ழான் பிரான்சுவா லையோதர்த் – (1924 – 1998)

This entry is part [part not set] of 39 in the series 20060512_Issue

எச்.முஜீப் ரஹ்மான்


பகுதி ஒன்று
பிரஞ்ச் பின் நவீனத்துவ தத்துவவியலாளரான லையோதர்த் பின்நவீன நிலை என்னும் நூலினால் உலகப்புகழ் அடைந்தவராவார்.ஆனால் இந்நூலுக்கு முன்னமே குறிப்பிட தகுந்த படைப்புகளை அளித்திருக்கிறார்.அவரது எழுத்துக்களில் தத்துவம்,அழகியல்,அரசியல் முதலான பல்வேறு விஷயங்களை ஆழமாக ஆய்ந்துள்ளார்.அவரது படைப்புகள் மூன்று வகையாக இருக்கிறது.ஆரம்ப எழுத்துக்களில் நிகழ்வியலியலும்,அரசியலும் முக்கியயிடம் பெற்றிருந்தன.அதைத்தொடர்ந்து அமைப்பியல் விமர்சனமும்,கடைசியாக பின் நவீன தத்துவமும்,வித்தியாசம் என்ற தத்துவமும் சிறப்பிடம் வகிக்கின்றன.பெரும் பான்மையான அவரது அடைப்புகள் பகுத்தறிவு கோட்பாட்டால் எதார்த்தம் ஒற்றை வகைமாதிரியாகவே புரியப்பட்டிருக்கிறது என்பதை எடுத்தியம்புகின்றன. லையோதர்தின் தத்துவம் பின்னமைப்பியலையும்,பின்னவீனத்துவத்தையுமே பிரதான படுத்துகிறது.காரணத்தின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்திக் கொண்ட அவர் உணர்வுகளிலிருந்தும்,புலனுணர்வுகளிலிருந்தும் அபகுத்தறிவின் முக்கியத்துவத்தை சொல்லுகிறார்.மனிதாபிமான வாதத்தை நிராகரித்து,மரபு சார்ந்து தத்துவ விசாரணைகள் அறிவை மையப்படுத்தி விவாதித்ததை தவறென சொல்லி பன்முகம்,வித்தியாசம் போன்ற புதிய தத்துவங்களை விளக்கினார்.இருபதாம் நூற்றாண்டின் முன்னேற்றங்களான விஞ்ஞான,தொழிநுட்ப,அரசியல்,பண்பாட்டு மாற்றங்களின் சூக்குமத்தினை வரையறுத்தார்.லையோதர்த் பின் நவீனத்துவதின் வெகுஜன தளத்தை ஆழமாக மற்ற கோட்பாடுகளின் தோல்வியோடு பொருத்திப் பார்த்து விவாதித்தார்.
ழான் பிராஞ்சுவா லையோதர்த் பிரான்ஸ் நாட்டில் வின்செனஸ் நகரில் 1924 ஆகஸ்டு 10 ம் நாள் பிறந்தார்.அவரது தந்தையார் ழான் பியரி லையோதர்த் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றினார்.அவரது தாயார் மேடிலின் கவாலி வீட்டம்மையாக இருந்தார்.பாரிஸில் லைசீஸ் பபூனிலும்,லூயிஸ் லி கிராண்டிலும் அவர் படித்தார்.இளைஞராக இருந்த போது ஒரு டொமினிகன் துறவியின் வழிகாட்டுதலின் பேரில் தத்துவம்,இலக்கியத்தில் ஈடுபாடுடையவராக மாறினார்.தத்துவத்தையும்,இலக்கியத்தையும் சர்போனில் பயின்றார்.அப்போது தான் கில்ஸ்டெல்யூஸை நண்பராக பெற்றார்.அவர் முதுகலை பட்டத்துக்காக(எம்.எ) விருப்பமின்மையும் ஒழுக்கசீலமே என்று ஆய்வுரையை சமர்பித்தார்.லையோதர்த உலக போர் வரையிலான தனது வாழ்க்கையைப் பற்றி கூறும் போது கவித்துவமான உணர்வுடன் தனிமையில் சிந்தித்த வண்ணமிருந்தாக குறிப்பிடுகிறார்.போர் அவரது வாழ்க்கையையும்,சிந்தனையையும் பாதித்தது.1944 ஆகஸ்டில் பாரிஸ் தெருக்களில் முதலுதவி செய்யும் தன்னார்வ தொண்டையும்,விடுதலக்கான போராட்டத்தையையும் ஈடுபாட்டுடன் செய்தார்.சமூக ஊடாட்டத்தில் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை கண்டுகொண்டார்.1948ல் ஆந்த்ரே மே என்பவரை திருமணம் செய்துகொண்டு கோரின்ஸ்,லாரன்ஸ் குழந்தைகளுக்கு தகப்பனானார்.1950ல் பிரெஞ்ச் ஆகரமிப்பு பகுதியில் ஆசிரியராக தத்துவத்தை போதித்தார்.1952 ல் இருந்து 59 வரை லா பிளிசே என்ற இராணுவ அதிகாரியின் மகனுக்கு பாடம் போதித்தார்.அல்ஜீரிய அரசியல் சூழலை அவதானித்துக் கொண்டு மார்க்ஸை படித்துக் கொண்டு சோஷலிச புரட்சியில் நம்பிக்கை வைத்தார்.1954ல் சோஷலிசம் அல்லது காட்டுமிராண்டிதனம் என்ற புரட்சிகர இயக்கத்தில் சேர்ந்தார்.அந்த அமைப்பில் கோர்னிலியஸ்,கிளாடு லீபோர்டு,பியரி சௌரிஸ் போன்றோர்கள் இருந்தனர்.1950ல் அவர் சௌரிஸ் ஜ சந்தித்து நீண்ட காலமாக நண்பர்களாகவிருந்தனர்.
