ஜிகாத்தும் தலித் விடுதலையும், முயற்சித்தலும் மூடி மறைத்தலும்

This entry is part [part not set] of 29 in the series 20060915_Issue

நேசகுமார்



ஹெச்.ஜி.ரசூல் அவர்கள் எழுதிய பின் நவீனத்துவ ஜிகாதும் தலித்தும் என்ற கட்டுரையைக் கண்டேன். நான் மிகவும் மதிக்கின்ற மிகச் சில இஸ்லாமிய சிந்தனையாளர்களிடையே திரு.ரசூல் அவர்களும் ஒருவர். இஸ்லாமிய மதம் என்கிற இரும்புச் சுவரைத் தாண்டி சிந்திக்கக் கூடிய இஸ்லாமிய அன்பர்கள் மிகச் சிலரையே நம்மால் காணமுடிகிறது. அத்தகையோரில் திரு.ரசூல் அவர்களும் ஒருவர் என்பதால், அவரும் மற்றவர்களும் தெளிவுற வேண்டி அவரிடம் கீழ்க்கண்ட கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன்.

***

இஸ்லாம் பற்றி படிக்கப் படிக்க எனக்கு இப்போதெல்லாம் தோன்றுவது என்னவென்றால், இஸ்லாத்தை உருவாக்கியது நாம்தான் – நமது மனம் தான். முதலில் சிறு கிளையாக இருந்த கருத்துக்களெல்லாம் பிறகு தத்தமது மனங்கள் கொடுக்கும் விளக்கங்களினாலும், சால்ஜாப்புகளாலும் தழைத்து கொப்பும், கிளையுமான ஆலமரமாய் படர்ந்து தீர்க்க சிந்தனையை மறைத்துக்கொள்கிறது. இஸ்லாம் விஷயத்தில் இதுதான் நிகழ்ந்திருக்கிறது, நிகழ்ந்து வருகின்றது. மதம் ஒரு அபின் என்ற வாக்கியத்தை நினைவுறுத்துகின்றது.

ஒரு முறை இணையத்தில் இஸ்லாம் பற்றி எழுதியிருந்த ஒருவர் இதெல்லாமே Reverse engineering ஆகத் தோன்றுகிறதே என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.உண்மையும் அதுதான் – கடவுளால் சொல்லப்பட்டது என்றொரு விஷயத்தை நம்பினால், கடவுள் பொய்யே சொல்லமாட்டார், தவறாக எதையும் எப்போதும் சொல்லமாட்டார் என்ற நம்பிக்கையில் நாம் கடவுளின் வார்த்தையாகக் கருதும் ஒவ்வொன்றிற்கும் விளக்கங்களைக் கொடுக்க ஆரம்பித்துவிடுகின்றோம். இஸ்லாம் விஷயத்தில் இதுவே நடக்கிறது. ஜிஹாத் இதற்கு நல்ல உதாரணம்.

***

ஜிஹாத் என்றால் முயற்சித்தல் என்றர்த்தப்படுத்துவது, அப்பட்டமான அரசியல் இஸ்லாத்தின் தாக்கமாகும். ‘புரட்சி’த்தலைவரும், புரட்சித் தலைவியும் செய்யும் செயல்கள் எல்லாம் புரட்சி என்று நம்புவது எப்படி ஒரு அரசியல் ரீதியான சொல்லாடலோ, நம்பிக்கையோ, புரட்டோ – அவ்வாறனதுதான் இப்படிப்பட்ட சொற் பிரயோகங்களும்.

அரசியல் தவிர்த்து வேறெங்கினும் இப்படிப்பட்ட மாறுபட்ட சொல்லாடல்களைக் காணமுடிகிறதென்றால் அது இராணுவத்திலும், பயங்கரவாத இயக்கங்களிலும்தான். உதாரணமாக படு பயங்கரமான ஒரு கொலைத்திட்டத்துக்கு பயங்கரவாதிகள் ‘பூ மலர்கிறது’ என்று பெயரிடுவர். வெறும் பெயரைப் பார்த்து – பெயரின் அர்த்தத்தைப் பார்த்து யூகித்தால் , நமது யூகம் தவறாகத்தான் போகும். ‘புன்னகைக்கும் புத்தர்’ என்றால் என்னவென்று இந்தியர்களாகிய நாம் அறிவோமல்லவா? அணுகுண்டு வெடித்ததை புத்தரின் புன்னகையாக நாம் காணலாம், எதிராளிக்குத் தானே அந்தப் புன்னகையின் விலை என்னவென்று தெரியும் – அது போலத்தான்.

இஸ்லாம் விஷயத்தில், திருக்குரானில் வரும் பதங்களோ அல்லது ஏனைய இஸ்லாமிய ஆவணங்களில் காணப்படும் பதங்களோ, வெறும் பதத்தை வைத்து மட்டும் பார்த்தால் எதிர்மறையான- முற்றிலும் மாறுபட்ட அர்த்தங்களைக் கொடுக்கக் கூடும்.
இதற்கு மூன்று காரணங்கள் – ஒன்று முகமதுவின் அரசியல் இஸ்லாம், இரண்டாவது இஸ்லாத்தின் தோற்றம் , மூன்றாவது பிற்காலத்தில் செய்யப்பட்ட ஆரம்பக்கால இஸ்லாத்தை வெள்ளையடிக்கும் முயற்சிகள். இவை குறித்து விரிவாக பேசுவதற்கு இந்தக் கட்டுரையை நான் எழுதவில்லை என்பதால் மேலோட்டமாக மட்டும் இவற்றை விவரித்து ஜிகாத் எப்படி தலித் விடுதலையோடு சம்பந்தப்பட்டதில்லை, அவ்வாறு சம்பந்தப்படுத்துவது எவ்வளவு பெரிய தவறு என்பதை மட்டும் விளக்க விழைகிறேன்.

***

அரசியல் இஸ்லாம்

அரசியல் இஸ்லாம் என்பது முகமதுவால் துவங்கப்பட்டது. முகமது என்பவர் தமக்கு கிட்டிய ஆன்மீக அனுபவங்களை வைத்து உலகை கறுப்பு வெள்ளையாகப் பிரித்தார்(அதாவது தம்மை நம்புவோர்கள் , தம்மை நம்பாதவர்கள் – பிற்காலத்தில் இதுவே முஸ்லிம்கள் , காபிர்கள் என்றானது).

இதில், தமக்கு அங்கீகாரம் கிட்டவேண்டும் என்பதற்காக முந்தய நபிமார்களின் வழியில் தாம் வருவதாக தெரிவித்தார், அப்போதைய சிந்தனாவாதிகள் மத்தியில் ஏற்பட்டிருந்த சில கருத்துக்களை தாம் உள்வாங்கி அதை கடவுளின் கருத்தாக முன்வைத்தார், அங்கீகாரம் வேண்டி சமூக ஒழுங்கீணங்களுக்கெதிராக பிரச்சாரம் செய்தார். இதன் நல்ல உதாரணம் – ஹிந்தாவுடன் அவருக்கு நிகழ்ந்த உரையாடல். அபூ சு·பியானின் மனைவியான ஹிந்தா, மக்கா நகரை முஸ்லிம் படை கைப்பற்றியவுடன் வேறு வழியின்றி முஸ்லிமாக மாற நேர்ந்தது. அப்போது முஸ்லிமாவதற்கு இந்திந்த உறுதிமொழிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முகமது சொல்வார். விபச்சாரம் செய்யக் கூடாது என்றவுடன் ஹிந்தா கேட்பார் – சுதந்திரமான எந்தப் பெண்ணாவது விபச்சாரம் செய்வாளா என்று. குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்றவுடன் – என் குழந்தைகளையெல்லாம்தான் நீங்கள் கொன்றுவிட்டீர்களே என்று முகமதுவிடம் வேதனையுடன் சொல்வார்(இப்படி அவர் சொல்லும்போது சஹாபாக்கள் (நபித்தோழர்கள்) எக்காளமாகச் சிரிப்பர்).

எப்படி இன்று தமிழ் தமிழ் என்று கூறிக்கொண்டு அரசியல்வாதிகள் அரசியல் செய்கிறார்களோ, எப்படி ஈழம், தமிழ், சுனாமி, இட ஒதுக்கீடு என்று பலவித பிரச்சினைகளும் அரசியல்வாதிகளால் சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றனவோ, அதே போன்று அன்றைய சமூகம் சந்தித்த பலவித பிரச்சினைகளும் முகமதால் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.

