சம்பந்தமில்லை என்றாலும் – பெரிசுத்ரோய்க்கா – மிகையில் கொர்பச்சேவ்

This entry is part of 54 in the series 20080110_Issue

எஸ்ஸார்சி


வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுசு பிரைவேட் லிமிடெட்
சென்னை -98 முதற்பதிப்பு-1988 விலை ரூ: 50 -மொழி பெயர்ப்பாளர் மாஜினி
எங்கள் நாட்டுக்கும் உலகுக்கும் புதிய சிந்தனை- மிகையில் கொர்பச்சேவ்
‘ஆகாவென்றெழுந்தது பார் யுகப்புரட்சி’ என்று 1917 ஆம் வருட மகத்தான அக்டோபர் சோஷலிச ப்புரட்சியைப்பற்றி புதுமைக்கவி பாரதி
பாடினான் .உலகைக்குலுக்கி புது யுகம் படைத்த அந்த மகோன்னதப்புரட்சிக்குப்பிறகு இப்போது சோவித் யூனியனில் மற்றொரு மாபெரும்
புரட்சி நடைபெற்று வருகிறது.. அது தான் பெரிசுத்ரோய்க்கா அதாவது மறு சீரமைப்பு..
அக்டோபர் புரட்சியைப்போன்றே பெரிசுத்ரோய்க்காவும் உலகுக்கு வழிகாட்டும் விடிவெள்ளியாகத் திகழும் என்று மனிதகுலம் எல்லையற்ற
ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறது. – -பதிப்புரையில்
நாம் அனைவரும் பூமி என்ற ஒரேகப்பலில் பயணம் செய்யும் பயணிகளாவோம். அந்தக்கப்பல் உடைந்து நொறுங்குவதை நாம் ஒருக்காலும் அனுமதிக்கக்கூடாது.
எமது அணுகுமுறைதான் ஒரே சரியான அணுகுமுறை என்று நாங்கள் கருதவில்லை. எல்லா நிலைமைகளுக்கும் எல்லாப்பிரச்சினைகளுக்கும் பொருந்தக்கூடிய சர்வாம்சத்தீர்வுகள் ஏதும் எம்மிடம் இல்லை..
வாசகர்களுக்கு- பகுதியில்
———————————————————————————————————————-
எங்கள் ராக்கெட்கள் ஹால்லியின் வால் நட்சத்திரத்தை ஆராய்கின்றன. அதிசயக்கத்தக்க துல்லியத்தோடு வெள்ளிக்கோளுக்குப் பறந்து செல்கின்றன.,,,,,,,,,,,,,
பல சோவியத் வீட்டு உபயோக சாதனங்கள் மோசமான தரம் கொண்டவையாக இருப்பதைப்பார்க்கிறோம்.
உண்மையான அல்லது கற்பனையான வெற்றிகள் பற்றிய பிரசாரம் மேலோங்கி வந்தது.. புகழாரம் சூட்டுவதும் இச்சகம் பேசுவதும்
ஊக்குவிப்பட்டன.
– பக்கம் -20
———————————————————————————————————————
ஆடம்பர ஆர்ப்பாட்டமான பிரசாரத்தின் மூலமும் நடவடிக்கைகள் மூலமும் மத்திய அளவிலும் ஸதல அளவிலும் எண்ணற்ற ஆண்டு விழாக்கள் கொண்டாடுவதன் மூலம் இவற்றை எல்லாம் முடிமறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
-பக்கம் 22
——————————————————————————————————————–
எமது நாட்டின் ஆன்மீக வாழ்க்கையில் எப்போதுமே ஒரு மகத்தான பங்காற்றி வந்துள்ள இலக்கியம் அநீதியின் ஒவ்வொரு வெளிப்பாட்டையும் அதிகார துஷ்ப்பிரயோகத்தையும் ஈவு இரக்கமின்றிச்சாடி வந்திருப்பதிலும் வியப்பேதுமில்லை.
பக்கம்-26
———————————————————————————————————————-
லெனின் முன்வைத்த ஒரு சிறந்த சூத்திரத்தை நான் நீண்டகாலமாகவே ஆதரித்து வந்திருக்கிறேன் சோஷலிசம் என்பது வெகு ஜனங்களின் ஒரு ஜீவனுள்ள படைப்பாக்கம் என்பதே அந்த சூத்திரமாகும். ஆணை இடுபவர்கள் அவற்றை நிறைவேற்றுபவர்கள் என்று சமுதாயம் இரு பிரிவுகளாகப்பிரிக்கப்படுகின்றது. அத்தகையதல்ல சோஷலிச சமுதாயம்.
-பக்கம்-..33
——————————————————————————————————————-
நாங்கள் சோஷலிசப்பாதையிலிருந்து விலகிச்செல்வோம் என்று நம்புபவர்கள் பெருத்த ஏமாற்றத்தையே அடைவார்கள்.
– பக்கம்-45
——————————————————————————————————————–
சமூக விஞ்ஞானிகள் ஒன்றிணைந்த எதையும் இன்னும் எமக்கு வழங்கவில்லை. சோஷலிசத்தின் அரசியல் பொருளாதாரம் காலத்திற்கொவ்வாத கண்ணோட்டங்களில் சிக்கிக்கொண்டிருக்கிறது. இனியும் அது வாழ்க்கையின் தருக்கவியலுக்கு இசைந்ததாக இல்லை.
தத்துவமும் சமூகவியலும்கூட நடைமுறையின் தேவைகளுக்குப்பின்தங்கி இருக்கின்றன. வரலாற்று விஞ்ஞானம் பெருமளவுக்குத் திருத்தி எழுதப்பட வேண்டும்.
பக்கம்-67

