பிரபல அமெரிக்க நடிகையின் திருட்டு

This entry is part [part not set] of 36 in the series 20060811_Issue

செழியன்


ஹொலிவ+ட்டில் மிகப் பிரபல்யமான இளம் நடிகை Winona Ryder.

“The Age of Innocence” மற்றும் ; “Little Women” படங்களுக்காக Oscars விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டவர்.

இவர் 2001ம் ஆண்டு மார்கழி மாதம் பன்னிரெண்டாம் திகதி அமெரிக்கப் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

$5,560.40 டொலர் பெறுமதியான உடைகளை Beverly Hills Saks, Fifth Avenue Store ல் திருடியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவர் திருடியதை கடையில் இருந்த கமராக்கள் கச்சிதமாக பதிவு செய்திருந்தன.

மில்லியன் டொலர் வருமானம் உள்ள ஒரு நடிகை கேவலம் ஒரு ஐயாயிரம் பெறுமதியான பொருளை களவெடுப்பதா? என்று பொலிசார் மட்டுமல்ல நீதிமன்றமே ஆச்சரியம் அடைந்தது.

“அடுத்த படத்தில் நான் Kleptomania கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் இப்படிச் செய்தேன்” என்று நடிகை Winona Ryder நீதிமன்றத்தில் கூறினார்.

ஆனால் இதற்கு முன்னரும் இந்த நடிகை இரண்டு இடங்களில் திருடி உள்ளார் என்று சந்தேகிக்கப்பட்டது.

2002 நவம்பர், பன்னிரெண்டாம் திகதி இந்த வழக்கின் மீது தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆறு பெண்களும், ஆறு ஆண்களும் அடங்கிய ஜூரிகள் சபை நடிகை Winona Ryder குற்றவாளிதான் என்று ஏகமனதாக தீர்ப்பு வழங்கியது.

இந்தக் குற்றத்திற்காக Winona Ryder மூன்று வருடச் சிறைத்தண்டணையை அனுபவித்திருக்க வேண்டும். பொருளாதார காரணத்திற்காக Winona Ryder திருடவில்லை என்று நீதிமன்றம் தீர்மானித்ததால் இந்தத் தண்டணையில் இருந்து நடிகை தப்பிவிட்டார்.

மூன்று வருடகால ஒத்திவைக்கப்பட்ட நன்னடத்தைப் பிணையிலும், 480 மணித்தியாலங்கள் சமூக சேவை செய்ய வேண்டும் என்றும் இவருக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

கிலரியின் கதையைப் பாருங்கள்.

கிலரிக்கு திருடுவதற்கான எந்தத் தேவையும் இல்லை. அவள் ஒரு மத்தியதர குடும்பத்தைச் சேர்ந்தவள். நல்ல உத்தியோகம், சுளையான சம்பளம். ஆனாலும் ஒரு கெட்ட பழக்கம். தொடர்ந்து களவெடுத்துக் கொண்டே இருந்தாள்.

“முதலில் நான் தேனீர் கடையில் இருந்து ஒரு கரண்டியை களவெடுத்தேன்” என்று அவள் தன்னைப்பற்றி அறிமுகம் செய்கின்றாள்.

“அந்தக் கரண்டியால் எனக்கு ஒரு வித பிரயோசனமும் இல்லை. ஆனால் அதை களவெடுக்க வேண்டும் என்று தோன்றியது.”

“தொடர்ந்து பல களவுகள் செய்தேன். இரவில் திடீரென விழித்தெழுந்து எனது தவறுக்காக கண்ணீர் விட்டு அழுவேன். இனி மேல் ஒரு போதும் திருடக் கூடாது என்று தீர்மானம் எடுப்பேன். ஆனால் மறுநாள் மறுபடியும் ஒரு பொருளை திருடிக் கொண்டு வருவேண்.”

அடுத்து தமராவின் கதை.

தமரா தனது மனதுக்குள் புதைத்து வைத்திருந்த அந்த இரகசியத்தை வெளியில் சொல்ல முடியாமலும், அதே சமயம் அந்த விடயத்தில் இருந்து மீள முடியாமலும் தவித்துக் கொண்டிருந்தாள்.

அவள் செய்கின்ற காரியத்தை நினைக்க அவளுக்கே வெட்கமாக இருந்தது. ஆனாலும் மறுபடி மறுபடி அந்த வெட்கம் கெட்ட வேiயை செய்து கொண்டுதான் இருந்தாள்.

அரசாங்க உத்தியோகத்தில் உயர் அதிகாரியாக இருந்த அவளுடைய கணவரோ, உயர் கல்வி படித்துக் கொண்டிருந்த அவளுடைய பிள்ளைகளோ இந்த கேவலத்தை அறிந்து விடக் கூடாது என்பதற்காக பெரும்பாடு பட்டாள்.

கடைசியில் ஒரு நாள் கடையொன்றில் அழகான செருப்பை திருடும் போது மாட்டிக் கொண்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டாள்.

ஒரு செருப்புக் கடையையே வாங்கக் கூடிய சீமாட்டி ஒரு செருப்பைக் களவெடுக்க வேண்டிய அவசியம் என்ன?

ஒரு செருப்பல்ல, இதுவரை இருநூறு செருப்புகளை களவெடுத்துள்ளதாக தமரா வாக்குமூலம் அளித்தாள். அந்த செருப்புகளில் ஒன்றைக் கூட அவள் அணியவில்லை. எல்லாமே மிக பத்திரமாக ஒரு அலுமாரியில் வைக்கப்பட்டிருந்தது.