இவற்றிலும், பெரும்பான்மையானவை அன்றைய உயர்வர்க்கமாக(மத ரீதியில்) கருதப்பட்ட யூதர்களிடமிருந்து இரவல் பெற்றவையே. முகமது சிறுவயதிலிருந்தே வியாபார விஷயமாக அண்டைநாடுகளின் யூத செட்டில்மெண்டுகளுக்கு சென்று பார்த்துக் கேட்டது, முதல் மனைவி கதீஜா அவர்களின் கிறித்துவப் பிண்ணனி போன்றவை காரணமாக அவருக்கு யூத-கிறித்துவ கோட்பாடுகளின், சித்தாந்தங்களின், பிரச்சாரங்களின் பரிச்சியம் இருந்திருக்கும் என்று இன்றைய ஆய்வாளர்கள் யூகிக்கின்றனர்(இது சம்பந்தமாக விரிவாக அறிய நான் மொழிபெயர்த்த டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்டின் தொடர் கட்டுரைகளைப் பார்க்கலாம்.
முகமதுவின் தமது தலைமையை ஏற்றால், தலைமைப் பதவி, அனுபவிக்கும் சுகபோகங்கள் ஆகியவற்றை தொடரலாம். மறுத்தால், கொலை செய்யப்படுவர் – ஆட்சியதிகாரம் பறிபோகும் என்பதே மீண்டும் மீண்டும் முகமது சுற்றியிருந்தோருக்கு வலியுறுத்தியது. அன்றைய ஓமன் நாட்டு மன்னர் ஜா·பருக்கு முகமது எழுதிய கடிதம் இவ்வாறு மிரட்டுகிறது:

“If you two accept Islam, you will remain in command of your country; but if you refuse
my Call, you’ve got to remember that all your possessions are perishable. My horsemen will
appropriate your land, and my Prophethood will assume preponderance over your kingship.”

இன்னுமொரு உதாரணத்தை முகமதுவின் கடிதமொன்றில் பார்க்கலாம். அபிஸ்ஸினியாவின் மன்னர் நெகுஸ் அவர்களுக்கு முகமது எழுதிய கடிதம் இவ்வாறு சொல்கிறது:

“In the Name of Allah,the Most Beneficent, the Most Merciful.

From Muhammad the Messenger of Allபூh to Negus, king of Abyssinia (Ethiopia).

Peace be upon him who follows true guidance. Salutations, I entertain Allah’s praise, there is no god
but He, the Sovereign, the Holy, the Source of peace, the Giver of peace, the Guardian of faith, the
Preserver of safety. I bear witness that Jesus, the son of Mary, is the spirit of Allah and His Word
which He cast into Mary, the virgin, the good, the pure, so that she conceived Jesus. Allah created
him from His spirit and His breathing as He created Adam by His Hand. I call you to Allah Alone with
no associate and to His obedience and to follow me and to believe in that which came to me, for I am the Messenger of Allah. I invite you and your men to Allah, the Glorious, the All-Mighty. I hereby bear witness that I have communicated my message and advice. I invite you to listen and accept my advice. Peace be upon him who follows true guidance.”

இயேசு கிறிஸ்துவை தாம் ஏற்கிறோம் என்று நெகுசுக்கு தெரிவிக்கும் அதே வேளையில், எப்படி இயேசு ஒரு நபியோ அதே போன்றே தாமும் ஒரு நபி ஆதலாம் தன்னை ஏற்று, பின்பற்றி தம் வழியைப் பின்பற்றவேண்டும் என்று நெகுசை நிர்ப்பந்திப்பதைப் பாருங்கள் (இயேசுவையும் விட உயர்ந்த நபியாக முகமதுவை இஸ்லாம் சித்தரிக்கின்றது. உதாரணமாக இறுதித்தீர்ப்பு நாளில் எல்லா நபிகளையும் விட உயர்ந்த ஸ்தானம் முகமதுவுக்கு அல்லாஹ்வால் வழங்கப்படும். அவரே சிபாரிசு செய்யும் வல்லமை கொண்டவராகத் திகழ்வார். இந்த சிபாரிசின் மூலம் முகமதுவை ஏற்பவர்கள் எவ்வளவு கொடூரங்களைச் செய்திருந்தாலும், அதை அல்லாஹ் மன்னிப்பார். ஆனால், முகமதுவை ஏற்காதவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் முஸ்லிமாக இல்லாமல் போனதற்காக – முகமதுவின் மூலம் வெளிப்பட்ட ஏக இறைவனின் கட்டளைகளை ஏற்காது போனதற்காக நரகத்தீயில் வாட்டப்படுவர் – தவித்த வாய்க்கு தண்ணீர் கூட அங்கு தரப்படமாட்டாது- கொதிக்கும் எரிக்குழம்பே வாயில் ஊற்றப்படும் என்று தெரிவிக்கின்றது இஸ்லாம்).

மற்ற மன்னர்களுக்கெல்லாம் கூட முகமது எழுதிய கடிதங்களில் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படும் விஷயம்”Accept Islam as your religion so that you may live in security..embarace islam and allah will give you double reward ” என்பதாகும். வேறு வழியின்றியே மற்றவர்கள் முகமதுவைப் பின்பற்றுவோராயினர். பின்பற்றுவோரென்றால், இன்றைய இஸ்லாமியர்களை நாம் நினைவு கூற வேண்டாம். அன்று, முகமதுவைப் பின்பற்றுவோரென்றால், முகமதுவின் ஆளுமைக்குக் கீழ்ப்படிவது, கப்பம் கட்டுவது, அவர் அனுப்புகிறவர்களுக்கு சாப்படு போட்டு உடைகள் தருவது, பெண்களை அடிமைகளாக அனுப்பி வைப்பது (நெகுஸ் இதைத்தான் செய்தார் – மதம் மாறுவதற்க்குப் பதிலாக – அவர் அனுப்பிய இரண்டு கிறித்துவப் பெண்களுள் ஒருவரான மரியம்தான் இப்ராஹீம் என்ற ஆண்மகவை முகமதுவுக்கு பெற்றுத் தந்தார் – ஆண் குழந்தை வேண்டிய , “நீங்கள் வேண்டுவதெல்லாம் ஆண்குழந்தைகள் ஆனால் அல்லாஹ்வுக்கோ பெண் குழந்தைகள் உண்டு என சொல்கிறீர்களே” என்று திருக்குரான் மூலமாக முகமது அபிலாஷித்த ஆண்குழந்தை, இந்த அடிமைப்பெண் மூலம்தான் பிறந்தது. கொஞ்ச காலத்திலேயே இறந்தும் விட்டது)

முகமதுவின் ஜிகாத் எத்தகையது என்று விவரிக்கும் மேலே கண்ட கடிதங்கள் எல்லாம் இன்று இணையத்தில் தாராளமாகக் கிடைக்கின்றன. பல இஸ்லாமிய தளங்கள் இவற்றை வலையேற்றியிருக்கின்றன. Letters of Mohammed என்று கூகிளிட்டால் நிறையக் கிடைக்கும். இல்லையேல் வகாபிக்கள் விற்கும் ரஹீக்குல் மக்தூம் போன்ற நூல்களிலும் இவற்றைக் காணலாம்.

***

முகமதுவுக்குப் பின் 200 வருடங்கள் கழித்து, பாரசீகத்தில்தான் இஸ்லாம் ஒரு மதமாக உருவெடுத்தது. முஸ்லிம்கள் என்கிற பதமே அரபிக்களிடம் ஆரம்பத்தில் இருந்திருக்கவில்லை – திருக்குரானில் இருப்பதெல்லாம் நம்பிக்கையாளர் பதம் மட்டும்தான். அன்றைய நம்பிக்கையாளர் முகமதுவை ஒரு இறைத்தூதர் என்று நம்பி, அவருக்கு கீழ்ப்படிந்து ஜகாத் எனும் வரியை கொடுக்கும் ஒரு குழு-அங்கத்தினர் அவ்வளவே.

