இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம் சரியானதுதானா ?

This entry is part [part not set] of 48 in the series 20060519_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டினை எதிர்த்து மாணவர்கள், மருத்துவர்கள் உட்பட பலதரப்பினர் போராடுகின்றனர். இதை ஆதரிப்பவர்களும் உள்ளனர். இந்த இட ஒதுக்கீட்டிற்கு
வழி வகுப்பதாகக் கூறப்படும் 93ம் அரசியல் சாசன திருத்தம் இனாம்தார் வழக்கில் உச்ச நீதிமன்றம்
கொடுத்த தீர்ப்பு நடைமுறையில் அமுலாவதை தவிர்க்கவே செய்யப்பட்டது. அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கோர அரசுக்கு உரிமையில்லை என்றது அந்தத் தீர்ப்பு. சட்டத் திருத்தம்
என்ன சொல்கிறது (இத்தீர்ப்பினை குறித்து நான் திண்னையில் எழுதியிருக்கிறேன்).

THE CONSTITUTION (NINETY-THIRD AMENDMENT) ACT, 2005
NO. 93 OF 2005
[20th January, 2006.]
An Act further to amend the Constitution of India.
BE it enacted by Parliament in the Fifty-sixth Year of the Republic of
India as follows:-
1.
Short title and commencement.
1. Short title and commencement.-
(1) This Act may be called the
Constitution (Ninety-third Amendment) Act, 2005.
(2) It shall come into force on such date as the Central Government
may, by notification in the Official Gazette, appoint.
2.
Amendment of article 15.
2. Amendment of article 15.-In article 15 of the Constitution, after
clause (4), the following clause shall be inserted, namely:-
“(5) Nothing in this article or in sub-clause (g) of clause (1) of
article 19 shall prevent the State from making any special provision,
by law, for the advancement of any socially and educationally backward classes of citizens or for the Scheduled Castes or the Scheduled Tribes in so far as such special provisions relate to their admission to educational institutions including private educational institutions, whether aided or unaided by the State, other than the minority educational institutions referred to in clause (1) of article 30.”.

இதில் பிற்பட்ட ஜாதி என்ற சொல் இல்லை, 27% இட ஒதுக்கீடு என்பதும் இல்லை. மேலும் மத்திய அரசிற்கு இட ஒதுக்கீட்டில் அக்கறை இருந்தால் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்கு அளித்திருக்க கூடாது. இந்த சட்ட திருத்தம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காரே பிற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு என்பது இட ஒதுக்கீடு தொடர்பான கேள்வி சமீபத்திய முக்கியமான மூன்று வழக்குகளில் எழவில்லை. பிற பிற்பட்ட ஜாதியினர் என்பது அரசின் விளக்கம். இது சரிதானா என்பதை வழக்குத் தொடர்பட்டால் உச்ச நீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். (1). ஆனால் இந்த விஷயம் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாளர்களால் சுட்டிக்காட்டப் படுவதில்லை. இந்த திருத்தம் இட ஒதுக்கீட்டிற்கு வகை செய்கிறது, அதை கட்டாயமாக்கவில்லை. அதாவது அரசு மாணவர் சேர்க்கையில் சிறப்பு விதிகளை செய்ய உரிமை தருகிறது. அரசு கட்டாயம் செய்ய வேண்டும் என்றோ, இட ஒதுக்கீடு 27% இருக்க வேண்டும் என்றோ அது கூறவில்லை. இந்த 27% என்பது மண்டல் கமிஷன் சிபாரிசு செய்தது.

மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் பிற்பட்ட வகுப்பினருக்கு எதிரான அல்லது தடையாக ஏதேனும் உள்ளது என்று யாரும் கூறவில்லை. விடைத்தாள் திருத்தம், தேர்வு முறை யில் அவர்களுக்கு எதிரான பாரபட்சம் நிலவுவதாகவும் புகார் இல்லை. அப்படி இருக்கும் போது திடீரென ஏன் இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும், அதுவும் 27%. இவற்றில் பிற்பட்ட மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள், தேர்ச்சி பெறுகிறார்கள். பாரபட்சம் இல்லாத போது எதற்காக 27% இட ஒதுக்கீடு தேவை. உச்ச நீதிமன்ற வழக்குகளில் OBC மாணவர் சேர்க்கை ஒரு பிரச்சினையாகப் பார்க்கப்பட வில்லை. இது வழக்கில் இடம் பெறவே இல்லை. ஆனால் இதையெல்லாம் இட ஒதுக்கீடு ஆதரவாளர்கள் பொருட்படுத்துவதில்லை. இட ஒதுக்கீட்டினை எப்படி நுழைப்பது என்றுதான் பார்க்கிறார்கள்.

