அடுத்த தலைமுறைக்குத் தமிழைப் பாதுகாக்க வேண்டும்

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

முனைவர் துரை. மணிகண்டன்



உலக இலக்கியங்களில் ஒப்பற்ற இலக்கியமாக இன்றும் வாழ்ந்தும், வளர்ந்து கொண்டும் இருக்கும் மொழி தமிழ் மொழியாகும். இம்மொழியை மறைத்திரு தனிநாயக அடிகளார் “ஆங்கிலம் வணிகத்தின் மொழியென்றும் இலத்தின் சட்டத்தின் மொழியென்றும் செருமன் தத்துவத்தின் மொழியென்றும் கிரேக்கம் இசையின் மொழியென்றும் பிரெஞை;சு தூதின் மொழியென்றும் இத்தாலி காதலின் மொழியென்றும் கூறுவது இயல்பெனில் தமிழை பக்தியின் (இரக்கம்) மொழியென்றால் பொருத்தமாக இருக்கும்” என்றார். இத்தகைய பேரும், புகழும் பெற்ற மொழி இன்று பல நிலைகளில் மாற்று மொழியின் ஆதிக்கங்களால் நிலை குழைந்து போயிருந்தாலும் அதன் தனித்தன்மை இன்றும் மறைந்து போகவில்லை.
அயல் நாடுகளிலிருந்து 01.12.2007 அன்று தமிழகம் வந்திருந்தனர். புலம் பெயர்ந்த தமிழர்கள் தாய்வீட்டுச் சாப்பாட்டிற்காகக் காத்துக்கிடக்கும். பிள்ளைகள் போன்று உள்ளுக்குள் ஒரே மகிழ்ச்சி. எங்களுக்கோ அதைவிட மட்டற்ற மகிழ்ச்சி.
தமிழகத்தில் திருச்சிராப்பள்ளி மாநகரத்தில் வீற்றிருக்கும் பொன்விழாக் கண்ட தூய வளனார் கல்லூரியில் “அயலகத் தமிழ் வாழ்வும் இலக்கியமும்” என்ற ஆய்வுக் கருத்தருங்கில் கலந்து கொண்டனர். 02.12.2007 ஞாயிற்றுக் கிழமை மாலை 6-00 மணிக்குத் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் வந்த விருந்தினர்ருகளுக்குப் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் கலந்து கொண்டு புலம் பெயர்ந்த தமிழர்களாகிய பேராசிரியர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் என அனைவரும் உரைநிகழ்த்தினர்.
இலங்கை கிழக்குப் பல்கலைக் கழத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றும் திரு. நித்தியானந்தன் அவர்கள் உரை நிகழ்த்தினார். இலங்கைத் தமிழர் என்றாலே அனைவரும் வடக்கிலும், கிழக்கிலும் வாழும் தமிழர்கள் என்றுதான் நினைக்கின்றார்கள். அதே அளவு எண்ணிக்கையில் இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் இந்தியாவின் ப+ர்வீக குடிமக்களான மலையகத் தமிழர்கள் வாழ்கின்றனர். மலையகத் தமிழர்களின் அடிப்படை உடைமைகள் கூட தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள தமிழர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும்போது மலையகத் தமிழர்களுக்காவும் குரல் கொடுத்தால் அவர்கள் மகிழ்வார்கள் என்று தனது மனதில் பட்ட உண்மை நிலையினை எடுத்துக் கூறினார்.
இவரைத் தொடர்ந்து மலேசிய வழக்குறைஞர் திரு. ம. மதியழகன் பேசுகையில் தமிழகத்தில் தமிழர்களை வெள்ளைக்காரர்கள் விட்டுச்சென்றும் ஆங்கில மோகம் குறையவில்லை. அயலகத் தமிழர்களைத் தமிழகத்திலிருந்து நடத்தப்படும் தொலைக்காட்சி சீரியல்கள் கெடுக்கின்றன என்றார்.