முகமது அவர்கள் மறையும் வரை அது ஒரு குழுவாகவே இருந்தது. முகமதுவின் மறைவுக்குப் பின்னர், ஆளுக்காள் தாமும் ஒரு நபி என்று போர்க்கொடியை உயர்த்தவே முகமதின் மாமனார்களால் ஓரளவுக்கு இது ஒரு ஆன்மீகக்கோட்பாடாக நிறுவனப்படுத்தப்பட்டது(அபூபக்கர்தாம் நிறுவனப்படுத்தினார் என்று சொல்லும் ஆயிஷா அவர்களின் ஹதீது ஒன்று உள்ளது இங்கே கவனிக்கத் தக்கது). பிறகு, முகமது மறைந்து நெடுங்காலம் ஆகிய பின்னர், பாரசீகத்தில்தான் இது ஒரு முழுமையான மதமாக உருவெடுத்தது. இன்று இஸ்லாத்தின் இரண்டாவது தூணாகக் கருதப்படும் ஹதீதுகள் பாரசீகத்தில்தான் தொகுக்கப்பட்டன. ஹதீதுகள் இல்லாத இஸ்லாத்தை கற்பனை செய்துபாருங்கள் – திருக்குரான் மட்டுமே எஞ்சியிருக்கும். திருக்குரானில் ஏராளமான குழப்பங்கள், இடைவெளிகள் இருக்கின்றன. இதையெல்லாம் ஓரளவுக்கு நிறைவு செய்து, பூசி மெழுக, புரிதலை ஏற்படுத்த ஏதுவாக இருப்பது ஹதீதுகள் தாம். இந்த ஹதீதுகள் மிகவும் பிற்காலத்தில் தொகுத்தளிக்கப்பட்டன.
வெறும் ஐம்பது வருடங்களிலேயே பலவிதமான குழப்பங்கள் அடியார்களை ஆட்கொள்வதை ஒவ்வொரு ஆன்மீகக்குழுவிலும் காண்கிறோம். இத்தனைக்கும் இந்தியா போன்று ஆன்மீக பாரம்பர்யம் நெடிது வளர்ந்திருக்கும் நாடுகளிலேயே, சமுதாயங்களிலேயே இந்த நிலை என்றால் வஹி என்ற ஒரே தூணை மையமாக வைத்து எழுப்பப்பட்ட முகமதுவின் இறைத்தன்மை பற்றி எவ்வித குழப்பங்கள் எழுந்திருக்கும் என்பதை படிப்பவர்களின் கற்பனைக்கே விட்டு விடுகின்றேன்.

இஸ்லாம் என்ற வன்-கோட்பாட்டால் வேறு வழியின்றி ஆட்கொள்ளப்பட்ட, அரபிகளைவிட கலாச்சாரத்தில் உயர்ந்த பாரசீகர்கள், அப்பட்டமான கொடூர வார்த்தைகள், செயல்களையெல்லாம் கண்டு (தமது உயர்ந்த கலாச்சாரப்பிண்ணனியின் காரணமாக) வெட்கி இவற்றை மென்மைப்படுத்தி, அழகுபடுத்தி பதிந்து வைத்தார்கள். ஆயினும், சுன்னாஹ் போன்ற பாகன் அரபிகளின் வழக்கங்கள் இஸ்லாத்திலும் பின்பற்றப்பட்டதால், உண்மையும் இந்த ஜோடனைகளையும் மீறி நின்றது.

இதன் காரணமாகவே, ஜிகாத் என்ற பதம் திருக்குரானில் வருமிடங்களிலெல்லாம் வன்முறையும் சேர்ந்தே வருகிறது ஹதீதுகளை சற்றே உற்று நோக்கினால், அழகுபடுத்தப்பட்ட சொல்லாடல்களையும் மீறி உண்மையான அர்த்தம் புலப்படுவதைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு இஸ்லாமிய வரலாற்றுப் பதிவர் புகாரி அவர்கள் தொகுத்த ஹதீதுகளில் ஜிகாத் பற்றி வருவதைப் பார்ப்போம்:

“The Prophet said, “Whoever believes in Allah and His Apostle, offer prayer perfectly and fasts the month of Ramadan, will rightfully be granted Paradise by Allah, no matter whether he fights in Allah’s Cause or remains in the land where he is born.” The people said, “O Allah’s Apostle ! Shall we acquaint the people with the is good news?” He said, ” Paradise has one-hundred grades which Allah has reserved for the Mujahidin who fight in His Cause, and the distance between each of two grades is like the distance between the Heaven and the Earth. So, when you ask Allah (for something), ask for Al-firdaus which is the best and highest part of Paradise. ” (i.e. The sub-narrator added, “I think the Prophet also said, ‘Above it (i.e. Al-Firdaus) is the Throne of Beneficent (i.e. Allah), and from it originate the rivers of Paradise.”)”

அல்லாஹ்வின் தூதர் முகமது அவர்களின் மேற்கண்ட திருவாக்கியத்தில், ஆன்மீக ‘முயற்சித்தலை’விட , ஆயுதம் தாங்கிய முயற்சித்தல் பெருமையாக, உயர்வாக சொல்லப்பட்டுள்ளதை இங்கே கவனிக்கவேண்டும்.

மற்றொரு ஹதீது இவ்வாறு தெரிவிக்கின்றது:

“Narrated Abu Said Al-Khudri:

Somebody asked, “O Allah’s Apostle! Who is the best among the people?” Allah’s Apostle replied “A believer who strives his utmost in Allah’s Cause with his life and property.” They asked, “Who is next?” He replied, “A believer who stays in one of the mountain paths worshipping Allah and leaving the people secure from his mischief.” ”

உயிரையும், சொத்துக்களையும் கொண்டு ‘முயற்சித்தல்'(ஜிகாது) , ஆன்மீக ரீதியான முயற்சித்தலைவிட உயர்வாக இங்கே சொல்லப்படுகிறது. முதலில் வரும் வாக்கியத்தை மட்டும் வைத்துப் பார்த்தால், இது எதோ உடல்,பொருள், ஆவி என்று அனைத்தையும் கடவுளின் பணியில் செலவிடுவது என்று ஆன்மீக ரீதியான விளக்கமாகப் படும். ஆனால், இரண்டாவது வரியைப் படிக்கும்போதுதான் நாம் முந்தய வரியைக் கண்டு கற்பனை செய்துகொள்வது இரண்டாவது வரியில் சொல்லப்பட்டுள்ளது தெரியவருகிறது. அப்படியென்றால், முதலில் சொல்லப்பட்டுள்ள உயிரையும் பொருளையும் ஜிகாதில் செலவிடுவது என்பது இன்று நடக்கிற ஜிகாதுதான் – குண்டு வெடிப்புகளில் ஈடுபட்டு உயிரைக் கொடுப்பது, அப்படி ஈடுபடுபவர்களுக்கு பண உதவி செய்வது – இதுதான் உண்மையில் அல்லாஹ்வின் தூதர் குறிப்பிடுவது என்பது புரிபடுகிறது.

இதிலும் குழப்பமிருந்தால், கீழே காண்பது போன்ற எண்ணற்ற ஹதீதுகள் காணப்படுகின்றன:

A man came to Allah’s Apostle and said, “Instruct me as to such a deed as equals Jihad (in reward).” He replied, “I do not find such a deed.” Then he added, “Can you, while the Muslim fighter is in the battle-field, enter your mosque to perform prayers without cease and fast and never break your fast?” The man said, “But who can do that?” Abu- Huraira added, “The Mujahid ( i.e. Muslim fighter) is rewarded even for the footsteps of his horse while it wanders bout (for grazing) tied in a long rope.”

இங்கே ஜிகாதி என்று யாரைக் குறிப்பிட்டுள்ளார் முகமது பாருங்கள், மசூதிக்குச் சென்று ஆன்மீக ரீதியாக ஜிகாது செய்யும் ஒரு முஸ்லிமிலிருந்து, குதிரை வீரனான ஒரு ஜிகாதி பிரித்துப் பேசப்படுவது மட்டுமல்ல, குதிரை வீரனான அந்த ஜிகாதிக்கு ஈடு இணை யாரும் கிடையாது என்று தெளிவாக முகமது தெரிவிக்கின்றார்.