49.5% இட ஒதுக்கீடு என்பது கிட்டதட்ட 50% இட ஒதுக்கீடு. அதாவது இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில்
50% ஜாதி அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்றால் இது அனைவருக்கும் சம வாய்ப்பு என்பதையே கேலிக் கூத்தாக்குகிறது.
அரசே இப்படி ஜாதி அடிப்படையில் பாரபட்சங்களை, சமநிலைசீர்குலைவினை செய்தால் ஜாதி அடிப்படையில் சமூகம் செயல்படுவதை அரசு ஊக்குவிக்கிறது, ஜாதிய கட்டுமானத்தினை இன்னும் வலுவாக்குகிறது என்றுதான் பொருள். ஜாதிதான் தீர்மானிக்குமெனில் ஜனநாயகம், சம உரிமை, பாரபட்சமின்மை, ஜாதிய பாகுபாடுகளை ஒழிப்பது போன்றவற்றை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு ஜாதிதான் பிரதானம், இதில் முதலிடத்தில் பிற்பட்டோர், பின் தலித்கள்,பழங்குடியினர், பின்னர் முற்பட்ட ஜாதிகள் என்று அறிவித்து விடலாம்.

தி.க போன்ற கட்சிகளின் அறிவிக்கப்படாத செயல்திட்டம் இதுதான். இதை அரசுகள் இட ஒதுக்கீட்டினை சகட்டு மேனிக்கு
அதிகரிப்பது, விரிவாக்குவது மூலம் மறைமுகமாக ஆதரிக்கின்றன. பாதிக்கப்படுவோர் இதை எத்தனை காலம்தான் பொறுத்துக்
கொள்ள வேண்டும்.

அம்பேத்கார் இட ஒதுக்கீடு என்பது குறைந்த அளவிலேயே இருக்க வேண்டும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார். இப்போது
உள்ள 69% இட ஒதுக்கீடு 50% ஒதுக்கீடு போன்றவை அவர் கருத்திற்கு முரணாக உள்ளன. அம்பேத்கரும், அரசியல் சட்டத்தினை
உருவாக்கியவர்களும் இட ஒதுக்கீட்டினை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான தீர்வாகவே கண்டனர். இட ஒதுக்கீட்டின் பெயரில்
ஜாதி வேறுபாடுகளை உருவாக்குவதோ அல்லது அதிகரிப்பதோ அல்லது சமூகத்தில் பிளவு ஏற்படுத்துவதோ அவர்கள் நோக்கம்
இல்லை. ஆனால் இப்போது அவர்கள் கருத்துக்கள் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு ஜாதி ரீதியினால இட ஒதுக்கீடு எங்கும் வேண்டும்,
எதிலும் வேண்டும், எப்போதும் வேண்டும் என்ற நிலைப்பாடே சரியானது என்று வாதிடப்படுகிறது. இது தொடருமானால் ஒரு நாள் இட ஒதுக்கீட்டினால் பாதிக்கப்பாடுவோர் பொறுமை இழந்து விடுவர். தாங்கள் இரண்டாம் தர குடிமக்களா என்று கேட்பதுடன்
நின்று விட மாட்டார்கள். இந்த ஏற்றதாழ்வினை மாற்ற கடுமையான போராட்டங்களை துவங்குவார்கள்.

உயர் கல்வியில் போட்டி போடும் மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட சமமான தகுதியைப் பெற்றிருப்பர். உதாரணமாக மருத்துவத்தில்
முது நிலை, பொறியியலில் முது நிலை போன்றவற்றைப் படிக்க அடிப்படை தகுதி உள்ளது. அத்தகுதியை எட்டிய பின் யார்
பிற்பட்டோர் யார் முற்பட்டோர் இருவரும் ஒருவர்தான். பிற்பட்டோர் என்பதால் இட ஒதுக்கீடு ஆரம்பக் கல்வியுடன்
நின்றுவிடுவதில்லையே. BE, MBBS,BTECH என்ற அளவிலும் இருக்கிறது. இதற்கு அப்புறமும் இட ஒதுக்கீடு வேண்டும்
என்பது என்ன நியாயம். உயர் ஜாதி மாணவர், பிற்பட்ட ஜாதி மாணவர் இருவரும் ஒரே படிப்படைப் படித்து ஒரே பட்டத்தினை
பெற்றிருக்கும் போது அவர்களிடையே ஒருவருக்கு மட்டும் ஜாதி அடிப்படையில் முன்னுரிமை, சலுகை தருவது என்ன
நியாயம்.IIM களில் மேலாண்மை முதுகலை படிப்பிற்கான நுழைவுத் தேர்வு எழுதுவோரில் பலர் BE/BTECH படித்தவர்கள்,
வேலை அனுபவம் கொண்டவர்களும் உண்டு. இங்கு ஜாதி ரீதியில் பாகுபடுத்துவது எப்படி சரியான தேர்வு முறையாக
இருக்க முடியும். வேலை அனுபவம், மற்றும் படிப்பு உள்ள முற்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒருவரை விட படிப்பு மட்டுமே
உள்ள ஒருவர் பிற்பட்ட ஜாதி என்ற ஒரே காரனத்திற்காக முன்னுரிமை பெறுவது என்பது சரியானதல்ல.

