததிலுருந்து இந்நூல் எந்த அளவு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை அச்சுறுத்தியது என்பது தெளிவாகிறது. பக்கம்-100


essarci@yahoo.com

Series Navigation