இந்த ஹதீது-வாக்கியம் முகமதின் ஜிகாது என்றால் என்ன என்பதைத் தெளிவாக்கி நமது பிற்காலத்தய கட்டுக்கதைகளுக்கும் சால்ஜாப்புகளுக்கும் முடிவு கட்டுகிறது:

“I have been made victorious with terror (cast in the hearts of the enemy), and while I was sleeping, the keys of the treasures of the world were brought to me and put in my hand.” [Sahih Bukhari 4:52:220]

ஆக, முகமது தமது மதத்தை ஸ்தாபித்ததே தீவிரவாதத்தினாலும், அச்சுறுத்தலாலும், பின்பற்றி ஜிகாது புரிந்தோருக்கு கொள்ளையிட்ட பணத்தை வாரி வழங்கியதாலும்தான் என்பது மேலே கண்ட ஹதீதிலிருந்து தெளிவாகிறது. இதைத் தவிர, மற்ற நபிகளுக்கு இல்லாத விசேஷங்களாக தமக்கு முகமது சொல்லிக் கொண்ட விஷயங்களிலும் இப்படி மக்கள் மனதில் பயத்தை உண்டுசெய்யும் விசேஷ நபித்துவம் இருப்பதாகச் சொல்லியுள்ளார். சிரியா, யேமன் போன்ற நாடுகளின் பொக்கிஷங்கள் முஸ்லிம்களுக்கு(கொள்ளையின் மூலம்) கிட்டுவதாகச் சொல்லி தமது ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை ஊட்டும் ஹதீதுகளும் உண்டு.

இன்று நாம் ஒரு ஆன்மீகவாதியென்றால் இப்படித்தான் இருந்திருக்கக் கூடும் என்று கற்பனை செய்துகொள்கிறோம். அதன் விளைவாகவே ஜிகாது என்றால், ஆன்மீக ரீதியான முயற்சித்தலையே அந்த நல்ல மகான், மாமனிதர், உயர்ந்த கடவுளின் தூதர் சொல்லியிருப்பார் என்று சமாதானம் சொல்லிக் கொள்கிறோம். ஆனால், இந்த ஹதீதுகளின் மூலம் வெளிப்படும் உண்மையோ நேர்மாறாக இருக்கிறது.

மேலே கண்ட, மற்றும் மேலும் பல ஹதீதுகளை இங்கே காணலாம்:

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/052.sbt.html

***

ஹதீதுகளைத் தொகுக்கும்போது, தொகுப்பாளர்கள் எவ்வளவு ஆதாரபூர்வ (இஸ்லாமியர்கள் சொல்லுவது போன்று பலமான ஹதீஸ்) திருவாக்கியமாக இருந்தாலும், அந்த செயலை முகமது செய்திருக்க மாட்டார், அந்த சொல்லை முகமது சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்றால் , அந்த ஹதீதை தொகுப்பாளர் நிராகரித்துவிடலாம்.

இந்த ஷரத்து இருந்ததால், இஸ்லாமிய அரபிகளைவிட உயர்வானதொரு பாரம்பர்யத்தில் இருந்து வந்து ஆக்கிரமிப்பின் காரணமாகவும் அச்சுறுத்தலின் காரணமாகவும் மதம்மாறிய, உயர் கலாச்சாரத்திலிருந்து வந்த தொகுப்பாளர்களுக்கு கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான பல ஹதீதுகளை தொகுக்கும் போது விட ஏதுவாக இருந்தது.

ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் என்று நம்பும் போது, அவர் கீழான நோக்கத்தோடு செயல்களில் ஈடுபட்டிருக்கமாட்டார் என்ற முன்முடிவு ஏற்பட்டுவிடுகிறது. மேலும், அரபிகளிடம் வழக்கமாக இருந்த பல அநாகரிக செயல்கள் பாரசீகத்தில் வாழ்ந்தோர்களால் தாழ்வாகப் பார்க்கப்பட்டிருக்கக் கூடும்.

இதனாலேயே, இஸ்லாத்தின் ஆரம்ப கால ஆவணங்கள் முகமது பற்றிய, இன்று நாம் கண்ணியக் குறைவாகக் கருதக்கூடிய பலதகவல்களைக் கொண்டிருக்கின்றன. காலமாக ஆக, அவற்றில் socially incorrect விஷயங்கள் filter செய்யப்பட்டு, ஒரு சூ·பி போன்று தோற்றமளிக்கக் கூடிய முகமது உருவாக்கப் படுகிறார். இங்கே மீண்டும் சுன்னாஹ்வைக் குறிப்பிட வேண்டும். சுன்னாஹ் போன்ற கோட்பாடுகள் இஸ்லாத்தின் அங்கமாக ஆகிவிட்ட காரணத்தினால், இவர்கள் என்னதான் முயன்றும் முகமதுவை முழுமையாக ஜோடனை செய்ய முடியவில்லை. மேலும், முகமதின் பலவிதமான கொடூரங்களை ஆன்மீக ரீதியாக தேவையான செயல்பாடு என்று இவர்கள் கருதினார்கள். உதாரணமாக முகமதுவுக்கு கடவுள் தந்த ஆறு விசேஷங்களில் தீவிரவாதம் மற்றும் கொள்ளையிடுதலும் அடங்கும் என்று ஒரு ஹதீது குறிப்பிடுகிறது:

“Abu Huraira reported that the Messenger of Allah (may peace be upon him) said: I have been given superiority over the other prophets in six respects: I have been given words which are concise but comprehensive in meaning; I have been helped by terror (in the hearts of enemies): spoils have been made lawful to me: the earth has been made for me clean and a place of worship; I have been sent to all mankind and the line of prophets is closed with me.”

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/muslim/004.smt.html#004.1062

முகமதுவின் வஹியைக் கண்டு நம்பி முதலில் சேர்ந்த கூட்டம், பிறகு அவரது செயல்பாடுகள் அனைத்தும் கடவுளின் அங்கீகாரம் பெற்றவை என்று நம்பியது. இந்த நம்பிக்கை முழுமையாக ஏற்படாதவர்கள் கூட பயத்தால் வெளியே பேசவில்லை( முகமதுவுக்கு வஹி இறங்குவதை அவ்வப்போது எழுதியவரே அது புரட்டு என்று அவநம்பிக்கை கொண்டு இஸ்லாத்தை விட்டு வெளியேறி கா·பிர்களுடன் வசித்து வந்தார். பிறகு மக்கா நகரை முஸ்லிம் படைகள் சூழ்ந்து கொண்ட நேரத்தில் தமது அவநம்பிக்கை நம்பிக்கையாக மாறினால் மட்டுமே கழுத்து தப்பும் என்ற நிலையில் மீண்டும் ஈமான் அவரின் மேல் வந்திறங்கியது). பயத்தால் மட்டுமல்ல, இந்த நம்பிக்கை, வாய் மூடியிருப்பது போன்றவற்றின் மூலம் ஏராளமான செல்வமும், பெண்களும், அடிமைகளும் கிடைக்கும் என்பதால் இன்னும் ஒரு பெரும் கூட்டம் இவற்றை நம்புவதாக காட்டிக் கொண்டது.

முதலில் பயத்தாலும் ஆசையாலும் நம்ப ஆரம்பித்த ‘மு·மீன்கள்(நம்பிக்கையாளர்கள்)’ பிற்காலத்தில் இக்காரணங்கள் இல்லாதபோதும் கூட இத்தனை பேர் பின்பற்றியிருப்பதால் முகமது உரைத்தவையெல்லாம் கடவுளின் வார்த்தைகளே என்று நம்ப ஆரம்பித்தனர். அந்த நம்பிக்கைக்கு ஏதுவாக முன்பிருந்த கொடூரச் செயல்களையெல்லாம் அழகிய வார்த்தைகளாலும், சிறந்த வாதங்களாலும் ஜோடனை செய்து தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ள ஆரம்பித்தனர்.

இன்றும் கூட நம்பிக்கையாளர்கள் செப்-9 யூதர்கள் செய்தது, லண்டனில் தற்போது பிடிபட்ட விமான-குண்டுவெடிப்புத் திட்டம் இஸ்ரேலைக் காக்க செய்யப்பட்ட ஜோடனை, யூத ஹோலோகாஸ்டே நடைபெறவில்லை என்றெல்லாம் சுய-ஏமாற்று வாதங்களில் அமிழ்ந்து கிடப்பதை நேரிலேயே பார்க்கிறோம். உலகம் முற்றும் அறிந்த ஆதாரபூர்வமான விஷயங்களில் கூட இப்படி இருள் வந்து கவிந்து கொள்ளும்போது, நம்பிக்கையாளர்கள் தமது பாரம்பர்ய தீவிரவாதச் செயல்களைக் கண்டு கண்ணை மூடிக் கொள்வதில் வியப்பொன்றுமில்லை.