லையோதர்த் அறிவுஜீவியாக மாறி பதினைந்து வருடங்கள் வரை சோசலிச புரட்சிக்காக கடினமாக உழைத்தார்.அவரது எழுத்துக்கள் இந்த காலகட்டத்தில் அதிதீவிர இடதுசாரி புரட்சிகர அரசியலை அல்ஜீரிய நிலைக்காக கொண்டிருந்தார்.அவர் சோசலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம் பத்திரிகையில் எழுதியும் தொழிலாளர் வர்க்கத்துக்காக சிறிய வெளியீடுகளையும் வெளியிட்டு தொழிற்சாலைகளில் நடைப்பெற்ற போராட்டங்களில் கலந்து கொண்டார்.சௌரிஸ் உடன் இணைந்து தொழிலாளர் சக்தி என்ற அமைப்பில் பங்கெடுத்துக்கொண்ட போதிலும் 1966ல் அதிலிருந்து விலகினார்.அவர் சட்டபூர்வமான அல்லது அமைப்பு சார்ந்த மார்க்ஸிசம் மொத்தத்துவ கோட்பாடாக இருப்பது கண்டு அதில் நம்பிக்கையிழக்க துவங்கினார்.திரும்பவும் தத்துவம் சார்ந்து படிக்கவும் எழுதவும் செய்தார்.1959லிருந்து 1966 வரை பாரிஸ் பத்து பல்கலைகழகத்தில் தத்துவதுறையில் இளநிலை பேராசிரியராக பணிபுரிந்தார்.ஆனால் ‘மார்ச்22’ இயக்கத்தில் பங்கெடுத்துக்கொண்டு செயலாற்றியமைக்காக அவர் பணிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
லையோதர்த் 60களின் பிற்பகுதியில் உளவியலாய்வாளர் ழாக் லக்கானின் கருத்தரங்குகளில் பங்கெடுத்தார்.அவரது கோட்பாடுகளை அடியொற்றி சொல்லாடல்,உருவம் ஆகிய கருத்தாக்கங்கள் கொண்டு முனைவர் பட்டஆராய்சியை முடித்து பட்டம் பெற்றார்.1968லிருந்து 1970 வரை ஆராய்சிதுறை பொறுப்பாளராக தேசிய நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார்.1970க்கு முன்னர் பாரிஸ் எட்டு பல்கலைகழகத்தில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.1979ல் பின்நவீன நிலை என்ற நூலை வெளியிட்டு உலகப் புகழ் பெற்றார்.1980லிருந்து 90கள்வரை பிரான்சுக்கு வெளியே நிறைய சொற்பொழிவாற்றினார்.அவர் பிரஞ்சு,இத்தாலிய பேராசிரியாராக கலிபோர்னியா பல்கலைகழகத்தில் பணிபுரிந்து கொண்டு சர்வதேச தத்துவ கல்லூரியில் தலைவரானார்.மேலும் விசிட்டிங் பேராசிரியராக எண்ணற்ற பல்கலைகழகங்களில் இருந்துவந்தார்.(John Hopkins, the University of California, Berkeley and San Diego, the University of Minnesota, the Universitளூ de Montrளூal, Canada, the Universitயூt Siegen, West Germany, and the University of Saம் Paulo, Brazil)அவர் இரண்டாவது முறையாக 1993ல் திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தந்தையானார்.1998ஆம் ஆண்டு ஏப்ரல் 28ம் நாள் பாரிஸில் மரணமெய்தினார்.
லையோதர்தின் முதல் நூல் 1954ல் சிறிய முன்னுரையுடன் நிகழ்வியலியல் ஆய்வாக வெளிவந்தது.முதல் பகுதியில் எட்மண்டு ஹர்சலின் நிகழ்வியலியலை அறிமுகம் செய்துவைத்தும் இரண்டாவது பகுதியில் மனித விஞ்ஞானங்களுக்கும்(சமூகவியல்,வரலாறு,உ
ளவியல்) நிகழ்வியலியலுக்கும் ஆன உறவை விவாதித்தும் இருந்தது.இரண்டாவது பகுதியில் ஹர்சலின் Maurice Merleau-Ponty நூலை அதிகமாக விவாதித்தார்.அதில் மூன்றாவது வழியாக, அகவயத்துக்கும்,புறவயத்துக்குமான வேறுபாடை நிகழ்வியலின் பார்வையில் முன்வைத்தார்.குறிப்பாக நிகழ்வியலியல் வரலாற்றின் வழி மார்க்ஸியத்துக்கு தந்த பங்களிப்பை விளக்கினார்.இந்த மையப்பொருள் (மார்க்ஸியத்துக்கும் நிகழ்வியலியலுக்குமான உறவு) அம்பதுகளில் பிரஞ்சு சிந்தனையாளர்களிடம் அதிக வரவேற்ப்பை பெற்று தந்தது.அந்த நூலில் லையோதர்தினுடைய வாதமே சமூக விஞ்ஞானங்களுக்கு நிகழ்வியலியல் தந்த பங்களிப்பு அலாதியானது.குறிப்பாக இரண்டை சுட்டிக்காட்டலாம்.ஒன்று அறிவியலில் பொருள் பற்றிய விளக்கம் பரிசோதனையுடன் தொடர்புடைய சாரம்சமே ஆகும்.இரண்டாவது தத்துவ அடிப்படையில் பரிசோதனைக்கு உட்படுத்துவது போன்றவையாகும்.லையோதர்த்தின் வாதமே உதாரணமாக சமூகவியல் நிகழ்வியலியலின் படியிலான விளக்கத்தை பெறும் போது சமூக சாரம் ஒரு அறிவியலாக மாறும்.இத்தகைய நிலைப்பாட்டிலிருந்து கொண்டு நிகழ்விலையலை பல துறைகளிலும் பொருத்தி விவாதிக்க இயலும்.ஆனால் நிகழ்வியலியல் அனேகமாக மார்க்சியத்துடன் முரண்பட்டே இருக்கிறது.அவரது முடிவுபடி நிகழ்வியலியல் மார்க்சியத்துக்கு எவ்வித முன்னேற்றத்தையும் தரவில்லை. லையோதர்த் நிகழ்வியலியலை லோகாயத உலக பார்வைக்கு ஏற்றதாக கருதாமல் புறவய இயல்புடைய உற்பத்தி நடவடிக்கைகள் வர்க்க போராட்டமாக மாறுவது பிரக்ஞாபூர்வமானதாகும் என்கிறார்.மேலும் அவர் புறவயத்துக்கும் அகவயத்துக்குமான போராட்டத்தை தாண்டி நிகழ்வியலியல் மூன்றாவது வழியை உருவாக்க எத்தனிப்பதை மறுத்தார்.