மருத்துவ உயர் படிப்புகளில் இடங்கள் மிகவும் குறைவு.சில பிரிவுகளில் ஒரு கல்லூரியில் 20 இடங்கள் இருக்கும், மாநிலம்
முழுவதும் 100 இடங்கள் இருந்தால் அதிகம். இதில் 50% இடஒதுக்கீடு அடிப்படையில் மட்டும் ஒதுக்கப்படும் என்பது
என்ன நியாயம். மீதி 50% இடங்களுக்கும் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட ஜாதியினர் போட்டி போடலாம் என்று இருக்கும்
போது இட ஒதுக்கீட்டினால் பாதிக்கப்படுவர்களுக்கு என்ன கிடைக்கும், கிட்டதட்ட பூஜ்யம். தமிழ் நாட்டில் இப்படித்தான்
நிலைமை இருக்கிறது.முற்பட்ட வகுப்பினர் MS, MD போன்றவற்றில் சேர்வது மிகமிக கடினமாக இருக்கிறது. இதால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரே நம்பிக்கை மத்திய அரசின் கீழ் இருக்கும் மருத்துவ ஆராய்ச்சி,கல்வி நிறுவனங்கள். அங்கும் 50% இட
ஒதுக்கீடு என்றால் அவர்கள் எங்கு போவார்கள், என்ன செய்வார்கள். ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் பிற்பட்ட
ஜாதி என்பதால் தாத்தா, மகன்/மகள், பேரன்/பேத்தி என்று தொடர்ந்து சலுகை அனுபவிப்பார்கள். ஆனால் முற்பட்ட ஜாதி
என்றே ஒரே காரணத்திற்காக ஒருவருக்கு இடம் கிடைக்காது. இதுதான் சமூக நீதி என்றால் அந்த சமூக நீதி இன
வெறுப்புக் கோட்பாட்டிற்கு ஒப்பானதுதான்.

ஒரு புறம் தமிழ் நாடு முன்னேறிய மாநிலம் என்கிறோம். ஆனால் தமிழக மக்கள் தொகையில் இட ஒதுக்கீட்டினால்
பயன் பெறுவோர் மொத்த மக்கள் தொகையில் 87%. (BC-46.14%, MBC-17.43%, Denotified Communities 3.44%,
SC- 19% ST1.04%) (2) .அப்படியானால் தமிழ்நாட்டில் மக்கள் தொகையில் 87% socially and educationally backward ஆக இருக்கிறார்களா. 1947 முதல் முன்னேற்றமே இல்லையா.நீதிக்கட்சி காலத்திலிருந்தே பிற்பட்ட ஜாதிகள் அதே நிலையில்தான் உள்ளனவா. socially and educationally backward என்ற நிலையிலிருந்து எந்த ஜாதியும், முன்னோக்கி நகரவே இல்லையா. இப்போதும் இட ஒதுக்கீடு கட்டாயம் தேவை என்ற நிலையிலா எல்லா பிற்பட்ட ஜாதிகளும் உள்ளன.