எளிமையாக புரியவைக்க வேண்டுமென்றால், உதாரணத்தைச் சொல்லலாம். ஒருவர் கடவுளின் தூதர், அவரால் தேர்வு செய்யப்பட்டவர் என்று நாம் முழுமையாக நம்பினால், அவரது ஒவ்வொரு செயல்களையும் நியாயப்படுத்த, அவற்றுக்குப் பின்னே கடவுளின் மகத்தான திட்டங்களைக் காண விழைவோம். இன்னும் இரண்டு நூற்றாண்டுகள் கழித்து அவரை மிகப்பெரிய மாமனிதராக சித்தரித்துவிடவும் வாய்ப்பிருக்கிறது.

பல கடவுளின் மனிதர்கள் விஷயத்தில் இது போன்று நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும், முகமது விஷயத்தில் முழுமையான வெள்ளையடித்தல் நடைபெறாததால், எல்லா சால்ஜாப்புக்களையும் மீறி இன்று உண்மை காண்போரின் முன் தெள்ளத் தெளிவாக வீறு நடைபோடுகிறது.

முகமது வாழ்வில் ஜிகாத் எப்படி நிகழ்ந்துள்ளது என்பதை அடுத்துப் பார்ப்போம்.

***


முகமது அவர்களின் வாழ்வில் ஜிஹாத்

முகமது அவர்களின் வாழ்வில் ஜிஹாத் மூன்று கட்டமாக கடைப்பிடிக்கப் பட்டது. அவையாவன:

I.முதற்கட்டம் – பொறுமையாக அனைத்து துன்பங்களையும் சகித்துக் கொள்வது- இந்த ஜிஹாத் அவருக்கு அதிக ஆதரவில்லாத நிலையில் கடைப்பிடிக்கப்பட்டது. இக்கட்டத்தில் முகமது ஒரு ரகசிய ஆன்மீகக் குழுவின் தலைவராக இருந்தார். அவருக்கு ஏற்படும் இறை-ஆவேச நிலையைக் கண்டு அது கடவுள் அவர்மீது இறங்குவது என்று நம்பிய ஒருசிலர் தங்களுக்குள்ளே ஒரு இடத்தில் கூடி அவரது கருத்துக்களை செவிமடுக்கலானார்கள். இவர்களை மக்கத்து கா·பிர்கள்(கா·பிர்கள் – முகமது அவர்களை கடவுளின் தூதர் என்று ஏற்காத மக்கத்தவர்கள், இவர்களுள் அல்லாஹ்வே ஏக இறைவன் என்று நம்பியோரும் அடங்கும்- ஆனால், இந்த ஏக இறைகோட்பாட்டைப் பின்பற்றி ஆனால் முகமது ஒரு இறைத்தூதர் என்பதை நம்பாதவர்கள் கா·பிர்கள் என்றே அழைக்கப்பட்டனர் முகமதுவை இறைத்தூதர் என்று நம்பிய மு·மீன்களால்). இந்தக் கட்டத்தில், மற்றவர்களை ஆன்மீக ரீதியில் அச்சுறுத்துவது, முகமதுவின் வஹீ இறங்கலைக்கிண்டலடிப்பவர்களைக் கடவுள் திட்டுவது(” இழித்துரைப்பவனுக்கும் தூஷிப்பவனுக்கும் கேடுதான்” – திருக்குரானில் அல்லாஹ் 104:1) போன்றவை நிகழ்ந்தன. இந்த ஜிஹாத் முகமதையும் மற்றவர்களையும் கா·பிர்களை, அவர்களின் கிண்டல்களை சகித்துக் கொள்ளச் சொன்னது. இந்தக் கட்டத்தில் அல்லாஹ் முஸ்லிம்களை கா·பிர்களுடன் சண்டை போடவோ, வெளிப்படையாக எதிர்க்கவோ, வன்முறையில் இறங்கவோ அனுமதி அளிக்கவில்லை.

II.இரண்டாவது கட்டம் – கா·பிர்களை எதிர்ப்பது, எதிர்ப்பைத் தெரிவிப்பது, தொந்தரவு கொடுப்பது – இந்த ஜிஹாத் தேவையான அளவு ஆட்கள் சேர்ந்தவுடன் துவங்கியது. இந்நிலையில் முகமதுவுக்கான தமது ஆதரவை வெளிப்படையாகத் தெரிவிப்பது, முகமதுதான் இறைத்தூதர் என்று மற்றவர்களுக்கு சொல்வது, அதை ஒப்புக்கொள்ளாதவர்களுடன் சொற்போரிடுவது, கா·பிர்கள் முகமதை ஏற்க மறுப்பதால் அவர்களுக்கு தொந்தரவு கொடுப்பது என்று இவையாவும் அடங்கும். முதலில் முகமதுவிடம் கடவுள் வந்து பேசுவதை நம்பாதவர்கள், அதைக் கிண்டல் செய்தவர்கள், குறை கூறியவர்கள், தூஷித்தவர்கள் தனித்தனியாக மர்மமான முறையில் கொலை செய்யப் பட்டார்கள். இஸ்லாமிய வரலாற்றில் பிற்காலத்தில் முகமதின் ஆதரவாளர்கள் இரவு நேரத்தில் வீடு புகுந்து ரகசியமாக கொலை செய்ததையெல்லாம் தெளிவாக பதிந்து வைத்துள்ளனர். ஆனால், ஆரம்பக்காலத்தில் உதைபா போன்றவர்கள் கொலை செய்யப்பட்டதெல்லாம் கடவுளின் செயல் என்று நம்புகின்றனர். இக்கொலைகளுக்குப் பிறகு, இக்கொலைகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் தம்மை நம்பிய கூட்டத்தாருக்கு வருமானத்திற்காகவும், மக்கத்து குரைஷிகளுக்குத் தொந்தரவு கொடுத்து அவர்களை முகமதுதான் இறைத்தூதர் என்று நம்பவைப்பதன் ஒரு அங்கமாகவும் மக்கத்து கா·பிர்களின்(குரைஷிக்களின்) பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களைக் கொள்ளையடிக்க ஆரம்பித்தார் முகமது தம்மைச் சுற்றிச் சேர்ந்த ஒரு கூட்டத்துடன்(கஸ்வா – ghazwa). இதன் மூலம் மக்கத்து கா·பிர்கள் ஏராளமான சிரமத்துக்காளானது மட்டுமல்ல, முகமதால் தம்மைச் சுற்றிச் சேர்ந்த கூட்டத்துக்கு பொருளீட்டித்தரவும், கூட்டத்தை விரிவு படுத்தவும் இந்த கஸ்வாக்கள் துணை புரிந்தன. இந்த இரண்டாவது கட்டத்தில் முஸ்லிம்கள் போரிடுவதை அல்லாஹ் அனுமதிக்கிறார்( உங்களை எதிர்ப்பவர்களுடன் போர் புரியுங்கள் – திருக்குரான் வசனம் 2:190). ஏனெனில் இப்போது முஸ்லிம்களின் எண்ணிக்கை கூடிவிட்டது, அவர்களது பொருள் தேவைகளும் உயர்ந்துள்ளது. இங்கே கவனிக்க வேண்டிய ஒரு அம்சம், முஸ்லிம்களை எதிர்ப்பவர்கள் என்றால் இஸ்லாத்துக்கு வளைந்து கொடுக்காதவர்கள் – உதாரணமாக ஒரு மசூதிக்கு முன்னால் மேளதாளத்துடன் போகும் கா·பிர்கள். இது முஸ்லிம்களுக்கெதிரான போராக கருதப்படுகிறது .கடவுளின் உண்மையான மார்க்கத்துக்கு புறம்பானவற்றை பகிரங்கமாக அறிவித்தல் – அல்லாஹ் தமது திருக்குரான் மூலமும் இறைத்தூதர் மூலமும் அருளிய ஷரீயத்து சட்டத்தை முஸ்லிம்கள் பின்பற்ற அனுமதிக்காததும் முஸ்லிம்களுக்கெதிரான போர்தான் – மதுரை இமாம் அலி இதனால்தான் இந்தியாவின் மீதும், தமிழர்களின் மீதும் ஜிகாத் தொடுத்தான்.