முதலிரண்டு நூல்களை பதினைந்துவருட இடைவெளியில் தத்துவம் சார்ந்து வெளியிட்டுவிட்டு புரட்சிகர அரசியலுக்கு எழுத்து முயற்சியை ஊக்கப்படுத்தினார்.சோசலிசம் அல்லது காட்டுமிராண்டிதனம் என்ற இதழுக்கு அல்ஜீரிய அரசியல் சூழ்நிலைகளை அதிகம் எழுதினார்.சோசலிச புரட்சிக்கு கோட்பாடு பயனுள்ளதாக மாறவேண்டும் என்ற நோக்குடன் புரட்சிக்கு தடையாக உள்ள பலவிஷயங்களை விமர்சித்தும்,அதிகாராமைப்பின் நடவடிக்கைகளை விமர்சித்தும் நிறைய எழுதினார்.அல்ஜீரியாவை பற்றிய கட்டுரைகளில் பிரஞ்ச் ஆதிக்கத்தை எதிப்பதற்க்கு சோசலிச புரட்சி பயனுள்ளதாக இருக்கும் என்று கருதினார்.பிரஞ்சு அரசு தனது சொந்த நலனுக்காக அல்ஜீரியாவை பயன்படுத்தி அம்மக்களை வறுமையில் உழலும்படி செய்கிறது என்று குற்றம் சாட்டினார். லையோதர்த் பயங்கரம் என்ற கருத்தை வளர்த்தெடுத்து அல்ஜீரிய பண்பாடு அந்நிய பண்பாட்டு வடிவமாக மாற்றப்படுவதை அதன்மூலம் சொன்னார்.அல்ஜீரியாவுக்கு நலன் வேண்டுமன்றால் ஆதிக்கத்தை துடைதெறிய மக்கள் புரட்சியை நடத்த வேண்டும் என்றார்.அவர் தேசியத்தை சந்தேகம் கொண்டதுடன் ஜனநாயக புரட்சி சமூக அநீதிக்கும் மேலாண்மைக்கும் துணைபோவதை கண்டித்து சோசலிச புரட்சியின் தேவையை வலியுறுத்தினார்.அவர் சார்ந்திருந்த அமைப்பு அல்ஜீரிய விடுதலைக்கு துணைபோகாதது கண்டு மனம் வெதும்பினார்.சோசலிச புரட்சியை விரும்பாத மரபு மார்க்சிய அமைப்பின் செயல் பாடுகளை விரும்பாத அவர் பெருஞ் சொல்லாடடலின் அச்சுறுத்தலை சந்தித்தார்.