ஆஸ்திரேலியா எழுத்தாளர் திரு. ஸ்கந்த ராசா பேசுகையில் உலக மொழியியல் ஆய்வு அமைப்பு இன்னும் 100 ஆண்டுகள் கழித்து வாழும் மொழிகள் என ஒரு பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அந்தப் பட்டியலில் தமிழ் இல்லை. தமிழுக்கு எதுவும் ஆகாது என்று உரக்கப் பேசுவதால் ஆக்கப்ப+ர்வமாக எதுவும் நிகழாது. அதற்காகத் தமிழர்கள் அனைவரும் தங்களது கடமைகளை ஆற்ற வேண்டும். இலங்கையில் 1796 வரை வடக்கு, கிழக்கு என இரு பகுதிகளிலும் தமிழே ஆட்சி மொழியாகவும், அரசு மொழியாகவும் இருந்தது. 1875 வரை கண்டியில் தமிழே ஆட்சி மொழியாக இருந்தது. ஆனால் தற்போகைய நிலை மிகவும் வருத்தமாக இருக்கிறது. 11ம் நூற்றாண்டுவரை தமிழ் பேசிக்கொண்டிருந்த கர்நாடகர்கள் மெல்ல கன்னடர்களாக மாறினர். 13-ம் நூற்றாண்டுவரை தமிழ் பேசிய ஆந்திரர்கள் தெலுங்குக்கு மாறிவிட்டனர். 17-ம் நூற்றாண்டுவரை தமிழ் பேசிக் கொண்டிருந்த மலையாள மக்கள் மலையாள மொழிக்கு மாறிவிட்டனர். தமிழ் மொழியில் பிற மொழிக் கலப்பால் தமிழர்களின் மக்கள் தொகையும் குறைந்தது. தமிழர்கள் வாழும் பகுதிகளும் குறைந்துள்ளது. பி.ஜி. மொரிசியஸ், தென் ஆப்பிரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் வசித்த தமிழர்கள் பிற-மொழி கலப்பால் தமிழை மறந்து தற்போது தாங்களே ப+ர்வீகத்தில் தமிழர்கள் என்பதையும மறந்து விட்டனர் என்று மனத்தாங்களுடன் கூறினார். இதனைத் தவிர்க்க தமிழ்நாட்டுத் தமிழர்க்ள அரண் அமைத்து பாதுகாக்க வேண்டும் என்றார்.
மலேசிய தமிழ் எழுத்தாளர் திரு. பீர்முகமது பேசுகையில் உலகத்தில் வெறும் 25 ஆயிரம் மக்கள் பேசும் இடீஸ் மொழி இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றுள்ளது. ஏன் 8 கோடி மக்கள் பேசும் தமிழில் இருந்து ஒருவரும் நோபல் பரிசு பெறவில்லை. அதற்கான காலம் மிகவிiரைவில் உள்ளது. கணினியிலும் இணையத்திலும் நாம் இன்று வளர்ந்து வருகிறோம். எனவே நம்மொழியை அழிவிலிருந்து காப்பாற்ற இது ஒரு நல்லத் தருணம் என்றார். மேலும் அடுத்தத் தலைமுறைக்குத் தமிழை எடுத்துச் செல்லும் பொறுப்பு நம் கையில் தான் இருக்கிறது என்றார். எனது பேரனை நான் மலேசியாவில் தமிழ்ப்பள்ளியில்தான் சேர்த்துள்ளேன். எனவே நமது பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும் போது தமிழ்வழிப் பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். புலம் பெயர்ந்தவர்களாகிய எங்களால் தமிழை உலக்குக்குக் கொண்டு வர முற்படுகிறோம். தமிழ் நாட்டில் தமிழர்கள் அதற்கான முயற்சியை மேற்கொண்டால் தமிழ் வளர்வதும் வளர்ந்து வருவதும், நமக்கெல்லாம் பெருமையாக இருக்கும் என்றார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்கலைக் களஞ்சியம் திருமதி. சாந்தா ஜெயராஜ் அவர்கள் பேசுகையில் தமிழ் இன தாய்மார்கள் தமிழர்களது கலை, பண்பாடு, பாரம்பரியம், இலக்கியத்தை நமது பிள்ளைகளுக்குக் கற்றக் கொடுக்க வேண்டும். இதனைத்தான் ஆஸ்திரேவியாவில் நான் மற்றைய குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதனைத்தான் ஆஸ்திரேலியாவில் நான் மற்றைய குழந்தைகளுக்குக் கற்றுத் கொடுத்து வருகின்றேன் என்று தமிழ்ப் பண்பாட்டின் உயர்வை எடுத்துக் காட்டிப் பேசினார்.
இலங்கை எழுத்தாளர், கொழுந்து பத்திரிக்கையின் ஆசிரியர் திரு.அந்தனிஜீவா பேசுகையில் திருச்சி தமிழ்ச்சங்க நிர்வாகிகள் வருடத்திற்கு ஒரு முறை இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்களுக்காக விழா எடுக்க வேண்டும் என்றார்.