III.மூன்றாவது கட்டம் – வெளிப்படையான போர் – கஸ்வாக்களினால் கிடைக்கும் பொருளைக் கண்டு ஆசையுற்ற பலர் வந்து சேர்ந்தவுடன், அடுத்த கட்டமாக பெண்கள், நிலப்பரப்பு, ஆட்சியதிகாரம் ஆகியவை வேண்டி நடத்தப்பட்ட ஜிகாத் இது.இங்கே பெண்கள் என்று குறிப்பிடுவதற்கு குறிப்பான காரணம் ஒன்று உளது. ஜிகாதில் ஈடுபடும் முஸ்லிம்களுக்கு மிக முக்கியமான தூண்டுகோலாக மாற்றுமதப் பெண்களின் அழகு இருந்தது. உதாரணமாக தையி·ப் போரில் ஈடுபட்ட உயய்னா என்கிற ஜிகாதியின் கூற்று ஹதீதுகளில் காணக்கிடைக்கிறது. இந்த ஜிகாதில் தாம் ஈடுபடுவதற்கு காரணம் தையி·பின் பெண்களை தாம் புணர்ந்து அவர்கள் மூலம் குழந்தைகள் பெறவிரும்புவதுதான் என்கிறான் இந்த ஜிகாதி. இந்த மூன்றாவது கட்டத்தில் ஜிகாத் என்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகிறது. இந்த மூன்றாவது கட்ட ஜிகாதில் கூட அநியாயம் புரிபவர்கள் என்பதற்கு திருக்குரான் கொடுக்கும் விளக்கமானது அவர்கள் முகமதுவுக்கு கீழ்ப்படியாதவர்கள் என்பதாகத்தான் இருக்கின்றது, முகமதுவுக்கு கீழ்ப்படியாதவர்களிடம் போரிடுவதையும் அவர்களது நிலம், பெண்கள், குழந்தைகள் ஆகியவற்றை கைப்பற்றுவதும் கடமையாக்கப்பட்டுள்ளன(” உண்மையான மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும் வரை போர் புரியுங்கள்” – திருக்குரான் வசனம் ). முஸ்லிமல்லாதவர்களுடன் செய்துகொள்ளும் உடன்படிக்கைகள் செல்லாது என்று கடவுள் முஸ்லிம்களுக்கு அறிவிக்கிறார். திடீர் திடீரென்று சம்பந்தமே இல்லாமல் கூட முகமது அப்பாவி யூதர்களைத் தாக்கி அவர்களது செல்வங்களையும் பெண்களையும் கைப்பற்றிக் கொண்டு நிராயுதபானியான ஆண்கள் அனைவரையும் கொன்று விடுவதை இந்தக் கட்டத்தில் பார்க்க முடிகிறது.

உதாரணமாக தமது மனைவி உம்மு சலமாவின் வீட்டில் முகமது குளித்துக் கொண்டிருந்தபோது ஜிப்ரீல் எனும் தேவ-ஆவி அவரிடம் வந்து பக்கத்தில் இருந்த பனு குரைழா யூதர்களைத் தாக்கச் சொல்லி தூண்டுகிறது. தாம் முன்னே பல தேவ-ஆவிகளுடன் சென்று அவர்களின் கோட்டைகளை அசைத்து பலவீனமாக்கி, யூதர்களின் உள்ளத்தில் திகிலை உண்டு செய்யப் போவதாகவும் ஆதலால் உடனடியாக முகமது தமது அடியார்களுடன் அந்த யூதக்குழுவை தாக்கவேண்டும் என்றும் கட்டளையிடுகிறது. பனு குரழா சாதி யூதர்கள் வேறெந்த தவறும் செய்யவில்லை, எவ்வித அநியாயமும் செய்ததாக முகமது நம்பவில்லை. தம்மிடம் அடிக்கடி வருகிற தேவ-ஆவியானவர் இடுகிற கட்டளையை(அல்லது அப்படியான முகமதின் நம்பிக்கை) மட்டுமே அடிப்படையாக வைத்து தாக்குதல் தொடுக்கிறார். முகமதுவின் வாழ்க்கை வரலாற்றை ஆதரபூர்வமாக விளக்கும் ரஹீக் இங்ஙணம் குறிப்பிடுகிறது:
“Archangel Gabriel (Peace be upon him) on the very day the Messenger of Allah (Peace be upon him) came back to Madinah after the previous battle, and while he was washing in Umm Salama’s house, visited him asking that he should unsheathe his sword and head for the habitation of the seditious Banu Quraiza and fight them. Gabriel noted that he with a procession of angels would go ahead to shake their forts and cast fear in their hearts.”

இதனைத் தொடர்ந்து, தமது அடியார்களை தொழுவதற்குக் கூட முகமது அனுமதிக்கவில்லை. முகமது தலைமையில் ஜிகாதிகளின் படை உடனடியாக விரைந்து பனு குரைழாவினரை தாக்குகின்றது. இப்போரின் மூலம் பிடிக்கப்பட்ட யூதப்பெண்களையும் குழந்தைகளையும் நஜ்த் நகரில் ஏலத்துக்கு விட்டு விற்றுவிட்டு குதிரைகளையும், ராணுவ தளவாடங்களையும் முகமது பெற்றுக்கொண்டார். அழகிய ரைஹானா எனும் யூதப்பெண்ணை முகமது தமக்கென எடுத்துக் கொண்டார். ( இப்பெண் முஸ்லிமாக மதம்மாறவில்லை என்பதால் அடிமைப்பெண்ணாகவே முகமதின் அந்தப்புரத்தில் இருந்து இறந்துபோனார் என்கின்றனர். மதம்மாறாத காரணத்தினால் அவரை மனைவியாக ஏற்கவில்லை முகமது. ) மற்றபடி வளர்ந்த ஆண்களை குழிவெட்டி அமரவைத்து அலியும் ஏனையோரும் கழுத்தை வெட்டிக் கொலை செய்தனர். இதை முகமது ஆயிஷா போன்றாவர்கள், எதோ ஆடுவெட்டுவதைப் பார்ப்பது போன்று பார்த்துக் கொண்டிருந்தனர். ஆயிஷாவின் உள்ளம் இங்கே குறுகுறுத்தது என்பதைக் குறிப்பிட வேண்டும். ஆனால் முகமதுவுக்கோ எவ்வித குற்றவுணர்வும் ஏற்படவில்லை. இத்தனைக்கும் இந்த யூதர்கள் முகமதுவிடம் சரணடைந்தவர்கள்(இதற்கு முன்னால் இப்படியொரு யூதக்குழு சரணடைந்தவுடன் அவர்களை கொல்லாமல் விட்டிருந்தார் அவர். அந்த நம்பிக்கையில் சரணடைந்தார்கள் அந்த யூதர்கள்).

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய ஜிகாத்களைப் பார்த்தோமேயானல் இந்த மூன்று கட்டங்கள் இருப்பது தெரிய வரும். முதலில் சிறு ரகசிய குழுவாக இயங்கும் ஜிகாத், சுயபச்சாதாபத்தில் உழலும் – தாம் உண்மையான கடவுளின் உண்மையான கட்டளைகளை பின்பற்றுவதால் மற்றவர்கள் துன்புறுத்துகிறார்கள் என்று புலம்பும், எதிர்க்க வழியில்லாததால் அந்தத் துன்பத்தை ஏற்றுக் கொள்ளும், அவர்களெல்லாம் நாசமாய்த்தான் போவார்கள் என்று சபிக்கும்.

கொஞ்சம் ஆள் சேர்ந்தவுடன், தமக்கெதிரான சமூகத்துக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பிக்கும். வெளிப்படையாக உண்மையான இஸ்லாத்தைப் பின்பற்றாததால்தாம் தான் இவ்வன்செயல்களில் ஈடுபடுகிறோம் என்று சொல்லும். இவ்வாறு தமது வன்முறையை நியாயப்படுத்திக் கொள்ளும். தமிழக போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலி, ஷரீயத்துச் சட்டங்களை இந்தியா அமல்படுத்தவில்லை என்பதால் தான் தாம் குண்டு வைக்க நேர்ந்தது என்று சொல்லியிருப்பதை இங்கு நினைவுறவேண்டும். ஏறத்தாழ, இன்று இந்தியாவெங்கும் நிகழும் ஜிஹாத் இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தது.