இப்படியும் திருடர்களா? என்று உங்களுக்கு குழப்பமாக இருக்கும். குழம்பாதீர்கள். இதுதான் முடநிவழஅயnயை என்று அழைக்கப்படும் மனநோய். பொருட்களை திருட வேண்டும் என்று எழுகின்ற மோசமான ஒரு மனநோய்.

“அடடா, அதனால் தான் திருடர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது” என்று தப்புக் கணக்கு போட்டுவிடாதீர்கள்.

இரவில் வீடு புகுந்து கொள்ளை அடிக்கின்ற வேலையையோ, அல்லது வழியில் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்கின்ற காரியத்தையோ, வங்கியில் புகுந்து திடீர் கொள்ளையையோ இந்த முடநிவழஅயnயை மனநோய் உள்ளவர்கள் செய்வதில்லை.

ஒரு இலட்சம் டொலர் பணத்தை திருடமாட்டார்கள். பேனா, செருப்பு, புத்தகம், மணிக்கூடு, பென்சில் என்று தமக்கு பயன்பாடு இல்லாத பொருட்களை மட்டும் இவர்கள் திருடிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் திருடுகின்ற பொருட்களின் பெறுமதி இவர்களுடைய வருமானத்துடன் ஒப்பிடும் போது ஒரு தூசு.

சில பொருட்களைக் கண்டதும் Kleptomania மனநோய் உள்ளவர்களின் இதயத்துடிப்பு படபடவென்று அதிகரிக்கும். கைகள் பரபரக்கும். உடல் பதட்டம் அடையும். “அந்தப் பொருளை திருடு” என்று மூளை கட்டளை இடும்.

குறிக்கப்பட்ட அந்தப் பொருளை திருடிய பிறகு தான் அவர்களின் இதயத்துடிப்பு, பதட்டம் எல்லாமே சீராக வரும். தங்களுக்குள் ஏற்படும் பெரும் உபாதையை தீர்த்துக் கொள்ளவே இவர்கள் திருடுகின்றார்கள்.

திருடிய பொருட்களை இவர்கள் ஒரு போதும் பாவிக்க மாட்டார்கள். இரகசியமாக அவற்றை ஒளித்து வைத்து பாதுகாப்பார்கள். அல்லது எங்காவது தூரமாக எறிந்து விடுவார்கள்.

இந்த திருட்டு வியாதி ஆண்களைவிட அதிகமாக பெண்களுக்கே உள்ளது. அதற்குக் காரணம் தெரியாது. இந்தப் பெண்களும் பெரும்பாலும் சமூக பொருளாதார அந்தஸ்த்தில் உயர்ந்தவர்கள்.

மேயரின் மனைவியா இருக்கலாம், நடிகையாக இருக்கலாம், ஒரு வைத்தியரின் மனைவியாகக் கூட இருக்கலாம். திருடுவார்கள். ஒரு நாள் மாட்டிக் கொள்வார்கள்.

இந்த Kleptomania மனநோய் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் இன்னுமோர் மனநோயும் இருக்கலாம். பெரும்பாலும் அது Mood disorder ஆக இருக்கும்.

Kleptomania என்கின்ற இந்த மனநோய் 35 வயது உடையவர்களை சராசரியாகப் பாதிக்கின்றது. ஆனால் ஐந்து வயது குழந்தையும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு வரை இந்நோய் பாதித்தால் சுமார் 16 வருடங்கள் பீடித்திருக்கும்.

இந்த மனநோய் ஏன் வருகின்றது என்பது இது வரை தெரியாமலே இருக்கின்றது. மூளையில் உள்ள இரசாயனப் பொருளான Serotonin இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகின்றது.

உண்மையான திருடர்களில் இருந்து இந்த மனநோயாளிகளை எவ்வாறு வேறுபடுத்துவது?

முடநிவழஅயnயை மனநோய் உள்ளவர்கள் தமக்கு பொருளாதார ரீதியாக எந்தப் பயனும் இல்லாத பொருட்களையே திருடுவார்கள். சாதாரண திருடர்களைப் போல முன் கூட்டியே திட்ட மிட்டுத் திருடமாட்டார்கள். திடீரென எழுகின்ற ஒரு மன வேகத்தில் திருடுகின்றார்கள்.

தொடர்ந்து திருடுவார்கள். ஆனால் அவர்கள் திருடிய பொருட்கள் அவர்களைப் பொறுத்தவரை எந்தவித பெறுமதியும் அற்று இருக்கும். அந்தப் பொருட்களை தமது தேவைகளுக்காக இவர்கள் பாவிக்கமாட்டார்கள்.
1838ம் ஆண்டு முதன் முதலாக இந்த முடநிவழஅயnயை மனநோய் பிரான்சு நாட்டு பாடத்திட்டத்தில் உத்தியோக ப+ர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நோயை குணப்படுத்தலாம். அதற்கு நோயாளிகள் மனநோய் வைத்தியர்களிடம் செல்லவேண்டும்.

முடநிவழஅயnயை மனநோய் உள்ளது என்று கூறி சட்டத்தின் பிடியில் இருந்து ஒரு திருடர் தப்பிவிட முடியாது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் கூட இந்த மனநோயாளர்கள் சட்டத்தின் பிடியில் இருந்தும், தண்டனையில் இருந்தும் தப்ப முடியாது. நீதிமன்றம் விதிக்கின்ற தண்டனையை அனுபவித்தாக வேண்டும்.

செழியன்

chelian@rogers.com

Series Navigation

செழியன்

செழியன்