எமது சமுதாயத்துக்கு புதிய சாயம் பூசும் வேலையோ அதன் புண்களுக்குக்கட்டு கட்டும் வேல அல்ல..மாறாக சமுதாயம் பூரணமாக புனர்ஜென்மமெடுப்பதை ப்,புத்துயிர் பெறுவதையே அது குறிக்கிறது.,,,,,,,,,,,,,,,,நாங்கள் சோவியத் ஆட்சியை மாற்றப்போவதில்லை. அதன் அடிப்படைக்கோட்பாடுகளையும் கை விடப்போவதில்லை..
– பக்கம்-75
———————————————————————————————————————-
பல ஆண்டுகளில் இப்போதுதான் முதல் தடவையாகக்கட்சி மற்றும் அரசாங்க த்தலைமையில் சிபின்சு எனும் புதிரான கல் உருவச்சிலைகளுக்குப்பதிலாக மனித முகங்களை கொண்டவர்களைப்பார்க்கிறோம். இதுவே மாபெரும் சாதனையாகும்.
-பக்கம்-99
———————————————————————————————————————-தொழிலாளர் சட்டங்கள் சம்பந்தப்பட்ட சகல பிரச்சனைகளிலும் அவற்றை அமல்படுத்துவதிலும் உழைப்பாளி மக்களினு ரிமைகளைப்பாதுகாப்பதிலும் தொழிற்சங்கங்களின் முடிவே இறுதியானது. ,,,,,,,
சோஷலிச அமைப்பில் உழப்பாளி மக்களுக்கு எத்தகைய பாதுகாப்பும் தேவையில்லை என்று நினைப்பது தவறாகும்.
– பக்கம்-173
———————————————————————————————————————-
தேசிய இனப்பிரச்சனைக்குத்தீர்வு காண்பதில் ரஷ்ய தேசம் ஒரு தலை சிறந்த பங்கை ஆற்றிற்று.
பக்கம்-181
——————————————————————————————————————–
உலகப்பொருளாதாரத்தில் தோன்றும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்ட சகல இயக்க நிகழ்வுகளையும் ஆராய்வதற்கு எழுபது மார்க்சுகள் கூடப்போதாது என்று லெனின் கூறினார். – பக்கம்-237
———————————————————————————————————————-
கம்யூனிசத்தின் பகைவர்கள் என்ன நினைத்தபோதிலும் மனிதனது நலன்களுக்காகவும் அவனது சுதந்திரத்திற்காகவும் அவனது மெய்யான உரிமைகளையும் புவி இயல் நீதியையும் பாதுகாப்பதற்காகவுமே கயூனிசம் தோன்றி வாழ்ந்து வருகிறது.
– பக்கம் 241
———————————————————————————————————————
கூட்டுத்தேட்டத்தின் மூலமும் முயற்சியின் மூலமும் தான் உண்மை கண்டுபிடிக்கப்படுகிறது.. பக்கம் 259
——————————————————————————————————————–
வெடிக்கத்தயாராக இருக்கும் ஆபத்தான பிரச்சினைகளை க்கிடப்பில் போடமுடியாது – பக்கம் 274
———————————————————————————————————————-
நாம் அனைவரும் மாணவர்கள். வாழ்க்கையும் காலமும் தான் நமது ஆசிரியர். – -முடிவுரையில்.
———————————————————————————————————————-

Series Navigation