மூன்றாவது கட்டமாக வெளிப்படையான போரை வளர்ந்த ஒரு இஸ்லாமியக் கூட்டம் முஸ்லிமல்லாதவர்கள் மீதோ அல்லது தாம் உண்மையான முஸ்லிமாகக் கருதாதவர்களின் மீதோ நிகழ்த்தும். விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் மீது சுற்றியிருந்த இஸ்லாமிய அரசுகள் தமது ஷியா ஷீன்னி வித்தியாசத்தையும் மீறி போர் தொடுத்தது இந்த வகையைச் சேர்ந்தது.

இங்கே திரு.ரசூல் அவர்கள் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த மூன்று கட்டங்களில் எங்குமே அநீதிக்கெதிரான புரட்சி நடக்கவில்லை. அநீதிக்கெதிராக முகமது கிளர்ந்தெழவில்லை, மாறாக தம்மை ஒரு இறைத்தூதர் என்று ஏற்காததால் தான் அவர் ஜிஹாத் செய்தார். அவரை ஏற்காததை, கடவுள் சொல்வதாக அவர் சொல்வதை மற்றவர்கள் ஏற்காததைத்தான் அநீதியாகச் செயல்படுகின்றனர் என்று அறிவித்தார். நீதமாக நடப்பது என்று திருக்குரான் சொல்வது – முகம்மது சொல்வதை நம்பி அவருக்கு கீழ்ப்படிந்து(அவர் மூலம் இறங்கும் அல்லாவின் கட்டளைகளைப்பின்பற்றி) நடப்பது என்பதே. ஏனென்றால் கடவுள் நீதியாகத்தான் சொல்வார், கடவுள் சொல்வதற்க்கு மாற்றாகச் செய்வது அநீதி என்ற அர்த்தத்தில் தான் இஸ்லாமிய நீதி முறை 1400 வருடங்களாக நிற்கிறது.

ஜிஹாத் என்பதில் நேர்மையற்ற ஆட்சிக்கெதிரான புரட்சியும் அடங்கும் என்பது பிற்காலத்தில் இந்த வன்கோட்பாடை சப்பைக்கட்டு கட்டுவதற்கு இஸ்லாத்தைப் பின்பற்றியோர் கொடுத்த முட்டுக் கட்டையாகும். திருக்குரானில் எங்கும் இப்படிப்பட்ட அர்த்தம் சொல்லப்படவில்லை. மாறாக, ஆட்சியாளர்களுக்கு அடங்கிப்போகும்படி திருக்குரான் கட்டளையிடுகிறது. இதை நிறுவுவது போன்று முகமது அவர்களின் சொற்களும், கடிதங்களும் இருக்கின்றன.

இஸ்லாமிய வரலாற்றைப் பார்த்தோமேயானல், ஜிஹாத்தின் கடைசிக் கட்டமாக ஆட்சியதிகாரத்தை வேண்டி ஜிஹாத் நடைபெறுவதைக் காணலாம். உலகம் முழுவதையும் முகமதை தூதராக ஏற்றுக் கொள்ளவைக்கும் போராக இந்த ஜிகாத் மாறுதல் அடைந்தது. இதன் மூலம் முஸ்லிம்களுக்கு ஏராளமான செல்வம் வந்து குவிந்தது. திருக்குரானில் திரும்பத்திரும்ப ஜகாத்தைப் பற்றி கடவுள் வலியுறுத்துவது இதற்காகத்தான்.

மக்கத்து குரைஷிகளின் பலவிதமான பாகன் பண்பாடுகளை ஏற்று முகமது காம்பிரமைஸ் செய்து கொண்டது இதன் உச்சம். இந்த காம்பிரமைஸை முகமதின் கடிதங்களில் காணலாம். அவர் திரும்பத் திரும்ப இக்கடிதங்களில் குறிப்பிடுவது என்னவென்றால், என்னை நபியாக ஏற்று எனக்குக் கீழ்ப்படிந்தால் உனது உடமைகளும் பதவியையும் நான் சேதப்படுத்த மாட்டேன் என்பதே அது. இந்தக் கடிதங்களில் எங்குமே முஸ்லிமாக மாறாமல் ஆனால் நியாயமாக நடந்து கொள்ளுபவர்களின் மீது தாம் போர் தொடுக்க மாட்டோம் என்று முகமது தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிமாக மாறி தமக்கு ஜகாத் கொடுத்து கீழ்ப்படிந்து நடந்தால் அவர்களின் மீது ஜிகாத் தொடுக்கப்பட மாட்டாது என்றே முகமது எழுதியுள்ளார்.

முகமது அவர்களின் மறைவு வரையில் ஜிஹாத் என்பது மேலே கண்டவை அடங்கியதாக மட்டுமே இருந்தது. கெடுதி செய்யும் ஆட்சியாளனை எதிர்த்த புரட்சியாக ஜிஹாத் உருவெடுக்க வில்லை. ஜிகாத்தின் முக்கிய நோக்கம் முகமதை தூதர் என்று மற்றவர்கள் ஏற்கவேண்டும் என்பதாகவே இருந்தது. பின்னாளில், முகமதை தூதர் என்று ஏற்பது ஜகாத் என்னும் இஸ்லாமிய நிதியை தருவதாகவும், மதம்மாறாமல் கீழ்ப்படிந்திருப்பது ஜிஸ்யா என்ற துருக்கக்தண்டலை (இந்த வார்த்தையை முதலில் பிரயோகித்தது இன்று ஜிகாத் போரிடும் காஷ்மீரிகளின் முன்னோர்கள் – turushka tanda என்று வெறுப்புடன் அழைத்தனர் ஜிஸ்யாவை அவர்கள்).

இப்படி முஸ்லிமாக மாறியவர்களிடமிருந்து ஜகாத், மாறாதவர்களிடமிருந்து ஜிஸ்யா போன்றவை வரவர ஏற்கெனவே முஸ்லிமாக இருந்தவர்களுக்கு செல்வம் குவியத் தொடங்கியது. இது கிட்டத்தட்ட இன்று நாம் காணும் பிரமிட் ஸ்கீம்கள் போலத்தான். பிரமிட்டின் உச்சியில் முகமதின் குடும்பம் இருந்தது. அன்றைய தேதியிலேயே முகமதின் விதவைகளுக்கு 10,000 தினார்கள் இப்படிச் சேர்ந்த செல்வத்திலிருந்து அளிக்கப்பட்டது.

ஜகாத்தை விட பன்மடங்கு ஜிஸ்யா வரி இருந்ததால், பல நேரங்களில் இஸ்லாமிய மன்னர்கள் மதம்மாற்றத்திலும் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. நிறைய செல்வம் சேர்ந்தபிறகே மதமாற்றத்தைச் செய்தார்கள். அப்படி மதம்மாறியவர்கள் மற்றவர்களின் மீது ஜிகாத் தொடுத்து மீண்டும் செல்வத்தை, பெண்களை, அடிமைகளைப் பெற்றனர்.

மேலும் இதுவரை இஸ்லாமிய சமூகங்கள் எங்கிலும் செயல்படுத்தப்பட்ட ஜிஹாத்கள் அனைத்தும் ஆட்சியாளர் அல்லது எதிரானதொரு குழு இஸ்லாத்தை முறைப்படி செயல்படுத்தவில்லை என்றுதான் எழுந்தனவேயன்றி, நீதியானதொரு ஆட்சியை ஏற்படுத்தவேண்டும் என்கிற அடிப்படையில் உலகத்தில் எங்குமே ஜிகாத் நிகழ்த்தப்படவில்லை.

சொல்லப்போனால், இஸ்லாமிய சமூகங்கள் தாம் மற்றைய சமூகங்களைவிட அடக்குமுறையிலும், அநீதியான முறைமைகளும் சிக்கிக் கிடக்கின்றன.