இப்போதுள்ள இட ஒதுக்கீடு கொள்கையும், முறையும் மூன்று அடிப்படையான விஷயங்களை கருத்தில் கொள்வதில்லை. ஒன்று ஒரே
ஜாதிக்குள் உள்ள குடும்பங்கள், நபர்களுக்கிடையே கல்வி, சொத்து, நில உரிமை, போன்றவற்றில் உள்ள வேறுபாடுகள், ஜாதிகளிடையே
சமூக பொருளாதார நிலையில் உள்ள வேறுபாடுகள், ஒரு ஜாதிக்கும், ஒட்டுமொத்த சமூகத்திற்கும் சமூக பொருளாதார நிலையில்
உள்ள வேறுபாடுகள். மிகவும் பிற்பட்ட என்ற பிரிவு ஏற்படுத்தப்பட்டாலும் அதிலும் இந்த மூன்று விதமான வேறுபாடுகள் கணக்கில்
கொள்ளப்படுவதில்லை. இதனால் பிற்பட்ட ஜாதிகளில் முன்னேற்றம் கண்டோர், கண்ட ஜாதிகள் தொடர்ந்து அதிக அளவில்
பயன்பெற்று வருகின்றன. இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்ட போது பிற்பட்ட ஜாதிகள் என்று கருதப்பட்டவை எல்லாம்
ஒரே சமூக பொருளாதார நிலையில் இல்லை. காலப் போக்கில் சில ஜாதிகள் வேறு சில ஜாதிகளை விட அதிக முன்னேற்றம்
கண்டிருந்தன. அவை சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்பட்ட நிலையிலிருந்து ஒரு கட்டத்தில் வெளியே வந்திருக்கும். அப்படி எந்த
ஜாதியும் முன்னேறவில்லை என்றால் தமிழ் நாட்டில் சமூக முன்னேற்றம் ஏற்படவே இல்லை என்று பொருள். .ஜாதிகள் இருக்கும் உண்மையான நிலை கண்டறியப்பட்டு இட ஒதுக்கீடு உண்மையிலேயே பிற்பட்ட ஜாதிகளுக்கு பயன் தரும் வகையில் மாற்றப்பட வேண்டும்.
பொருளாதார ரீதியாக பின் தங்கியோர், பெண்கள் – இவர்களும் இட ஒதுக்கீட்டால் பயன் பெற வேண்டும்.

இட ஒதுக்கீடு என்பது 1950களில் முன் வைக்கப்பட்ட போது இருந்த நிலை வேறு, இப்போது உள்ள நிலை வேறு. சமூக மாற்றத்தினையும் கருத்தில் கொண்டு இட ஒதுக்கீடு கொள்கை, நடைமுறை மாற்றப்பட வேண்டும். இன்னும் சொல்லப்ப் போனால் 15 அல்லது பத்தாண்டுகளுக்குப் பின் இட ஒதுக்கீடு தேவையில்லை என்ற நிலைக்கு அனைத்து பிரிவினரும் முன்னேறும் வண்ணம் அரசு செயல்பட வேண்டும்.
முதலில் இட ஒதுக்கீட்டின் பயன்கள், சாதக,பாதக விளைவுகளைக் குறித்து ஒரு விரிவான ஆய்வு தேவை. பிற்பட்ட சாதிகளின்
பட்டியலும் ஒரு சமூக-பொருளாதார ரீதியான கணக்கெடுப்பிற்கு பிறகு மாற்றப்பட வேண்டும். இப்போது பிற்பட்ட
ஜாதிகளில் எல்லா ஜாதிகளும் ஒரே மாதிரி முன்னேற்றம் காணவில்லை என்பதால் இட ஒதுக்கீட்டால் அதிக பயன்
பெற்ற, வெகுவாக முன்னேறிய ஜாதிகளுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட வேண்டும். உண்மையாகவே பின் தங்கியுள்ள
ஜாதிகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும். தேவை ஒரு மறு சிந்தனை, அவ்வாறின்றி இட ஒதுக்கீட்டினை நீட்டிப்பது அது ஏற்படுத்தும் பாதகமான விளைவுகளையே அதிகப்படுத்தும். சமூகத்தில் பிரிவினயை அதிகப்படுத்தி, ஜாதி ரீதியான விருப்பு,வெறுப்புகளை அதிகப்படுத்தும்.

பிற்பட்ட ஜாதிகள், முன்னேறியுள்ள/முற்பட்ட ஜாதிகளுடன் சமமாக போட்டியிட்டு வெற்றி பெறும் நிலையில்தான் தமிழ்நாட்டில் இன்று இருக்கிறார்கள். பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளில் அனைவருக்குமான இடங்களுக்கும், இட ஒதுக்கீட்டின்
வரும் இடங்களுக்கும் போட்டியிட எடுக்க வேண்டிய cut-off மதிப்பெண்களில் மிகக்குறைவான, புறக்கணிக்கதக்க அளவிலான
வித்தியாசமே உள்ளது. எனவே பிற்பட்ட ஜாதிகள் இட ஒதுக்கீடு இல்லாவிட்டால் இடம் கிடைக்காமல் பாதிக்கப்படுவர் என்பது
கட்டுக்கதை. உண்மையில் இது 1947க்குப் பின் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் சாதகமான விளைவு, சமூக முன்னேற்றத்திற்கு ஒரு
நல்ல எடுத்துக்காட்டு. இப்படிப்பட்ட நிலையில் இட ஒதுக்கீட்டு கொள்கையில் மறு பரீசலனை செய்வதும், தேவையான மாற்றங்கள்
கொண்டு வருவதும் அக்கொள்கையில் உண்மையான குறிக்கோள்களை எட்ட உதவும்.

