கம்யூனிசத்தின் பூலோக சொர்க்கம் – வட கொரியா

This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

செல்வன்


வடகொரிய கம்யூனிச அதிபர் கிம் ஜாங் 2 ஜப்பானிய பிரதமருடன் பேசும்போது 13 ஜப்பானியர்களை(ஒரு பள்ளி சிறுமி உட்பட) கடத்தியதை ஒத்துக்கொண்டார் என்பதை அம்னஸ்டி இன்டெர்நேஷனலில் இணையதளம் தெரிவிக்கிறது…..மொழி பெயர்ப்பாளராகவும்,உளவு சொல்லவும்,ராணுவ தளபதிகளின் ஆசைநாயகிகளாகவும் அவர்கள் பயன்படுத்தப்படவே கடத்தப்பட்டனர் என்பதை ஜப்பானிய பிரதமரிடம் கிம் ஜாங் நேரடியாக ஒத்துக்கொண்டார்….

சர்வதேச மனித உரிமைகளுக்கான இயக்கமான அம்னெஸ்டி வடகொரியாவை பற்றி சொல்லும்போது “மக்களுக்கு உணவிடும் அரசின் அடிப்படை பொறுப்பிலிருந்து வட கொரிய அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டுகிறது.நகர்புறங்களிலேயே வறுமை தாண்டவமாடுவதாகவும்,குழந்தைகள் உணவின்றி தவிப்பதாகவும் அம்னெஸ்டி குற்றம் சாட்டுகிறது.பேச்சுரிமை,எழுத்துரிமை என்பது கிஞ்சித்தும் கிடையாது,படுகொலைகள்,சித்ரவதைகள்,ஆகியவை அங்கு சர்வசாதாரனம் என்றும் குற்றம் சாட்டுகிறது”

பத்திரிக்கை சுதந்திரம் என்பது ஜோக்.ஏனெனில் அரசு தான் அங்கு அனைத்து பத்திரிகைகளையும் நடத்துகிறது.அரசு சொல்லுவது தான் செய்தி.அப்படி இருந்தும் 40 பத்திரிக்கையாளர்கள் “சரியான வழியில்” செல்லும்படி மறுகல்வி புகட்டபட்டனாராம்.அவர்கள் செய்த தவறு?அரசு அதிகாரிகளின் பெயர்களை எழுத்து பிழையோடு அச்சடித்தது.

லட்சக்கணக்கான வடகொரியர்கள் உணவின்றி சாகின்றனர் என்கிறது அம்னெஸ்டி.70% மக்களுக்கு உணவு அரசு ரேஷன் மூலமே கிடைக்கும்.அதில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 300 கிராம் உணவு மட்டுமே தரப்படுகிறதாம்.

சிறைகளில் நடக்கும் கொடுமைகளுக்கு எல்லையே கிடையாதாம்.சிறைகைதிகள் பேசிக்கொள்வது கண்டுபிடிக்கபட்டால் இரும்பு கம்பிகளாலும், மரக்கழிகளாலும் அடிக்கபடுவராம்.அடித்த பின் குளிர்ந்த நீரை அடிபட்ட இடத்தின் மீது (குளீர் காலங்களிலும்) ஊற்றுவராம்.தண்ணீர் கொடுமை என்றும் ஒன்று உண்டாம்.கட்டி வைத்து கணக்கு,வழக்கின்றி தண்ணீரை குடிக்க செய்வது நடக்குமாம்.

சிறைகளில் பெண்கள் நிலைமை சொல்லும் தரமன்று என்கிறது அம்னெஸ்டி.சீனாவுக்கு தப்பி ஓட முயன்று பிடிபட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது சர்வசாதாரணமாம்.பிடிபட்ட அனைத்து பெண்களும்(கர்ப்பிணி,வயதானவர் உட்பட) காலை முதல் இரவு வரை ஓய்வின்றி வேலை செய்யவேண்டுமாம்.

உணவு நிலை:

வட கொரிய மக்கள் 10 ஆண்டுகளாக கடும் உணவு பஞ்சத்தால் பிடிக்கபட்டிருக்கின்றனராம்.லட்சக்கணக்கான பேர் உணவின்றி இறந்துவிட்டனராம்.ரஷ்யா வீழ்ந்ததால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க கொரிய அரசு “இனி நாம் இருவேளை மட்டுமே உண்போம்” எனும் திட்டத்தை 1991ல் அறிமுகப்படுத்தியதாம்.ரேஷனில் உணவு பொருள் வினியோகம் 10% ஒவ்வொருவருக்கும் குறைக்கப்பட்டதாம்.1994 கோடை முழுவதும் உணவு வினியோகம் மிகவும் மோசமான நிலையை அடைந்ததாம்.விடுமுறை நாட்களில் மட்டுமே உணவு வழங்கப்பட்டதாம்.

யுனிசெப் வடகொரிய குழந்தைகள் பற்றி மிகவும் கவலை தெரிவித்துள்ளது.80,000 குழந்தைகள் பஞ்சத்தால் இறக்க வேண்டிய நிலை உள்ளது என யுனிசெப் தெரிவித்துள்ளது.மொத்தம் உள்ள 800,000 குழந்தைகளில் 38% குழந்தைகள் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக யுனிசெப் தெரிவிக்கிறது.

ரேஷன் முறை மிகவும் மோசமான நிலையை எட்டி(74% மக்கள் ரேஷனை மட்டுமே நம்புபவர்கள்) 1998’ல் சுத்தமாக நின்றுபோனதாம்.இனிமேல் நீங்களே உங்கள் கவனித்து கொள்ள வேண்டியதுதான் என அரசு அறிவித்ததும் மக்கள் புல்,பூண்டு,வேர்கள்,செடிகள் ஆகியவற்றை உண்டு காலம் தள்ளினராம்.இறந்தவர்களின் எண்ணீக்கை 220,000 முதல் 35 லட்சம் வரை என்கின்றனர்.