ரசூல் அவர்கள் ஈராக், லெபனான், பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான் என்றெல்லாம் குறிப்பிடுகிறாரே – இங்கெல்லாம் முஸ்லிம்கள் முஸ்லிம்களை கொன்றொழித்தபோது ஜிகாத்கள் மேற்கொள்ளப்படவில்லை. அவற்றைவிட மிகக்குறைவான அளவில் முஸ்லிமல்லாதவர்களால் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போதே ஜிகாத் துவங்கியது. இதற்குக் காரணம் ரசூல் அவர்கள் அறியாததல்ல, திருக்குரான் என்பது மீண்டும் மீண்டும் முஸ்லிமல்லாதவர்கள்(கா·பிர்கள்) முஸ்லிம்களின் எதிரிகள் என்றுரைக்கின்றது. இவற்றை தினம் தினம் மசூதிகளின் ஒலிபெருக்கியிலும், ஓதும் இறைவேதத்திலும், செவிமடுக்கும் உரைகளிலும் கேட்கும் எந்தவொரு நம்பிக்கையுள்ள முஸ்லிமுக்கும் இயல்பாகவே கா·பிர்கள் தமது சமுதாயத்துக்கு எதிரிகள் என்ற உணர்வு தட்டியெழுப்பப்பட்டு, கண்முன் கா·பிர்கள் செய்யும் சிறு அநீதியும் கடவுளின் வார்த்தைகள் சரியே என்ற பிம்பத்தை கொண்டுவருகின்றன. மாறாக, முஸ்லிம்கள் அதைவிட பன்மடங்கு அநீதிகளை இழைத்தாலும், இஸ்லாமிய ஒற்றுமை, காத்திருக்கும் எதிரிகளான கா·பிர்கள் போன்ற கருத்துக்கள் வாய்மூடி மவுனமாக இருக்கவைக்கின்றன.

தலித் விடுதலை என்பதெல்லாம் இன்றைய சூழலில் ஜிஹாத்தை நியாயப்படுத்த, மதமாற்றத்தை ஏற்படுத்த நவீன இஸ்லாமிய அடிப்படைவாதிகள் முன்வைக்கும் கோஷம். இங்கு தலித்துக்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச சுதந்திரத்தைக் கூட முஸ்லிமாக மதம்மாறாத தலித்துக்களுக்கு இஸ்லாம் தரவில்லை. இஸ்லாம் தோன்றிய சவுதியில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது எப்போது தெரியுமா? 1962ல் தான்! அடிமைகள் தமது எசமானர்களுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்றே முகமது அறிவுறுத்துகின்றார். முஸ்லிமாக மதம் மாறாத எசமானர்கள் விஷயத்தில் மட்டுமே அவர்களிடமிருந்து தப்பித்து ஓடிவருபவர்களை இஸ்லாம் ஏற்றுக் கொண்டு , அவர்கள் மதம் மாறினால் குறைந்த உரிமைகள் சிலவற்றை தருகிறது.

இந்த உரிமை அளிப்பு கூட மதம்மாற்றத்திற்காக போடப்படும் எலும்புத் துண்டே. இப்படி முஸ்லிமாக மதம் மாறியவர்களை கொஞ்சம் எதிர்ப்புத் தெரிவித்தால் கூட கூட்டாக கொன்றழிப்பதை இஸ்லாமிய உலகம் கண்டிப்பதில்லை.

1350 ஆண்டுகளாக இஸ்லாத்தைப் பின்பற்றும் ஈராக் தமது தலித்(குர்து) சமுதாயங்களின் மீது ரசாயன ஆயுதங்களை(Mustard Gas) பிரயோகித்து கும்பல் கும்பலாகக் கொன்றது. மாறாக குர்துக்களின் மீதான தாக்குதல், முழுமையான இஸ்லாமியர்களாகாத கா·பிர்களின் மீதான ஜிகாத்தாக அரபு-ஈராக்கிய-ஆளும் வர்க்கத்தால் அடையாளம் காணப்பட்டது. 1988 யுத்தத்துக்கு சதாம் இட்ட பெயர் என்னதெரியுமா? அன்·பல்! இது கா·பிர்களிடமிருந்து கொள்ளையடிப்பதை நியாயப்படுத்தும் அல்லாஹ்வின் கட்டளைகள் அடங்கிய திருக்குரான் அத்தியாயத்தின் தலைப்பு. அத்தியாயம் எட்டான அல்-அன்·பாலின் முதல் இறைவசனமே கா·பிர்களிடமிருந்து கொள்ளையடித்த செல்வத்தை பங்கிடுவதில் முகமதின் முடிவே இறுதியானது என்றறிவிக்கும் அல்லாஹ்வின் கட்டளையைப் பார்க்கலாம். இந்த அன்·பால் போரில் இறந்த இந்த தலித்-குர்து-முஸ்லிம்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா? – மூன்று லட்சம்!! இது நாள்வரை ஈராக்கிலோ, லெபனானிலோ, ஆப்கானிஸ்தானிலோ, காஷ்மீரிலோ இவ்வளவு முஸ்லிம்கள் அமெரிக்காவினாலோ- இஸ்ரேலினாலோ- இந்தியாவினாலோ கொல்லப்படவில்லை.

திரு.ரசூல் அவர்கள் சொல்லியிருக்கிறபடி இவ்வளவு தலித்-குர்து-முஸ்லிம்கள் இறந்தவுடன் இஸ்லாமிய உலகெங்கும் சதாமுக்கெதிரான பெரும் ஜிகாத் போர் துவங்கியிருக்கவேண்டுமே – ஏன் இல்லை?

திரு.ரசூல் அவர்கள் சொல்லும் ஜிகாத், ஜிகாத் என்றால் என்ன என்பது மெதுவாகவாவது கா·பிர்களுக்குப் புரிய ஆரம்பித்துள்ள நிலையில், அவ்வெதிர் உணர்வுகளை திசை திருப்பவே உதவி செய்கிறது, உண்மையை திரைபோட்டு மறைக்கின்றது.

இந்து சமுதாயத்தில் இருக்கும் பலவிதமான பிரச்சினைகளால் சோர்ந்து, துவணடு, மனம் குமுறிக்கொன்டிறுக்கும் தலித்தை இஸ்லாமிய ஜிகாத்துக்கு பலியிட வைக்கும் அந்தத் தவறை சிந்திக்காத – தீவிரவாத மனித நேயப் பாசறைகள் செய்து வருகின்ற நிலையில், ரசூல் போன்றவர்கள் அதற்கெதிராகக் குரல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தால், தலித்துக்களை பலிகடாவாக்கி அவர்களை ஜிகாத்துக்கு காவு கொடுக்கும் வேலையை நியாயப்படுத்துவது போன்று ரசூல் அவர்கள் எழுதியிருப்பது வருத்ததிற்குரியது.

தலித்துக்களின் போராட்டம் நியாயமானதே. ஆனால் அதை வைத்து அவர்களை இஸ்லாத்தின் பக்கமும் இஸ்லாமிய ஜிகாத்தின் பக்கமும் திருப்புவது, உலகெங்கிலும் ஜிகாத்தை மேற்கொள்ளும் சமுதாயங்கள் அழிந்து போவது போன்று அவர்களையும் அழிவின் பால் தள்ளிவிடும் படுபாதகச் செயலாகும்.

தலித் சமுதாயம் பிளவுபட்டு, மதம் மாறியவர்- மாறாதவர், தமிழ் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்-போலியான அரபிக்கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர் என்று தலித்துக்கள் தம்மிடையே ஒருவர் மற்றொருவரின் எதிரிகளாக உருமாறி அடித்துக் கொண்டு அழிந்து போவதற்க்கும், அவர்களது நியாயமான போராட்டம், அடிப்படைவாத இஸ்லாத்துக்கெதிரான உலகின் போரில் கீழ்த்தள்ளப்பட்டு நசித்துபோவதற்க்கும் வழிவகுக்கும்.

தலித்துக்களைப் பலியாடுகளாக்கும் இந்த ஆபத்தான விளையாட்டை குறைந்த பட்சம் நாம் ஆட வேன்டாமே என்பதுதான் ரசூல் அவர்களுக்கும், அவரைப்போன்று தலித்துக்களின் விடுதலை இஸ்லாம் காட்டும் ஜிகாத்தின் மூலம் ஏற்படலாம் என்று கருதுபவர்களுக்கும் நான் வைக்கும் வேண்டுகோள்.


nesakumar@gmail.com
((சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. – திண்ணை குழு )

Series Navigation

நேச குமார்

நேச குமார்