லையோதர்த்தின் இரண்டாவது தத்துவ நூல் விரிவானதும் கடினமானதும் ஆகும்.அதில் நிறைய விஷயங்கள் குறிப்பாக நிகழ்விலியல்,உளஆய்வு,அமைப்பியல்,கவிதை,கலை,ஹெகலின் இயங்கியல்,குறியியல்,மொழியின் தத்துவம் போன்றவை விவாதிக்கப்பட்டன.அந்த நூலின் பிரதான அம்சமே அமைப்பியல் சார்ந்தும்,லக்கானின் உளஆய்வு சார்ந்தும் ஆராயப்பட்ட விதம். அப்புத்தகம் இரண்டு பகுதிகளாக இருக்கிறது.முதல் பகுதியில் மெர்லியூ-பான்றியின் நிகழ்வியலியல் அமைப்பியல் சார்ந்து ஆராயப்பட்டது.இரண்டாவது பகுதியில் பிராய்டின் உளஆய்வுக்கும் லக்கானின் உளஆய்வுக்குமான அடிப்படைகளை நிகழ்வியலின் படி ஆராயப்பட்டது.அமைப்பியல் சார்ந்து “சொல்லாடல்” எனும் கருத்தாக்கத்தையும்,நிகழ்வியலியல் படி “உருவம்” எனும் கருத்தாக்கத்தையும் உருவாக்கினார்.அவரது கருத்துப்படி அமைப்பான பருண்மை கருத்தியல் சிந்தனைகள் பிளாட்டோவின் காலத்திலிருந்தே செல்வாக்குமிக்கதாக புலனுணர்வை தொலைத்துவிட்டது.எழுதப்பட்ட பிரதியில் வாசக அனுபவம் துல்லியத்தோடும்,உருவம் ,படிமம் முதலியவை பார்க்கும் அனுபவத்தோடும் தொடர்புடையது.
Books by Lyotard