எனவே இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்தினை நான் 100% ஆதரிக்கிறேன். வேலை நிறுத்தம் செய்வது குறித்து எனக்கு
மாறுபட்ட கருத்து உண்டு. ஆனால் வேலை நிறுத்தம் செய்ததால்தான் மத்திய அரசு ஒரளவாவது எதிர்ப்பினை கருத்தில் கொள்கிறது.
வெறும் மனுக்கள், ஊர்வலங்கள் என்று இருந்தால் அது அவற்றை கணக்கில் கொள்ளாது. தமிழ் நாட்டில் 1980களில் இறுதியில் இட
ஒதுக்கீட்டிற்காக எத்தகைய ‘அமைதியான’ போராட்டங்களை நடத்தப்பட்டன என்பதை மக்கள் அறிவர். இன்று இட ஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டத்தினை விமர்சிக்கும் சிலர் கடந்த காலத்தில் தாங்கள் நடத்திய போராட்டங்களை நினைத்துப் பார்க்கட்டும்.தமிழ் நாடில் 69% இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக அரசு செய்தது போல் பந்த் தினை இப்போது இட ஒதுக்கீட்டினை எதிர்ப்பவர்கள் திணிக்க வில்லை.

முற்பட்ட ஜாதிகள், பிற்பட்ட ஜாதிகள் என்று எழுதுவதை தவிர்க்க விரும்புகிறேன். முற்பட்ட என்று கருதப்படும், பிற்பட்ட என்று கருதப்படும் என்று எழுதுவதே சரியாக இருக்கும். இக்கட்டுரையில் நான் அந்த அர்த்தத்தில்தான் இச்சொற்களைப் பயன்படுத்தியுள்ளேன்.இவ்வாறெல்லாம் எழுதுவது, இட ஒதுக்கீட்டினை கேள்விக்குட்படுத்துவது, அதை எதிர்ப்பவர்களுக்கு ஆதரவாக எழுதுவது – இவையெல்லாம் ‘பொலிடிகலி இன்கரெக்ட்’ என்பது எனக்குத் தெரியும். (3). இட ஒதுக்கீடு என்ற புனிதப் பசுவை கட்டுடைப்பவது அவசியம், காலத்தின் தேவை.

(1) New Indian Express 10th April -Arjun rushes in where SC didn’t tread
The phrase, “socially and educationally backward classes,” has been twisted by Arjun Singh to mean OBCs. This is significant given that, as Justice Khare says, not one of the three key Supreme Court rulings on the subject, Pai, Islamic Academy and Inamdar, mentioned OBCs as a target group for reservations in educational institutions.
Justice Khare, who presided over the bench in both Pai and Islamic Academy case, made it clear: “The interpretation of Pai judgment means there can be reservation fixed for the weaker sections but never was there any mention of OBC. The Constitution doesn’t define or recognise OBC, it’s a government interpretation.” Consider the key SC rulings on the subject:
• T M A Pai Foundation case (Oct 31, 2002): The main question was whether quotas could be fixed in government-aided and unaided minority institutions. The majority judgment of the 11-judge bench was that there could be reservation for “weaker sections” of society but there was no reference to OBCs.
• Islamic Academy case (Aug 14, 2003 ): To dispel “confusion” over the Pai ruling, a five-judge bench was set up for an “explanation.” This bench said that as per Pai, criteria could be fixed for reservations in unaided and aided minority institutions. Once again, no reference to OBCs.
• Inamdar (Aug 12, 2005 ): A seven-judge bench was formed to explain the earlier two rulings. It ruled that “neither the policy of reservation can be enforced by the State nor any quota or percentage of admissions can be carved out to be appropriated by the State in a minority or non-minority unaided educational institution”. It also made it clear that the state “cannot insist on private educational institutions which receive no aid from the State to implement State’s policy on reservation for granting admission on lesser percentage of marks, i.e. on any criterion except merit.”
It was to rollback this ruling that the amendment was made in January, the amendment which Arjun Singh is now using. Asked what would happen if this amendment is challenged, Justice Khare said: “Another 11-judge bench has to hear the challenge and will decide the validity of this amended provision.”
(2) http://www.tn.gov.in/policynotes/bc_mbc_welfare.htm
(3) http://ravisrinivas.blogspot.com/2006/05/this-is-politically-incorrect-blog-not.html

Series Navigation