இதுபோக ஜாதிகொடுமை வேறு உண்டாம்.25% மக்கள் “தேசவிரோதிகள்” எனும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனராம்.அரசால் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவர் குடும்பத்தினர் தேசவிரோதிகளாக கருதப்படுவர் என்கிறது அம்னெஸ்டி.தென்கொரியாவிலிருந்து கைதிகளாக பிடிபட்டு வந்தவர்களும் இந்த பட்டியலில் உண்டு.இவர்களுக்கு சுத்தமாக உணவு எதுவும் தரப்படுவதில்லை என்பதோடு,கடும்கண்காணிப்புகள்,ஒடுக்குமுறை ஆகியவை உண்டாம்.

வடகொரிய மதம்:

கம்யூனிஸ்ட் நாடாச்சே.அங்கு மதம் ஏது என கேட்கலாம்.இருக்கு.அங்கு மன்னர் கிம் ஜாங் 2 தான் கடவுள்.கிம் ஜாங்கை கடவுள் என்றே அரசு ஊடகங்கள் சொல்கின்றன.கிம் ஜாங் கடவுள்,குரு என புகழும் பிரச்சாரம் அங்கு விடாது நடக்கிறது. ஒரு சாம்பிள் பாருங்கள்.

The Korean people regard it as their most worthwhile life to uphold Secretary Kim Jong Il and live and work in perfect harmony with him, said Rodong Sinmun in a signed article August 31. The author of the article said: The Korean people absolutely worship, trust and follow the General as god. These noble ideological feelings are ascribable to the fact that they have keenly felt the greatness of the General from the bottom of their hearts. He is the great teacher who teaches them what the true life is, a father who provides them with the noblest political integrity and a tender-hearted benefactor who brings their worthwhile life into full bloom. The life of the Korean people who form a harmonious whole with the General is a revolutionary life to glorify their noblest political integrity. This is why they have unbendingly advanced the revolution with an unshakable faith, not wavering under any obstacles and trials. The General is the mental pillar and the eternal sun to the Korean people. As they are in harmonious whole with him, they are enjoying a true life based on pure conscience and obligation. They are upholding him as their great father and teacher, united around him in ideology, morality and obligation. So, their life is a true, fruitful and precious life without an equal in history.

1999ல் வட கொரிய அரசு உளவுத்துறை தெரிவித்த தகவல்படி 2.5 மில்லியன் முதல் 3.5 மக்கள் உணவின்றி இறந்தனராம்.இது உண்மை என்றால் உணவின்றி மக்களை சாகடித்த ஆட்சியாளர்களின் பட்டியலில் 3ம் இடம் கிம் ஜாங்குக்காம்(முதல் இடம் மாவோவுக்கு,இரண்டாம் இடம் ஸ்டாலினுக்கு)முதல் 3 இடங்களையும் பிடித்து சாதனை படைத்துள்ளோர் அனைவரும் கம்யூனிஸ்டுகளே என்பது தற்செயல் நிகழ்வாக இருக்கலாம்:-)

வட கொரிய அரசின் அதிகாரபூர்வமான இணையதளம் மன்னரையும் அவர் தந்தையயும் “நம் தலைவர்கள் தேசத்தின்,மனித இனத்தின் சூரியன்கள் ” என்கிறது.அவர்கள் வரலாற்றை அரசே வெளியிட்டுள்ளது.படித்தால் ஏதோ கடவுள்களின் அவதார கதை போல் உள்ளது.

வட கொரியரின் கடவுள்:

வடகொரியாவின் மிகப்பெரும் செல்வந்தர் அதன் கடவுள்,செக்ரட்டரி,மன்னரான கிம் ஜாங்க் 2 தான்.ஹாலிவுட் படங்கள் இவருக்கு மிகவும் பிடிக்குமாம்.1970’ல் 15,000 படங்களை தன் கலெக்ஷனில் வைத்திருந்தாராம்.போர்னோகிராபி படங்களும் மிகவும் பிடிக்குமாம்.சூப்பரான அந்தப்புரங்களும் அதில் ஏராளமான “தோழியரையும்” வைத்திருக்கிறாராம்.

ஜோசியத்தில் இவருக்கு ஏக நம்பிக்கை.இவர் ஆட்சிக்கு ஒன்றாக பிறந்த மூவரால் ஆபத்து வரும் என நம்பி கொரியாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள் அனைத்தையும் தாயிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் பிரித்து அனாதை விடுதிகளில் கடும் கண்காணிப்பில் வளர்ப்பதாக ஹெரால்ட் சன் பத்திரிக்கை தெரிவிக்கிறது

எல்லைகள் அற்ற நிருபர்கள் குழு(Reporters without borders) தெரிவுக்கும் தகவல்கள் நெஞ்சை உறைய வைப்பதாக இருக்கின்றன.

வடகொரிய கம்யூனிச சொர்க்கம் பற்றிய மேலும் பல தகவல்களுக்கு

1. வடகொரியர்கள் பட்டினியால் இறக்கின்றனர் (CNN செய்தி)

2.வடகொரியாவில் அடக்குமுறையும் ஒடுக்குதலும் தாங்கமுடியவில்லை(CNN செய்தி)

3.வட கொரிய வரலாறு பற்றிய விக்கிபீடியா கட்டுரை

www.holyox.blogspot.com
http://groups.google.com/group/muththamiz?hl=en

Series Navigation

செல்வன்

செல்வன்