Driftworks. (New York: Semiotext(e), 1984).
The Postmodern Condition: A Report on Knowledge, trans. Geoff Bennington and Brian Massumi (Manchester: Manchester University Press, 1984).
Just Gaming, trans. Wlad Godzick (Minneapolis: University of Minnesota Press, 1985).
The Differend: Phrases in Dispute, trans. Georges Van Den Abbeele (Manchester: Manchester University Press, 1988).
Peregrinations: Law, Form, Event (New York: Columbia University Press, 1988).
The Lyotard Reader, ed. Andrew Benjamin (Oxford: Blackwell, 1989).
Heidegger and “The Jews”, trans. Andreas Michel and Mark S. Roberts (Minneaplis: University of Minnesota Press, 1990).
Duchamp’s Trans/formers, trans. Ian McLeod (Venice, CA: Lapis Press, 1990).
Pacific Wall (Venice: Lapis Press, 1990).
The Inhuman: Reflections on Time, trans. Geoffrey Bennington and Rachel Bowlby (Cambridge: Polity Press, 1991).
Phenomenology, trans. Brian Beakley (Albany: State University of New York Press, 1991).
The Postmodern Explained to Children, ed. Julian Pefanis and Morgan Thomas (Sydney: Power Publications, 1992).
Libidinal Economy, trans. Iain Hamilton Grant (London: Athlone, 1993).
Political Writings, trans. and ed. Bill Readings and Kevin Paul Geiman (London: UCL, 1993).
Toward the Postmodern, ed. Robert Harvey and Mark S. Roberts (New Jersey: Humanities Press, 1993).
Lessons on the Analytic of the Sublime: Kant’s Critique of Judgment, 23-29, trans. Elizabeth Rottenberg (Stanford: Stanford University Press, 1994).
Postmodern Fables, trans. Georges Van Den Abbeele (Minneapolis: University of Minnesota Press, 1997).
The Assassination of Experience by Painting, Monory = L’assassinate de l’experience par la peinture, Monory, trans. Rachel Bowlby and Jeanne Bouniort, ed. Sarah Wilson (London: Black Dog, 1998).
Signed Malraux, trans. Robert Harvey (Minneapolis: University of Minnesota Press, 1999).
The Confession of Augustine, trans. Richard Beardsworth (Stanford: Stanford University Press, 2000).
Soundproof Room: Malraux’s Anti-aesthetics, trans. Robert Harvey (Stanford: Stanford University Press, 2001).
Discourse, figure, trans. Mary Lydon (Harvard University Press, forthcoming).

Books about Lyotard

Art and Philosophy: Baudrillard, Gadamer, Jameson, Kristeva, Lyotard, Marin, Perniola, Sloterdijk, Sollers, Virilio, West (Milan: Giancarlo Politi Editore, 1991).
Benjamin, Andrew (ed.), Judging Lyotard (London: Routledge, 1992).
Bennington, Geoffrey, Lyotard: Writing the Event (Manchester: Manchester University Press, 1988).
Browning, Gary K, Lyotard and the End of Grand Narratives (Cardiff: University of Wales Press, 2000).
Carrol, David, Paraesthetics: Foucault, Lyotard, Derrida (London: Routledge, 1987).
Curtis, Neal, Against Autonomy: Lyotard, Judgement and Action (Aldershot, Hants & Burlington, VT: Ashgate, 2001).
Dhillon, Pradeep A. and Paul Standish, eds., Lyotard: Just Education (London & New York: Routledge, 2000).
Haber, Honi Fern, Beyond Postmodern Politics : Lyotard, Rorty, Foucault (New York : Routledge, 1994).
Harvey, Robert, ed., Afterwords: Essays in Memory of Jean-Franவூois Lyotard (Stony Brook, NY: Humanities Institute, 2000).
Harvey, Robert and Lawrence R. Schehr, eds., Jean-Franவூois: Time and Judgment (New Haven & London: Yale University Press, 2001).
Kearney, Richard, Poetics of Imagining: From Husserl to Lyotard (London: HarperCollins Academic, 1991).
Kilian, Monika, Modern and Postmodern Strategies: Gaming and the Question of Morality: Adorno, Rorty, Lyotard, and Enzensberger (New York: Lang, 1998).
Nordquist, Joan, Jean-Franவூois Lyotard: A Bibliography (Santa Cruz, CA: Reference and Research Services, 1991).
Pefanis, Julian, Heterology and the Postmodern Bataille, Baudrillard, and Lyotard (Durham: Duke University Press, 1991).
Peters, Michael (ed.), Education and the Postmodern Condition (Wesport, Connecticut & London: Bergin & Garvey, 1995).
Raffel, Stanley, Habermas, Lyotard and the Concept of Justice (London: Macmillan Press, 1992).
Readings, Bill, Introducing Lyotard: Art and Politics (London: Routledge, 1991).
Rojeck, Chris and Turner, Bryan S. (ed.) The Politics of Jean-Franவூois Lyotard. (London: Routledge, 1998).
Sim, Stuart, Jean-Franவூois Lyotard (New York: Prentice Hall/Harvester Wheatsheaf, 1995).
Sim, Stuart, Lyotard and the Inhuman (Cambridge: Icon/Totem, 2000).
Steuerman, Emilia, The Bounds of Reason: Habermas, Lyotard, and Melanie Klein on Rationality (London & New York: Routledge, 2000).
Williams, James, Lyotard: Towards a Postmodern Philosophy (Cambridge: Polity Press, 1998).
Williams, James, Lyotard and the Political (London: Routledge, 2000).

Series Navigation

எச்.முஜீப் ரஹ்மான்

எச்.முஜீப் ரஹ்மான்