இறுதியாக விழாவில் ஜெர்மணியில் ‘ஹெலட் பேகர்ட் கணினி நிறுவனத்தில் கணிப் பொறியாளராகப் பணியாற்றி வரும் புலம் பெயர்ந்த மலேசிய தமிழர் செல்வி. சுபாஷினி கனகசுந்தரம் பேசுகையில் நாங்கள் தமிழ் மரபு அறக்கட்டளை ஒன்று துவங்கியுள்ளோம். இன்னும் அச்சில் கொண்டுவரப்படாத தமிழ் ஓலைச் சுவடிகளை அச்சில் கொண்டு வந்து உலகுக்குக் காட்ட வேண்டும் என்பது எங்களின் ஆவல். அறக்கட்டளை 2001-ம் வருடம் மலேசியாவில் தொடங்கப்பட்டது. மலேசியா, சுவிட்சலாந்து, ஜெர்மனியில் எங்களின் அலுவலக அறக்கட்டளையைப் பதிவு செய்துள்ளோம்.
தமிழர்களிடையே எல்லாத் திறமைகளும் இருந்தாலும் அவர்கள் எந்த காலத்தில் தங்களின் படைப்புகளை எழுதியிருக்கிறார்கள் என்ற தகவலை அவர்களின் படைப்புகளிலிருந்தோ, இதரகுறிப்புகளிலிருந்தோ தான் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். வரலாற்று ரீதியான விழிப்புணர்வு தமிழர்களிடம் குறைவு. வெளிநாட்டு அறிஞர்களின் காலத்தை நம்மால் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிவதுபோல, நம்முடைய பாரம்பரியத்தில் இருப்பவர்களை நம்மால் அடையாளம் காண்பது கடினம். ஓலைச்சுவடிகளை மிகச் சரியாகப் பராமரித்தால்கூட ஐந்து நூற்றாண்டுகள் வரைதான் அதற்கு ஆயுள் காலம். எனவே அதை மின் பதிப்பாக்கம் செய்வதற்கான அவசர அவசியத்தை எங்களுக்கு உணர்த்தியது.
நாங்கள் அறக்கட்டளையைத் தொடங்கியவுடன், ஓலைச் சுவடிகள் இருக்கும் இடங்களைக் கண்டறிவது, அதில் இருக்கும் கருத்தை அறிஞர்களைக் கொண்டு எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாக்குவது, அவற்றை மின் பதிப்பாக்குவது, தகவல் வங்கியை உருவாக்குவது.. என்று, எங்களின் பணிகளை மளமளவென்று தொடங்கினோம். தமிழ் கூறும் நல்லுலகத்திலிருந்து அறிஞர் பெருமக்கள் பலரின் உதவிக்கரம் நீண்டது என்று கூறினார்.
திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் இதற்கான செயற்குழுக்களை அமைப்தற்காகத்தான் தற்போது இந்தியா வந்துள்ளேன். உலகத்தில் எந்தப் பகுதியிலிருக்கும் தமிழர்களிடம் ஏதாவது ஓர் எழுதப்பட்ட பழங்கால ஓலைச் சுவடிகள் இருந்தால் அதை நீங்களாவது படியெடுத்து பராமரியுங்கள். இல்லையென்றால் அது பற்றிய செய்தியினை எங்களுக்குத் (Ksubashini@gmail.com) தெரியப்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டார். இதுவரை 20 விழுக்காடு ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப்பட்டு மின் பதிப்பகத்தில் வெளியிட்டள்ளோம் என்று கூறினார்.
இப்புலம் பெயர்ந்த தமிழர்களின் கன்னித் தமிழ் பேச்சில், நம்பிக்கை இருந்தது. தமிழின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும் என்பதையும் காட்டியது. ஒவ்வொருவரும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து தமிழை உலகத்தின் உச்சாணி கொம்பில் ஏற்றும் முயற்சியில் இறங்கி வெற்றிக் கண்டு வருகின்றனர். இவர்களின் வெற்றிக்கு என்றென்றும் தமிழ்நாட்டு மக்கள் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பார்கள். என்றென்றும் உங்களுக்கு உருதுணையாக இருப்பார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும். புலம் பெயர்ந்த தமிழ்ர்களே உங்களை வணங்குகின்றேன், வாழ்த்துகின்றேன், போற்றுகின்றேன்.

முனைவர் துரை. மணிகண்டன்
விரிவுரையாளர்,
தமிழாய்வுத்துறை,
தேசியக் கல்லூரி,
திருச்சிராப்பள்ளி.


Gunama73@yahoo.co.in.

Series Navigation

முனைவர் துரை. மணிகண்டன்

முனைவர் துரை. மணிகண்டன்